எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு எதிரான ஊழல் வழக்கு - நாளை உச்சநீதிமன்றம் விசாரணை
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஒப்பந்த முறைகேடு வழக்கானது
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு நாளை விசாரிக்கிறது.
தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இலஞ்ச ஒழிப்புத் துறை ஆணையம் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை. புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தலாமென எடப்பாடி கே பழனிச்சாமிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யவும் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்தது. நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி ரூபாய் .4,800 கோடி அளவுக்கு ஊழல் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்ட நிலையில். 2018 ஆம் ஆண்டு ஆர்எஸ் பாரதி தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. எடப்பாடி கே.பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழல் புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு பட்டியல் படி வரவுள்ளது. நெடுஞ்சாலை டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகவும், இதுகுறித்து 2018 ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்குத் தொடர்ந்ததில்
எடப்பாடி கே. பழனிசாமி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்று திமுக ஆர்.எஸ்.பாரதி மனுவில் புகார் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெகதீஸ் சக்ரா, புகார் மீதான விசாரணையை வெளிப்படைத் தன்மையுடன் நடத்த வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாகவும், மேற்கொண்டு வழக்கில் நீதிமன்றம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் இவ்வழக்கில் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இதன்பிறகு இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிலையில், தமிழக அரசு தரப்பில் இவ்வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் முறையிடப்பட்டதைதையடுத்து வழக்கு நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா உறுதி அளித்த நிலையில் அது விசாரணை நடத்துகிறது.அரசியலில் கடைசி வரிசையில் இருந்து முதலிடம் பிடித்த கதைக்குப் பின்னர் பல ஊழல்கள் முறைகேடுகள் எல்லாம் மறைந்த காரணம் அதோடு அவர் செய்த துரோகம்
முழுமையான காரணம் ஏற்றவந்த ஏணியை எட்டி உதைத்த எடப்பாடி கே.பழனிச்சாமியின் மீதான வழக்குத் தடையின் மீதான விசாரணையை துவக்க வேண்டுமென்றும், நான்கு ஆண்டுகளாக பெரும் தடையாக இருப்பதாக தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்த நிலையில் ஆளும் மத்திய அரசும், ஆளும் மாநில அரசும் இப்போது எடப்பாடி வீழ்ச்சி காணக் காத்திருக்கும் நிலை.
பாஜக வலுவான பகுதியாக விளங்குகிறது கொங்கு மண்டலம் அதில் எடப்பாடி கே.பழனிச்சாமி அரசியலில் ஒரு போலியான பலம் பெறுவதை யாரும் விரும்பவில்லை. மேலும் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் அது பழனிச்சாமி அறம் தவறி நடந்த காரணமாக அது தற்போது கூற்றாகும் நிலை தெரிகிறது.
கருத்துகள்