ஜாதிப் பெயர்களை நீக்கும் தமிழ்நாடு அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்றம்.
ஜாதிப் பெயர்களை நீக்கும் அரசாணையை செயல்படுத்துவதில் ஜாதிப் பெயர்களை நீக்கும் தமிழ்நாடு அரசாணைக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம். ஜாதிப் பெயர் மாற்ற இறுதி முடிவெடுக்கக்கூடாதென சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு
ஜாதிப் பெயர்களை நீக்க உத்தரவிட்ட தமிழ்நாடு அரசின் அரசாணையை செயல்படுத்துவதில் இறுதி முடிவு எடுக்க கூடாதென உத்தரவு விபரம், ஊர்கள் மற்றும் தெருக்களுக்கு பல நூறாண்டு காலமாக இருந்து அழைக்கப்பட்ட ஜாதிப்பெயர்களை நீக்கம் செய்யும் அரசாணையின் படி கள ஆய்வு மட்டுமே நடத்த வேண்டும்; அதற்கு மேல் அந்த அரசாணையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. ஊர் பெயர்கள், தெருக்களின் பெயரில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கும் தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு எதிராக மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த பரமசிவம் மனு தாக்கல் செய்த நிலையில், அதுகுறித்து அனுமதிக்கப்பட்ட மனு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் பதில் மனுவை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டது. தமிழ்நாடுஇது தொடர்பாக ஏற்கனவே 1978-ஆம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும்.
இத்தனை ஆண்டுகளாக தெருக்கள், சாலைகளில் ஜாதிப் பெயர்கள் இருப்பதால் பிரச்சனைகள் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. முதலமைச்சர் மு. க.ஸ்டாலினின் அறிவிப்பின்படி குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கி, மறுபெயரிடுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழ்நாடு அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டதன்படி, மறு பெயரிடுவது தொடர்பாக கிராமங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர், நகராட்சிகளில் செயல் அலுவலர் மற்றும் ஆணையர்கள் பகுப்பாய்வு மேற்கொள்ள வேண்டும். உள்ளூர் மக்களிடையே நிலவும் சூழ்நிலை மற்றும் உள்ளூர் மக்களின் கருத்துகளைப் பெற்று மதிப்பாய்வு செய்ய வேண்டும். கள நிலைமை மற்றும் களத்தில் உள்ள உண்மைத்தன்மையின் அடிப்படையில் கவனமாக இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இறுதி செய்யப்பட்ட பெயர்களை மாவட்ட அரசிதழில் வெளியிட்டு ஆட்சேபனைகளைத் தெரிவிக்க 21 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும். அதன்பிறகு அரசின் அனுமதி கிடைத்த உடன் பெயர் மாற்றம் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணிகளை எல்லாம் நவம்பர் மாதம் 11 ஆம் தேதிக்குள் முடித்து மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாநில அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ஜாதிய ரீதியான பெயர்களை நீக்கி சமூக நீதியை அரசு கடைபிடிப்பது பாராட்டத்தக்கது தான், அதேசமயம், ஜாதியப் பெயர்களை மாற்றுவது குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கக் கூடாது, ஜாதிப் பெயர்களை நீக்குவது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்பு, ஆய்வுகள் மேற்கொள்ள அரசுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டது.
மேலும், பெயர் மாற்றத்தால் ஏற்படும் குழப்பம் குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதில் தொல்லியல் துறை சார்பாக பாரம்பரிய ஊர்கள் அடங்கும் இதில் மத்திய அரசு மற்றும் தொல்லியல் துறை எதிர்மனுதாரராக சேர்க்கும் நிலை உறுவாகும் என சட்ட வல்லுநர் கருத்து அடங்கும். மதுரை தஞ்சாவூர் ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்தில் 74 பாளையங்கள் கொண்ட ஜமீன் ஆட்சியில் உள்ள நாகம்ம நாயக்கன் பாளையம், முத்துக்கவுண்டன் புதூர், கலிக்கநாயக்கன் பாளையம், பெரிய நாயக்கன் பாளையம், அக்ரஹாரப்புத்தூர்,திருமலை நாயக்கன் பாளையம், அப்பநாயக்கன் பட்டி, ஆறுமுகக்கவுண்டன் புதூர், லடசுமிநாயக்கன் பாளையம் கவுண்டம்பாளையம் இடையர்பாளையம் ஒக்கிலிபாளையம் செட்டிபாளையம் ஆண்டிபாளையம் என 700 ஊர்கள் உள்ளது.
அப்படியே ஊர் பெயரை மாற்றம் செய்து அரசு வருவாய் அ. பதிவேடுகள் மற்றும் செட்டில்மென்ட் ஆவணங்கள் மற்றும் மக்கள் பயன்படுத்தி வந்த ஆதார் மற்றும் பேங்க், பாஸ்போர்ட், மற்ற அடையாள அட்டைகளில் எல்லா ஊர் பெயர் தானாகவே மாறி விடுமா? இல்லை அதற்கும் நாம் மக்கள் ஒவ்வொரு இடமாக அலைய வேண்டுமா? கருப்பாயி என்ற பெயர் பிடிக்காவிட்டால் அழகி என மாறலாம் தப்பில்லை இது கிராமத்தில் சொலவடை பழமொழி.
விடியல் என்பது ஜாதிப் பெயரிலல்ல ஊழலற்ற நடவடிக்கை தான் அரசின் செயலாக வேண்டும்.
மாநிலத்தில எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது, இந்த ஊர் பெயரெல்லாம் மாற்றி அந்த ஊரோட பாரம்பரிய அடையாளத்தை அழிக்க வேண்டுமா?
என்பதே 70 சதவீதம் உள்ள மக்கள் தரப்பு எழுவினா?
அப்படியே தலைவர்கள் பெயரிலுள்ள பேருந்து நிலையங்கள் மாறுமா? காரணம் ஒவ்வொரு மனிதனுடனும் அவனது பிறப்பு ஜாதி மறைந்துள்ளது அவ்வளவே இங்கு ஜாதி இல்லாத மனிதன் யாருமில்லை. ஜாதி இல்லை எனக் கூறும் போலி மனிதர்கள் அதிகரிப்பு தான் தற்போதய நிலைக்கு காரணம். பல நூறாண்டு காலமாக வரலாறு
கடைக்காடு அப்பாச்சிக் கவுண்டர் வீதி, மருதக் கவுண்டர் வீதி, அருணாச்சல போயன் வீதி, கணபதி பண்டாரம் வீதின்னு பேர் இருக்கே. அங்கு அந்த மக்கள் அதிகம் வசிக்கும் நிலை தானே.
ஜாதிப் பேர்ல ஊர் இருக்கக் கூடாதுன்னு மாற்றம் அரசு சலுகை தேவையில்லை என கூற முடியவில்லை மற்றும் அரசு தான் ஜாதிச் சான்றிதழும் தருகிறது.
ஜாதி அடிப்படைல மற்ற சலுகைகள் கொடுக்கிறது. ஜாதி பார்த்து சலுகைகள் மற்றும் இட ஒதுக்கீடுகள் எதற்கு? அதற்கு இந்த வழக்கில் நீதிபதிகள் அனிதா, சுமந்து குமரப்பன் ஆகியோர் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன், கார்த்திகேய வெங்கடாஜலபதி சுப்பையா ஆகியோர் ஆஜராகி வாதிடுகையில் நாட்டுக்காக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்தவர்களான வா.உ. சிதம்பரம் பிள்ளை, பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர், தீரர் சின்னமலைக் கவுண்டர், மாமன்னர் மருதுபாண்டியர்கள், இராமசாமிப் படையாச்சி, ராஜகோபாலாச்சாரியார், மன்னர் முத்து வடுகநாதத் தேவர் மாவீர மன்னர் விருப்பாச்சி கோபால நாயக்கர், வீரர் அழகுமுத்துக் கோன், பெரும்பிடுகு முத்திரையர் சின்னக் காலாடி பெரிய காலாடிக் குடும்பன், தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத அய்யர், உள்ளிட்ட பெயர்களையும், ஆன்மிகத் தலைவர்களின் பெயர்களையும் நீக்கும் நோக்கத்தில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்



































கருத்துகள்