முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருப்பங்கள் தரும் திருப்பராய்த்துறை ஐப்பசி மாதம் துலா ஸ்நானமெனும் முதல் முழுக்கு

ஐப்பசி மாதம் துலா ஸ்நான காலமென 30 நாட்களும் உலகிலுள்ள அனைத்துப்‌ புண்ணிய தீர்த்தங்களும் காவிரியில்    (பொன்னி) கலப்பதாக ஓர் ஐதீகம்.


எனவே ஐப்பசி மாதம் முதல் நாளில் அகன்ற காவிரியுள்ள திருப்பராய்த்துறையிலும். பின் திரிசூலம் போல முக்கொம்பு பிரிந்து கூடும் இடமானதில்  மாதக் கடைசியில் மயிலாடுதுறையிலும் காவிரியில் நீராட வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஐப்பசியில் துலா ஸ்நானம் செய்வதால் நரம்புத் தளர்ச்சி பிரச்சினைகள் நீங்கும். நோய்கள் கடந்து ஓடும், காவிரியில் நீராடும் போது ஆத்ம பலம்,தேக பலம் கிடைக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

தமிழ் மாதங்களில் சித்திரை துவங்கி ஐப்பசி ஏழாவது மாதமாகும். இதில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பார். ஐப்பசி மாதத்தில் பிறக்கக்கூடிய ஆண் குழந்தைகளுக்கு உபேந்திரன் என்றும் பெண் குழந்தைகளுக்கு சந்திரவதி என்றும் பெயர் வைப்பது நல்லது .சித்திரை மாதத்தில் உச்சமடையும் சூரிய பகவான், ஐப்பசி மாதத்தில் நீச்சமடைவதனால் இந்த

மாதத்தில் சூரிய வெப்பத்தின் தாக்கம் பெருமளவு குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதை அறிந்தே முன்னோர்கள் பருவகால நிலைகளை நான்கு பிரிவுகளாக பிரித்துள்ளனர்.

ஐப்பசி மாதம் அடைமழை காலத்தின் தொடக்கமென்றும், வடகிழக்குப் பருவமழை தொடங்கும் மாதம் என்பதால்     


 "ஐப்பசி யதனிலோடுந் நீர்வரத்து குன்று

மதனோடு நீருக்கு அலைதலுஞ் சேரும்

தானியமெலாம் பொன்னுக்கு நிகரொப்ப நிற்கும் மெய்யே"

என கொங்கணர் சித்தர் பாட்டிலிருந்து  ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை அறியலாம்                        'சிவனை எழுதிப் பார்த்தது தேவாரம்.      சிவனே எழுதிப் பார்த்தது திருவாசகம்.                     இந்த இரண்டிலுமே பாடப்பெற்ற திருத்தலம் திருப்பராய்த்துறை.

பராய்த்துறை நாதர் பாடல் பெற்றவர்.  . அந்தப் பராய் மரப் பட்டையும் திருவாசகப் பாடல் பெற்றது என்பது தான் தனிச்  சிறப்பு                                               "அன்பர் ஆகிமற்று அருந்தவம் முயல்வார்

அயனும் மாலும் மற்று அழலுறு மெழுகாம்

என்பராய் நினைவார் எனைப்பலர்

நிற்க இங்கெனை எற்றினுக்கு ஆண்டாய்?

வன்பராய் முருடு ஒக்குமென் சிந்தை;

மரக்கண்; என்செவி இரும்பினும்

வலிது

தென்பராய்த் துறையாய் சிவலோகா!

திருப்பெருந்துறை மேவிய சிவனே.

என்பது திருவாசகம். மரத்தையும் பாடி இடத்தையும் பாடுகிறார்  மாணிக்கவாசகர். தென்பராய்த்துறை  சிவலோகம் எனப் பொருள் கொள்ளுமாறு பாடி இருப்பது அறிந்து இன்புறத் தக்கது.  திருவாசகத்தில் செத்திலாப் பத்து என்ற தலைப்பில் நான்காவது பாடலில் இறைவனை நோக்கி மாணி்க்கவாசகர் கேட்கிறார். திருப்பெருந்துறைப் பெருமானே! உன்னருள் பெறுவதற்காக அருந்தவம் புரியும் இத்தலத்தில் தவம் செய்த முனிவர்கள், கடவுளைப் பற்றிய சிந்தனையின்றிக் கடமை செய்வதே போதுமானது என்றெண்ணி வாழ்ந்தனர். இதனால் அகந்தை (ஆணவம்) வளர்ந்தது. இவர்களைத் தடுத்தாட்கொள்ள நினைத்த சிவபெருமான், பேரழகுப் பிழம்பாகப் பிச்சை ஏற்கும் பிச்சாண்டவர் (பிட்சாடனக்) கோலத்தில் அவர்கள் வீட்டு வாசலில் நின்றார். அன்புப் பிச்சை ஏற்று அருட்பிச்சை போடும் அப்பனை முனிவர்கள் உணரவில்லை.

"எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்

கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை

உண்ணாடி உள்ளே ஒளிபெற நோக்கிடில்

கண்ணாடி போலக் கலந்து நின் றானே"

என்ற திருமந்திரக் கருத்துப்படி, வாயிலில் நிற்கும் இறைவனைக் கலந்தறியும் பேறு அவர்களுக்குக் கிடைக்கவில்லைமுனிவர்களின் மனைவிகள் இறைவனுடைய பிட்சாடனக் கோலத்தில் மயங்கினர். தன்னை மறந்து தன் நாமம் கேட்டுத் தலைவன் பின்னால் செல்லத் தொடங்கினார். இதையறிந்த முனிவர்கள் பிட்சாடன மூர்த்தியை அழிக்க அபிசார வேள்வி எனும் யாகம் செய்த போது தோன்றிய புலியை இறைவன் மேல் ஏவினர். அவர் புலியைக் கொண்டு புலித்தோலை ஆடையாகக் கட்டிக் கொண்டார். அவருடைய பொன்னார் திருமேனிக்குப் புலித்தோல் ஆடை மிகப் பொருத்தமாக இருந்தது. மானை ஏவினர். இறைவன் அதை அடக்கி இடக்கரத்தில் ஏந்திக் கொண்டார். பெண் மானாகிய உமாதேவிக்கு இடம் கொடுத்தவர் இந்த மானுக்கும் இடம் கொடுத்தார். முனிவர்கள் பாம்புகளை ஏவினர். சிவபெருமான் அவற்றைத்

தனக்குரிய அணிகலன்களாக மாற்றி இடுப்பிலும் கழுத்திலும் ஏற்றுக் கொண்டார்.   இந்திரன், குபேரன், சப்தரிஷிகள் ஆகியோர் வழிபட்டுப் பேறு பெற்ற திருத்தலம் இது. இறைவர் சுயம்புலிங்கமாகக் காட்சியளிக்கிறார்.

திருப்பராய்த்துறை, திருப்பைஞ்ஞீலி, திருச்செந்துறை, திருப்பாச்சிலாச்சிரமம், திருவேதிக்குடி, திருஆலந்துறை ஆகிய ஏழு திருத்தலங்களும் சப்தஸ்தானங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஏழிசையாய் இசைப் பயனாய் விளங்கும் இறைவன் நம்மை ஏழு பிறவிகளிலும் காப்பாற்ற ஏழு திருத்தலங்களில் எளிமையாக விளங்கி நம்மை அழைக்கிறான். பாதக்கமலம் போக இறைவன் பாத கமலங்களைப் பற்றிக் கொள்வோம்.  இத்தலத்துக்குரிய தீர்த்தம் காவிரி. காலையில் காவிரியிலிருந்து கொண்டு வரப்படும் தீர்த்தத்துடன் திருமஞ்சன பூஜை நடைபெறுகிறது. காமிகா ஆகம முறைப்படி நாடோறும் நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் 12 நாட்கள் நடைபெறுகிறது. இந்த உற்சவத்தில் ஐந்தாம் நாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, ஆறாம் நாள் திருக்கல்யாணம், ஒன்பதாம் நாள் திருத்தேர், பத்தாம் நாள் தீர்த்தவாரி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. .இத்தலத்தில் இறைவியின் திருநாமம் பசும்பொன் மயிலாம்பிகை  "கோலவியல் மயிலாயிருக்கும் இமயாசலத்திடை" என்ற அபிராமி அந்தாதியின் பாடல் பொருளாக, தெற்கு நோக்கிய சந்நிதியில் அன்னை எழுந்தருளி இருக்கிறாள். மானைத் தாங்கிய பெருமான் இந்த மயிலைத் தாங்கி வளம் அருள்கிறார்.சிவபெருமான் திருவருளால்  மயிலாகிய அம்பிகைக்கருகில் பாம்புகளும் இருக்கும் பக்குவம் பெற்றன.


அதன் பின் முனிவர்கள் பூதகணங்களை ஏவினர். பெருமான் அவற்றைத் தன் படையில் சேர்த்துக் கொண்டார். காட்டில் தனியாக ஆடும் கடவுளோடு சேர்ந்து ஆடப் பூதங்களும் பழகிக் கொண்டன. இறுதியாக, மிகப் பெரிய யானையை ஏவி விட, இறைவன் அந்த யானையை உரித்துத் தோலைப் போர்த்திக் கொண்டு கரியுரி போர்த்த செஞ்சேவகனாகக் காட்சியளித்தார். பகையாக வந்தவை உறவாயின. யானையும் புலியும் எம்பெருமான் திருவடிப் பேறு பெற்றன. இதன் பிறகு முனிவர்கள் ஆணவம் அடங்கியது. பக்திக் கண்களால் பரமனைத் தேடினர். இறைவன் தாருகவனேஸ்வரராகக் காட்சியளித்தது தருக்குற்ற முனிவர் செருக்கை மாற்றித் தடுத்தாட்கொண்டார். இந்தத்

ஸ்தலத்தில் இது நிகழ்ந்தது.  ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 18 ஆம் நாள் காலையில் கதிரவன் தன்  கதிர்கள் சிவலிங்கத்தின் மீது பார்வை படுகின்றன. இது சூரிய வழிபாடு எனப்படுகிறது.


ஐப்பசி முதல் நாள் துலாஸ்நானத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.                                  இது 'முதல் முழுக்கு' எனப்படும் அதிகாலையில் இரு வெள்ளி ரிஷப வாகனங்களில் அம்மையும் அப்பனும் எழுந்தருளித் திருவீதி உலாவாகக் காவிரிக்கு வந்து தீர்த்தம் கொடுப்பர். அஸ்திர தேவர் காவிரியில்


திருமுழுக்காடுவார். அதன்பிறகு ஆயிரக்கணக்கான மக்கள் காவிரியில் நீராடுவர். முதல் முழுக்குத் திருப்பராய்த்துறையிலும், ஐப்பசி மாதம் கடைசி நாளில் கடைமுழுக்கு மயிலாடுதுறையிலும் சிறப்பானவை.   முன் மண்டப வாயிலில் சுதையால் ஆன ரிஷபாரூடர் அருள் பொழியும் முகத்தோடு காட்சியளிக்கிறார்.


உள்கோபுரம் ஏழு நிலைகளை உடையது. இடப்புறம் திருக்குளம் அமைந்துள்ளது. வலப்புறம் வசந்த மண்டபம் உள்ளது. நந்தி மண்டபத்தில் உள்ள தூண்களில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் மூவர் திருவுருவங்களும். ஆலயம் புனரமைத்து  திருப்பணி செய்யும் புண்ணியம் பெற்ற சோழநாட்டு மகுட வைசியர்  நாட்டுக் கோட்டைச் செட்டியாரான திருப்பணிச்செம்மல் வெ.வீர.நாகப்ப செட்டியார் திருமேனியும் உள்ளது. இவை பார்ப்பதற்கு தத்ரூபமாகவே உள்ளன.சம்பந்தப் பெருமானையும், திருநாவுக்கரசரையும் நேரில் பார்க்கமுடியவில்லையே, அக்காலத்தில் நாம் இல்லையே என்று ஏங்குபவர்கள் இதைப் பார்த்தால் அவர்களையே நேரில் பார்த்தது போல உணர்வார்கள்.உள் சுவற்றில் வலம்புரி விநாயகர், சப்த கன்னியர், அறுபத்துமூவர்,கரைமேலழகர்அய்யணார்,பரமனூர் காளியம்மன்  சோமாஸ்கந்தர், மகாகணபதி, பஞ்சலிங்கம், ஆறுமுகர், பிட்சாடனர், பிரம்மா, துர்க்கை, கஜலெட்சுமி, சண்முகர் சந்நிதிகள் உள்ளன. நவக்கிரகங்களில் சனீஸ்வரர் மட்டும் காக்கை வாகனத்தோடு காட்சியளிக்கிறார். நடராஜர் சந்நிதி சிறப்பாயுள்ளது.


முதல் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில் மாலிக் கபூர் படைஎடுப்பில் பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு புனரமைப்பு செய்தவர் கானாடுகாத்தான் வெ.வீர. நாகப்ப செட்டியார் ஆவார். இவர் நாட்டுக் கோட்டை நகரத்தார். இளையாற்றங்குடிக் கோவில் பட்டிணசாமி பிரிவைச் சேர்ந்தவர். சுமார் ஆறாண்டுகள் 1898 ல் திருப்பணி துவங்கி நடைபெற்றது. 3.12.1904 ல்

திருக்குட நன்னீராட்டுச் செய்யப்பட்டது. அவர் குடும்பத்தார் அடுத்த வாரிசு நா.அருணாசலம் செட்டியார் செய்த  இரண்டாம் திருப்பணியில் வெளி ராஜகோபுரம், மதில்சுவர்கள், திருக்குளம், நூற்றுக்கால் மண்டபம் ஆகியவற்றைப் புதுப்பித்து மீண்டும் 26.5.1940 ல் திருக்குட நன்னீராட்டுச் செய்தனர். பின்னர்1944 ஆம்  ஆண்டுகளில் அருணாசலம் செட்டியார் செய்த பலவகை உதவியால் துறவியாக வந்த   சுவாமி சித்பவாநந்தரால்  ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் ஏற்பட்டது தான் பழைய வரலாறு 1944 ஆம் ஆண்டுக்கு பின் தாருகாவணேஸ்வரர் தேவஸ்தான. ஆலயம் ஸ்கீம் அடிப்படையில் இந்து சமய அறநிலையத் துறை உட்புகுந்த பின்ன்ர் தான் நிர்வாக ஊழல் மலிந்த நிலையில் . இதுகுறித்து அறநிலையத் துறை ஆணையர் பார்வை தேவை என்பதே இப்பகுதியில் வசிக்கும் மக்களின் கோரிக்கையாகும்.

தற்போது மழை அதிகமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள நிலையில் நீர் வரத்து அதிகமாக வருகிறது அதன் காரணமாக காவிரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருப்பராய்த்துறையில் நாளை (18 ஆம் தேதி) நடைபெற உள்ள துலாஸ்நான நிகழ்ச்சி  தீர்த்தவாரிக்கு மட்டும் தடை விதிப்பு  பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் அறிவுறுத்தியுள்ளார்.    இந்த நிலையில் அக்டோபர்.,20 ஆம் தேதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை  உருவாகிறது; தமிழ்நாட்டில் வானிலை ஆய்வு மையம் தகவல்

 தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர். திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியதார், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதென்றும்.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 19 மற்றும் 20 தேதிகளில்  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை. கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.அக்டோபர் 21 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.


 ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அக்டோபர் 20ம் தேதிவாக்கில் உருவாகக்கூடும். இன்று லட்சத்தீவு பகுதிகள், மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை லட்சத்தீவு பகுதிகள், மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையை ஓட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை மறுநாள் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

20 ஆம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 21ம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் ஆந்திரகடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.காவிரி, கொள்ளிடம் ஆறு அதன் கிளை வாய்க்கால்களில் உள்ள முக்கிய படித்துறைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். காவிரி மற்றும் கொள்ளிடம் படித்துறையில் குளிப்பதற்கு அனுமதி இல்லை. காவிரி, கொள்ளிடம் ஆற்றில் 2.43 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை எதிரொலி மேட்டூர் அணையில் நீர்திறப்பு 55,000 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை வலுத்துள்ளதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை, விநாடிக்கு 28,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று பிற்பகல் 55,000 கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகஉள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், உபரிநீர் அப்படியே காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

பதிவு செய்யும் பத்திரங்களில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் கட்டாயம் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை

ஆவணங்கள் பதிவு செய்யும் போது எழுதிய பத்திரங்களின் கடைசி பக்கத்தில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால் பதிவு செய்த பத்திரப் பதிவு செல்லாது      அதோடு தற்போது அவரது புகைப்படம் இணைப்பு வேண்டும். கடைபிடிக்காத ஆவண எழுத்தர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை   பத்திர பதிவுத்துறைமின் சுற்றறிக்கை முழு விபரம்‌ பத்திரப் பதிவு செய்யும் ஆவணங்களில் பதிவு ஆவண எழுத்தர் பெயர், உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால், அந்த பத்திரப்பதிவு செல்லாது. தமிழகத்தில் போலியான பத்திரங்கள் பதிவாவதைத் தடுக்க மாநில பதிவுத்துறைத் தலைவர் சிவன் அருள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அதில், ஆவணத்தை தயார் செய்த ஆவண எழுத்தர் அல்லது வழக்குறைஞர் பார் கவுன்சில் பதிவு எண் பெயர் மற்றும் உரிமம் எண் உடன் புகைப்படம் இணைத்து பதிவு செய்ய வேண்டும். ஆவண எழுத்தரின் புகைப்படமும் அதன் கீழ் அவரது கையொப்பமும் வேண்டும். இந்த நடைமுறை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறதென அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ள இந்த நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் மாதிரிப் படிவம் ஒன