குடியுரிமைத் திருத்தச் சட்ட விதிகள் 2024-ன் கீழ் குடியுரிமை சான்றிதழ்களை வழங்குவது மேற்கு வங்கத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது குடியுரிமைத் திருத்தச் சட்ட விதிகள், 2024-ன் கீழ் குடியுரிமை சான்றிதழ்களை வழங்கும் நடைமுறை மேற்கு வங்க மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்திலிருந்து முதல் தொகுப்பு விண்ணப்பங்களைப் பரிசீலித்தப் பின் அம்மாநிலத்திற்கான அதிகாரமளிக்கப்பட்ட குழு இன்று (29.05.2024) குடியுரிமை சான்றிதழ்களை வழங்கியது. இதேபோல், ஹரியானா மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களின் அதிகாரமளிக்கப்பட்ட குழுக்களும் குடியுரிமைத் திருத்தச் சட்ட விதிகள், 2024-ன் கீழ், அந்தந்த மாநிலங்களில் முதல் தொகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு இன்று குடியுரிமை வழங்கியுள்ளன. தில்லியில் முதல் தொகுப்பு சான்றிதழ்கள், 2024 மே 15 அன்று மத்திய உள்துறை செயலாளரால் வழங்கப்பட்டது. மத்திய அரசு குடியுரிமைத் திருத்தச் சட்ட விதிகள், 2024, மார்ச் 11 அன்று அறிவித்தது. விண்ணப்பங்கள், மாவட்ட அளவிலான குழு மூலம் பரிசீலிக்கப்பட்டு மாநில அளவிலான அதிகாரமளிக்கப்பட்ட குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டது. விண்ணப்பங்களின் செயல...
RNI:TNTAM/2013/50347