முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காவலர் பதவி உயர்வு மறுப்பு, சமூகநீதி இல்லை பாமக தலைவர் அறிக்கை

பதவி உயர்வு மறுப்பு, சமூகநீதி இல்லை, படி வழங்குவதில் பாகுபாடு: காவல்துறையினரின் தீர்க்கப்படாத குறைகளை களைய வேண்டும்! பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்


அறிக்கையில்.
:- காவல்துறையினரின் பதவி உயர்வு தொடர்பாக நியாயத்தின் அடிப்படையில் கொள்கை முடிவு எடுப்பதற்கு  பதிலாக, அனைத்து சிக்கல்களையும் நீதிமன்ற வழக்குகள் மூலம் எதிர்கொள்வதில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருவதால், பல்லாயிரக்கணக்கான காவல்துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்காத நிலை உருவாகி உள்ளது. காவல்துறையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியும், நிவாரணமும் வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த த.வெ.க.  அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது  நியாயமல்ல.

கொள்கை முடிவுகளை எடுப்பதில் கடந்த ஆட்சியாளர்களும், இன்றைய ஆட்சியாளர்களும் இழைத்த தவறுகளாலும், தவறுகளை சரி செய்வதில் ஆர்வம் காட்டாததாலும் ஏற்பட்ட அநீதியின் வரலாறு 1994&ஆம்  ஆண்டில் தொடங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர்களுக்கு நீதி வழங்கப்படாததால், அதன்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட காவல்துறையினருக்கும் நீதி கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. அவர்களுக்கு நீதி வழங்குவதில் அரசுகளும் ஆர்வம் காட்டவில்லை.

தமிழ்நாடு காவல்துறைக்கு 1198 சார்பு ஆய்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை 1994 மற்றும் 1995 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டு, போட்டித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் 500 பேருக்கு 1996 ஆம் ஆண்டிலும், 600 பேருக்கு 1997 ஆம் ஆண்டிலும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 98 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்படாத நிலையில், அடுத்த ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு 1998 மற்றும் 1999ஆம் ஆண்டில் 968 சார்பு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், 1994 மற்றும் 1995 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 98 சார்பு ஆய்வாளர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படாததை சட்டமன்றப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அவர்களுக்கு 22.05.2000  தேதியில் நியமன ஆணை  வழங்கப் பட்டது. ஆனால், அவர்களுக்கு 1994 மற்றும் 1995ஆம் ஆண்டின் பணி மூப்பு வழங்கப்படாதது தான் சிக்கலாகும்.

அதைவிட பெரிய அநீதி என்னவென்றால், 1994 மற்றும் 1995ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2000 ஆம் ஆண்டில்  நியமிக்கப்பட்ட 98 சார்பு ஆய்வாளர்களில் இருவருக்கு மட்டும் 1995 ஆம் ஆண்டின் பணிமூப்பு வழங்கப்பட்டு    காவல் ஆய்வாளராகவும், காவல் துணைக் கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டது. மீதமுள்ள  96 பேர் காவல் ஆய்வாளர் என்ற நிலைக்கு மட்டுமே உயர்ந்துள்ளனர். அவர்களின் 46 பேர் ஓய்வு பெற்று விட்ட நிலையில், மீதமுள்ள 50 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்களும் 3 ஆண்டுகளில் ஓய்வு பெறுவார்கள்.

இவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி அவர்களுடன் நிற்கவில்லை. அவர்களுக்குப் பிறகு இன்று வரை பணியில் சேர்ந்த அனைத்து காவல் சார்பு ஆய்வாளர்களுக்கும் அநீதி தொடர்கிறது. இவர்களுக்குப் பிறகு 1998 மற்றும் 1999ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட 968 காவல் சார்பு ஆய்வாளர்களுக்கு 2008 ஆம் ஆண்டில் ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், 2020 மற்றும் 2021ஆம் ஆண்டில் துணை கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோல், 2004 ஆம் ஆண்டில் சார்பு ஆய்வாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு இப்போது துணை கண்காணிப்பாளர்களாகவும், 2016 ஆம் ஆண்டில் தேர்வான ஆய்வாளர்களுக்கு இப்போது  ஆய்வாளர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

அதற்கான காரணம், 1994 மற்றும் 1995ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு 2000 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டவர்களில் மணிமாறன் உள்ளிட்ட சிலர், தங்களுக்கு 1995-ஆம் ஆண்டு பணிமூப்பு வழங்க ஆணையிடக் கோரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடை தான். இந்தத் தடை வரும் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்காததற்கு காரணம் அவர்கள் செய்த தவறு அல்ல. மாறாக அரசு செய்த தவறு தான். 1994 மற்றும் 95ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1198 காவல் சார்பு ஆய்வாளர்களுக்கு ஒரே கட்டமாக பணி ஆணை வழங்கப்பட்டிருந்தாலோ அல்லது ஒரே பணி மூப்பு வழங்கப் பட்டிருந்தாலோ இந்த சிக்கல் எழுந்திருக்காது; இரு தலைமுறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

காவல்துறை பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 6 ஆண்டுகள் கழித்து பணியில் சேருவதும், 6 முதல்  9 ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காமல் எத்தகைய மனவலியை ஏற்படுத்தும் என்பது அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். இந்தத் தவறை அரசு தான் சரி செய்ய வேண்டும். 1994 மற்றும் 95ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2000 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர்களுக்கு உரிய பணிமூப்பும், பதவி உயர்வும் வழங்குவது தான் இந்த சிக்கலுக்குத் தீர்வு ஆகும். அதை செய்வதுடன் 1998 மற்றும் 1999, 2004, 2016 ஆகிய ஆண்டுகளில் காவல் சார்பு ஆய்வாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் உரிய பணிமூப்பும், பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும். இந்த நிலைப்பாட்டை இது குறித்த வழக்கு வரும் 10 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது அரசு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் 30 ஆண்டு கால சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்.

அதேபோல், காவல்துறை பணிகளில் சேருவதற்கு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கான தேர்வில் பணியில் உள்ள காவலர்களுக்கு  ஒதுக்கப்பட்டுள்ள 20 சதவீதம் இடங்களில் போட்டியிடும் தமிழ்வழிக் கல்வியில் படித்த காவலர்களுக்கு அதற்கான இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. ஏற்கனவே ஒருமுறை தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டைப் பெற்றவர்கள், அதே துறையின் பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வில் மீண்டும் அனுபபிக்க முடியாது என்று கூறப்படுகிறது. இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்காததாலும், சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்து விட்டதாலும் அந்த சட்டம் காலாவதியாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இச்சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், அந்த சட்டத்தை மீண்டும் இயற்றி காவல் சார் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் துறை சார்ந்த ஒதுக்கீட்டில் போட்டியிடும் தமிழ்வழியில் கற்ற காவலர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

காவல்துறையினருக்கு படி வழங்குவதிலும் பாகுபாடு காட்டப்படுகிறது. காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரையிலான நிலையில் உள்ளவர்களுக்கு சிறப்பு ஊதியம், இரவு நேரப் பணிக்கான படிகள், பணி ஆபத்து படிகள் ஆகியவை அதே துறையில் பணியாற்றும் விரல் ரேகை வல்லுனர்களுக்கு வழங்கப்ப்படுவதில்லை. சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களில் பணியாற்றும் விரல்ரேகை பிரிவினருக்கு உணவுப்படி கூட வழங்கப்படுவதில்லை. இந்த பாகுபாடு உடனடியாக களையப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசு நினைத்தால் காவல் துறையினரின் இந்தக் குறைகள் அனைத்தையும் ஒரே நாளில் தீர்க்க முடியும். இதற்காக சிறப்புக் குழு ஒன்றை அமைத்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை பெற்று காவல்துறையினரின் பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்துக் குறைகளையும் தமிழக அரசு தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...