---*சென்னை:* தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி குடியிருப்பு வாசி சாஜு அலெக்ஸ் தொடர்ந்த வழக்கில், சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!
*வழக்கு எண்: WP 7504/2026* *தேதி: 05-10-2026* *நீதிபதிகள்: S.M. சுப்பிரமணியம், R. ராஜேஷ் விவேகானந்தன்* *என்ன நடந்தது?*
Scheme Road என்ற குடியிருப்பு சாலையில் நடைபாதை முழுவதும் கார் ஒர்க்ஷாப், சட்டவிரோத பார்க்கிங், கடை பொருட்கள் ஆக்கிரமிப்பு. பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் நடக்க முடியவில்லை. போலீஸ், மாநகராட்சியிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே சாஜு அலெக்ஸ் நீதிமன்றம் வந்தார்.
*நீதிமன்றம் அதிரடி கருத்து:*
> "ஒரு பக்கம் சொத்து வரி, தண்ணீர் வரி, மின் கட்டணம், கட்டிட அனுமதி கட்டணம் என அனைத்தையும் அவ்வப்போது உயர்த்துகிறீர்கள். மறுபக்கம் நல்ல தார் சாலை கூட போடுவதில்லை, நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றுவதில்லை, அடிப்படை வசதி கூட தருவதில்லை. இது மிக மோசமான நிலை (Grossly Inadequate)"
> "வரி வசூலிக்கும் வேகத்தில் 10% வேகத்தை கூட சேவை செய்வதில் காட்டுவதில்லை"
*நீதிமன்ற உத்தரவு:*
1. தேனாம்பேட்டை மண்டல அலுவலர் 4 வாரத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி அறிக்கை தர வேண்டும்
2. போக்குவரத்து துணை ஆணையர் சட்டவிரோத பார்க்கிங் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்
3. இது ஒரு தெரு பிரச்சனை அல்ல, சென்னை முழுவதும் பிரச்சனை என்பதால் தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளரை வழக்கில் சேர்த்துள்ளோம்
*பொதுமக்களுக்கு என்ன பலன்?*
இந்த தீர்ப்புக்கு பிறகு சென்னையில் உள்ள அனைத்து மண்டல அலுவலர்களும் தங்கள் பகுதியில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. உங்கள் தெருவிலும் இதே பிரச்சனை இருந்தால் இந்த தீர்ப்பை காட்டி புகார் கொடுக்கலாம்!
---



கருத்துகள்