---
*வாளுக்கு வேலி அம்பலக்காரர் நினைவு நாள் சிறப்பு - மறைக்கப்பட்ட 48 நாடுகளின் உண்மை வரலாறு!*
*தஞ்சை ஓரத்தநாடு முதல் மதுரை பாப்பாநாடு வரை 48 தன்னாட்சி கள்ளர் நாடுகள் இருந்தது உங்களுக்கு தெரியுமா?*
சோழர் காலத்திலேயே நாம் நாடு வகுத்து ஆண்ட பெருமைக்குரியவர்கள் சார். கல்வெட்டுகளில் மங்கல நாடு, மழநாடு, புலியூர் நாடு, பாப்பாநாடு, அம்பு நாடு என 48 நாடுகளின் பெயர்கள் இன்றும் உள்ளன.
இந்த 48 நாடுகளின் ஒரு பகுதி தான் பிற்காலத்தில் *சின்ன மறவர் சீமையான சிவகங்கை சீமை*. இது பெரிய மறவர் சீமையான ராமநாதபுரத்தில் இருந்து பிரிந்தது.
*சிவகங்கை சீமையின் புகழ்பெற்ற நாடுகள்:*
மேல்நாடு, சிறுகுடி, வெள்ளலூர், மயில்ராயன் கோட்டை என்ற மல்லாக்கோட்டை, *பாகனேரி, கண்டுகொண்ட மாணிக்கம், கண்ணங்கோட்டை, பட்டமங்கலம், ஆரூர் வட்டகை, நாலுகோட்டை, கண்டதேவி, பிரான்மலை* என 30-க்கும் மேற்பட்ட நாடுகள்.
*பாகனேரி நாடு - ஒரு தனி சரித்திரம்:*
- பழைய பெயர் - *திருத்தியூர் முட்டத்து பாகனேரி*
- பரப்பு - *750 சதுர கி.மீ*
- எல்லையில் இன்றும் *சூலக்குறி எல்லைக்கற்கள்* உள்ளன
- காளையார்கோயிலில் *8-ல் 3 பங்கு* பாகனேரி நாட்டிற்குள் தான் அடங்கும்
*நாட்டின் உட்பிரிவுகள்:*
தெற்கு வாசல் - உதாரப்புலி, பரிசப்புலி, சொக்கனார், பழயடிபுரம், வாவிக்கும் மீண்டான், மதியாப்புலி
வடக்கு வாசல் - குறுக்களாஞ்சி, குண்டச்சன், பொண்ணூட்டச்சன், கீழவாசல், *வாளுக்கு வேலி*
*ஆதாரங்கள் என்ன சொல்கிறது?*
- பெருச்சிக்கோவில் சுகந்தவனேஸ்வரர் கோயில் வீரபாண்டியன் கல்வெட்டில் (76/2021) *"போகநேரிப் பற்று நாட்டார்க்கு"*
- 18-ம் நூற்றாண்டு ஓலை எண் 20-ல் *"பாகனேரியிலிருக்கும் கள்ளரில் வாளுக்கு வேலி முத்துக்கருப்பன் சேர்வை"*
*வாளுக்கு வேலி கட்டிய கோவில்:*
பாகனேரி அம்பலக்காரர்கள் கோவில் கட்டும் வள்ளல்கள். வாளுக்கு வேலி தனது நாட்டில் பல ஊரணி, கண்மாய் வெட்டியதோடு *காவித்தான் கணபதி / காவல் விநாயகர் கோவிலை* கட்டினார். படைகள் போருக்கு புறப்படும் முன் இங்கு வழிபடுவது வழக்கம்.
*சிவகங்கையின் சோக வரலாறும் மீட்பும்:*
1772-ல் இரண்டாம் மன்னர் *முத்து வடுகநாதத் தேவர்* தனது இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் காளையார்கோவிலில் ஆங்கிலேயரால் கொல்லப்பட்டார். முதல் மனைவி *ராணி வேலுநாச்சியார்* தனது மகள் வெள்ளச்சியுடன், தளபதிகள் பெரிய மருது, சின்ன மருதுவுடன் விருபாட்சி காட்டிற்கு தப்பினார். 8 வருடத் தலைமறைவு.
அப்போது தான் நாட்டை காக்க மருது சகோதரர்களிடம் *"நீங்கள் மன்னர்கள் இல்லை, அரச பிரதிநிதிகள்"* என்ற நிபந்தனையுடன் ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்டது.
விருபாட்சி கோபாலநாயக்கர் மூலம் மைசூர் மன்னர் ஹைதர் அலி, அவர் மகன் திப்பு சுல்தான் உதவியுடன் *1780-ல் வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்டார் - ஜான்சி ராணிக்கு 77 வருடம் முன்பே வெள்ளையனை விரட்டிய முதல் ராணி!*
*வீரமரணங்களின் தொடர் - யார் எங்கு பிடிபட்டார்கள்?*
- *வீரபாண்டிய கட்டபொம்மன்* - புதுக்கோட்டை திருக்களாம்பூர் காட்டில் பதுங்கிய பின் ஒரு வீட்டில் பிடிபட்டார் - கயத்தாறில் தூக்கு
- *பெரிய மருது* - சொந்த ஊர் சிறுவயல் காட்டு அரண்மனையில் பிடிபட்டார்
- *சின்ன மருது* - காரைக்குடி-தேவகோட்டை சாலை சங்கரபதி கோட்டை காட்டில் பிடிபட்டார்
- *வாளுக்கு வேலி அம்பலக்காரர்* - மருதுவை காக்க பாகனேரியில் இருந்து படையுடன் வந்த போது, *கத்தப்பட்டு காட்டுப்பாதையில்* வெள்ளையன் வெட்டிய புதைகுழியில் குதிரையுடன் விழுந்து வீரமரணம்.
*இறுதி முடிவு: 1801 அக்டோபர் 24, திருப்பத்தூர்.*
பெரிய மருது, சின்ன மருது உட்பட *543 பேர் ஒரே நாளில் தூக்கிலிடப்பட்டனர்.* ஒரே வாரிசு துரைசாமி மட்டும் 73 பேருடன் பினாங்கு தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
*இரண்டு சிலைகள் - இரண்டு சரித்திரம்:*
1. *பழைய நடுகல் சிலை - கத்தப்பட்டு* - வீரமரணமடைந்த இடம். தம்பி கருத்தப்பன் அம்பலம் வைத்த நடுகல். கையில் ஈட்டி, வளரி.
2. *புதிய வெண்கலச் சிலை - நகரம்பட்டி (பிறந்த பூமி)* - 2025 ஜனவரி 22 அன்று தமிழக முதலமைச்சரால் திறக்கப்பட்டது - *ஸ்ரீமது முத்து விஜய ரகுநாத பாஸ்கர சேதுபதி வாளுக்கு வேலி அம்பலம்* - வாரிசுகள் இன்றும் வசிக்கும் ஊர்.
இவர்கள் தியாகத்தால் தான் சிவகங்கை *"விடுதலைக்கு வித்திட்ட சீமை"* ஆனது.
*நினைவு நாள்: வைகாசி 27 (ஜூன் 10)* - பாகனேரி நாட்டு மக்கள் பொங்கல் படையலிட்டு வீர வணக்கம் செலுத்தி வருகிறார்கள். அரசு விழாவாக அறிவிக்க கோரிக்கை வைப்போம்!
*வாளுக்கு வேலி அம்பலக்காரர் புகழ் வாழ்க!* ---













கருத்துகள்