சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக 15 நீதிபதிகள் நியமனம்,
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்காக உச்சநீதிமன்ற கொலீஜியம் 15 பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியலை வெளியிட்டுள்ளதில் வழக்கறிஞர்கள் பிரிவிலிருந்து கோவிந்தராஜன் கிருஷ்ணசாமி, ரஜ்னீஷ் பதியில், ரமேஷ் நடராஜன், ஜி.கே. முத்துக்குமார், ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன், ரவிக்குமார் சங்கரநாராயணன், திலீப் குமார் நாகராஜன் மற்றும் எல்லப்பன் மனோகரன் ஆகிய 8 பேர் நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நீதித்துறை அதிகாரிகள் பிரிவில்இருந்து முனைவர் பி. முருகன், எம். டி. சுமதி, எஸ். அல்லி, சி. திருமகள், சண்முகம் கார்த்திகேயன், முருகேசன் பாலுசாமி மற்றும் என். குணசேகரன் ஆகிய 7 பேர் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்படவுள்ளனர்.
இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மொத்தம் 15 பேர் புதிய நீதிபதிகளாக பதவியேற்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது




கருத்துகள்