நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கு விசாரணை சூடுபிடித்தது.
டெல்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் மூன்றாவது நாளாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி ஆஜரான நிலையில், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கொந்தளித்தனர். இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக தொடுக்கப்பட்டுள்ளதென்று கூறி, ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாங்கள் அமைதியாகப் போராடும்போது, தங்கள் மீது காவல்துறை அராஜகமாக தாக்குதல் நடத்திக் கைது செய்கிறார்களென்று கூறி, புகார்களை எழுப்புகின்றனர்..
. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, காவல்துறை நடவடிக்கையின் போது முன்னாள் மத்திய அமைச்சரான ப. சிதம்பரத்துக்கு அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்பட்ட நிலையில். காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்து செல்லும் காட்சியை காங்கிரஸ் கட்சியின் நபர்கள் தரப்பே வீடியோ எடுத்துள்ளது. இந்த வீடியோவை, நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் பகிர்ந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திலிருந்து தொண்டர்களை வெளியேற்றுவதன் மூலம், டெல்லி காவற்துறையினர்,
பாரதிய ஜனதா கட்சியின் தனியார் ராணுவம் போன்று செயல்படுவதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவில் குறிப்பிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, டெல்லி காவற்துறையினர், தன்னை கிரிமினல் போல கைது செய்து, ஆடையைக் கிழித்துள்ளதாக புகார் மனு அளித்துள்ளார். மேலும், கைது செய்யப்பட்டு காவல்துறை ஜீப்பில் கொண்டு செல்லப்பட்டபோது, வீடியோ பதிவு எடுத்து, அதை ஜோதிமணியே வெளியிட்டுள்ளார்.. அத்துடன், மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு புகாரை அளித்துள்ளார். இதனால், டெல்லி காங்கிரஸ் கட்சியின் டென்ஷனான நிலை காணப்படுகிறது. தில்லியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் புகுந்து காவல் துறையின் மூலம் காங்கிரஸ் தொண்டர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் இந்த விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு சட்டவிரோத பணப் பரிவா்த்தனை விவகாரத்தில்
ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்து தில்லியிலுள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும், விசாரணை நடைபெற்று வரும் அமலாக்கத் துறை அலுவலகத்திலும் காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் குழுமியிருந்த காங்கிரஸ் தொண்டர்களை தில்லி காவல் துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
தொண்டர்களை காவலர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும் காட்சிகளை காங்கிரஸ் தொண்டர்கள் விடியோவாக பதிவு செய்துள்ளனர்.
மேலும் இதே விடியோவைப் பகிர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சர்வாதிகாரி எனவும் காங்கிரஸ் தலைமை அலுவலகமும் குற்றம் சாட்டியுள்ளது. ரெளடியிசம் செய்ய வேண்டுமென்றால் ஜனநாயக அமைப்பு கொடுத்துள்ள நாற்காலியை விட்டு மக்களிடம் வாருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் உள்ள தகவல்.
கருத்துகள்