நாமக்கல் நாமக்கல் சுகுணா கோழிப் பண்ணை உரிமையாளர் வீடு, அலுவலகத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமானவரித் துறையினர் சோதனை
நாமக்கல்லைச் சேர்ந்த சுகுணா கோழிப் பண்ணை உரிமையாளர் வீடு, அலுவலகத்தில் கோயமுத்தூர் வருமானவரித் துறை அலுவலர்கள் வரி ஏய்ப்பு சம்மந்தமாக சோதனை மேற்கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலை எம்.ஜி நகரைச் சேர்ந்தவர்சுகுனா கோழிப் பண்ணை உரிமையாளர் வாங்கிலி சுப்பிரமணியம். இவர் நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட நாடு முழுவதும் பல இடங்களில் கிளை அமைத்து முட்டைக் கோழி மற்றும் பிராய்லர் கோழிப் பண்ணைகள் நடத்தி வருகிறார். மேலும், கோழித் தீவன ஆலை, கோழிக் குஞ்சு பொறிக்கும் ஹேச்சரீஸ், மற்றும் கோழி வளர்ச்சி நிதி நிறுவனம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறார்.
தவிர, தமிழ்நாட்டின் பல இடங்களில் பிராய்லர் கோழிப் பண்ணைகளை அவர் இண்டக்ரேஷன் முறையில் நடத்தி வருகிறார். தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவராகவம் செயல்படுகிறார். அவருக்குச் சொந்தமான அலுவலகம் நாமக்கல்- திருச்சிராப்பள்ளி பிரதானச் சாலையில் மற்றும் கிருஷ்ணகிரியிலும் செயல்பட்டு வருகிற நிலையில்,நேற்று 10 கார்களில் நாமக்கல் வந்த 30-க்கும் மேற்பட்ட, வருமான வரித் துறை அலுவலர்கள் திடீரென வாங்கிலி சுப்பிரமணியத்தின் வீடு, அலுவலகங்கள் மற்றும் நிதி நிறுவன அலுவலகம் ஆகியவற்றின் சோதனை மேற்கொண்டனர். மாலை 5 மணியைக் கடந்தும் சோதனை நீடித்தது.வெளியாட்கள் யாரும் அவரது அலுவலகம் மற்றும் வீட்டிற்குள்
அனுமதிக்கப்படவில்லை. வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்படுவதாக வருமான வரித் துறை அலுவலர்கள் தரப்பு தெரிவித்தது.மேலும், சோதனை முடிவில் தான் அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் விவரம் தெரியவரும் என வருமான வரித் துறையினர் தெரிவித்தனர் சோதனை மேற்கொள்ளப்பட்ட தொழிலதிபர் வாங்கிலி சுப்பிரமணியம் மற்றும் வி. எஸ். மணிகண்டன் இல்லம் அருகே நாமக்கல் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கத்தின் இல்லம் உள்ளது.
நாமக்கல்லைச் சேர்ந்த சுகுனா கோழிப் பண்ணை உரிமையாளர் வீடு, அலுவலகத்தில் கோயமுத்தூர் வருமானவரித் துறை அலுவலர்கள் வரி ஏய்ப்பு சம்மந்தமாக சோதனை மேற்கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலை எம்.ஜி நகரைச் சேர்ந்தவர்சுகுனா கோழிப் பண்ணை உரிமையாளர் வாங்கிலி சுப்பிரமணியம். இவர் நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட நாடு முழுவதும் பல இடங்களில் கிளை அமைத்து முட்டைக் கோழி மற்றும் பிராய்லர் கோழிப் பண்ணைகள் நடத்தி வருகிறார். மேலும், கோழித் தீவன ஆலை, கோழிக் குஞ்சு பொறிக்கும் ஹேச்சரீஸ், மற்றும் கோழி வளர்ச்சி நிதி நிறுவனம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறார்.
தவிர, தமிழ்நாட்டின் பல இடங்களில் பிராய்லர் கோழிப் பண்ணைகளை அவர் இண்டக்ரேஷன் முறையில் நடத்தி வருகிறார். தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவராகவம் செயல்படுகிறார். அவருக்குச் சொந்தமான அலுவலகம் நாமக்கல்- திருச்சிராப்பள்ளி பிரதானச் சாலையில் மற்றும் கிருஷ்ணகிரியிலும் செயல்பட்டு வருகிற நிலையில்,நேற்று 10 கார்களில் நாமக்கல் வந்த 30-க்கும் மேற்பட்ட, வருமான வரித் துறை அலுவர்கள் திடீரென வாங்கிலி சுப்பிரமணியத்தின் வீடு, அலுவலகங்கள் மற்றும் நிதி நிறுவன அலுவலகம் ஆகியவற்றின் சோதனை மேற்கொண்டனர். மாலை 5 மணியைக் கடந்தும் சோதனை நீடித்தது.வெளியாட்கள் யாரும் அவரது அலுவலகம் மற்றும் வீட்டிற்குள் அனுமதிக்கப்படவில்லை. வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்படுவதாக வருமான வரித் துறை அலுவலர்கள் தரப்பு தெரிவித்தது.மேலும், சோதனை முடிவில் தான் அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் விவரம் தெரியவரும் என வருமான வரித் துறையினர் தெரிவித்தனர் சோதனை மேற்கொள்ளப்பட்ட தொழிலதிபர் வாங்கிலி சுப்பிரமணியம் மற்றும் வி. எஸ். மணிகண்டன் இல்லம் அருகே நாமக்கல் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கத்தின் இல்லம் உள்ளது.








கருத்துகள்