தொழில் தொடங்குவதற்குரிய சூழல் ஆகியவற்றுக்கு உதவுவதில் டாக்டர் சுபாஷ் சர்கார் சென்னை ஐஐடி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம்
இந்திய புத்தாக்கம், தொழில் தொடங்குவதற்குரிய சூழல் ஆகியவற்றுக்கு உதவுவதில் உயர்கல்வி நிறுவனங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் – டாக்டர் சுபாஷ் சர்கார் சென்னை ஐஐடி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் 2021 ஆம் ஆண்டுக்கான அடல் புதிய கண்டுபிடிப்பு சாதனைகள் (ஏஆர்ஐஐஏ) குறித்த நிறுவனங்களின் தரவரிசையை மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்கார் இன்று மெய்நிகர் வடிவில் அறிவித்தார். அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் தலைவர் பேராசிரியர் அனில் சகஸ்ர புதே, தொழில்நுட்பக் கல்வி கூடுதல் செயலர் திரு.ராகேஷ் ரஞ்சன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த தரவரிசை இந்திய நிறுவனங்களின் மனப்போக்கை ஒருங்கிணைத்து உயர்தரமான ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் சூழலை கட்டமைக்க உதவும் என்று நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் சர்கார் கூறினார். 2025 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா எட்டுவதற்கு தரமான புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சியை மேற்கொள்வது அவசியம் என்று வலியுறுத்தினார். தற்சார்பு இந்தியா என்னும் இலக்கை எட்டுவதற்கு இது உண்மையிலேயே உதவும் என்று அவர் க