வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு கேட்டு நாளை போராட்டம் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு மடல் என் உயிரினும் மேலான பாட்டாளிச் சொந்தங்களே! தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன் மாபெரும் பெருந்திரள் போராட்டம் நாளை காலை 11.00 மணிக்கு நடைபெறவிருக்கிறது. போராட்டத்திற்கு இன்னும் 24 மணி நேரம் மட்டுமே இருக்கும் நிலையில் போராட்டக் களத்திற்கு புலியென புறப்படுவதற்கான ஆயத்தப்பணிகளில் சிங்கக் குட்டிகளாகிய நீங்கள் தீவிரமாக ஈடுபட்டிருப்பீர்கள். சமூகநீதி போராட்டம் என்பது முடிவில்லாதது. பல்வேறு தரப்பினருக்காக, பல்வேறு கோரிக்கைகளுக்காக சமூக நீதி போராட்டம் நீண்டு கொண்டே இருக்கும். கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20 சதம் இடஒதுக்கீடு வழங்கக் கோரும் முதற்கட்ட போராட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன் நாளை தொடங்குகிறது. அடுத்தக்கட்டமாக கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகம் முன் மக்கள்திரள் போராட்டம், அதைத் தொடர்ந்து ஊர
RNI:TNTAM/2013/50347