அரசு அலுவலர்கள் தூங்கினால், மக்கள் விழிப்பார்கள்! - கிராம மக்களுக்காக களத்தில் இறங்கிய சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை !
*Can We Blame Citizens For Acting On Their Own When Official Machinery Fails?*
*மதுரை:* சட்டவிரோதமாக பதிக்கப்பட்ட குழாய்களை அகற்றியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட சிவகங்கை கிராம மக்களுக்கு ஆதரவாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வரலாற்று உத்தரவு.
*வழக்கு எண்: WP(MD) No.29140/2026*
*நீதிபதிகள்: G.R.சுவாமிநாதன், B.புகழேந்தி*
*[2026 LiveLaw (Mad) 493] - 09.10.2026*
*நடந்தது என்ன?*
அம்மாபட்டி கிராமத்தில் கண்மாய் கரையில், தனியார் நிறுவனம் எந்த அனுமதியும் இன்றி சிமெண்ட் குழாய்களை சட்டவிரோதமாக பதித்துள்ளது.
இதை அகற்றக் கோரி கிராம மக்கள் வருவாய் *அலுவலர்கள்* மற்றும் ஊராட்சி *அலுவலர்களிடம்* பலமுறை மனு கொடுத்தனர். அரசு *அலுவலர்கள்* எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வேறு வழியின்றி கிராம மக்களே அந்த சட்டவிரோத குழாய்களை அகற்றியுள்ளனர்.
*காவல் அலுவலரின் பொய் வழக்கு:*
இதை வைத்து விசாரணை காவல் *அலுவலர்*, "ரூ.10 லட்சம் மதிப்புள்ள சோலார் பேனலை சேதப்படுத்தினர்" என்று பொய் FIR பதிவு செய்து இருவரை கைது செய்துள்ளார்.
சிவகங்கை முதன்மை அமர்வு நீதித்துறை *அலுவலரிடமும்* இதே பொய்யை கூறி, முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வைத்துள்ளனர்.
*ஹைகோர்ட்டில் உடைந்த பொய்:*
09.10.2026 அன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், அறிவுறுத்தும் காவல் *அலுவலரை* நேரடியாக அழைத்து விசாரித்தனர்.
அப்போது காவல் *அலுவலரே* ஒப்புக்கொண்டார்:
- சோலார் பேனலுக்கு எந்த சேதமும் இல்லை.
- சேதப்படுத்தப்பட்டது சிமெண்ட் குழாய்கள் தான்.
- அந்த குழாய்கள் அனுமதியின்றி சட்டவிரோதமாக பதிக்கப்பட்டவை.
*நீதிபதிகளின் பப்ளிக் ஜஸ்டிஸ் கருத்து:*
> "For how long should citizens wait? அரசு இயந்திரம் தோல்வியடையும் போது, குடிமக்கள் தாங்களாக செயல்படுவதை குறை சொல்ல முடியுமா?"
>
> "சூழலியலுக்காக நிற்கும் கிராம மக்கள் தான் கார்ப்பரேட் பேராசைக்கும், சுற்றுச்சூழலுக்கும் இடையில் நிற்பவர்கள். இவர்களை பொய் வழக்கில் சிறையில் வாட விட்டால், உண்மையான செயல்பாடு முடங்கிவிடும்."
*நீதிமன்ற உத்தரவு:*
பொய் தகவலால் தவறாக வழிநடத்தப்பட்டதை சுட்டிக்காட்டி, சிவகங்கை முதன்மை அமர்வு நீதித்துறை *அலுவலர்*, *10.10.2026 காலை 11 மணிக்கு சிறப்பு அமர்வு நடத்தி, நடராஜன், சேவியர் கென்னடி ஆகியோரின் ஜாமீன் மனுக்களை அன்று மதியத்திற்குள் முடிக்க வேண்டும்* என்று பிரிவு 227-ன் கீழ் உத்தரவிடப்பட்டது.
*யார் யார் அலுவலர்கள்?*
- *தவறு செய்தவர்:* பொய் FIR போட்ட விசாரணை காவல் *அலுவலர்* மற்றும் அறிவுறுத்தும் காவல் *அலுவலர்*.
- *ஏமாற்றப்பட்டவர்:* சிவகங்கை முதன்மை அமர்வு நீதித்துறை நீதிபதி .
- *தூங்கியவர்கள்:* நடவடிக்கை எடுக்காத வருவாய் மற்றும் ஊராட்சி *அலுவலர்கள்*.
இது தமிழக கிராம மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய நீதி.







கருத்துகள்