கொரானா பாதிப்பால் சென்னையிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அரசிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது . பேரிடர் மேலாண்மை சட்ட பிரிவை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. இந்த சட்டம் மூலம் பள்ளிகள், தனியார் நிறுவனங்களை அரசு கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரலாம். இந்த இடங்களில் மக்களைத் தங்க வைக்க அனுமதிக்கலாம். அவசர நிலை காலத்தில் இந்த இடங்களை அரசு பயன்படுத்த இச் சட்டம் வழி செய்கிறது. தற்போது அதே சட்டப்படி சென்னையிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. கொரானா தடுப்புப் பணிக்காக இந்தப் பள்ளிகள், அதன் வளாகங்கள் தேவைபடுகிறது என்று சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்ததுள்ளது.
RNI:TNTAM/2013/50347