திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் ராஜகோபால், காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண்ணின் செல்போன் எண்ணிற்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் உண்மை என்பதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திண்டுக்கல் சரக டிஐஜி சசிமோகன் உத்தரவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது
பெண் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல், தொடர்ந்து ஆபாசமான முறையில் குறுஞ்செய்தி அனுப்பி அநாகரிகமாக காவல் உதவி ஆய்வாளர் நடந்து கொண்டுள்ளார்.
காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் ராஜகோபால் (வயது 43). சில தினங்களுக்கு முன்பு பெண் ஒருவர் தனிப்பட்ட பிரச்சினை குறித்து புகார் அளிப்பதற்காக காவல்நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, அந்தப் பெண்ணிடமிருந்து புகாரை பெற்றுக்கொண்ட எஸ்ஐ ராஜகோபால், அவரிடமிருந்து அலைபேசி எண்ணைக் கேட்டு பெற்றுள்ளார்.
தொடர்ந்து, பெண் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத அவர், அந்த பெண்ணிற்கு தொடர்ந்து ஆபாசமான முறையில் குறுஞ்செய்தி அனுப்பி அநாகரிகமாக நடந்து கொண்டதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், உறவினர்கள் காவல் பணி அலுவலர் ராஜகோபாலின் அநாகரிகச் செயல் குறித்துத் தகுந்த ஆதாரங்களுடன் உயர் அலுவலர்களுக்கு புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் காவல் உயர் அலுவலர்கள் எஸ்ஐ ராஜ்கோபாலின் செயல் குறித்து விசாரணையை தொடங்கியதில் அவர் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் அலைபேசி வழியாக ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி அத்துமீறியது உறுதி செய்யப்பட்டதையடுத்து, எஸ்ஐ ராஜகோபாலை ஆயுதப்படைக்கு மாறுதல் செய்து பின்னர் பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி சசிமோகன் உத்தரவிட்டுள்ளார்.
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறை அலுவலர காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த பெண்ணிடம் அத்துமீறி அநாகரிகமாக நடந்து கொண்ட நிலையில் அவர் இதுவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு முக்கிய பிரச்சினையாக பேசப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற சம்பவத்தில் காவல் பணி அலுவலர் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்கு வழிவகுத்துள்ளது. பெண்கள் அளிக்கும் புகார்களை காவல் நிலையத்தில் எப்படிக் கையாள வேண்டும் என நீதிமன்றமே வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளதன் அடிப்படையில், காவல் நிலையங்கள் செயல்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், புகார் கொடுக்க வந்த பெண்ணிற்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய காவல் உதவி ஆய்வாளர் ராஜகோபாலன் மீது கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுகிறது.



கருத்துகள்