திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் சர்வதேச கூரியர் சேவை - சுங்கத்துறை ஒப்புதலுக்கு அதிகாரப்பூர்வ கடிதம்
---*திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் சர்வதேச கூரியர் சேவை - சுங்கத்துறை ஒப்புதலுக்கு அதிகாரப்பூர்வ கடிதம்*
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் இயக்குநர் *G.கோபாலகிருஷ்ணன்* அவர்கள், சுங்கத்துறை ஆணையர், திருச்சிராப்பள்ளி (1, வில்லியம்ஸ் சாலை) அவர்களுக்கு 09.10.2026 அன்று அதிகாரப்பூர்வ கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.
*கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முக்கிய விவரங்கள்:*
*1. பின்னணி:*
01.07.2024 அன்று சுங்கத்துறை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தை பார்வையிட்டபோது, தொடக்கத்தில் கூரியர் சரக்குதிருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் சர்வதேச கூரியர் சேவை - சுங்கத்துறை ஒப்புதலுக்கு அதிகாரப்பூர்வ கடிதம் குறைவாக இருப்பதால், தனி கட்டிடம் தேவையில்லை, ஏற்கனவே உள்ள சரக்கு முனையத்தையே பயன்படுத்தலாம் என வாய்மொழியாக ஒப்புக்கொண்டனர். அதன் அடிப்படையில் 20.08.2024 மற்றும் 08.01.2025 தேதிகளில் கடிதங்கள் அனுப்பப்பட்டன.
*2. 07.10.2026 பங்குதாரர்கள் கூட்டம்:*
AAICLAS நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) தலைமையில், *திருச்சிராப்பள்ளி எம்.பி. துரை வைகோ முன்னிலையில்* ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதில் கலந்து கொண்டவர்கள்:
- திரு. K.செல்வகுமார், CEO, AAICLAS
- திரு. G.கோபாலகிருஷ்ணன், விமான நிலைய இயக்குநர்
- சுங்கத்துறை பிரதிநிதிகள்
- விரைவஞ்சல் இயக்குநர்கள் சங்கத்தினர்
*கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு:*
சுங்கத்துறை ஒப்புதலுடன், கூரியர் சரக்கு அளவு *250 மெட்ரிக் டன்* எட்டும் வரை, தற்போது இயங்கி வரும் சர்வதேச சரக்கு முனையத்திலேயே சர்வதேச கூரியர் போக்குவரத்தை தொடங்கலாம் என முடிவு செய்யப்பட்டது. சுங்கத்துறை பிரதிநிதியும் வர்த்தகத்தை ஆதரிக்க முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தார்.
*3. தற்போதைய கோரிக்கை:*
இதன் அடிப்படையில், தற்போதைய சர்வதேச சரக்கு முனையத்தில் கூரியர் சேவையை தொடங்க, கொள்கை அளவிலான ஒப்புதல் (In-principle approval) வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிடுமாறு சுங்கத்துறை ஆணையரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இக்கடிதத்தின் நகல் CEO, AAICLAS புதுடெல்லி, RED (SR) AAI சென்னை, GM (Cargo) AAICLAS சென்னை ஆகியோருக்கும், *திருச்சி எம்.பி. துரை வைகோவுக்கும்* சுங்கத்துறையிடம் ஒப்புதலை விரைவுபடுத்தக் கோரி அனுப்பப்பட்டுள்ளது.




கருத்துகள்