முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கன்னிப்பேச்சில் கவிதை வடித்த கமலஹாசன்

“தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது!” - நாடாளுமன்ற மாநிலங்களவையில் கமல்ஹாசன்


முதல் பேச்சு:-

“இன்று தமிழை, தமிழரைப் பார்த்து பிச்சை எடுக்கக்கூட தமிழ் உதவாது என்கிறீர்கள்.( நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்)



ஓரளவு உண்மை தான். தமக்கென உங்கள் நிதியைத் திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே! என 

நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் முதன்முறையாக நடிகர் கமல்ஹாசன்  ஆங்கிலத்தில் உரையாற்றியவர், “இங்கு வரமுடியாமல் போன எம் தமிழர் தலைவர்களுக்கும், என் நண்பர் ஸ்டாலினுக்கும் நன்றி.




இந்த அவையில் ஓர் உறுப்பினராக நின்று பேசுவதை நான் பெரும் கௌரவமாகக் கருதுகிறேன். சினிமா எனும் ஊடகத்தின் வழியாகப் பயணம் செய்து, தமிழகத்தின் பரமக்குடி எனும் ஒரு சிறிய ஊரிலிருந்து புறப்பட்டு வந்தவன் நான்.

இந்தியா என்பது மாநிலங்களால் இணைந்த ஒரு நாடு. அதுதான் இந்திய அரசியல் சாசனமும் வகுத்துக் கொடுத்திருக்கிறது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். நான் எனது மொழியை எனது ஆசிரியர்கள் வாயிலாகக் கற்றுக் கொண்டேன். எனக்குத் தமிழை அறிமுகப்படுத்திய எனது ஆசிரியர்களில் ஒருவர்தான் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணா.



எனக்குத் தமிழை அறிமுகப்படுத்திய ஆசிரியர்களில் ஒருவர் அரசியல் தலைவர் சி.என்.அண்ணாதுரை. 'துரை' (Durai) என்றால் பிரெஞ்சு மொழியில் அரசன் என்று பொருள். அவர் அரசராகப் பிறக்கவில்லை, ஆனால் தமிழர்களாகிய நாங்கள் அவரை எங்கள் மனங்களில் அரசராக அரியணையில் ஏற்றினோம். எமது மொழி, கலாசாரம் மற்றும் உரிமைகள் மீதான எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எப்படி எதிர்கொள்வது என்று அவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.

57 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நான் உங்கள் முன்னால் பேசுகிறேன். 1969 பிப்ரவரி 3-ஆம் தேதி அவர் மறைந்த தினம். எனது சித்தாந்தத்தின் தந்தைகளில் ஒருவரை இழந்த நான் அப்போது 14 வயதுச் சிறுவன். இன்று அவர் பேசிய அதே அவையில் நான் பேசுகிறேன். இது மேடை அச்சம் அல்ல, உணர்ச்சிகளால் நான் நடுங்குகிறேன். எனக்குள் இருக்கும் உணர்ச்சிப் பெருக்கெடுத்து உங்களைத் புண்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே நான் இதையெல்லாம் எழுதி வைத்திருக்கிறேன். இன்று அண்ணாவின் மகனாகவும், காந்தி மற்றும் பெரியாரின் கொள்ளுப் பேரனாகவும் உங்கள் முன் நிற்கிறேன்.




இந்த உரையை ஒரு துளி கோபமும் இல்லாமல் எழுதுவதற்கு மகாத்மா காந்தி எனக்கு உதவினார். தர்க்க ரீதியான வாதங்களை முன்வைக்க தந்தை பெரியார் எனக்கு உதவினார். இந்த மாபெரும் ஜனநாயகக் கட்டிடத்தின் மாண்பைப் புரிந்து கொள்ள அண்ணா எனக்கு உதவினார்.

உயர்ந்த உங்கள் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்ற ஒரு சாமானியனின் ஆர்வத்தை மன்னித்துவிடுங்கள். ஆனால், வரலாற்றின் போக்கை மாற்றியதும், ஏகாதிபத்திய சர்வாதிகாரிகளை வீழ்த்தியதும் இந்தச் சாமானியர்கள் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தண்டி யாத்திரையை நினைவுகூருங்கள்.

இப்போது நாம் நிகழ்காலத்தைப் பார்ப்போம். எனது உடனடிக் கவலை வரவிருக்கும் தேர்தல்கள் பற்றியது. எங்களின் தற்போதைய நிலையை 'உயிரோடு இருப்பவர்களின் மரண வாக்குமூலம்' என்று அழைக்கிறேன். நாங்கள் வாக்களிக்க விரும்புகிறோம், ஆனால், தேர்தல் ஆணையம் எழுத்துப் பிழைகளையும் முகவரிகளையும் காரணம் காட்டி எங்களது வாக்களிக்கும் உரிமையையே கேள்விக்குள்ளாக்குகிறது.

'ஸ்பெல்' என்பது ஒரு சொல்லாகவும் இருக்கலாம் அல்லது ஒரு மந்திரமாகவும் இருக்கலாம். நவீன இலக்கியமும் இணையமும் உள்ளடக்கத்திற்காக எழுத்துப் பிழைகளை மன்னிக்கின்றன. ஆனால் தேர்தல் ஆணையம் மன்னிப்பதில்லை. 'EC' என்றால் 'ஆங்கிலப் பயிற்சியாளர்கள்' (English Coaches) என்று அர்த்தமல்ல. பிஹார் ஏற்கெனவே பல 'வாழும் பிணங்களின்' (வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள்) தேசமாகிவிட்டது.

இந்த நோய் நாடு முழுவதும் பரவுவதை நாங்கள் விரும்பவில்லை. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எனது சகோதரியும் இதற்காக அவர் உச்ச நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிலும் கிட்டத்தட்ட ஒரு கோடி 'வாழும் பிணங்கள்' காகித அளவில் உருவாக்கப்பட்டு விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். இந்த அவையில் நான் பேசும் வார்த்தைகள் உங்களில் சிலருக்குக் காயத்தை ஏற்படுத்தலாம். ஆனால், மேலும், நான் கடவுளை நோக்கி கைகூப்பப் போவது கிடையாது. எனது பகுத்தறிவு மூளை கடவுள் என்ற பிம்பத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்பே அப்புறப்படுத்திவிட்டது” எனப் பேசினார்.

தொடர்ந்து தமிழில் பேசியவர், “பிச்சைப் பாத்திரத்தில் இருந்து எடுத்த சில்லறைகள் நவீன காலத்துக்கு உதவாது என்று தெரிந்தவர் நீங்கள். நீங்கள் வெள்ளைக்காரகக் கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூரப் புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகுதான் உங்கள் பிச்சை பாத்திரம் உருவாக்கப்பட்டது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரைப் பார்த்து பிச்சை எடுக்கக்கூட தமிழ் உதவாது என்கிறீர்கள். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே! தமிழ்... பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது.

தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். தங்கச்சி ஓட்டையும் நாட்டையும் இந்த கமலஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளுங்கள். பகுத்தறிந்த தமிழ்ச் சித்தன் கூற்று இது 'உம் வினை உம்மை சுடுக'. எங்கள் நாடு நீடூழி வாழும், உம் வினை உம்மைச் சுடுக, ஓட்டப்பம் வீட்டைச் சுடுக. 'வந்தீர் வென்றீர் செல்வீர்' இது உலக நியதி, அரசியல் நியதியும்கூட. வீழ்க வளமுடன். தமிழ் என்றும் வாழும் நலமுடன்" என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உறுப்பினருமான நடிகர் கமல்ஹாசன் பேசினார்.பாராளுமன்ற ராஜ்ய சபாவில் துணை ஜனாதிபதி அமர்வில் நடிகர் கமலஹாசன் எழுப்பிய கேள்வியின் முக்கியத்துவம் என்னவென்றால்.

எத்தனால் என்பது கரும்பு, மக்காச்சோளம் போன்ற தாவரக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை உயிரி எரிபொருள் (Biofuel).

எத்தனால் விலை பெட்ரோலை விடக் குறைவு என்பதால், எதிர்காலத்தில் E20 எரிபொருள் நுகர்வோருக்குச் சற்று மலிவாகக் கிடைக்கும் ஆனால் இந்த எரிபொருளை பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்து தரப்பு மக்களிடமும் இருக்கிறதா?

இந்த மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டார்களா என்பது பெரிய கேள்விக்குறி?

தற்போது சந்தையில் இருக்கும் பல பழைய வாகனங்கள் E20 எரிபொருளுக்கு ஏற்றவை அல்ல. எனவே, திடீரென எரிபொருள் மாற்றப்படும்போது சாதாரண மக்களின் வாகனங்கள் பாதிக்கப்படுமா? என்பதே பரவலாக மக்களிடையே உள்ள அச்சம்.

எத்தனால் தண்ணீரை ஈர்க்கும் தன்மை கொண்டது. பழைய வாகனங்களில் (E20 வசதி இல்லாதவை) 20% எத்தனால் பயன்படுத்தினால், ரப்பர் குழாய்கள் மற்றும் பிளாஸ்டிக் பாகங்கள் காலப்போக்கில் அரிப்புக்கு உள்ளாகலாம்.

தற்போது சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் பல பழைய வாகனங்கள் E20 எரிபொருளுக்கு ஏற்றவை அல்ல. அவற்றின் இன்ஜின் பாகங்கள் சேதமடைய வாய்ப்புள்ளது.

​எத்தனால் தயாரிக்க அதிகப்படியான தானியங்களைப் பயன்படுத்துவது உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வாய்ப்புள்ளது.

கரும்புச் சக்கை, சோளம் மற்றும் சேதமடைந்த தானியங்களில் இருந்து தயாரிக்கப்படுவதால் இது பெட்ரோலை விட தூய்மையானது. இது கார்பன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு போன்ற நச்சு வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்கிறது.

கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணி மிச்சமாகும்.

சில சாதகமான விஷயங்கள் இருந்தாலும் சில பாதகங்களும் இருக்கின்றன அதனால் ஏற்படும் பாதிப்பின் மூலம் நேரடியாக பாதிக்கப்படுவது நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்களே. 

இதனால்தான் கமலஹாசனின் கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. 

முதல் கேள்வியே நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் கேட்டுள்ளார் வைணவ வழி வந்த அயோத்தி ராமர் ஆலய உத்தரவு பெற்ற மூத்த வழக்கறிஞர் பராசரன் உறவினர் கடவுள் நம்பிக்கை இல்லாத நடிகர் எஸ்.கமலஹாசன்.கலைத்துறையில் இருந்து இந்திய நாடாளுமன்றத்து ராஜ்யசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது நியமிக்கப் பட்டவர்கள் பலர்.அதில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் - 1980, நடிகை வைஜயந்திமாலா பாலி - 1980, நடிகை ஸ்ப்னா அஷ்மி - 1997, ஜவேட் அக்தர் - 2000, நடிகை ரேகா,நடிகை ஜெயாபச்சன், நடிகர் தாரா சிங், பிரசூன்ஜோஷி, விஜயேந்திரபிரசாத் (ராஜ மெளலியின் தந்தை), இசைஞானி இளையராஜா என இவர்கள் யாரும் மக்கள் சார்ந்து பேசாத அரசியலை நடிகர் கமல்ஹாசன் பேசி இருக்கிறார். கமல்ஹாசன் சார்பு அரசியல் மீது  பலருக்கு பல ஒவ்வாமைகள் உண்டு.ஆனால் அவர் பேசிய அத்தருணம் அந்த உரை.அதில் பட்டுத் தெறித்த துணை தேசிய இறையாண்மை, அந்தக் கம்பீரம். அந்தணர் ஜாடை இருந்தும் இல்லாத உரை பலரை நெளிய வைத்தது, அவர் தசாவதானி தான்.அவரது பாடலிலேயே அவருக்கு பதில் உள்ளது.           


  "எட்டில் 5 எண் கழியும் என்றும் (நமசிவாய)

ஐந்தில் 8 எண் அறியாது (நமோ நாராயணாய)

அஷ்ட அட்சரம் ஏற்கும் நெஞ்சு

பஞ்ச அட்சரம் பார்க்காது

ஊனக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம்தான்

ஞானக் கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம்தான்

இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது

தொல்லை தந்தபோதும் எங்கள் தில்லை மாறாது

வீரசைவர்கள் முன்னால் எங்கள் வீர வைணவம் தோற்காது

மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கே சூரியன் உதிக்காது

இராஜலஷ்மி (தாயார்) நாயகன் ஸ்ரீனிவாசன் (தந்தை) தான்

ஸ்ரீனிவாசன் சேய் இந்த (கமலஹாசன்) விஷ்ணுதாசன் தான்

நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன் தான்

ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் (அவரது இயற்பெயர்) தான் அந்த கமலஹாசன் நம்புவோம்".  கமலஹாசனின் நேற்றைய நாடாளுமன்றப் பேச்சு அவரது இயல்புக்கு முற்றிலும் நேர் எதிரானது!

கமலஹாசன் அரசியலை மிக ஆரம்பத்தில் இருந்தே அணுவணுவாக அறிந்தவன் என்ற வகையில் என் மனதில்  தோன்றியது.

சினிமாவில் இயங்கிக் கொண்டிருந்த காலத்திலேயே கமல் தன்னுடைய அரசியல் பிரக்ஜையுடன் தான் இயங்கினார்.  அப்போதும்  அவர்  தயாரித்து நடித்த படங்களில் இலைமறை காயாக மட்டுமல்ல, நேரடியாகவே கூட தன்னுடைய  ஜாதிய மற்றும் மதவாத அரசியலை வெளிப்படுத்தியவர் தான்!

முற்போக்காளரைப் போன்ற வெளித் தோற்றம் காட்டிய அவரது உள்ளார்ந்த உளவியலுக்குள் படுபிற்போக்கான  அரசியல் இழையோடி வந்ததை பற்பல நேரங்களில் பார்த்திருக்கலாம் .

ஆக, 2017-ஆம் ஆண்டில் அவர் அரசியலுக்குள் அடி எடுத்து வைத்த போதும், அவர் அதையே வெளிப்படுத்தினார். 

கமலஹாசனின் மொழி அரசியல் என்பது  நேரம் காலம் இடத்திற்கு ஏற்ப நிறம் மாறிய பச்சை வெளிப்படுவதாகும்!

அந்தந்த ஊடகவியலாளரிடம் அவரவர் சார்ந்த மலையாளியாக, தெலுங்கனாக, வட இந்திக்கார வாலாவாக கமலஹாசன் போலித்தனமாக வெளிப்பட்ட நிகழ்வை என்னுடைய ஊடகவியல் அனுபவத்தில் அருகில் நேரடியாக அறிந்தவர் பலர்.

எப்படியென்றால், அவர் பல மொழிப் படங்களில் நடித்ததைப் போலவே 1980 -90  களின் காலங்களில் இந்தியாவின் புகழ்பெற்ற ஆங்கில, மலையாள, தெலுங்கு, இந்தி பத்திரிகைகளுக்கும் போட்டோ ஜர்ணலிஸ்டாக சென்ற காலங்களில் அவரை அருகிருந்து உணர்ந்தவன் நான்.

நேற்றைய தினம் கமலஹாசன் பாராளுமன்றத்தில் ஒரு திராவிடப் பின்புலமுள்ள அரசியல்வாதி பாத்திரமேற்று, அதற்கேற்ப ஸ்கிரிட்டை கேட்டெழுதி வாங்கி வந்து ஏற்ற இறக்கங்களுடன் உணர்வுபூர்வமாக தன்னுடைய வழக்கமான பாணியோடு பேசினார். 

ஆம், நாடாளுமன்றத்திலும் நடித்தார்  என்று தான் தோன்றும் நேற்றைய கமலஹாசனின் நாடாளுமன்ற உரை என்பது திராவிட மற்றும் தமிழ் பற்றாளர்களின் உள்ளத்தை கவர்வதற்கான ஒரு ’பொலிடிகல் ஸ்டேர்ஜி’ தான். அதற்கான அவரது ’பெர்பாமன்ஸ், பெர்பெக்டாக’ இருந்தது. அவ்வளவு தான். இதற்கு மேல் ஒன்றுமில்லை.

அந்த பெர்பாம்ன்ஸை சிறப்பாக செய்து பற்பலரின் பாராட்டையும் அவர் பெற்றது என்பது அதிசயமல்ல. 

பொறுத்திருந்து பாருங்கள்.  நெருக்கடியான சந்தர்ப்ப சூழ் நிலைமைகளில் தான் ஒருவரின் உண்மையான குணம் வெளிப்படும். இது பப்ளிக் ஜஸ்டிஸ் கணிப்பு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...