முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சம்வத்சாரியை மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவில் பிரதமர் தெரிவித்ததாவது: “விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு நல்வாழ்த்துகள். இறைவன் விநாயகரின் ஆசிகள் எப்போதும் நமக்கு கிட்டட்டும்.”சம்வத்சாரியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து சம்வத்சாரியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியதாவது: “மிச்சாமி துக்கடம்! சம்வத்சாரி, மன்னிப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. எவரையும் புண்படுத்தாமல் இருப்போம். அன்பு, நல்லிணக்கத்தின் உணர்வு எங்கும் தழைக்கட்டும்.”

சீறும் சிறப்புமாக நடைபெறவுள்ள அருள்மிகு தேனாட்சியம்மன் ஆலயத்தின் குடமுழுக்கு விழா

சீறும் சிறப்புமாக நடைபெறவுள்ள அருள்மிகு தேனாட்சியம்மன் ஆலயத்தின் குடமுழுக்கு விழா  குன்றக்குடி திருவண்ணாமலை  ஆதீனத்தின் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான ஆலயம் 'கோவிலைத் தழுவிய குடிகள்: குடிகளைத் தழுவிய கோவில்’, ‘கடவுளைப் போற்று மனிதனை நினை’ என்பவை தான் அருள்நெறி ஆன்மிகத்தின் அடித்தளத்தில் நின்று கொண்டு மனிதத்தை மேம்படுத்தும் பணியில் குன்றக்குடி ஆதீனங்களில் பலரும் ம் ஈடுபட்டார்கள். மனிதத்தை மறந்து கடவுளைப் போற்றுதல் ஆன்மிகம் ஆகாது! கடவுளை மறந்து மனிதத்தைச் சிந்திப்பது வாழ்வியல் ஆகாது: கடவுளைப் போற்ற வேண்டும்; மனிதனை நினைக்க வேண்டும்.  தவத்திரு அடிகளார்" என்பது துறவியைக் குறிக்கும் அவர்கள் ஆண்மீக ஆளுமை 300 ஆண்டு காலம் நடத்திய ஆலயங்களில் சிறப்பு வாய்ந்த அம்மன் ஆலயம்.   ஸ்ரீமான் ஹிரன்யகிரப இரவிகுல இராஜ முத்து விஜய இரகுநாத இராஜ இரகுநாத தேவ கிழவன் சேதுபதி. (1671–1710)  இராமநாதபுரம் சேதுபதி நாட்டின் அரசர் 1673 முதல் 1708 வரை ஆட்சி செய்தார். இராமநாதபுரம் சிற்றரசை வளர்த்து ஒரு சக்திவாய்ந்த இராஜ்யமாக மாற்றியவர் இவருக்கு 45 மனைவிகள் குழந்தைகள் இல்லை   கள்ளர் குலத்துப் பெண் கதலி  என்பவ

முக்கொம்பு மேலணையில் 1.29 லட்சம் கனஅடி தண்ணீா் திறப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முக்கொம்பு மேலணையில் 1.29 லட்சம் கனஅடி தண்ணீா் திறப்பு கொள்ளிடம் மற்றும் காவிரிக் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க  திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் வேண்டுகோள். மேட்டூா் அணையின் நீா் மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், உபரி நீா் திறந்துவிடப்படுகிறது. அதுபோல், மாயனூா் கதவணையிலிருந்தும் தண்ணீா் முழுவதுமாகத் திறக்கப்படுவதால் முக்கொம்புக்கு திங்கள்கிழமை மாலை வரை நீா்வரத்து அதிகரித்தது. தொடா்ந்து, காவிரியில் 37 ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் 92 ஆயிரம் கன அடியும் தண்ணீா் திறக்ப்பட்டது. இந்த நீா்வரத்து 1.50 லட்சம் கன அடிக்கு மேல் அதிகரிக்குமெனவும், அதனடிப்படையில் தண்ணீா் திறப்பது அதிகரிக்கப்படும்  சூழல் உள்ளதென பொதுப்பணித்துறையினா் தகவல். திங்கள்கிழமை மாலை நேரில் சென்று கொள்ளிடம், காவிரியில் தண்ணீா் திறக்கப்படுவதை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். தண்ணீா் வரத்தை 24 மணிநேரமும் கண்காணித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். முக்கொம்புக்கு வரும் சுற்றுலாப் பயணிகளோ, முக்கொம்பு பூங்காவுக்கு வரும் பொதுமக்களோ மேலணை பா