பல ஊர்களில் தங்க மோசடி செய்து கோவையில் சிக்கிய தம்பதியுடன் பல மக்கியப் பிரமுகர்களா..?

பல ஊர்களில் தங்க மோசடி செய்து கோவையில் சிக்கிய தம்பதியுடன் பல மக்கியப் பிரமுகர்களா?சிவகங்கை, கோவை, மதுரையில் கைவரிசை காட்டியவர் கயல்விழி சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில்  மாணிக்கம் (வயது27) மனைவி கயல்விழி வங்கியில்  வேலை பார்ப்பதாகச் சொல்லி மாணிக்கம் செய்யும்  மோசடியில்  கயல்விழியும் சேர்ந்து  வசதியான பெண்களைத் தேடி அவர்களிடம் 24 கேரட் தங்கக் கட்டிகளை பாதி விலைக்குத் தருவதாகச் சொல்லி. சிங்கப்பூரிலிருந்து குறைந்த விலையில் தங்கக் கட்டிகளை வாங்கி வந்ததாகக் கூறி  பாதி விலைக்கு தங்கம் என்றதுமே, பெண்கள் ஆவலாக வாங்கியுள்ளனர்.30 க்கும் மேற்பட்டோரிடம் தங்கத்தைத் தந்த பலனாக தம்பதிகள் 30 பேரிடம் ரூ.3 கோடியைச் சுறுட்டி விட்டனர்.

பணம் இல்லாதவர்கள், நகைகளாகவும் தரலாமென ஒரு ஆஃபர் தந்ததன்படி அடகுக்கடையில் வேலை பார்க்கும் அகில் என்பவரிடத்தில் அந்த நகையைக் கொண்டு போய் தர சொல்லி உள்ளனர்.. அப்பாவி பெண்களும், அகிலிடம் கிட்டத்தட்ட 500 பவுனுக்கு மேல் தந்துள்ளனர். அதற்கு உத்தரவாதமாக பத்திரமும் எழுதித் தந்துள்ள நிலையில் ஒருநாள், மாணிக்கம், கயல்விழி, அகில் 3 பேருமே தங்கம், பணத்துடன் ம தப்பிவிட்ட சம்பவம் 2016 ஆம் ஆண்டில்ல் நடந்து. பிறகு மதுரையிலும் இதே மோசடியைச் செய்து பலரை ஏமாற்றியுள்ளனர்.. அங்கிருந்தும் தப்பிவிடவே, இறுதியில் காரைக்குடி, மதுரை பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராகப் புகார் தர ஆரம்பித்ததையடுத்து, காரைக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர்  தலைமையில் தனிப்படை  அமைக்கப்பட்டு, கயல்விழி தம்பதியைத் தேடியதில். சில தினங்களுக்கு முன் கோவை ஒண்டிப்புதூரில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்குத் ரகசியமாகத் தகவல் கிடைத்ததன் பேரில் கோயமுத்தூரில் பதுங்கியிருந்த ஜோடியைக் கைது செய்தததில்  அகிலைக் காணவில்லைஅவரையும் காவல்துறை  தேடி வருகிறார்கள். பிடிபட்ட  மாணிக்கம், கயல்விழி இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த மோசடி சம்பவத்தில் பல முக்கியப் பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரிய வந்ததன் பேரில்  விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா