---
*வைரத்தால் நெய்த கனவு!*
வான் வில்லையும் விஞ்சும் ஒளியிலே,
வைரம் நாலாயிரம் சேர்த்து நெய்த
தங்க நூல் கனவு ஒன்று -
கலிபோர்னியா மேடையில் மின்னியது!
பெயர் அவளுக்கு *கைலி ஜென்னர்*,
அமெரிக்காவின் புகழ் மங்கை!
அவள் தோளில் சுமந்தது வெறும்
ஆடை அல்ல - அது *வரலாறு!*
*நான்காயிரத்து நானூற்று பத்து வைரங்கள்,*
ஆயிரம் மணி நேர உழைப்பு,
பதினைந்து கலைஞர்களின் கைவண்ணம்,
மஞ்சள் வைரம் ஒன்றே *இருபத்தி இரண்டு மில்லியன்!*
மொத்த மதிப்பு *ஐம்பது மில்லியன் டாலர்கள்,*
நம் ஊர் மதிப்பில் *நானூற்று இருபது கோடி!*
உலகம் வியக்கும் உயர்ந்த ஆடை,
2000-ம் ஆண்டின் சாதனையை தாண்டியது!
துணி இல்லை, நூல் இல்லை,
தங்கமும் வைரமும் மட்டுமே!
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்,
Victoria's Secret மேடைக்கு வந்த அதிசயம்!
இது ஆடை அல்ல சார்,
*கலைஞனின் கனவு, பொற்கொல்லனின் தவம்!*



கருத்துகள்