சிங்கப்பெண் காவல் படை இந்தியச் சட்டத்தின் வழி நீதிமன்றம் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகளப் பாதுகாக்கும்
தமிழ்நாடு குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ,தொடங்கி வைத்தார்
முதல்வர். எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை தொடங்கப்பட்டது. முதல்வரது நேரடிக் கண்காணிப்பில் செயல்படும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில்
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் இலட்சினையை அறிமுகம் செய்து திட்டத்தின் முன்னோட்ட வீடியோவையும் வெளியிட்டார்.
பின், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தின் ரோந்து வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர்சி. ஜோசப் விஜய் , காவலர்கள் இருந்த வாகனத்தையும் இயக்கினார், நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், பெண்களின் மரியாதை, கண்ணியத்தைக் காக்க அரசு அதிமுக்கிய முன்னுரிமை அளிக்குமென்றார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு போதைபொருள் நடமாட்டம் தான் காரணம் எனக்கூறிய முதலமைச்சர், பல வருடங்களாக போதைப்பொருள் பிரச்சனை கண்டுகொள்ளப்படாமல் இருந்ததாக விமர்சித்தார். பெண்களை தொந்தரவு செய்துவிட்டு தப்பிவிடலாம் என நினைக்க வேண்டாம் என எச்சரித்த முதலமைச்சர், குற்றங்களை பெண்களுக்கு எதிராக சகித்துக்கொள்ள முடியாதென்றார்.
பின்னர், காவல்துறையின் இசை நிகழ்ச்சியை முதலமைச்சர் கண்டு ரசித்தார். அதில், நடித்த படங்களின் பாடல்கள் இசைக்கப்பட்டன. விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் அவர் நடித்த பிகில் படத்தின் 'சிங்கப் பெண்ணே' பாடலும், மெர்சல் படத்தின் 'ஆளப் போறான் தமிழன்' பாடலும் இசைக்கப்பட்டது தன்னுடைய படப் பாடல்கள் இசைக்கப்படும் போது அதை முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய் கண்டு ரசித்தார். 'சிங்கப்பெண்ணே. மெர்சல் படத்தின் 'ஆளப்போறான் தமிழன்..' பாடல்கள் வாசித்த போலீஸ் வாத்தியக் குழுவினர் இவற்றை ரசித்துக் கேட்டு, கைதட்டி பாராட்டுக்களைத் தெரிவித்தார்
.சிங்கப்பெண் காவல்துறை திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூபாய் .354 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்படவுள்ளது. திட்டத்தின் 2ஆம் கட்டமாக இந்த படைக்காக மட்டுமே 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பபடவுள்ளது.திட்டத்தை தொடங்கி வைத்ததோடு அதற்கான பிரத்யேக ரோந்து வாகனங்களை இயக்கி பார்த்தார் முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய், சட்டம் மற்றும் நீதிமன்றம் பெண்கள் குழந்தைகளுக்கு வகுத்துளளள சட்டப்படியும், நீதிமன்றம் மூலம் நீதி நிலைநாட்ட இந்த சிங்கப்பெண் காவல்துறை பாடுபடும், எனத் தெரிகிறது,
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் மிக முக்கிய POCSO Act - 2012 பாலியல் குற்றங்களிலிருந்து மைனர் குழந்தைகளைப் பாதுகாக்கும் மிகக் கடுமையான சட்டம். இது 18 வயதுக்குட்பட்ட பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் அனைத்து வகையான பாலியல் சீண்டல்களுக்கும், குற்றங்களுக்கும் கடும் தண்டனைகளை வழங்குகிற Juvenile Justice Act - 2015 பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளின் உரிமைகள், மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பை இச்சட்டம் உறுதி செய்கிறது. PC & PNDT Act - 1994 கருவிலேயே பாலினம் கண்டறிவதைத் தடுத்து, பெண் சிசுக்கொலையைத் தண்டனைக்குரிய குற்றமாக மாற்றும் சட்டம்.குழந்தை திருமண தடைச் சட்டம் (PCMA - 2006): 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும், 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கும் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம்.குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் (PWDVA - 2005) ஆகும்















கருத்துகள்