கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் குழந்தைத் திருமணம் தொடர்பாக கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அந்தணர்
தீட்சிதர்கள் குடும்பத்துடன் சாலை மறியல் கடந்த ஒரு மாதத்தில் குழந்தைத் திருமணம் தொடர்பாக ஐந்துக்கும் மேற்பட்ட தீட்சிதர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். இரண்டு ஆண்டுக்கு முன் நடந்த குழந்தைத் திருமணம் தொடர்பாக மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் மீனா அளித்த புகாரில் நடராஜர் கோவில் பொது தீட்சதர்களின் செயலாளர் கார்த்தி(எ)ஹேம சபேச தீட்சிதர், வெங்கடேஸ்வரன் தீட்சிதர், இவரது மகன் ராஜரத்தினம் தீட்சிதர் ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
மறியலைக் கைவிடுமாறு எச்சரித்த காவலர்களை, தீட்சிதர்களில் சிலர் ஒருமையில் திட்டினர். காவல்துறைக் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் கூறுகையில்
குழந்தைத் திருமணம் கூடாதென்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படுகிறது. குழந்தைத் திருமணம், நாங்கள் நடைமுறையில் வைத்துள்ள வழக்கமாக உள்ளதென்பது தவறான விஷயம். நடைமுறை என்பது சட்டத்துக்கு உட்பட்டிருக்க வேண்டும்.குழந்தைத் திருமணம் செய்வதால் பெண்ணுக்கு படிப்பு, மனநலம், ஆரோக்கிய குறைபாடு ஏற்பட்டு பாதிக்கின்றனர். சட்டத்திற்கு உட்பட்டு காலத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்' எனத் தெரிவித்தார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் செயலாளர் ஹேமசபேச தீட்சிதரின் மகளுக்கு கடந்த வருடம் 17 வயதாகும் போது குழந்தைத் திருமணம் செய்து வைத்துள்ளார்.
அதனடிப்படையில் குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தில் ஹேமசபேச தீட்சிதர் கைது செய்யப்பட்டார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் தனது மகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் செய்யப்பட்டது. கடந்த வருடம் அவரது மகளுக்கு 17 வயதே இருக்கும் போது .
சட்டப்படி குற்றம் எனத் தெரிந்தும் அவர் திருமணம் செய்து வைத்துள்ளார். அது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், 17 வயது சிறுமிக்கு இவர்கள் திருமணம் செய்து வைத்தது உறுதியானது.
அது தொடர்பான ஆதாரங்களை சமூக நலத்துறை வெளியிட்டதையடுத்து காவல்துறை நடத்திய விசாரணையிலும் குழந்தைத் திருமணம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து தீட்சிதர்கள் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் கைது செய்யப்பட்டார். சிறுமியை திருமணம் செய்த ராஜரத்தின தீட்சிதரும் கைது செய்யப்பட்டார். அதேபோல் திருமணத்தை நடத்தி வைத்த வெங்கடேஸ்வரா தீட்சிதரும் கைது செய்யப்பட்டார். தற்போது இவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
இதற்கு முன் இவர்கள் எத்தனை பேருக்குத் குழந்தை திருமணம் செய்துள்ளனர் என்று விசாரணை நடத்தப்படுகிறது. இந்த நிலையில் குழந்தை திருமண தடை சட்டத்தில் ஹேமசபேச தீட்சிதர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக போராட்டம் மேற்கொண்டனர்.
கருத்துகள்