முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கம்பூர் ரூபா மீதான பட்டியல் பழங்குடி, வன்கொடுமை வழக்கு முடித்து வைப்பு, பணியிடை நீக்கம் ரத்து செய்ய மக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கம்பூர் ஊராட்சிச் செயலாளர் ரூபா மீது தொடரப்பட்ட ஜாதிய வன்கொடுமை எனும் PCR வழக்கு பொய்யானது





என காவல்துறை விசாரணையில் நிரூபிக்கப்பட்டு, அது காவல்துறை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது. கம்பூர் ஊராட்சியில் தூப்புறவு ஊழியர் சசிகலா என்பவர், ஊராட்சிச் செயலாளர் ரூபா தன்னை ஜாதி ரீதியாக இழிவுபடுத்தியதாகவும், தீண்டாமை வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும் மேலூர் காவல்துறையினரிடம் அரசு மருத்துவமனையில் புகார் அளித்ததன் அடிப்படையில் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அன்று வட்டார வளர்ச்சி அலுவலரால் ரூபா தற்காலிகமாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். காவல்துறையில் அளித்த புகாரைத் தொடர்ந்து தீவிர புலனாய்வு விசாரணை நடத்தினர். அதில், சசிகலா குறிப்பிட்ட தேதியில் ரூபா அங்கு பணியிலேயே இல்லை என்பதும், தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கத்திற்காக முந்தைய ஊராட்சிச் செயலாளரின் தூண்டுதலின் பேரில் இந்த பொய்யான புகார் அளிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது.




இதனால் இந்த வழக்கில் உண்மையில்லை என முடிவு செய்யப்பட்டு, 'Mistake of Fact' என்ற அடிப்படையில் எஸ்சி/எஸ்டி (PCR) வழக்கு முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. ரூபா மீது திட்டமிட்டுப் பொய் வழக்கு பதியப்பட்டதைக் கண்டித்து, கம்பூர் பகுதி கிராம மக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் இணைந்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ரூபா மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால், அவரது பணிநீக்க உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற்று அவரை மீண்டும் கம்பூர் ஊராட்சிச் செயலாளராகப் பணியமர்த்த வேண்டும் என்றும், அரசு அலுவலர்கள் பழிவாங்க வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி பொய்ப் புகார் அளித்த தூய்மைப் பணியாளர் சசிகலா மற்றும் அதற்குப் பின்னணியில் இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்    தன்னை ஜாதி ரீதியாக இழிவுபடுத்தி, துன்புறுத்தியதாக ஊராட்சி செயலாளர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் ரூபா மீது  அட்டவணைப் பட்டியல் சமூக துப்புரவு ஊழியர் சசிகலா புகார்,   ஆனால் சசிகலா வேறு ஏதோ காரணமாக தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவரது புகாரின் அடிப்படையில், ஊராட்சி செயலாளர் ரூபாவை பணியிடை நீக்கம் செய்து கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுத்த நிலையில் 


தவெக கூட்டணி அரசின் விசிக வின் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு பரிந்துரையில் இந்த உத்தரவிடப்பட்டுள்ளது தெரிகிறது, கம்பூர் ஊராட்சியின் பொறுப்புகளை அட்டப்பட்டி ஊராட்சி செயலாளர் கூடுதலாகக் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் உட்பட்ட கம்பூர் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணிபுரியும் ரூபா மீது சாற்றப்பட்டுள்ள குற்றச்சாட்டு முழுவதும் அப்பட்டமானவை என்பதும் கம்பூர் ஊராட்சியில் ஏற்கனவே ஊராட்சி செயலாளராக பணி செய்து வந்த வடிவேலு என்ற நபரின் ஏற்பாட்டில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் சுறறு வட்டார ஊர் மக்கள் பலர் கூறும் நிலை வடிவேலுக்கும் அந்த பாதிக்கப்பட்டதாக கூறப்படும் துப்புரவு பணியாளரும் ஒரே பட்டியல் அட்டவணை வகுப்பு என சுற்றியுள்ள பல ஊர் பலரை விசாரித்த வகையில் தகவல் கிடைக்கப்பெற்று அந்த தகவல் அடிப்படையில் தான் வடிவேலு இந்த ரூபா  மீது அபாண்டமான பழியை சுமத்தி அவர் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் ஊரில் பலர் பேசும் நிலை உள்ளது,

இந்த பணியிடை நீக்கம் என்பது ரத்து செய்யப்பட்டு அவரை உடனடியாக பணியில் அமர்த்த கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி நிர்வாகம் மற்றும், மதுரை மாவட்ட ஆட்சியர்   நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டு மனுவும் அளித்துள்ளார்கள்  மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கம்பூர் ஊராட்சி விவகாரத்தில், சமூக நீதித் துறையின் தவெக கூட்டணி அமைச்சர் வன்னி அரசு ஜாதி உணர்வடன் செயல்படுகிறாரா என்ற கேள்விக்கு, விடை தேவை,  இந்தச் சம்பவத்தின் பின்னணி மற்றும் அது குறித்து எழுந்துள்ள இருதரப்பு வாதங்களை நடுநிலையாகப் புரிந்துகொள்வது அவசியமாகும். இது தமிழ்நாடு மாநில ஆளுநர் வரை கொண்டு சென்ற நிலைமை உள்ளது, சம்பவத்தின் பின்னணி கம்பூர் ஊராட்சியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் சசிகலா என்பவர், அங்கு ஊராட்சி செயலாளராகப் பணிபுரிந்த ரூபா தன்னிடம் சாதிப் பாகுபாடு காட்டியதாகவும், அவமதித்ததாகவும் புகார் அளித்தார். இந்தப் புகாரைத் திரும்பப் பெறக் கோரி மிரட்டல்கள் வந்ததாகக் கூறி, சசிகலா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார் எனவும் . இதன் தொடர்ச்சியாக, கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) கம்பூர் ஊராட்சி செயலாளர் ரூபாவை பணிநீக்கம் (Dismissal) செய்து உத்தரவிட்டார். மேலும், ரூபா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (SC/ST PCR Act) கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அமைச்சரின் நடவடிக்கை மற்றும் ஆதரவு வாதம் இந்த நடவடிக்கை குறித்து சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு தனது X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டதில்: சமூக நீதித் துறையின் அறிவுறுத்தலின்படியே இந்தத் தற்காலிகப் பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தினார்.தங்களது அரசு முந்தைய காலங்களைப் போலன்றி, எந்தவிதமான ஜாதிப் பாகுபாடுகளையும், தீண்டாமை வன்கொடுமைகளையும் சகித்துக் கொள்ளாது என்றும் தெரிவித்தார். அமைச்சரின் ஆதரவாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பாதிக்கப்பட்ட எளிய தூய்மைப் பணியாளருக்குச் சட்டப்படியான நீதியைப் பெற்றுத் தருவதற்கே அமைச்சர் தனது கடமையைச் செய்துள்ளார் என்றும், இதில் ஜாதி நோக்கம் எதுவும் இல்லை என்றும் வாதிட்டனர்.  ஆனால் எதிர்தரப்பு குற்றச்சாட்டுகள் மற்றும் வாதங்கள் மறுபுறம், ஊராட்சி செயலாளர் ரூபாவுக்கு ஆதரவான சில அமைப்புகள் மற்றும் சங்கங்கள் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளன: ரூபா மீது எவ்வித முறையான முகாந்திரமும் இன்றி அவசர அவசரமாகப் பொய் வழக்கு பதியப்பட்டு, சட்டத்திற்குப் புறம்பாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அமைச்சர் வன்னி அரசு போன்றவர்கள் இந்த விவகாரத்தில் கடுமையான அவசரம் காட்டுவதாகவும், இதன் பின்னணியில் அரசியல் அல்லது வேறு ஏதேனும் திட்டமிட்ட சூழ்ச்சி இருக்கலாம் என்றும் அப் பகுதி சார்ந்த மக்கள் சந்தேகிக்கின்றனர். ரூபா ஜாதி ரீதியாகச் செயல்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும், இந்தத் தன்னிச்சையான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரி வருகின்றனர். ஒரு தரப்பினர் இதனை  சமூகப் பணியாளருக்கான அதிகாரப்பூர்வ சமூக நீதி நடவடிக்கை எனப் பார்க்கும்போது, மற்றொரு தரப்பினர் இதனை உரிய விசாரணையின்றி அவசரமாக எடுக்கப்பட்ட ஒருதலைப்பட்சமான நடவடிக்கை எனக் கருதினர். தற்போதைக்கு இச்சம்பவம் குறித்து காவல்துறையினரின் சட்டப்பூர்வ விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, எனவும் மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்பூர் ஊராட்சியில் செயலாளராக பணிபுரிந்து வந்த ரூபா அவர்கள் மீது எந்தவித முகாந்திரமும் இல்லாமல் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் சட்டத்திற்கு புறம்பாக பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனை கடுமையாக கண்டித்து, மேலும் அவருக்கு விதிக்கப்பட்ட பணி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்து மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி, இன்று மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் ஆட்சியாளர் அவர்களின் நேரடி உதவியாளரிடம் மனு அளிக்கப்பட்டது.




இந்த மனுவை பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து வழங்கினர்

மேலும், சம்பந்தப்பட்ட அலுவர்கள் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வந்து, ரூபாவுக்கு நீதி வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ள நிலையில், இது போன்ற நிலை இனி அரசு அலுவவகங்கள் சம்பந்தப்பட்ட பணியில் பல இடங்களில் வரலாம் அதை ஆரம்பத்தில் தடுப்பது மத்திய மாநில அரசுகளின் கடமை7 கிராம மக்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு. 

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கம்பூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி செயலாளர் ரூபா உள்ளிட்ட 8 பேர் மீது பொய் வழக்கு என்று கூறி கம்பூர், அலங்கம்பட்டி, தேனூர், ஐவத்தான்பட்டி, கோவில்பட்டி, பெரியகற்பூரம்பட்டி, சின்னகற்பூரம்பட்டி, ஆகிய ஊர்களைச் சார்ந்த ஊர் நாட்டமைகள் மற்றும் அனைத்து சமுதாயப் பொதுமக்கள் ஒன்றிணைந்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பொய் வழக்கை ரத்து செய்யக்கோரியும் தற்காலிக பணியிடை நீக்கத்தை ரத்து செய்யவும் மனு அளித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...