*சென்னை, அக்டோபர் 5:* கடந்த வாரம்
சென்னை தனியார் மருத்துவமனையில் ஒருவர் இறந்தார்.
அவர் பெயர் விஜயகுமார் நாயுடு. ஆனால் ஊடகங்கள் சொன்னது "கல்கி பகவான் காலமானார்" என்று. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்களை வைத்திருந்தவர், தன்னை விஷ்ணுவின் பத்தாவது அவதாரம் என்று சொன்னவர், இன்று ஒரு சாதாரண மனிதனை போல மருத்துவமனையில் உயிர் விட்டார்.
இந்த செய்தி வரும் அதே நேரத்தில் தான் திருச்சி சிறையில் 2011-ல் இறந்த இன்னொரு "கடவுளின்" கதையும் நினைவுக்கு வருகிறது. அவர் பெயர் பிரேமானந்தா. அவரும் தன்னை கடவுள் என்றார், பெரிய ஆசிரமம் கட்டினார், வெளிநாட்டு பக்தர்கள் என்றார். கடைசியில் பாலியல் குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை பெற்று கடலூர் சிறையில் இறந்தார்.
*இரண்டு மரணங்கள் சொல்லும் ஒரே பாடம் என்ன?*
தமிழ்நாட்டில் இன்று இரண்டு வகை சாமியார்கள் பெருகி விட்டார்கள் சார்.
ஒரு வகை - பெரிய கோட்டை போல ஆசிரமம், வெள்ளை பளிங்கு கோயில், ஆன்லைனில் தீட்சை, தரிசனத்திற்கு கட்டணம் என்று கார்ப்பரேட் கடவுள்கள். இவர்கள் சாதனை என்று சொல்வது எல்லாம் எத்தனை ஏக்கர் நிலம், எத்தனை வெளிநாட்டு பக்தர்கள் என்பது தான்.
இன்னொரு வகை - நாட்டரசன்கோட்டை, செங்கல்பட்டு என ஊர் ஊராக முளைக்கும் சிறு சாமியார்கள். "உன் வீட்டில் தோஷம் இருக்கு, பரிகாரம் பண்ணலைன்னா குடும்பம் அழிந்து விடும்" என்று பயத்தை விற்று பிழைப்பவர்கள்.
இரண்டு பேரும் விற்பது ஒன்று தான் - *நம் பயம்.*
ஆனால் நம் உண்மையான சாமிகள் அப்படி இருந்ததில்லை சார்.
திருமூலர் யாரிடமும் காசு கேட்கவில்லை. வள்ளலார் யாரையும் பயமுறுத்தவில்லை. ரமணர் தன்னை கடவுள் என்று சொல்லவில்லை. அவர்கள் சொன்னது ஒன்றே ஒன்று தான் - *"அன்பே சிவம். உனக்குள்ளேயே கடவுள் இருக்கிறார்."*
கல்கி பகவான் என்று சொன்னவர் மருத்துவமனையில் இறக்கிறார். பிரேமானந்தா என்று சொன்னவர் சிறையில் இறக்கிறார். ஆனால் திருமூலர் எழுதிய திருமந்திரம் 3000 வருடம் கழித்தும் சாகாமல் இருக்கிறது.
ஏனென்றால் உண்மையான கடவுள் மனித உடலில் இருப்பதில்லை , மனிதனின் அன்பில் இருக்கிறார்.
அன்பு இல்லாத இடத்தில் எது இருந்தாலும் அது ஆசிரமம் அல்ல, அது வியாபாரம்.
*கல்கி பகவான் சுருக்கமான கதை :*
பெயர் விஜயகுமார் நாயுடு , வேலூர் நத்தம் கிராமத்தில் பிறந்தார். சென்னையில் படித்து LIC-ல் வேலை பார்த்தார்.
J.K. தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு ஆந்திராவில் ஸ்கூல் வாத்தியார் ஆனார். அங்கேயே ஜீவாஸ்ரமம் ஸ்கூல் ஆரம்பித்தார்.
1989-ல் திடீரென *"நான் தான் விஷ்ணுவின் 10-வது அவதாரம் கல்கி"* என்று சொல்லிக்கொண்டார். மனைவி புஜ்ஜம்மாவை *"அம்மா பகவான்"* என்றார்.
சென்னை நேமத்தில் ஆசிரமம், பிறகு திருப்பதி வரதய்யபாளையத்தில் பெரிய *ஏகம் / Golden City* ஆசிரமம் கட்டினார். தலையில் கை வைத்து *தீக்ஷா* கொடுத்தால் ஞானம் வரும் என்று சொல்லி உலகம் முழுவதும் பிரபலமானார்.
பணக்காரர்கள், சினிமா பிரபலங்கள் பக்தர்கள் ஆனார்கள். தரிசனத்திற்கு 25,000 - 50,000 வசூல், ஆயிரக்கணக்கான ஏக்கர் சொத்து என பெரிய சாம்ராஜ்யம் ஆனது. வருமானவரி ரெய்டு, சர்ச்சைகளும் வந்தது.
இறுதியில் செப்டம்பர் 29, 2026 அன்று தனது *77 வயதில் சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். *இது > கடவுள் இறக்கும் போது...
> ஆசிரமம் வியாபாரம் ஆன கதை!
*2.
> கல்கி பகவான் மருத்துவமனையில் இறந்தார்.
> பிரேமானந்தா சிறையில் இறந்தார்.
> ஆனால் திருமூலர் சொன்ன "அன்பே சிவம்" மட்டும் 3000 வருடமாக சாகவில்லை.
> ஏன்னென்றால் உண்மையான கடவுள் உடம்புல இல்ல, மனதில் அன்புல இருக்கிறார்.
*3.
> பயத்தை விற்பவன் சாமியார் இல்லை,
> அன்பை கொடுப்பவனே ஞானி.
--- *முற்றும்.*





கருத்துகள்