தமிழகத்தில் 6 மாதங்களாக புதிதாக வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளதால், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பலரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
பொது வினியோக திட்ட இணையதளத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, சமையல் காஸ் சிலிண்டர் ரசீது கட்டாயம் பதிவேற்ற வேண்டும்.
மேற்காசிய போர் காரணமாக கடந்த மார்ச் முதல் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், சமையல் காஸ் ஏற்றி வரும் கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் புதிய காஸ் இணைப்பு நிறுத்தப்பட்டது. ஜூலையில் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டாலும் புதிய இணைப்பு வழங்கப்படவில்லை.
திருமணமாகி தனிக்குடித்தனம் செல்வோர் 14.2 கிலோ சிலிண்டர் கேட்டால் தருவதில்லை, 5 கிலோ மட்டும் தருகின்றனர். காஸ் ரசீது இல்லாமல் விண்ணப்பித்தால் அதிகாரிகள் நிராகரிப்பதாக புகார்.
எனவே புதிய காஸ் இணைப்பை வழங்க மத்திய அரசும், புதிய ரேஷன் கார்டை வழங்க தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கருத்துகள்