தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் அக்டோபர் 6, 2026 அன்று நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் களம் காணும் வேட்பாளர்களாக மதுராந்தகம் (தனி) தொகுதிதிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கனிதா சம்பத் மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிக்கு பானுமதி ஆகியோர் இந்த இரு தொகுதிகளின்
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வான மரகதம் குமரவேல் மற்றும் பி. சத்யபாமா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் அறிவிக்கப்பட்ட தேர்தலில்
அதிமுக கூட்டணிக் கட்சிகளான பாஜக அமமுக, புதிய நீதிக் கட்சி மற்றும் பாமக தவிர பிற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைக் கோரியுள்ளது.
திமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் ஏற்கனவே தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அதிமுகவின் இந்த அறிவிப்புடன் புதிய லேட்பாளர்கள் மற்ற கட்சிகள் அறிவித்த நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது





கருத்துகள்