*தமிழகம் முழுவதும் 16 மாவட்ட வருவாய் அலுவலர்கள் (DRO) அதிரடி பணியிட மாற்றம் - தலைமைச் செயலாளர் சாய்குமார் உத்தரவு!*
*சென்னை, செப்டம்பர் 29:* தமிழகம் முழுவதும் 16 மாவட்ட வருவாய் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் எம்.சாய்குமார் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள *அரசாணை (நிலை) எண்.3514, நாள்: 29.09.2026*-ன் படி,
*சிவகங்கை உட்பட முக்கிய மாற்றங்கள்:*
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நில எடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த *திரு. பி.சைலேந்திரன்* அவர்கள் *சிவகங்கை மாவட்டத்தின் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக (DRO)* நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை சிவகங்கை DRO-வாக இருந்த *டாக்டர் எஸ்.செல்வசுரபி* அவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பொது மேலாளராக (விற்பனை) மாற்றப்பட்டுள்ளார்.
*தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பிரிவில் பெரும் மாற்றம்:*
- திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகியாக இருந்த *திருமதி பி.ராஜலட்சுமி* - வேலூர் தேசிய நெடுஞ்சாலை சிறப்பு DRO-வாக நியமனம்.
- விழுப்புரம் நெடுஞ்சாலை சிறப்பு DRO *திரு. டி.அம்பைரநாதன்* - சென்னை விமான நிலைய விரிவாக்க திட்ட சிறப்பு DRO-வாக மாற்றம்.
- தமிழ்நாடு சுகாதார திட்ட DRO *திரு. கே.மணிகண்டன்* - விழுப்புரம் நெடுஞ்சாலை சிறப்பு DRO-வாக நியமனம்.
- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை சிறப்பு DRO *செல்வி சி.கீதா* - கிருஷ்ணகிரி சாட்டிலைட் டவுன் வளைய சாலை சிறப்பு DRO-வாக மாற்றம்.
- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை முன்னாள் சிறப்பு DRO *திருமதி ஜெ.லொரேட்டா* - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை சிறப்பு DRO-வாக நியமனம்.
*சென்னை மாநகராட்சிக்கு இரண்டு DRO-க்கள்:*
சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் இருந்த *திரு. டி.முத்துராமலிங்கம்* சென்னை மாநகராட்சியின் நிலம் மற்றும் எஸ்டேட் பிரிவு DRO-வாகவும், வேலூர் சிறப்பு DRO *திருமதி ஏ.கௌசல்யா* சென்னை மாநகராட்சியின் உதவி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி உதவி ஆணையராக இருந்த *செல்வி உமாமகேஸ்வரி ராமச்சந்திரன்* நில நிர்வாக ஆணையரகத்தின் இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
இந்த பணியிட மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக தலைமைச் செயலாளர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





கருத்துகள்