பன்னாட்டு நிறுவனங்களை மிரட்டி, 8,000 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரம் வாங்க வைத்ததாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவரான மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா கர்நாடகா மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் விஜயேந்திரா ஆகியோர் மீது, பெங்களூரு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர், ஜனாதிகார சங்கர்ஷ பரிஷத் எனும் அமைப்பின் இணைத் தலைவர் ஆதர்ஷ் ஐயர், வயது 50; இவர், ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியில் பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது : "தேர்தல் பத்திரம் வாங்கி பாரதிய ஜனதா கட்சிக்கு நன்கொடையளிக்க வேண்டுமென பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலரான நிர்வாக இயக்குனரை மத்திய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன், அமலாக்க துறையினர், பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் ஜெ. பி.நட்டா, டில்லியிலுள்ள பாரதிய ஜனதா கட்சியின், அலுவலக ஊழியர்கள், கர்நாடக மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின், முன்னாள் தலைவர் நளின்குமார் கட்டீல், ...
RNI:TNTAM/2013/50347