"அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்
பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தனும்
கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்” - வரந்தருகாதை சிலப்பதிகாரம். பாரதத்தின் வட புலத்தில் மௌரியப் பேரரசு வீழ்ந்து குப்தப் பேரரசு தலைதூக்காத காலத்தில் பல சிறிய சமஸ்தானத்தின் அரசுகள் ஆண்டு வந்திருக்கின்றன, ஆகவே சேரர் வழி மன்னர்கள் வடபுலத்திற்குப் படையெடுத்துச் சென்று வெற்றியடைந்தனர் எனச் செய்திகள் பொருந்துகிறது. சிலப்பதிகாரம் இலங்கை மன்னனான கயவாகு கண்ணகிக்குக் கோவில் எடுத்த விழாவில் பங்கேற்றார் என்கிறது.
சிலப்பதிகாரக் காப்பியத்தில் 30 காதைகள், மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்ட நிலையில் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம். எனலாம். சேர மன்னர் செங்குட்டுவன் சகோதரர் இளங்கோ இமயவரம்பன் மன்னர் நெடுஞ்சேரலாதனுக்கும் நற்சோணைக்கும் மகனாவர். இளம் வயதில் துறவு பூண்ட இளங்கோவடிகளால் சகோதரன் அரசனான நிலையில்
"சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்
தெய்வ வள்ளுவன் வான்மறை கண்டதும்
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பார வளித்ததும் தருமம் வளர்த்ததும்
....... அன்ன யாவும் அறிந்திலர் பாரதர்
ஆங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்"
என்று பரிந்து பாடிய பாட்டில், சேரன் செங்குட்டுவன் தம்பியாகிய இளங்கோவடிகளைப் போற்றுகின்றார் மஹாகவி பாரதியார்.
சங்க காலப் புலவர் மாமூலனார் நான்காம் நூற்றாண்டில் மகத நாட்டை ஆண்ட நந்தர்கள் அவர்களுக்கு பிறகு மகதத்தை ஆண்ட பேரரசர்கள் மௌரியர்களின் சேரநாட்டு படையெடுப்பு பற்றியும் எழுதியுள்ளார். மாமூலனார் முதிய வயதில் சோழன் கரிகாலனைப் பற்றிப் பாடியுள்ளார். பரணரும் தனது இளம் வயதில் சோழன் கரிகாலனைப் பற்றி பாடியுள்ளார். சேரர்களில் கரிகாலனால் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வெல்லப்பட்ட பிறகு சில காலம் கழித்து அரியணை ஏறுபவன் சேரன் செங்குட்டுவன். பற்றி பரணர் பாடியுள்ளார். இதன் மூலம் கரிகாலன் சேரனை விட சில வருடம் முதியவன் என்பது தெளிவாகிறது. சேரன் செங்குட்டுவன் காலம் இரண்டாம் நூற்றாண்டாகும். சேரன் செங்குட்டுவனின் வடநாட்டுப் படையெடுப்பும், அவனுக்கு உதவி செய்த சதகர்ணியின் காலமும் கண்ணகியின் கோவில் விழாவில் கலந்து கொண்ட கயவாகுவின் காலமும் இதனோடு கச்சிதமாக ஒத்துப்போகின்றது. கடைச் சங்க காலத்தின் இறுதிப்பகுதியில் நடந்த இந்த நிகழ்வுகளை இளங்கோவடிகள் அடுத்த நூற்றாண்டான சங்கம் மருவிய காலத்தில் காப்பியமாகப் பாடியதும் சரியாகவே பொருந்துகிறது. சோழநாட்டின் மகுட வைசியர் வழி வந்த முதல் நூற்றாண்டில் கடல் வாணிபம் செய்த பலமுறை சுனாமியால் பாதிக்கப்பட்ட காவிப்பூம்பட்டிணம் பின்னர் தற்போதய காலத்தில் பூம்புகார் எனும் நகரில் வாழ்ந்த பிரபல மாசாத்துவான் செட்டியார் மகன் தான் கோவலன், அதேபோல் பிரபல கடல் வாணிபத் தலைவர் மானாயக்கன் செட்டியார் மகள் தான் கண்ணகியாவார். அதனால் தான் மதுரை அரண்மனை தர்பாரில் முற்கால பாண்டிய மன்னன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் மற்றும் பட்டத்து ராணி கோப்பெருந்தேவி முன் "கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
'நற்றிறம் படராக் கொற்கை வேந்தே!
ஆனால் கூட இந்த நகரத்தார் யாரும் இதுவரை மதுரை பாண்டிக் கோவிலில் வழிபடுவதில்லை கடல் வணிகம் செய்த சோழநாட்டின் அரசருக்கு முடி சூட்டும் உரிமை பெற்ற தந்தை வழி மகுட தமிழ் வைசியரான கடல் வாணிபம் செய்த இவர்களுக்கும், பாண்டிய நாட்டில் கிராமங்களில் செக்கு மூலம் எண்ணெய் ஆட்டி புண்ணாக்கு விற்பனை செய்த வழியில் வந்தவர்களான வானியச் செட்டியார்களுக்கும் இவர்களுக்கும் வரலாற்றுத் தொடர்போ. இந்த வரலாற்றில் யாதும் சம்மந்தப்பட்டவர்களோ அல்ல என்பது தான் உண்மை வரலாறு.
ஆகவே சிலப்பதிகாரம் நடந்த ஆண்டு இரண்டாம் நூற்றாண்டு. பாண்டிய நாட்டை மன்னன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் ஆண்ட போது மதுரையை எரிந்த நாள் ஜூலை மாதம் 14 ஆம் தேதி,130 ஆம் ஆண்டு என்பது மேற்சொன்ன ஆய்வியல் தகவல் மூலம் தெளிவாகிறது. தற்போது புதுக்கோட்டை மாவட்டம் பாண்டிய நாட்டின் எல்லையில் பொன்னமராவதி அருகில் தொட்டியம்பட்டியில் உள்ள ஸ்ரீ அழகு நாச்சியம்மன் ஆலயத்தில் மதுரை சென்றடைய இரண்டு நாட்களுக்கு முன் இரவில் தங்கிச் சென்ற பிறகு கடைச் சிலம்பு ஏந்தல் எனும் ஊரின் பெயர் மருவி கடச்சனேந்தல் என்றானது. அங்கு தங்கிய வீடு இப்போதும் தடயம் உள்ளது. சிலப்பதிகாரத்தில், கோவலனும் கண்ணகியும், கவுந்தியடிகளால் மதுரைக்கு அழைத்துச் செல்லும் முதல் நாள்
மூதூர் மதுரைக்கு அருகில் தங்கிய இடமே இந்தக் கடச்சனேந்தலாகும்.
மதுரையிலிருந்து அழகர்கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ள கடச்சனேந்தல் பகுதிக்கு அருகில் ஒவ்வோர் ஆண்டும் சூன் மாதம் கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்கும்
சரி, அப்படியானால் சிலப்பதிகாரம் நிஜமாகவே நடந்ததா? எனச் சிலர் கேட்கலாம். ஆம் கோவலன் கொலையான கோவலன் பொட்டல் தான் தற்போதும் இடு மற்றும் சுடுகாடு இன்றும் மதுரையில் உள்ளது. கோவலன் கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்த 1000 வீட்டு இடையர் குல அன்னை கௌந்தியடிகள் வாழ்ந்த வீடு மதுரை மதிச்சியம் பகுதியில் உள்ளது, மாதவி நடனமாடிய சோழர்கள் காலத் திடல் திருவிடைமருதூரில் ஆலயத்தில் உள்ளது காவிப்பூம்பட்டிணம் முதல் பழைய கூடலூர் பளியங்குடி மங்கலதேவி வரை பல வரலாற்றுத் தடயங்கள் உள்ள நிலையில் என்னைப் பொருத்தவரை சில வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட காதை அல்லது காப்பியமாகவே அதைக் கருதுகிறேன். பல்வேறு நூல்களால் குறிப்பிடப்பட்ட நிகழ்வுகளைக் கொண்டிருக்கும் காவியமான இக்காப்பியத்தை முழுக்க முழுக்கப் புனைவு என்று கருதுவது இயலாத ஒன்று.
இந்தக் குறிப்புகளை வைத்துக்கொண்டு அஸ்ட்ராலஜி ஜெகந்நாத ஹோரை செயலியில் தேட ஆரம்பித்த ஆய்வாளர்கள் இலங்கை கயவாகுவின் காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து பார்த்ததில் மேற்குறிப்பிட்டபடி அஷ்டமி அஸ்வதி- பரணி நட்சத்திரத்தில் உள்ள நாட்களிலேயே பெரும்பாலும் வந்தது. ஜூன் மாதம் 19, 116 ஆம் ஆண்டு அஷ்டமியும் வெள்ளிக்கிழமையும் வந்தாலும் அன்று ரேவதி நட்சத்திரமாக இருந்தது. இப்படிப் பல ஆண்டுகளை ஆராய்ந்து பார்த்ததில், இந்த அபூர்வமான வானியல் நிகழ்வு நடந்திருப்பது ஜூலை மாதம் 14 ஆம் தேதி, 130 ஆம் ஆண்டு எனத் தெரியவந்தது. இந்த நாளில் ஆடி மாதமும் தேய்பிறை அஷ்டமியும் கார்த்திகையின் முதற்பாதமும் சேர்ந்திருந்தன. அன்று இரவு தான் மதுரை மாநகரம் கண்ணகியால் எரியூட்டப்பட்டது.
சிலப்பதிகாரக் காப்பியத் தலைவியான கண்ணகிக்குச் சிலை எடுத்தபோது இலங்கையின் முதலாம் கயவாகு மன்னன் சேரநாட்டுக்கு வந்ததாகவும், அவன் பத்தினி கண்ணகியை கடவுளாக வணங்கியதை இலங்கையில் பரப்பியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதால் மன்னர் சேரன் செங்குட்டுவன் முதலாம் கயவாகு வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவன் என்பது தெளிவாகிறது. முதலாம் கயவாகு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்பதும் இலங்கையின் வரலாற்று நூலான மஹாவம்சம் போன்ற நூல்களில் இருந்து தெரிய வருவதால், சேரன் செங்குட்டுவனும் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்றே கூற முடியும்.
சாதவாகன மன்னன் சிறீசதகர்ணியும் சேரன் செங்குட்டுவனுக்குச் சம காலத்தில் வாழ்ந்தவர்களே. மன்னர் சேரன் செங்குட்டுவன் பண்டைத் தமிழகத்தின் முதன்மையான மூன்று அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மன்னராவார். முதலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சேரநாட்டை ஆண்டதாகக் கருதப்படும் நெடுஞ்சேரலாதன் என்னும் மன்னனுக்கும், அவன் பட்டத்து அரசியான சோழ நாட்டு இளவரசி நற்சோனைக்கும். பிறந்த மகன். இவனது மனைவி மணக்கிள்ளியாகும் பதிற்றுப்பத்து பதிகம் இவன் மனைவியின் தந்தை பெயரை ஞாயிற்றுச் சோழன் எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. இவனது தாயின் பெயர் நற்சோனை எனும் 'சோழன் மணக்கிள்ளி' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மணக்கிள்ளி என்னும் தாயின் பெயரை 'நற்சோணை' என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மனக்கிள்ளி என்பது சேர மன்னர்கள் வழி பட்டத்தரசி பட்டம் கொண்ட வரலாற்றுப் பெயர். சிவகங்கை சமஸ்தானத்தின் நாச்சியார் பட்டம் போலவே அமைந்தது,
சேரநாடு மிகவும் வலிமை குன்றியிருந்த நேரத்தில் அதன் அரசுப் பொறுப்பேற்ற மன்னர் செங்குட்டுவன் அதனை மீண்டும் ஒரு வலிமை மிக்க நாடாக்கினான். " இயல் தேர்க் குட்டுவன் (சேரன் செங்குட்டுவன்) வடபுல இமயத்து வாங்கு வில் பொறித்தான்"..... என்றும், வஞ்சியில் இருந்து ஆட்சி செய்தவர் என்கிறது. சிறுபாணாற்றுப்படை.
"ஆடித் திங்கள் பேர் இருள் பக்கத்து,
அழல் சேர் குட்டத்து, அட்டமி ஞான்று,
வெள்ளி வாரத்து, ஒள் எரி உண்ண,
உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும் எனும்
உரையும் உண்டே, நிரை தொடியோயே" - இது கட்டுரைக் காதை அழல் - என்பது கார்த்திகை நாள். குட்டம் - என்பது குறைந்தது ; குறைந்த சீருள்ள அடியைக் குட்டமென்பதும் அறிக. "ஆடிய லழற்குட்டத்து" என்புழி அழற்குட்டம் என்பது கார்த்திகையின் முதற்காலை யுணர்த்திற்று வேற்றுமை இன்றி நின்னொடு கலந்த நூற்றுவர்- கன்னரும், கோல் தொழில் வேந்தே - கால்கோள் காதை தமிழ் மொழி இலக்கியங்களில், சிலப்பதிகாரம் அதன் வஞ்சிக் காண்டத்தில் மன்னர் சேரன் செங்குட்டுவன் பற்றிய அறிய பல தகவல்களைத் தருகிறது.
பழங்குடி பளியர்கள் கூறிய படியே சேர நாட்டின் தமிழ்ப் புலவர் சாத்தனார் மூலம் கண்ணகியின் காதையைக் கேட்டறிந்த மன்னர் சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலை எடுத்துக் கோவில் அமைக்க எண்ணினான். அதற்காகப் பொதியை (இமயம்) மலையில் கல்லெடுத்துக் கங்கை நதியில் நீர்ப்படுத்துவது தனது வீரத்துக்குச் சான்றாகாது என்று எண்ணியவன், ஒரு சமயம் தமிழ் மன்னர்களை எள்ளி நகையாடிய வடநாட்டு வேந்தரான கனகதிவிஜயனை வென்று, இமய மலையிலிருந்து கல்லெடுத்து, அரசன் உள்ளிட்ட படைவீரர்கள் தலையிலேயே கற்களைச் சுமப்பித்து கங்கை ஆற்றில் நீர்ப்படுத்திச் சேர நாட்டுக்குக் கொண்டுவந்து சிலை எடுத்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. மாடலன் என்னும் மறையோனின் அறிவுரைகளைக் கேட்டுச் சினம் தணிந்து கனதிக விஜயனைச் சிறையினின்றும் விடுவித்து, அறச் செயல்களில் ஈடுபடச் சேரன் செங்குட்டுவன் முடிவு செய்தான் என்பதும், கண்ணகிக்குக் கோட்டம் (கோவில்) எடுத்த விழாவில் கனக விஜயன், இலங்கை மன்னன், மாழுவ மன்னன், குடகக் கொங்கர் முதலானோர் கலந்து கொண்டனர் என்பதும் , சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டத்தில் சேரன் செங்குட்டுவன் பற்றிய தகவல் முதலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சேரநாட்டை ஆண்டதாகக் கருதப்படும் இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மிகவும் புகழ்பெற்ற கோவிலுக்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே சென்று தரிசனம் செய்ய அனுமதி ஆங்கில பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி விடுதலை பெற்ற பின்னர் உள்ள நிலையில் தற்போது வழங்கப்படுகிறது. பொதுமக்கள் தேனி மாவட்டம் பளியங்குடி வழியாக மலைப்பாதையில் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் நடந்தும், கேரளா மாநில இடுக்கி மாவட்டத்தில் குமுளி பகுதியிலிருந்து கொக்கரக்கண்டம் வழியாக ஜீப்பில் சுமார் 14 கிலோ மீட்டர் தூரம் பயணித்துச் செல்லலாம். சித்திரை மாதம் பெளர்ணமி நாளன்று அது (சித்திரா பௌர்ணமி)
வரலாற்றுச் சிறப்புமிக்க சித்திரகுப்தனை வழிபாடு செய்யும் நாள். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவி கண்ணகி தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தின் தெற்கு எல்லை மேற்குத் தொடர்ச்சி மலையில் கூடலூர் அருகிலுள்ள பளியன்குடியிலிருந்து வனப்பகுதிக்கு நடந்து சென்றால் 6 கிலோ மீட்டர் தூரம் கேரளா எல்லை குமுளியிலிருந்து வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பழமையான வண்டிப்பாதை வழியாகச் சென்றால் 14 கிலோமீட்டர் தொலைவிலும் மங்கலதேவி கண்ணகி கோட்டம் வழிபடச் சென்ற நம் குழு விவரிக்கும் தகவலிது சிலப்பதிகாரக் காப்பிய நாயகி கண்ணகி
குன்றக்குரவை என்னும் காதையுள், கண்ணகி மலை மேல், வேங்கை மர நிழலில் நின்று தெய்வமான இடத்தினையும், அவ்விடத்தில் மன்னர் சேரன் செங்குட்டுவன் அமைத்த மங்கல தேவி பத்தினிக் கோட்டம் என்னும் கண்ணகிக் கோவிலையும் பேராசிரியர் ஆய்வறிஞர் கோவிந்தராஜன் கண்டு
எழுதிய வரலாற்று நிகழ்வுகள் படி
’’மண்டிக்கிடந்த புதருக்குள் சிறிய கோட்டைச் சுவர் போன்ற கல் கட்டடத்திற்குள் கண்ணகி சிலை இருந்தது. அந்த கற்களில் தமிழ் வட்டெழுத்தும், முற்காலப் பாண்டியர்கள் காலத்து தமிழ் எழுத்துகளும் காணப்பட்டன. அங்கு சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பழங்கால மலைவாழ் மக்கள் மட்டும் பளியங்குடியில் மலையட்வாரத்தில் இருக்கும் நிலையில், எஞ்சிய வன விலங்குகள், இயற்கைக் காட்சிகள், வேங்கை மரங்கள் என அத்தனை அடையாளங்களும் ஒருங்கே காணப்பட்டன". எனக் குறிப்பிட்ட அந்தக் கோட்டம் தான் அன்னை கண்ணகி கோவில்.
விண்ணோத்தி பாறையில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணகிக்காக பண்டைய மன்னர் சேரன் செங்குட்டுவன் எழுப்பிய. கண்ணகி கோட்டம் அல்லது மங்கள தேவி கண்ணகி கோவில் என்று அழைத்து வந்த சேரநாட்டு மக்கள் வழக்கமான பூஜைகளை செய்து வந்தனர்.
இது கடல் மட்டத்திலிருந்து 5000 அடியிலும்,1337 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது. வின்னேத்திபாறை (கோவலன் வின்னிலிருந்து வந்த பின்னர் கண்ணகியை கூட்டிச் சென்றதால் அந்தப் மலைப் பாறைக்குப் பெயர்) இங்கிருந்து ஒரு பக்கம் கிழக்கில் தென்மேற்கு பருவக்காற்று வீசும் மழை தரும் மேகமலைத்தொடர்களையும், அதனுடன் தமிழ் நாட்டில் இணைந்திருக்கும் சில கிராமப்பகுதிகளையும் நன்றாகவே காணலாம்.
சிலப்பதிகாரத்தில் சோழநாட்டு புகார் காண்டம் முடிந்து, மதுரையில் வஞ்சிப்பத்தன் எனும் மதுரை அரண்மனைப் பொற்கொல்லனால் திட்டமிட்டு தான் செய்த திருட்டுக் குற்றத்தை சமய சந்தர்ப்பங்களினால் கோவலன் மீது சுமத்திய நிலையில் தீர விசாரிக்காது மரணதண்டனை விதித்து கொலை செய்யத் தீர்ப்பு வழங்கிய பாண்டிய மன்னன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனால் அரண்மனை நிகழ்வு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அறிந்த கண்ணகி நீதிதவறிய பாண்டிய மன்னர் முன் தன் கணவன் குற்றமற்றவன் என நிரூபித்து அறநெறி கொன்ற பாண்டிய நாட்டினையும், துணை நின்ற வஞ்சிப்பத்தன் உள்ளிட்ட தீயோரையும், மதுரை மாநகரையும் தன் கற்பின் சாபத்தால் தீக்கிரையாக்கிதால் கோபம் தீராத நிலையில் அணங்கு (நெய்தல் நில தெய்வம்) போல மதுரையை எரித்த கண்ணகி அங்கிருந்து வைகையாற்றின் தென்கரை வழியாக, நடந்து சென்றதும் மன்னர் நீதி தவறிய நிலையில் மரணமடைந்தார் இராணியுடன் அவர் இன்று வரை பாண்டிய ராஜா முனீஸ்வரராக அருள் பாலிக்கிறார் தெய்வமாகிய அரசர் "பாண்டியய்யா "அது வரை தான் மதுரைக்காண்டம். அதன் பின்னர் சேரநாட்டு எல்லையான மேகமலைக்கு விண்ணேத்தி பாறைக்கு கீழ் பகுதிக்கு 14 நாட்கள் நடந்து மே மாதம் 29 ஆம் தேதி 130 ஆண்டு வந்தடைகிறாள். அங்கு மலை வாழிட பழங்குடி பளியர்கள் வசித்த தற்போதய பளியங்குடி மலைவாழ் மக்களாக பளிச்சியம்மனுக்கு குன்றக் குறவர்கள் ஆடிய குன்றக் குறவை நடனத்தினைப் பார்த்து அவளது கோபம் தணிந்து அவர்களிடம் தனது வாழ்க்கையையும் தனக்கு நேர்ந்த துன்பத்தையும் சொல்லி வருந்துகிறாள். பின்னர் மலை மீது ஏறிச் செல்லும் காட்சியைக் கண்டும் அங்கு பூந்தேரில் கோவலன் வந்து கண்ணகியை ஏற்றிச் செல்லும் நிகழ்வையும் அம் மக்கள் கண்டார்கள் அப்போது தெய்வம் தான் நம்மோடு பேசியதாக உணர்ந்து மன்னருக்கு தகவல் கூறினர். கண்ணகிக்கு திருமணம் நடந்த போது வயது 13 மதுரையை அழித்த போது வயது 27
அப்போது விண்ணில் பிரகாசமான ஒளி தோன்ற அவ்வொளிக்கிடையே தேவர்களுடன் தோன்றிய கோவலன் கண்ணகிக்கு மாங்கல்யம் அணிவித்து பூந்தேரில் அழைத்துச் சென்றதால் தானே வின்னேத்திபாறையில் மங்கலதேவி எனப் பெயர் பெற்றாள் தேவதை கண்ணகியின் இந்த நிகழ்ச்சி வஞ்சிக்காண்டம் கூறும் கதை அதை பளியர்கள் கூடிச் சென்று சேரமன்னனுக்கு தகவல் தரவே
இதைக் கண்டு வியப்படைந்த குன்றத்துக் குறவர்கள் சிவன் கழுத்தில் ஆரமாகும் முல்லையாரும் பேரியாறும் சேறும் தற்போது தேக்கடியாக உள்ள ஆற்றங்கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சேரநாட்டின் மன்னன் செங்குட்டுவனிடம் தாங்கள் கண்டதையும் கேட்டதையும். அவர்கள் கூற விசாரித்தறிந்த மன்னன் சேரன் செங்குட்டுவன் அந்த இடத்தில் கண்ணகிக்கு இமயமலை சென்ற வெற்றியில் அங்கிருந்து கொண்டு வந்த கல் மூலம் கண்ணகி சிலை வடித்துக் கோவில் ஒன்றைக் கட்டினான். இந்த கண்ணகி கோயில் அமைந்துள்ள பகுதி மங்கலதேவி கண்ணகி கோட்டம் என அழைக்கப்படுகிறது. அயோத்தி மன்னர் ஸ்ரீ இராமருக்கு இராமேஸ்வரம் மண் புனித சிவலிங்கம் ஆனதும்,
செங்குட்டுவன் சேரனுக்கு இமயமலைக் கல் தெய்வமாக வந்ததும் தான் ஆன்மீக வரலாறு.
மங்கலதேவி கண்ணகி கோட்டம் எனும் கோவில். வரலாறு சேரமன்னர் செங்குட்டுவன் உடன் பிறந்த சகோதரர் துறவியாக மாறிய இளங்கோவடிகள் அந்தக் காதையை கவித்துவமாக்கிய சிலப்பதிகாரக் காவியம் .
இந்த மங்கலதேவி கண்ணகி கோட்டம் பகுதியில் மங்கலதேவி கண்ணகி கோவிலில் தெற்கு திசையைப் பார்த்திருந்த சிலை மர்மமாக காணாமல் போய்விட்டதால் ( அது எங்கோ பாதுகாப்பாக இருக்கலாம் ஆய்வாளர் கோவிந்தராஜன் கூற்றுப் படி) சந்தனத்தில் சிலை போன்ற அமைப்பு செய்யப்பட்டு வெள்ளியிலான முகம் அதில் பொருத்தப்பட்டு தற்போது வழிபாடு செய்யப்படுகிறது. இந்தக் கோவிலில் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த பூஜகர்கள் வழிபாடுகளை நடத்துகின்றனர். கால்சிலம்பு சிலை ஒன்று தனி திறந்த நிலை சன்னதியில் உடைந்த நிலையில் உள்ளது காவல் துறை கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதை விடுத்து கோவில் தரிசனம் செய்யும் இடத்தை மறைத்து நிற்கும் செயலை விரோதமாகவே பலரும் பார்த்தனர். கோவிலின் உட்பகுதி வடக்கு திசையில் பார்த்து சிவபெருமான் மகாதேவராக உள்ள ஆலயம் இருக்கிறது. இதில் கேரளாவைச் சேர்ந்த பூஜகர்கள் பூஜைகளை நடத்துகின்றனர். கோவிலில் வழிபடுபவர்கள் உள் பகுதியில் மேற்கு திசையில் பகவதி எனும் துர்கையம்மனும் உள்ளது.
கோயிலில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பூஜகர்கள் பூஜைகளை நடத்துகின்றனர். கோயிலின் பின்புறம் திறந்த வெளியில் கன்னி மூலையில் விநாயகர் சிலை இருக்கிறது. இதற்கும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பூஜகர்கள் பூஜைகளை நடத்துகின்றனர். கோவிலில் வழிபடுபவர்களுக்கு மஞ்சள்தூள், குங்குமம், சந்தனம் கேரள மாநிலத்துப் பிரசாதமாக அவல் பொங்கல் வழங்கப்படுகிறது. கண்ணகி கோவிலில் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு சித்திரை மாதத்தில் ஒரு வாரம் வரை நடத்தப்பட்ட விழா கேரளா மாநில வனத்துறையின் காப்புக்காடு சட்டக் கட்டுப்பாடுகளால் மூன்று நாட்களாகக் குறைக்கப்பட்டு தற்போது அதுவும் சித்திரை மாதம் முழுநிலவு (பௌர்ணமி) தினத்தன்று மட்டும் ஒரு நாள் விழாவாக காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை வழிபாடுக்கு அனுமதிக்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர் கண்ணகி கோயில் வழிபாட்டுக் குழுவினர் அதற்கான ஏற்பாடுகளைச் உடனிருந்து கவனிக்கிறாகள். - விளம்பரம்- -விளம்பரம்-
அதன் வழியாகத்தான், தமிழ்நாடு பக்தர்கள், கண்ணகி கோவிலுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. இந்தச் சாலையை வைத்து, கேரள அரசு கண்ணகி கோவில் தங்கள் மாநில எல்லைக்குள் இருப்பதாகத் தெரிவிக்கிறது. ஆனால், 1817 ஆம் ஆண்டில், ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வே மிகப் பழமையானது. கண்ணகி கோவில் தமிழ்நாடு எல்லைப் பகுதியிலேயே இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அதன் பின்னர், 1893, மற்றும் 1896 ஆம் ஆண்டில் நடத்திய சர்வேயும், 1913, மற்றும் 1915 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட எல்லையைக் காட்டும் வரைபடங்களும் அதையே வலியுறுத்தியுள்ளன. 1959 ஆம் ஆண்டு வரை கேரளா அரசு, கண்ணகி கோவில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை. 1976 ஆம் ஆண்டில், தமிழ்நாடு கேரளா அரசு உயர் அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும், கண்ணகி கோவில் கேரளா எல்லையிலிருந்து 40 அடி தொலைவு தள்ளி தமிழ்நாட்டின் பகுதியில் இருப்பது ஒப்புக் கொள்ளப்பட்டது. இருப்பினும் கேரளா மாநில அரசு பின்னால் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறது எனக் கூறலாம். மதுரையை எரித்துவிட்டு அங்கிருந்து 14 நாட்கள் நடந்து திருச்செங்குன்றம் எனும் மலையில் இருந்து வின்னேத்தி பாறை மீது தேவலோகம் சென்றதாக வரலாறு சொல்கிறது. இந்த இடத்தில்தான் மங்கலதேவி கண்ணகி கோயிலும் இருக்கிறது. காவிரிப்பூம்பட்டினம் எனும் பூம்புகாரிலிருந்து மதுரை மாநகருக்குத் தனது கணவனுடன் கண்ணகி கிழக்கு வாயில் வழியாக நுழைந்தாள். அதன் பின்னர், தனது கணவனை இழந்த கண்ணகி , மதுரையை அழித்துவிட்டு மிகுந்த வெறுப்புணர்வுடன் மதுரையின் மேற்கு வாயில் வழியாக மனமுடைந்த நிலையில் தன்னந்தனியாய் புறப்படுகிறாள். என்கிறது (சிலம்பு 53:183) அதன் பின்னர் வைகை ஆற்றின் தென் கரையைப் பற்றி மேற்கு நோக்கி நடக்கிறாள் (சிலம்பு 23:185). அவ்வாறு நடந்தவள் பேரியாரும் முல்லையாரும் பரவிப்பாயும் இடமாகிய சுருளிமலைத் தாழ்வாரம் தொடராம் நெடுவேள் குன்றத்தில் அடிவைத்து ஏறி வந்து (சிலம்பு 23:190), மலை மீது இருந்த பூக்கள் பூத்துக் குலுங்கும் மூங்கில் புதர்கள் அடர்ந்த வேங்கைக் கானலில் வந்து நின்று வின்னேத்திபாறையில் (சிலம்பு 23:191) தெய்வமாகிறாள் (சிலம்பு 24:3). இத்தகையக் காட்சியினைக் குன்றக் குறவர்கள் நேரில் கண்டு அவளைத் தெய்வமாகப் போற்றினர் (சிலம்பு 24: 14, 15). குன்றக் குறவர்கள் இக்காட்சியினை மலைவளம் காண்பதற்காக வந்திருந்த சேரன் செங்குட்டுவனிடம் கூறினர். மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் குன்றக் குறவர்கள் கூறியதைத் தாமும் கண்டதாகக் கூறினார். அதனைக் கேட்ட சேரன் செங்குட்டுவனும் அவன் மனைவியும் கண்ணகிக்குக் கோயில் கட்டத் தீர்மானிக்கின்றனர். அதற்காக இமயமலை சென்று அங்கிருந்து வென்று கொண்டு வந்த கல்லெடுத்து இக்கோவிலை அமைத்தான்.
மங்கலதேவி கண்ணகி சுமங்கலிப் பெண்ணானவள் கணவனை இழந்தவுடன் அமங்கலியாகிறாள். அப்படியாயின் கண்ணகி எங்ஙனம் மங்கலதேவியாவாள்? என்கிற வினா அனைவரிடமும் எழும். கணவனை இழந்து கணவன் மீது சுமத்தப்பெற்ற பழியை நீக்கி மதுரையை எரித்துவிட்டு வந்த கண்ணகியைக் கோவலன் மங்கல மடந்தையாக்குகிறான். அவ்வாறு கோவலனால் மீண்டும் மங்கல மடந்தையாக்கப்பெற்று விண்ணுலகெய்திய கண்ணகியே மங்கலம் தரும் மங்கலதேவியாக அனைத்து மக்களாலும் வழிபடப்பட்டுவருகிறாள். விண்ணுலகிலிருந்து பூப்பல்லக்கில் தேவர்களுடன் வந்த கோவலன் கண்ணகிக்கு மங்கலநாண் அணிவித்து விண்ணுலகுக்கு அழைத்துச் சென்றதால் கண்ணகியை மக்கள் மங்கலதேவி என அழைக்கிறார்கள். -விளம்பரம்-
, கூடலூரில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோட்ட சீரமைப்புக்குழு துவங்கி கோவிலைப் புதுப்பிக்க திட்டமிட்டது. 1976 ஆம் ஆண்டில் இந்த சீரமைப்புக் குழு,அப்போதைய தமிழ்நாடு முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியைச் சந்தித்து உதவி கேட்டது. கூடலூரைச் சேர்ந்த, கே.பி.கோபால் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது கண்ணகி கோவிலுக்கு செல்லப் பாதை அமைக்க வேண்டும் என சட்டசபையில் பேசியதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டுப் பகுதி வழியாக கண்ணகி கோவிலுக்கு ரோடு அமைப்பதற்காக ரூபாய்.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த வேலை பாதி மட்டுமே நடந்தது.
இந்த நிலையில் 1976- ஆம் ஆண்டு கேரளா வனப்பகுதி வழியாக, தேக்கடியிலிருந்து கண்ணகி கோவிலுக்கு அவசரமாக கேரளா அரசு ஒரு பாதை அமைத்தது. இவ்வாறு போடப்பட்ட இந்த செங்குத்து பாதையின் வழியாகத்தான், குமுளியிலிருந்து தமிழ்நாடு பக்தர்கள், கண்ணகி கோயிலுக்குச் செல்ல வேண்டியதாகிறது. தற்போது இந்தச் சாலையை வைத்துக் கேரள அரசு கண்ணகி கோவில் கேரளாவிற்குச் சொந்தமானது என உரிமை கொண்டாடுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வரும் சித்திரை முழுநிலவு தினத்தன்று இந்த மங்கலதேவி கண்ணகி கோயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். -விளம்பரம்-
- விளம்பரம் -வழிபாட்டிற்கான கோவில் பராமரிப்பின்றி கோவிலின் பல பகுதிகள் சிதிலமடைந்து சிதைந்து போய்விட்டன.கோவில் சுவற்றின் கற்கள் உடைந்து போய் கிடக்கின்றன. கண்ணகி சிலையும் சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போயுள்ளதாக தெரிகிறது. தற்போது, சித்திரை முழுநிலவு விழா நேரத்தில் சந்தனத்தால் கண்ணகி முகம் வடிவமைக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.இப்படியே சில காலம் கவனிக்காத நிலை தொடர்ந்தால் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்து மக்கள் வழிபட்டுக் கோவில் அழிந்து போகுமல்லவாகோவிலைக் காப்பாற்ற இரண்டு மாநில அரசுகளும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தக் கோயிலின் பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சிலப்பதிகாரம் என்பது வரலாற்று நிகழ்வு ஆய்வறிஞர் பேராசிரியர் சி.கோவிந்தராசன்
குன்றக்குரவை என்னும் காதையுள், கண்ணகி மலைமேல், வேங்கை மர நிழலில் நின்று தெய்வமான இடத்தினையும், அவ்விடத்தில் சேரன் செங்குட்டுவன் அமைத்த பத்தினிக் கோட்டம் என்னும் கண்ணகிக் கோவிலையும் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தவர்,
1945 ஆம் ஆண்டு தொடங்கிய பயணம் 1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் நாள் மலையினுள் மறைந்து கிடந்த கோவிலைக் காணும் நிகழ்வில் நெகிழ்ந்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவருக்கு தொல்காப்பியர் விருது வழங்கிச் சிறப்பித்தார்.
கண்ணகி கோட்டத்தைக் கண்டுபிடித்தது குறித்து அவர் கூறுகையில்
’’சிலப்பதிகாரத்தை முழுமையாகப் படித்தேன். அதில் எல்லாம் தெளிவாக கூறப்பட்டுள்ளது. சோழ நாட்டின் தலைநகரமான பூம்புகாரில் இருந்து கோவலனும் கண்ணகியும் நடந்து சென்ற பாதையாக அதில் கூறப்பட்டுள்ள இடங்களுக்கெல்லாம் நான் நடந்தே சென்றேன். மதுரையில் கண்ணகி பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு அது கிடைக்காததால் நகரை எரித்துவிட்டு தலைவிரி கோலமாய் மேற்கு நோக்கிச் செல்கிறாள். சேர நாட்டின் மலைப் பகுதியான முருகவேல் குன்றத்துக்கு (இன்றைய மங்களதேவி மலை) சென்று அங்கு வானுலகில் இருந்து ரதத்தில் வந்திறங்கிய கோவலனுடன் இணைந்து கண்ணகி விண்ணுலகம் சென்றதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.
கண்ணகி நடந்து சென்றதாக கூறப்பட்ட பாதை வழியாக நானும் இரவு, பகல் பாராமல் நடந்தேன். மதுரையில் இருந்து 90 மைல் தொலைவில் உள்ள மங்களதேவி மலையை அடைந்தேன். 40 மைல் சுற்றளவில் கண்ணகி கோட்டத்தைத் தேடி அலைந்தேன். இறுதியில் அந்தக் கோட்டத்தைக் கண்டுபிடித்தேன்.’
’’வானுலகில் இருந்து ரதத்தில் இறங்கி வந்த கோவலனுடன் கண்ணகியும் விண்ணுலகம் சென்றதை நேரில் கண்ட மலைவாழ் மக்கள் அந்த செய்தியை மன்னன் சேரன் செங்குட்டுவனிடம் கூறுகிறார்கள். மன்னனின் மனைவி அந்த இடத்தில் பத்தினித் தெய்வமான கண்ணகிக்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் என எண்ணுகிறாள். அதன் பின்பு வடபுலத்து அரசர்களை வெற்றி கண்டு இமயமலையில் கல்லெடுத்து அதை கங்கையில் நீராட்டி தலைச்சுமையாக இங்கு கொண்டு வந்து அந்தக் கல்லில் கண்ணகிக்கு சிலை வடித்து முருகவேல் குன்றத்தில் நிறுவி நாள்தோறும் வழிபாடும், விழாக்களும் நடத்தி வந்தான் மன்னன். அத்தகைய சிறப்பு மிக்க கண்ணகி கோட்டம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக குறிப்புகள் உள்ளன.’’ அது கண்ணகி கோட்டம்
’’மண்டிக்கிடந்த புதருக்குள் சிறிய கோட்டைச் சுவர் போன்ற கல் கட்டடத்திற்குள் கண்ணகி சிலை இருந்தது. அந்த கற்களில் தமிழ் வட்டெழுத்தும், முற்காலப் பாண்டியர் காலத்து தமிழ் எழுத்துகளும் காணப்பட்டன. அங்கு சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பழங்கால மலைவாழ் மக்கள் மட்டும் இல்லையே தவிர, எஞ்சிய வன விலங்குகள், இயற்கை காட்சிகள், வேங்கை மரங்கள் என அத்தனை அடையாளங்களும் ஒருங்கே காணப்பட்டன.
மேலும், அங்கிருந்த கண்ணகி சிலை, இமயமலை கல்லில் செதுக்கப்பட்டது என்பதால், அந்த கல்லை ஆய்வுக்கு உட்படுத்தினேன். அது மாதிரியான கல் அருகில் உள்ள மலைகளிலோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள மலைகளிலோ இல்லை. இறுதியில் இமயமலை கல்லுடன் ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்தேன். தலையில் சுமந்து வரும் எடையளவில் இருந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளது கண்ணகி சிலை. அந்தச் சிலையைப் பாதுகாக்கும் வகையில் எனது வீட்டில் வைத்திருந்தேன். தகவலை அறிந்த அப்போதைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி என்னை அழைத்து கண்ணகி சிலையைக் கேட்டார். அவர் கேட்டபடி அரசிடம் ஒப்படைத்து விட்டேன்.
தமிழர்களின் வரலாற்றை செப்பம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கண்ணகி கோட்டம் கண்டேன். அதற்காக உழைத்தேன். பேர், புகழ், பதவி, பட்டம், விருது வரும் என நினைத்ததில்லை; ஆனால் அதெல்லாம்தான் இப்போது நடக்கிறது.’’ என்றவர். தஞ்சாவூர் கரந்தட்டான்குடியில் வசிக்கிறார்
இந்த பழமையான கோவிலின் மற்றுமொரு ஈர்ப்பு அதன் இயற்கை அழகு. இந்த புனித யாத்திரை மையம் பசுமையான இடத்திற்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தின் அழகிய காட்சி சுற்றுலா பயணிகளைக் கவர்கிறது. இங்கிருந்து கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர் மற்றும் சில கிராமங்களைப் பாரக்க முடியும்.
தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தின் எல்லையில் சுருளி அருவிக்கு மேலே
வருடத்திற்கு ஒரு முறை சித்திரை மாதத்தில் பௌர்ணமி அன்று மட்டுமே செல்ல முடியும் கடந்த 2000 வருடமாக பளியங்குடி மக்கள் காப்புக்கட்டி கண்ணகியின் வழிபாடு செய்யும் நிலை.
"என்றீங்கு,
அலர்பாடு பெற்றமை யானுரைப்பக் கேட்டுப்
புலர்வாடு நெஞ்சம் புறங்கொடுத்துப் போன
மலர்தலை வெற்பன் வரைவானும் போலும்
முலையினால் மாமதுரை கோளிழைத்தாள் காதல்
தலைவனை வானோர் தமராரும் கூடிப்
பலர்தொழு பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த
நிலையொன்று பாடுதும் யாம்
பாடுகம் வாவாழி தோழியாம் பாடுகம்
பாடுகம் வாவாழி தோழியாம் பாடுகம்
கோமுறை நீங்கக் கொடிமாடக் கூடலைத்
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுகம்
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுங்கால்
மாமலை வெற்பன் மணவணி வேண்டுதுமே
பாடுற்றுப் பத்தினிப் பெண்டிர் பரவித் தொழுவாளோர்
பைத்தர வல்குல்நம் பைம்புனத் துள்ளாளே
பைத்தர வல்குல் கணவனை வானோர்கள்
உய்த்துக் கொடுத்தும் உரையோ ஒழியாரே
வானக வாழ்க்கை யமரர் தொழுதேத்தக்
கான நறுவேங்கைக் கீழாளோர் காரிகையே
கான நறுவேங்கைக் கீழாள் கணவனொடும்
வானக வாழ்க்கை மறுதரவோ வில்லாளே
மறுதர வில்லாளை ஏத்திநாம் பாடப்
பெறுகதில் லம்மஇவ் வூருமோர் பெற்றி
பெற்றி யுடையதே பெற்றி யுடையதே
பொற்றொடி மாதர் கணவன் மணங்காணப்
பெற்றி யுடையதிவ் வூர் என்றியாம்
கொண்டு நிலைபாடி ஆடும் குரவையைக்
கண்டுநம் காதலர் கைவந்தா ரானாது
உண்டு மகிழ்ந்தானா வைகலும் வாழியர்
வில்லெழுதிய இமயத்தொடு
கொல்லி யாண்ட குடவர் கோவே.'' .. என்கிற சிலப்பதிகாரம் 1965 ஆம் ஆண்டு கோவிந்தராஜனின் மற்றும் சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம், கண்ணகி கோவிலை அடையளமப்படுத்துகிறார் அதுவரை, தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள், இந்த இடத்தை 'மங்கலதேவி' என்ற பெயரில் வழிபாடு செய்துள்ளனர். கணநாத் ஒபேசேகர எனும் மானிடவியல் ஆய்வாளர் கண்ணகி வழிபாட்டின் வடிவமான பத்தினி தெய்வ வழிபாடு எவ்வாறு இலங்கையின் பல்வேறு இடங்களில் காணக்கிடைக்கிறது என விரிவாக ஆய்வு செய்து 1983 ஆம் ஆண்டில் ‘The cult of Goddess Pattini’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். அதில் ஹிந்து-பௌத்த சமூகங்களில் குடும்ப அமைப்பில் எவ்வாறு பத்தினித்தன்மை வழிபடும் அங்கமாக உள்ளது என்று விளக்குகிறார். தமிழ்நாட்டில் அதிக மக்கள் கவனத்தைக் கண்ணகி கோவில் பெற்றுள்ளது . ஆனால் புனரமைக்கும் பணிகள் நடைபெறவில்லை. தற்போது கோவிலின் ராஜ் கோபுரம் நுழைவாயில் சுற்றுச்சுவர்கள் அனைத்தும் உடைந்து காணப்படுகிறது. 70 ஆண்டுகளில் கோவில் சீரமைக்கப்படவில்லை''கண்ணகி கோவிலை அடையாளப்படுத்திய பேரா. சி கோவிந்தராஜன் 1963 ஆம் ஆண்டில் கோவிலைப் புனரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை 1982 ஆம் ஆண்டில், கேரளாவில் பெரியார் புலிகள் வனக் காப்பகம் எனும் காப்புக்காடு உருவாகிறது. அதனால், வனப்பகுதிக்குள் உள்ள கண்ணகி கோவிலுக்குச் சென்று வர கேரளா அரசாங்கம் ஒரு பாதையை உருவாக்குகிறது. பின்னர் கோவிலைப் பராமரிக்கும் பணியை 1983 ஆம் ஆண்டில் கேரள அரசு எடுத்துக் கொள்கிறது,''எனதமிழ்நாடு சட்டமன்றத்தில் 1986 ஆம் ஆண்டில் கண்ணகி கோவில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை நீக்கி, புனரமைக்க வேண்டும் என அப்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் ரகுமான் கான் பேசியுள்ளதன் தொடர்ச்சியாக பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், கேரளா மற்றும் தமிழ்நாடு அரசுகளின் வனத்துறையில் தலையீடுகள் இருந்ததால், புனரமைக்கும் பணிகள் மீண்டும் கிடப்பில் போடப்பட்ட போதும் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தேனி மாவட்டம் பளியங்குடி கிராமத்தில் இருந்து நெடுங்குன்றம் செல்ல ஆறு கிலோ மீட்டர் நடைபாதையில் பக்தர்கள் நடந்து செல்கின்றனர். அல்லது கேரளாவின் வனப்பகுதிக்கு உட்பட்ட குமுளி பகுதியில் வாகன சோதனைகளுக்குப் பின்னர், சிறப்பு பாஸ் பெற்று பெரியார் வனப்பகுதியில் 14 கிலோ மீட்டர் வழியாக கேரளா அரசாங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜீப் வண்டிகளில் பணம் செலுத்திச் சென்று வருகின்றனர். .
''இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகா அட்டாரி எல்லைக்குக் கூட அனுமதியில் சென்று விடலாம் ஆனால், தமிழ்நாடு-கேரளா எல்லையிலுள்ள கண்ணகி கோவிலுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் அவ்வளவு எளிதாகச் சென்று வர முடியாது. தண்ணீர்
ஐந்து லிட்டர் பிளாஸ்டிக் கேன் மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். தீபம் வைக்கக் கூட தீப்பெட்டி எடுத்துச் செல்லக்கூடாது. பிளாஸ்டிக் கவர் எடுத்துச் செல்லக்கூடாது என பல விதிகள். பேரியாறு புலிகள் காப்பகம் பகுதியில் இருப்பதால் கட்டுப்பாடுகள் தேவை என கேரளா வனத்துறை அலுவலர்கள் கூறுகிறார்கள். ஆனால் இதே வனப்பகுதியின் மற்றொரு பகுதியில் அமைந்துள்ள சபரிமலைக்குச் சென்று வர எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை,''என்கிறார் பலமுறை கண்ணகி கோவிலுக்குச் சென்று வந்துள்ள நபர்கள்
பலரும் பேசும்போது, மிகவும் அச்சுறுத்தும் தொனியில் பணி செய்து வரும் அலுவலய்கள் நடந்து கொள்வதாகவும், தமிழ்நாடு அரசு பளியங்குடி கிராமத்தில் இருந்து பாதை அமைத்து, பிரச்னை இன்றி பக்தர்கள் சென்றுவர ஏற்பாடு செய்யவேண்டும் என்கிறார்கள் பலரும்.
''நாம் சென்ற ஜீப் வாகனத்திற்கு ஒரு அனுமதிச் சீட்டு, எனக்கு ஒரு அனுமதிச் சீட்டு தந்தார்கள். என் நண்பர்களும் வந்திருந்தார். அனுமதி வாங்கிய வண்டியில், அனுமதிக்கப்பட்ட நபர் மட்டும்தான் செல்ல வேண்டும். என்கிறார்கள். மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை செய்கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலரும் இந்த சோதனை முறை அச்சம் கொள்ள வைக்கிறது,
சித்திரை மாதம் பௌர்ணமி மங்கல தேவி கண்ணகி கோட்டம் (கோவில்) திருவிழா நேற்று நடந்தது
கோவிலில் ஓவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முழுநிலவு பௌர்ணமியில் கொண்டாடப்படும்திருவிழா நாளில் மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய கோவிலுக்கு அனுமதியளிக்கப்பட்டு வருகிறது
அதற்காக மேகமலை பேரியாறு புலிகள் காப்புக்காடு வனமலைப்பகுதியிலுள்ள கோவிவில் சுத்தம் செய்யப் பட்டு, வாழை மரங்களால் தோரணம் கட்டி அலங்கரிக்கப் பட்டது. மங்கலதேவியான கண்ணகிதேவிக்கு மாம்பழ நிறத்தில் பட்டுப்புடவை அணிவித்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
இத் திருவிழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வதற்காக கேரளா மாநிலம் குமுளியிலிருந்து தேக்கடிப் பாதை வழியாக கேரளா மாநிலத்தில் அனுமதி பெற்ற ஜீப்களிலும், மற்றும் பழைய கூடலூர் அருகே லோயர் கேம்ப் அருகில் பளியன்குடியிலிருந்து மலைப் பாதை வழியாகவும், நடந்தும் பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்ய வந்தனர். சில பக்தர்கள் ஊன்று கோலை ஊன்றி கண்ணகி வந்த மலைப் பாதையில் விரதமிருந்து நடந்து வந்ததையும் பார்க்க முடிந்தது.
இடுக்கி மாவட்டத்தில் குமுளி பேரூந்து நிலையம் அருகில் வெயிலில் இரண்டு மணி நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்ய ஜீப் மூலம் பத்து பத்து நபர்கள் வீதம் அனுமதிக்கப்பட்டனர்,
அதேபோல் குமுளியில் இருந் தும் பக்தர்கள் நடந்தும் சென்றனர். பக்தர்களுக்காக குமுளியில் இருந்து 600-க்கும் மேற்பட்ட பாஸ் வழங்கிய நிலையில் 100 ஜீப்கள் மட்டுமே இயக்கப்பட்டன. பலத்த சோதனை மற்றும் பாலிதீன் தவிர்ப்பு உள்ளிட்ட சோதனை முடிவில் ஆபத்தான செங்குத்து மலைப்பாதை மற்றும் ஹேர்பின் வளைவுகள் கொண்ட புலிகள் மற்றும் யானைகள் கொடிய மிருகங்கள் நடமாடும் காப்புக்காடு வனச் சட்டங்கள் அமலில் உள்ள வழியாக ஜீப்கள் மெல்ல ஊர்ந்து நகர்ந்து சென் றன. இரண்டு மாநிலங்களையும் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் பக்தர்களைத் தாண்டி அதிகாலை முதல் மாலை 5.30 மணி வரை கோவிலில் சுவாமி தரிசனம் செய்யக் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கூட்டம் அலைமோதிய தால் சுவாமி தரிசனம் செய்ய சுமார் இரண்டு மணி நேரம் வரை ஆனது பக்தர்களுக்கு மஞ்சன், குங்குமம், கயிறு வளையல், எலு மிச்சம்பழம் போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டது.
மேலும், கோவில் பூஜைக்காக தமிழ்நாடு பூஜகர்கள் தெற்கு பார்த்தது அமைந்த மங்கள தேவி அன்னை கண்ணகிக்கும் கேரளாவின் பூஜகர்கள் வடக்கு நோக்கி அமைந்துள்ள சிவன் (மகாதேவர்) சன்னதி மற்றும் மேற்கு நோக்கி அமைந்துள்ள பகவதி அம்மன் எனும் அன்னை உமையவளுக்கும் மற்றும் மேற்கு நோக்கி அமைந்துள்ள இராஜ லிங்கம் ஆலயத்திலும் பூஜைகள் செய்தனர். காவல் செய்யும் காவல்துறையினரில் கூட கண்ணகி ஆணையத்தில் தமிழ்நாடு சார்ந்த காவல்துறையினரும் மற்ற சன்னதியில் கேரளா மாநிலத்தின் காவல்துறையினரும் பாதுகாப்பு செய்து வேற்றுமையை நிரூபித்ததை நாம் கண்ணால் கண்டோம். மற்றும் கேரளா மாநிலப் பக்தர்கள் பொங்கள் வைத்து வழிபாடு செய்தனர். கோவிலுக்குச் செல்லும் வழியில் தமிழ்நாடு மற்றும் கேரளா வனத்துறையினர் தீவிரக் கண்கா ணிப்புப் பணியில் ஈடுபட்டனர். வனப்பகுதியின் நுழைவு வாயிலில் சோதனை ரும் மூலம் அனுமதிக்கப்பட்டனர்.
கோவிலில் தமிழ்நாடு, கேரளா மாநில காவல்துறை மற்றும் தீய ணைப்புப் படையினரும் 108 ஆம்புலன்ஸ் மற்றும் 101 பேரிடர் மேலாண்மை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத் தப்பட்டனர். பக்தர்களின் உதவிக்காக கோவிலிலும், செல்லும் வழியிலும் ஆம்புலன்ஸ்கள் பெயருக்கு நிறுத்தப்பட்டிருந்தன. கோவில் அருகில் மருத்துவ குழுவினர் முகாமிட்டிருந்தனர் யாரும் சிகிச்சை பெற்றதாகத் தெரியவில்லை பெரும்பாலும் அரசு மற்றும் காவல்துறை வாகனங்கள் மூலம் பணி செய்யும் நபர்களின் குடும்பத்தினரை சுற்றுலா போல அழைத்து வந்த பலரும் அரசு வாகனங்களை சொந்த வாகனம் போல பயன்படுத்துவதைக் கண்டோம் மற்ற பக்தர்களைக் கண்டுகொள்ளவில்லை.என்பது கூடுதல் தகவல். மாலை 5 மணிக்கு பக்தராக வந்த 80 வயது பெரியவர் இரு பிரிவுகளாக உள்ளது பள்ளத்தாக்குப் பகுதியில் நடுவில் உள்ள பாதையில் ஒருவர் மயங்கிய நிலையில் நமது நண்பர் சமூக ஆர்வலர் ரெங்கநாதன் திருப்பதி தான் கேர்ளா மாநிலத்தின் வனத்துறை அலுவலர்கள் மற்றும் மற்றும் அவசரக் காவல்துறை உதவி எண் 100 க்கும் தகவல் அளித்த பின்னர் வந்த ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர், பணிக்கு வந்த சிலரைத் தவிர பலரும் தாங்கள் பிக்னிக் வந்தது போல் நடந்து கொண்டதை நாம் நேரில் கண்டோம். இந்த ஆண்டு முதல் முறையாக கோவிலில் சித்த மருத்துவக் குழுவினரைக் கொண்ட மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டிருந்தது ஆனால் அதன் பலன் பக்தர்களுக்கு கிடைத்ததா என்பதே இங்கு எழுத வினா. தமிழ்நாட்டில் இருந்து வந்த இந்து சமய அறநிலையத் துறை ஏதோ ஒரு குறிப்பிட்ட அளவு அன்னதானம் செய்து பின்னர் கூடுதல் கூட்டம் வந்த நிலையில் நிறுத்திக்கொண்டார்கள். தமிழ்நாட்டில் இருந்து பணிக்கு வந்த ஒரு பெண் காவல்துறை சார்பு ஆய்வாளர் தான் கண்ணகி சன்னதியில் விபூதி வழங்கும் பணி செய்தார். மற்றும் பலர் ஏதோ நமக்கு டியூட்டி போட்ட கடமைக்காக வந்து சென்றனர்.
பாதுகாப்பு மற்றும் திருவிழா ஏற்பாடுகளை தேனி மாவட்ட ஆட்சியர் சஞ்ஜித் சிங் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் இருவரும் மேற்பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் இந்த விழா குறித்து தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் இணைந்து கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும் என்ற விதி அமலில் உள்ளதன்படி கூட்டம் நடைபெற்றதாக தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.சஞ்சீவனா மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் ஆகியோர் முன்பே தெரிவித்திருந்தனர்.
பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படுவதாகவும், அவர்கள் மோசமாக நடத்தப்படுவதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் சந்திப்பு சமீபத்தில் தான் நடைபெற்றது. கோவில் திருவிழாவின்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கோவிலுக்குச் செல்லும் பாதை கேரள வனப்பகுதியில் இருப்பதால், அங்கு யாரும் பிளாஸ்டிக் பொருட்கள், எளிதில் தீ பற்றும் பொருட்களை எடுத்துவரக்கூடாது என்ற நடைமுறை பல ஆண்டுகளாக தொடர்கிறது.
இதை மட்டும் தான் படித்து ஒப்பிக்கும் மாணவர்கள் போல கூறினர்
இதுதவிர வேறு புதிய நடைமுறைகள் எதுவும் விதிக்கப்படவில்லை. நெரிசலைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறோம். புதிய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. எந்த பக்தர்களுக்கும் சிரமம் இல்லை. தமிழ்நாடு அரசின் காவல்துறை அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள் அங்கிருக்கிறார்கள். பக்தர்களுக்கு எந்த இடர்பாடும் இருப்பதில்லை,'' என்கிறார் ஆட்சியர் சஞ்சீவனா.
கோவிலைப் புனரமைப்பது குறித்துக் கேட்டபோது, ''கேரளா அரசின் பராமரிப்பில் கோவில் உள்ளது. கோவில் அமைந்துள்ள இடம் தமிழ்நாட்டுக்குத்தான் சொந்தம். அதனால், வழிபாடு செய்வதை நாங்கள் உறுதி செய்கிறோம்,'' என்கிறார் ஆட்சியர் சஞ்சீவனா.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்களிடம் அதீத கட்டுப்பாடுகள் காட்டப்படுகின்றனவா என இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜிடம் கேட்ட செய்தியாளர்களிடம்
எந்த புதிய விதிகளும் உருவாக்கப்படவில்லை என்றும் நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்ட விதிகளை மட்டுமே இந்த ஆண்டும் கடைப்பிடிக்கப்படுவதாக சபரிமலை கோவிலுக்கு ஒருவிதமாகவும், கண்ணகி கோவிலுக்கு வேறுவிதமான கட்டுப்பாடுகளும் இருப்பது ஏன் என்று கேட்ட நிலையில்.
''காலை 6 மணி முதல் மாலை 5:30 மணி வரை கண்ணகி கோவிலில் வழிபாடு செய்யலாம். புதிதாக நாங்கள் எந்த விதிகளையும் உருவாக்கவில்லை. சபரிமலை கோவிலையும் கண்ணகி கோவிலையும் ஒரே விதமாக நடத்த முடியாது. இரண்டும் அமைந்துள்ள வனப்பகுதிகள் வித்தியாசப்படும்,'' என்கிறார் ஷீபா ஜார்ஜ். கோவில் புனரமைப்பு குறித்து கேட்டபோது, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதால், வேறு தகவலைப் பற்றி பேச முடியாது என்கிறார். அதனால், பல அரசாங்கங்கள் முன்னெடுத்தும் கண்ணகி கோவிலுக்கான பாதை தமிழ்நாட்டின் எல்லையில் இன்றுவரை அமைக்கப்படவில்லை. கோவிலும் புனரமைக்கப்படவில்லை.
இறுதியாக, மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பாக கேரளா உயர்நீதிமன்றத்தில் கோவிலைப் புனரமைக்க 2014 ஆம் ஆண்டில் வழக்குத் தொடரப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் வெளியான தீர்ப்பில் கேரளா அரசின் தொல்லியல் துறை பணத்தை ஒதுக்கி கோவிலைப் புனரமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.கேரளாவில் கண்ணகி அம்மன் வழிபாடு பரவலாக இருப்பது குறித்த புத்தகம் ஒன்றை எழுதியுள்ள எழுத்தாளர் மற்றும் நாட்டார்வழக்காற்றியல் ஆய்வாளர் அ.க.பெருமாள்
கூறுகையில், "கண்ணகி கோவில் அமைந்துள்ள நெடுங்குன்றம் என்ற பகுதி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறி முதல் கேரளாவில் உள்ள மலபார் கடற்கரையில் உள்ள கொடுங்கலூர் நகரத்திற்கும் இடையில் வணிக வழியாக இருந்த இடம் என்பதால் கேரளாவில் கண்ணகி வழிபாடு பரவியது," என்கிறார்.
''கண்ணகியை பல பெயர்களில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வழிபடுகிறார்கள். சிலப்பதிகாரத்தில் மதுரையை எரித்த பின்னர் 14 நாட்கள் நடந்து சென்ற கண்ணகி, நெடுங்குன்றம் பகுதியில் உள்ள விண்ணேற்றிப்பாறையில் போய் நிற்பதாகக் குறிப்பு வருகிறது.
,''கண்ணகி கோவிலை புனரமைக்க வேண்டும் என கேரளா மற்றும் தமிழ்நாடு அரசுகளின் முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால், உச்சநீதிமன்றத்தை நாடியதாகவும் கூறுகிறார்.கண்ணகி கோவில் அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அலுவலர் மற்றும் தமிழக கல்வெட்டுகள் குறித்த புத்தகங்களை எழுதியவர். நவீன அறிவியல் முறைகளைக் கொண்டு, கற்களைச் சோதித்து, இந்த கோவில் கட்டப்பட்ட ஆண்டை கணக்கிடமுடியும். அதேபோல, இந்தக் கோயிலைச் சுற்றி மத்திய தொல்லியல் துறை சார்ந்த தொல்லியல் ஆய்வுகள் செய்தால், பல சான்றுகள் கிடைக்க வாய்ப்புள்ளது,
''இந்த கோவிலில் உள்ள கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்டும், சிலப்பதிகாரத்தில் உள்ள குறிப்புகளைக் கொண்டும், இதன் தொன்மையை அறிய முடியும். உண்மையில் இமய மலையிலிருந்து கல் எடுத்து வந்து இங்கு கோவில் அமைக்கப்பட்டதை தற்போது கூட ஆய்வு செய்து நிரூபிக்க முடியும்.இரண்டு மாநில எல்லைக்கு நடுவில் அமைந்திருக்கும் பிரச்னை காரணமாக, மத்திய தொல்லியல் துறை தலையிடலாம் பராமரிப்பு இல்லாமல் தொடர்ந்து சிதிலமடைந்துகொண்டே வருகிறது இந்திய தொல்லியல் துறை (ASI).New Delhi, Delhi 110023 க்கு நாம் வைத்திருக்கும் கோரிக்கை இரு மாநில அரசு சம்பந்தப்பட்ட ஆலயம் என்பதால் தான் பிரச்சினை வளர்கிறது இலை மத்திய தொல்லியல் துறை மற்றும் மத்திய வனத்துறை மற்றும் மத்திய சாலை போக்குவரத்துத் துறை மற்றும் மத்திய கலாச்சார பண்பாட்டுத்துறை. தலையிட்டு நடவடிக்கை எடுத்தால் வழிபாட்டு முறைக்கும் ஆலயத்தில் தினசரி பூஜைகள் நடப்பதற்கு வழி பிறக்கும். நாம் நமது இதழ் பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் ஸ்ரீ யதுபீர் சிங் ராவத். தலைமை இயக்குநர். dg.asi@gov.in
திரு. ஆனந்த் மதுகர். கூடுதல் இயக்குநர் ஜெனரல் (நிர்வாகம், நிர்வாகம், பொதுப் பிரிவு, வலைத்தளம், திறன் மேம்பாடு). adg.admn-asi@gov.in
டாக்டர். ஆலோ திரிபதி. கூடுதல் இயக்குநர் ஜெனரல் (நினைவுச்சின்னம் NMMA, BSP, தொல்பொருள் நிறுவனம்)
ஸ்ரீ ஜான்விஜ் சர்மா. கூடுதல் இயக்குநர் ஜெனரல் (பாதுகாப்பு, உலகப் பாரம்பரியம், NCF, அறிவியல் பாதுகாப்பு) adg1.asi@nic.in
டாக்டர். சஞ்சய் குமார். கூடுதல் பொது இயக்குநர் (காப்பகம், நூலகம், ஐகானிக் தளம், CEP) skmanjul.asi@gov.in, dirins.asi@gmail.com
ஸ்ரீ டிஜேஇணை இயக்குநர் ஜெனரல் (நினைவுச்சின்னம்-I)
tjalone.asi@gov.in,tjal one@gmail.com. ஏ.எம்.வி. சுப்ரமணியம்இயக்குநர் (நினைவுச்சின்னம் -I)
ஸ்ரீ அமர்நாத் ராமகிருஷ்ணர், இயக்குநர் (பழங்கால,NMMA) ஆகியோர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு குடமுழுக்கு நடைபெறாமல் உள்ளது அதை சரிசெய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் முறையாக தரிசனம் செய்யும் வழி கிடைக்கும் போது பல லட்சம் மக்கள் கூடி வழிபாடு நடக்கும். அதற்கு விரைவில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வரவேண்டும் என்பதே நமது அவா. ."அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.....
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்......
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்."..... இது பொதுநீதி கூறுவது சிலப்பதிகாரம்
கருத்துகள்