நடிகை கௌதமிக்கு சொந்தமான, 25 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள நிலத்தை விற்று மோசடி செய்தது தொடர்பாக, அவருக்கு வேண்டப்பட்ட அழகப்பன்,வயது 66, மற்றும் அவரது குடும்பத்தினரை, அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை காவல்துறையில் நடிகை கௌதமி, கடந்த, 2023 ஆம் ஆண்டு அளித்த புகார்:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் கோட்டையூரைச் சேர்ந்த அழகப்பன் என்பவர், அவரது குடும்பத்தினருடன், சென்னை வேளச்சேரியில் வசித்து வருகிறார். எனக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில், 25 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள நிலம் உள்ளது.
புற்றுநோய்க்கு சிகிச்சை பெறவும், மகளின் எதிர்கால படிப்புக்காகவும், அந்த நிலத்தை விற்க முடிவு செய்தேன். அது பற்றி, என் குடும்ப நண்பரான அழகப்பனிடம் தெரிவித்தேன். அவர் தன் பெயருக்கு பொது அதிகாரப் பத்திரம் பெற்றார்.
ஆனால், '6 கோடி ரூபாய்க்கு தான் விற்க முடிந்தது' எனக் கூறி, பண மோசடி செய்துள்ளார். இதற்கு, அவரின் மனைவி, மகன், மருமகள் உள்ளிட்டோர் உடந்தையாக இருந்துள்ளனர். அழகப்பன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து, சென்னை காவல்துறை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
கேரள மாநிலம், திருச்சூரில் தலைமறைவாக இருந்த அழகப்பன், வயது 66, அவரது மனைவி நாச்சாள், வயது 60; மகன் சிவா, வயது 35; மருமகள் ஆர்த்தி, வயது 33 ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். பின், அவர்கள் ஜாமினில் வெளியே வந்தனர்.
இந்த நிலையில், இந்த மோசடி தொடர்பாக, சட்ட விரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகளும் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
கடந்த, 17ஆம் தேதி, அழகப்பனுக்கு சொந்தமான ஆறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். அங்கு கைப்பற்றிய ஆவணங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனை கள் குறித்து விளக்கம் பெற, நடிகை கௌதமிக்கு 'சம்மன்' அனுப்பினர். அதன் முழு விபரம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வசிக்கும் நடிகை கெளதமி, 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் சுமார் 10.30 ஏக்கர் நிலத்தினை விற்றுத் தருவதாகக் கூறி எனக்கு உதவியாக இருந்த அழகப்பன் மூலம் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பலராமன், செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த ரகுராமன் ஆகியோர் பதிவு பொது அதிகார ஆவணம் பெற்றனர்.
பிறகு அந்த இடத்தையும், அருகில் இருந்த எனக்குச் சொந்தமான மற்ற இடங்களையும் சேர்த்து 2015 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் விற்பனை செய்து எனக்கு 4.10 கோடி ரூபாய் பணம் கொடுத்தனர்.
பிறகு வருமான வரிதுறையிலிருந்து வந்த நோட்டீஸில், எனக்குச் சொந்தமான நிலத்தை 11 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டு வெறும் 4.10 கோடி ரூபாய் மட்டும் கணக்கு கொடுத்து மோசடி செய்தது தெரியவந்தது.
என நடிகை கௌதமி ஆதரங்களுடன் அமலாக்கத்துறையில் நேரில் ஆஜராகி விளக்கம்
இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கதுறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்
மேலும், அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் எனக்கு நெருக்கமாக இருந்ததால் அவர்களை நம்பி எனக்கு பல்வேறு இடங்களில் இருக்கும் சொத்துகளையும் கவனித்துக் கொள்ள ஒப்படைத்தேன். ஆனால், அழகப்பன் அவரின் குடும்பத்தினருடன் சேர்ந்து எனது சொத்துக்களை ஏமாற்றி 25 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது பின்பு தான் தெரியவந்தது எனத் தெரிவித்திருந்தார்.
அவரின் புகாரின் அடிப்படையில், நில மோசடி புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள் மற்றும் குடும்பத்தினர் உட்பட ஆறு பேர் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அந்த ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில் சட்ட விரோத பண பரிமாற்றம் PMLA நடைபெற்று இருக்கலாம் என்ற அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் கைதான அழகப்பன் மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அழகப்பன் உள்ளிட்டோரிடம் அடுத்தகட்ட விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நில மோசடி புகார் அளித்த நடிகை கௌதமிக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜூலை 27-ஆம் தேதி திங்கட்கிழமை நடிகை கௌதமி நேரில் ஆஜரானார். அவரிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், வழக்கு தொடர்பாக அவரிடம் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரும், சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து, அழகப்பன், நாச்சாள், சிவா மற்றும் ஆர்த்தி ஆகியோரை, நேற்று முன்தினம் அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
கைக்குழந்தையுடன் இருப்பதால், நீதிமன்றத்தால் ஆர்த்தி ஜாமினில் விடப்பட்டார். மற்ற மூவரும், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் உள்ள நடவடிக்கை போல மற்ற மோசடிகளிலும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தால் வரவேற்கலாம்,








கருத்துகள்