*இடைத்தேர்தலை குறிவைத்து முதல்வர் விஜய் அதிரடி சுற்றுப்பயணம் - தனிப்பெரும்பான்மை இலக்கு!*
*சென்னை:* தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் சி.ஜோசப் விஜய், இடைத்தேர்தல் தொகுதிகளை குறிவைத்து நவம்பர் மாதம் மூன்று மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
*முழு பயண விவரம்:*
*நவம்பர் 2 - விராலிமலை, புதுக்கோட்டை:* திருச்சி வழியாக மாத்தூர், மண்டையூர், கீரனூர் வரை 45 கி.மீ சாலை வலம். ரூ.18.90 கோடி பேருந்து நிலைய திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.*தமிழக முதல்வர் விஜயின் புதுக்கோட்டை வருகை -:*
- *காலை 10.45 மணி:* திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக புறப்படுகிறார்
- *மதியம் 12.00 மணி:* புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் வந்தடைகிறார்
- *12.00 மணி:* புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத் திறப்பு விழாவில் பங்கேற்கிறார்
- *12.15 மணி:* புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக புறப்படுகிறார்
- *12.25 மணி:* புதுக்கோட்டை ஏ.ஆர். மைதானத்தில் நடைபெறும் விழா நடைபெறும் இடத்தைச் சென்றடைகிறார்
- *12.25 முதல் 1.00 மணி வரை:* அரசு விழாவில் பங்கேற்கிறார்
- *மதியம் 1.00 மணி:* புதுக்கோட்டை ஏ.ஆர். மைதானத்திலிருந்து சாலை மார்க்கமாக புறப்படுகிறார்
- *மதியம் 1.10 மணி:* புதுக்கோட்டை சுற்றுலா மாளிகையை (சர்க்யூட் ஹவுஸ்) சென்றடைகிறார்
- *1.10 முதல் 3.00 மணி வரை:* சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்
- *மாலை 3.00 மணி:* புதுக்கோட்டை சுற்றுலா மாளிகையிலிருந்து சாலை மார்க்கமாக புறப்படுகிறார்
- *மாலை 3.00 மணி:* திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தைச் சென்றடைகிறார்
- *மாலை 4.15 மணி:* திருச்சியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னைக்குப் புறப்படுகிறார்
- *மாலை 5.15 மணி:* சென்னை விமான நிலையத்தைச் சென்றடைகிறார்
- *மாலை 5.25 மணி:* சென்னை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாகப் புறப்படுகிறார்
- *மாலை 5.55 மணி:* நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தைச் சென்றடைகிறார்
*நவம்பர் 3 - பெருந்துறை, ஈரோடு:* கோவை வழியாக செங்கப்பள்ளி முதல் வாய்க்கால்மேடு வரை 30 கி.மீ சாலை வலம். தனியார் கல்லூரியில் அரசு விழா.
*நவம்பர் 14 - அம்பாசமுத்திரம், திருநெல்வேலி :* தூத்துக்குடி வழியாக சாலை வலம். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு பள்ளி விழாவில் பங்கேற்பு.
*அரசியல் பின்னணி என்ன?*
TVK தற்போது 110 இடங்களுடன் உள்ளது. தனிப்பெரும்பான்மைக்கு தேவை 118. காலியாக உள்ள 5 தொகுதிகளில் (விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், திருச்சிராப்பள்ளி கிழக்கு) வென்றால் 115 ஆக உயரும். பிறகு 3 இடம் மட்டுமே தேவை.
இதனால் தான் இந்த பயணம் அரசு விழா போர்வையில் இடைத்தேர்தல் பிரச்சாரமாக பார்க்கப்படுகிறது.
மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கனவே கூட்டணியில் இருந்து விலகி தனித்து நிற்கின்றன. விசிகவும் பாமக விவகாரத்தில் விலகும் நிலையில் உள்ளது. விசிக தனித்து நின்றால் கம்யூனிஸ்ட்கள் போல தனிமைப்படும் என்பதால், உள்ளே இருந்தே நெருக்கடி கொடுத்து வருகிறது.
பாமக வந்தாலும் வராவிட்டாலும், இந்த இடைத்தேர்தல் வெற்றிகள் TVK-வின் பலத்தை அதிகரித்து தனிப்பெரும்பான்மை இலக்கை நெருங்க உதவும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.




கருத்துகள்