---*இரயிலில் ஸ்பீக்கரில் பாட்டு, வீடியோ, சத்தமாக பேசினால் ரூ.1000 அபராதம், 6 மாதம் சிறை! - 13 ஆண்டுக்கு பிறகு சட்டமாக மாறிய ரயில்வே வாரிய உத்தரவு - அரசிதழ் ஆதாரம் வெளியீடு!*
*சென்னை:* ரயில் பயணங்களில் சக பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் செல்போன் ஸ்பீக்கரில் பாட்டு கேட்பது, வீடியோ பார்ப்பது, சத்தமாக பேசுவதற்கு இனி ரூ.1000 அபராதம் மற்றும் 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு
*1. தொடக்கம் - 2012 ரயில்வே வாரிய எச்சரிக்கை:*
இதற்கான முதல் எச்சரிக்கை 13 ஆண்டுகளுக்கு முன்பே விடுக்கப்பட்டது.
*ஆவண எண்: No.2012/TG-V/19/02, நாள்: 23.07.2012*-ல் ரயில்வே வாரிய இயக்குனர் Dr. Monica Agnihotri அனைத்து மண்டல தலைமை வணிக மேலாளர்களுக்கு அனுப்பிய உத்தரவில்,
> "மூடப்பட்ட பெட்டிகளுக்குள், குறிப்பாக ஏசி பெட்டிகளுக்குள் சத்தமாக செல்போனில் பேசுவது, நீண்ட உரையாடல்கள் மற்றும் ஆட்சேபனைக்குரிய ரிங்டோன் சத்தங்கள் சக பயணிகளின் வசதியை பாதிக்கிறது. பயணிகள் மொபைலை சைலண்ட்/வைப்ரேஷனில் வைக்கவும், சத்தமாக பேசுவதை தவிர்க்கவும், பொது ஒலிபெருக்கி மற்றும் ஸ்டிக்கர் மூலம் அறிவுறுத்த வேண்டும்" என்று கூறியிருந்தார்.
அப்போது இது வெறும் அறிவுரையாக மட்டுமே இருந்தது.
*2. சட்டமானது எப்படி? - 2026 ஜன் விஸ்வாஸ் சட்ட திருத்தம் - அரசிதழ் ஆதாரம்:*
2026-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த *ஜன் விஸ்வாஸ் (விதிகள் திருத்த) சட்டம், 2026 (No.8 of 2026)* மூலம் ரயில்வே சட்டம் திருத்தப்பட்டது. இதன் அரசிதழ் நகல் *(7222791/2026/O/o http://CH.OS 1/PS/COMML/HQ/SR, பக்கம் 584 & 585)* பப்ளிக் ஜஸ்டிஸ் வசம் உள்ளது.
அதில் *பிரிவு 145-க்கு பதிலாக புதிய பிரிவு மாற்றப்பட்டுள்ளது:*
*பிரிவு 145(1) - போதையில் தொல்லை:*
ரயிலில் போதையில் தொல்லை செய்தால் - டிக்கெட் பறிமுதல் + 24 மணி நேரம் வரை சிறை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது சமூக சேவை.
*பிரிவு 145(2)(a) & (b) - தொல்லை (Nuisance) வரையறை:*
- (a) தொல்லை செய்வது, ஒழுக்கமற்ற செயல், தகாத/ஆபாச வார்த்தை பயன்படுத்துவது
- (b) *ரயில்வே நிர்வாகம் வழங்கும் வசதிகளில் வேண்டுமென்றே தலையிட்டு சக பயணியின் வசதியான பயணத்தை பாதிப்பது*
இதன் கீழ் தான் *ஸ்பீக்கரில் பாட்டு/வீடியோ போடுவது வருகிறது.*
*தண்டனை:*
- முதல் முறை: ரயிலில் இருந்து வெளியேற்றம் + டிக்கெட் பறிமுதல் + *ரூ.1000 அபராதம்*
- எச்சரித்த பிறகும் தொடர்ந்தால்: *6 மாதம் வரை சிறை அல்லது ரூ.5000 வரை அபராதம் அல்லது இரண்டும்*
- 4-வது முறை தொடர்ந்து செய்தால்: 1 ஆண்டு வரை சிறை + ரூ.5000 அபராதம் (குறைந்தபட்சம் 3 மாதம் சிறை + ரூ.2000 அபராதம்)
*விளக்கம்:* "Nuisance" என்பதற்கு பாரதிய நியாய சன்ஹிதா 2023 பிரிவு 270-ன் விளக்கமே பொருந்தும்.
மேலும் பிரிவு 146, 147-ம் திருத்தப்பட்டுள்ளன.
*3. தற்போது அமல் - தெற்கு ரயில்வே 06.10.2026 அதிரடி உத்தரவு:*
இந்த சட்ட திருத்தத்தை அடிப்படையாக வைத்து தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம், சென்னையில் இருந்து அனைத்து கோட்டங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
*ஆவண எண்: No. C.14/PA/PAS (E-Office - 110056), நாள்: 06.10.2026*
*அனுப்பியவர்: S. சரவணன், துணை தலைமை வணிக மேலாளர்/PS, PCCM ஒப்புதலுடன்*
*அனுப்பப்பட்டவர்கள்: சென்னை, சேலம், மதுரை, திருச்சி, பாலக்காடு, திருவனந்தபுரம் http://Sr.DCM-க்கள்*
அதில்,
> "Please avoid playing music or videos on speaker mode and refrain from loud conversations while traveling and in Railway premises, such conduct may attract action under Section 145 of the Railways Act with a penalty upto Rs.1000/- and or, imprisonment for a term upto 6 months, Please use earphones" என்று குறிப்பிட்டு, இதை *பிராந்திய மொழிகள், இந்தி, ஆங்கிலத்தில் PA System மூலம் தொடர்ந்து அறிவிக்கவும், 20.10.2026-க்குள் அமலாக்க அறிக்கை அனுப்பவும்* உத்தரவிடப்பட்டுள்ளது.
*முடிவுரை:*
2012-ல் வெறும் அறிவுரையாக இருந்தது, 2026-ல் ஜன் விஸ்வாஸ் சட்டம் மூலம் சட்டமாக மாறி, 06.10.2026 முதல் தெற்கு ரயில்வே முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இனி ரயிலில் ஸ்பீக்கரில் பாட்டு கேட்டால் TTE அபராதம் விதிப்பார், பயணிகள் கண்டிப்பாக இயர்போன் பயன்படுத்த வேண்டும். ---








கருத்துகள்