இலஞ்சம் வாங்கிய விருதுநகர் கிராம நிர்வாக அலுவலருக்கு தண்டனையளித்த நீதிமன்றம்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகேயுள்ள டி.மானகசேரியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றிய அம்மையப்பன், 2010- ஆம் ஆண்டில் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக சுப்பையா பாண்டி என்ற நபரிடம் ரூபாய்.500 லஞ்சம் 2019 ஆம் ஆண்டில் வாங்கிய நிலையில். ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் விசாரணை முடிவில் 3 வருடங்கள் சிறைத்தண்டனையும், ரூபாய் பத்தாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்த நிலையில், அதை எதிர்த்து அம்மையப்பன், சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்திருந்த மனுவை கடந்த வாரம் இறுதியாக விசாரித்த நீதிமன்றம், கிராம நிர்வாக அலுவலர் அம்மையப்பனுக்கு விசாரணை நீதிமன்றத்தின் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது. அது போலவே, வேலூர் கிராம நிர்வாக அலுவலர் 10 நாட்களுக்கு முன்பு லஞ்சம் பெற்ற நிலையில் சிக்கினார் சரஸ்வதி தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என வேலூரில் விண்ணப்பித்திருந்த நிலையில், சத்துவாச்சாரி காந்திநகரை சேர்ந்த ஷர்மிளா (வயது 59) ரூபாய். ஐந்தாயிரம் லஞ்சம் கேட்ட நிலையில். இறுதியில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறையில் பினாப்தலின் இரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஷர்மிளாவிடம், சரஸ்வதி தந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலரை மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறையினர் சுற்றி வளைத்துக் கைது செய்தார்கள்.
இப்போது, தென்காசி கிராம நிர்வாக அலுவலர் சிக்கியுள்ளார் தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் தாலுகா கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் குமாரவேல். இவர், ராஜகோபாலகேரி கிராமத்தில், அவரது தந்தை பெயரிலுள்ள சொத்தை அவரது பெயரில் பட்டாவை மாறுதல் செய்ய கிராம நிர்வாக அலுவலர் பத்மாவதியை அணுகியதற்கு அவர், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படி சொல்லவும், அதன்படியே விண்ணப்பித்துள்ளார். பிறகு பட்டா மாறுதல் செய்யாமல் காலம் கடத்திய நிலையில் மீண்டும் பத்மாவதியை குமாரவேல் தொடர்பு கொண்டபோது, பட்டா மாறுதலுக்கு ரூபாய்.பத்தாயிரம் செலவாகுமென பத்மாவதி சொன்னாராம். அவ்வளவு பணமில்லை என குமாரவேல் சொல்லியிருக்கிறார்.. அப்படியானால், ரூபாய்.4,500 வது தர வேண்டுமென்றாராம் .. , அதனை கொடுத்தால் மட்டுமே பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியும் என கறாராகவே தெரிவித்தாராம் கொடுக்க விரும்பாத குமாரவேல் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். அவர்கள் ஆலோசனையின்படி பினாப்தலின் இரசாயனம் தடவிய லஞ்சப்பணத்தை குமாரவேல் கொடுத்த நிலையில் அதை வாங்கிய பத்மாவதியை அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். வேளச்சேரி, அஷ்டலட்சுமி நகரை சேர்ந்தவர் செல்வராஜன். இவர் கட்டுமான நிறுவனத்தை நடத்துகிறார்.. கட்டுமானப் பணிக்காக திருவான்மியூர் அழகேசனிடமிருந்து, செல்வராஜன் மணல் வாங்கியதற்கான பணத்தைத் தருவதில், இருவருக்குமிடையே தகராறு எழுந்துள்ளது
நேற்று முன்தினம், தென்காசி கிராம நிர்வாக அலுவலர் பத்மாவதி சிக்கியிருக்கிறார்.பட்டா மாறுதல் செய்ய 4,500 ரூபாய் தர வேண்டும் என்று விண்ணப்பித்தவர்களிடம் கறாராக பேசியிருக்கிறார்.. இறுதியில், பத்மாவதியும் , இந்த புகாரில் கைதாகிவிட்டார்.
இந்நிலையில், பெண் காவல்துறை அலுவலரும் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதானதுடன், சிறைதண்டனையும் அவருக்கு தரப்பட்டது
சென்னை வேளச்சேரி, அஷ்டலட்சுமி நகரை சேர்ந்தவர் செல்வராஜன் வீட்டுக்குச் சென்ற அழகேசன், அவரை மிரட்டியது தொடர்பாக செல்வராஜன், வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் செய்தார். அப்போதைய வேளச்சேரி சார்பு ஆய்வாளர் கலைச்செல்வி, புகாரை விசாரித்துள்ளார்..
பின்னர் அழகேசனிடம், " இதுபோல தகராறில் ஈடுபடக் கூடாது, ஏதேனும் பிரச்சனை என்றால், நீதிமன்றம் வாயிலாகத் தான் தீர்வு காண வேண்டும்" என அறிவுறுத்தி, புகாரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.. அதன்படியே, இரண்டு தரப்பினரும் அமைதியாகிவிட்டார்கள். ஆனால், அதன் பிறகு செல்வராஜைத் தொடர்பு கொண்ட கலைச்செல்வி, பிரச்சனையை சுமூகமாக முடித்து வைத்ததற்காக, 2,000 ரூபாய் லஞ்சமாகத் தர வேண்டுமென்று கேட்டுள்ளார்
கேட்டு அதிர்ச்சியடைந்த செல்வராஜன், அது குறித்து, சென்னை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாராளித்தார். லஞ்சப் பணத்தை பெற்ற போது சார்பு ஆய்வாளர் கலைச்செல்வியை, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பிரியா முன்னிலையில் நடந்தது.
விஜிலென்ஸ் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் உஷாராணி ஆஜரானார்.. இறுதியில் இந்த வழக்கில், சார்பு ஆய்வாளர் கலைச்செல்வி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய நீதிபதி, அவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். அன்று வேளச்சேரி சார்பு ஆய்வாளராக இருந்த கலைச்செல்வி, இப்போது பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப் பணி செய்கிறார்.. ஐந்து வருடங்கள் ஜெயில் எனத் தீர்ப்பு நேற்று வெளியானதுமே, கலைச்செல்வியை கைது செய்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர், உடனடியாக புழல் ஜெயிலில் அடைத்தனர். மேலும்
திருவண்ணாமலைமாவட்டத்தில் பத்து நாட்களுக்கு முன்னர், சேத்துப்பட்டில், சுமதி என்ற பெண் அலுவலர் லஞ்ச ஊழல் புகாரில் சிக்கினார். புதிய குடும்ப அட்டைக்கு ஒப்புதல் வழங்குமாறு விண்ணப்பதாரர் கேட்டதற்கு வட்ட வழங்கல் அலுவலர் சுமதி, ரூபாய். மூவாயிரம் பணம் தந்தால் தான் ஒப்புதல் வழங்குவேன் என கறாராக பேசியிருக்கிறார். கொடுக்க விரும்பாத அருள் குமார் என்ற நபர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்த நிலையில் பணம் பெற்ற கையுடன் சிக்கினார் சுமதி. ஜனவரி மாதம் 31ஆம் தேதியுடன் பணிநிறைவு பெறவிருந்ததற்குள் புகாரில் சிக்கினார். நாளுக்கு நாள் பெண் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லது ஊழியர்கள் கைதாகி வரும் நிலையில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் சமரசம் செய்து வைக்க 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட வழக்கில், பெண் சார்பு ஆய்வாளருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கருத்துகள்