பிரதமர் அலுவலகம் முன்னாள் பிரதமர் திரு மொரார்ஜி தேசாயை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார் முன்னாள் பிரதமர் திரு மொரார்ஜி தேசாயை பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார். “நமது முன்னாள் பிரதமர் திரு மொரார்ஜி தேசாயை நினைவுகூர்கிறேன். அவரது நீண்டகால மக்கள் சேவையில் இந்தியாவின் வளர்ச்சிக்காக அவர் அயராது பணியாற்றினார். அவரது குறை கூற இயலாத நேர்மைக்கும், ஜனநாயகத்திற்கான உறுதியான அர்ப்பணிப்பிற்கும் அவர் பெயர் பெற்றவர்.” இவ்வாறு பிரதமர் தமது சுட்டுரைச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
RNI:TNTAM/2013/50347