முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆந்திர கடற்கரைக்கு அப்பால் தமிழக மீனவர்கள் 9 பேர் மீட்பு

ஆந்திர கடற்கரைக்கு அப்பால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்கள் இந்திய கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டனர், வெற்றிகரமான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை மூலம் இந்திய கடலோர காவல் படையின் கப்பல் பிரியதர்ஷினி, கடல் மற்றும் வான்வழி ஒருங்கிணைப்புடன் 2022 மார்ச் 29 அன்று தமிழகத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை மீட்டுள்ளது. 2022 மார்ச் 13 அன்று சென்னையில் இருந்து மீன்பிடி படகில் மீன்பிடிக்க சென்றபோது மார்ச் 25 அன்று படகில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் கடலில் 95 நாட்டிகள் மைல் தூரம் படகு சென்று விட்டது. இதையடுத்து மீனவர்களின் உடனடி உதவிக்காக கடலோர காவல் படையின் கப்பல் பிரியதர்ஷினி அந்தப் பகுதிக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டது. இந்தக் கப்பலின் வீரர்கள் படகுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை அளித்து படகை சீர்செய்தனர். இதனால் படகுடன் 9 மீனவர்களும் மீட்கப்பட்டனர் இந்த மீட்புப் பணியின்போது கடலோர காவல் படை அதிகாரிகள் படகின் உரிமையாளர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்தனர். கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது தனியாக செல்லாமல் குழுவாக படகுகளில் பயணம் செய்வது கடலில் பாதுகாப்புக்

திருச்சிராப்பள்ளி துணை ஆட்சியர் காரில் சிக்கிய ரூ. 40 லட்சம் லஞ்ச பணம் தொடர் விசாரணை.

திருச்சிராப்பள்ளி துணை ஆட்சியர் காரில் சிக்கிய ரூ. 40 லட்சம் லஞ்ச பணம் தொடர் விசாரணை. திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியரின் காரில் கட்டுக்கட்டாக ரூபாய்.40 லட்சம் சிக்கியது. சென்னைக்குச் சென்ற வழியில் விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் காரை மறித்துச் சோதனை நடத்தியதில்  பணம் சிக்கிய நிலையில் பறிமுதல் செய்யப்பட்டது.  திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் துணை ஆட்சியராகப் பணியாற்றுபவர் சரவணகுமார்( வயது 52 ). இவர் தனது காரில் சென்னை நோக்கிப் பயணித்தார். மணி காரை ஓட்டினார். அவரது காரில் கட்டுக்கட்டாக பணம் செல்வதாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இலஞ்ச ஒழிப்புத் துறைக்கு ரகசிய தகவல் வந்தது விழுப்புரம் இலஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான காவலர்கள் விழுப்புரம் மாவட்ட எல்லை கெடிலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துணை கலெக்டர் சரவணகுமார் வந்த காரை மறித்துச் சோதனையிட்டனர். காரில் அவரது  இருக்கையினருகில் இருந்த கட்டைப் பையில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக ரூ.40 லட்சமிருந்தது. தொ

நாடு தழுவிய டிஜிட்டல் ஓய்வூதிய அதாலத்

நாடு தழுவிய டிஜிட்டல் ஓய்வூதிய அதாலத் DoT & BSNL ஓய்வூதியதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நாடு தழுவிய ஓய்வூதிய டிஜிட்டல் அதாலத் 23.03.2022 அன்று 1100 மணி முதல் 1300 மணி வரை சென்னை, எத்திராஜ் சாலை கட்டிடம், TNT வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது நாடு முழுவதும் நடத்தப்பட்ட மெய்நிகர் கூட்டத்தை, மாண்புமிகு செயலாளர் (தொலைத்தொடர்பு) மற்றும் தலைவர், டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன், புது தில்லி ஸ்ரீ கே.ராஜாராமன் தொடங்கி வைத்தார். ஓய்வூதியர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக "ஓய்வூதியம் பெறுவோரின் மகிழ்ச்சி" என்ற முழக்கத்துடன், திரு. திலீப் பாத்யே  உறுப்பினர் (நிதி) முன்னிலையில், தொடர்பு கணக்குகளின் கட்டுப்பாட்டாளர் ஜெனரலால் அதாலத் ஏற்பாடு செய்யப்பட்டது. செயலாளர் (தொலைத்தொடர்பு) தனது தொடக்க உரையில், ஓய்வூதியம் பெறுவோர் எதிர்கொள்ளும் இன்னல்களைக் குறைக்க முன்னுரிமை அடிப்படையில் மற்றும் நெகிழ்வான முறையில் குறைகளை தீர்க்க வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தினார். DoT இன் 28 களப் பிரிவுகளில் ஒன்றான சென்னை, தகவல் தொடர்பு கணக்குகளின் முதன்மைக் கட்டுப்பாட்டாளர் அலுவலகம், ஓய்வூதியம் பெற

யூபிஎஸ்சி தேர்வர்களுக்கு வயது வரம்பு தளர்வு

யூபிஎஸ்சி தேர்வர்களுக்கு வயது தளர்வு மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் கீழ்காணும் தகவல்களை வழங்கினார். கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக  விண்ணப்பதாரர்களுக்கு வயது தளர்வு மற்றும் கூடுதல் முயற்சிகளுக்கான வாய்ப்பு வழங்குவது தொடர்பாக குடிமைத் தேர்வு விண்ணப்பதாரர்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. ரிட் மனுக்கள் மற்றும் மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கும் இது கொண்டு செல்லப்பட்டது. மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில் இந்த விவகாரம் பரிசீலிக்கப்பட்டு, முயற்சிகளின் எண்ணிக்கை மற்றும் வயது வரம்பு தொடர்பான தற்போதைய விதிகளை மாற்றுவது சாத்தியமாகவில்லை. இது தொடர்பான மற்றொரு விவகாரத்தில் டாக்டர் ., ஜிதேந்திர சிங் கூறியதாவது: அப்ஜெக்டிவ் வகைத் தேர்வைப் பொறுத்தவரை தேர்வின் முழு செயல்முறைக்குப்

வன்னியர் உள் இட ஒதுக்கீடை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை வழங்கிய உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

வன்னியர் சமூகத்தினருக்கு, 10.5 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது- உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீடை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை வழங்கிய உத்தரவை உறுதி செய்தது. கல்வியிலும், வேலை வாய்ப்பில்லும் வன்னியர் ஜாதியினருக்கு, 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்றியது.      அவசரஅவசரமாக முன்னால் ஆட்சி செய்த கே.பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செய்த அலங்கோலம்.. அதுவும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு செய்த அவசர உத்தரவு.. இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்ததாகச் சொல்லி விளம்பரங்கள் செய்து தேர்தலில் வடக்கு பகுதியில் தமிழ்நாட்டில் சாதிக்கலாமென்று அதிமுகவும்   அதன் தோழமை கட்சி பாமகவும் நினைத்தன. ஆனால் அதிமுகவின் ஒரு பிரிவினரே மதுரை சார்ந்த தென் மாவட்டங்களிலும் கோயமுத்தூர் சார்ந்த மேற்கு  மாவட்டங்களிலும் இந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து அதிமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் குழி தோண்டினர். அப்படி இப்படிப் போய் கடைசியில் உள் இட ஒதுக்கீடு செல்லாது என்ற சென்னை  உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியானது என்று இப்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளத

திரைப்படத் தணிக்கை வாரிய மண்டல அதிகாரியாக சஞ்சய் கோஷ் நியமனம்

திரைப்படத் தணிக்கை வாரிய மண்டல அதிகாரியாக சஞ்சய் கோஷ் நியமனம் மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் சென்னை மண்டல அதிகாரியாக திரு சஞ்சய் கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மத்திய அரசின் வெளியீட்டுப் பிரிவு துணை இயக்குநராக பணியாற்றி வரும் திரு சஞ்சய் கோஷ், ஏற்கனவே வகித்து வரும் பொறுப்புடன், திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் மண்டல அதிகாரியாகவும், கூடுதல் பொறுப்பு வகிப்பார் என மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை குறித்து மத்திய நிதியமைச்சர் கூறியதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது.

பெட்ரோல் டீசல் விலை குறித்து மத்திய நிதியமைச்சர் கூறியதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறியதாக ஊடகத்தில் செய்தி பரவி உள்ளது. இந்த செய்தி முற்றிலும் தவறானது, உண்மைக்குப் புறம்பானது. அடிப்படையற்றது என @realitycheckind கூறியுள்ளது.

நிர்வாகப்பணியின் பயன்கள் ஏழை மக்களுக்கு நேரடியாக சென்று சேர்வதை உறுதி செய்வது குடிமைப் பணியாளர்களின் பொறுப்பு – குடியரசு துணைத் தலைவர்

நிர்வாகப்பணியின் பயன்கள் ஏழை மக்களுக்கு நேரடியாக சென்று சேர்வதை உறுதி செய்வது குடிமைப் பணியாளர்களின் பொறுப்பு – குடியரசு துணைத் தலைவர் நிர்வாகப்பணியின் பயன்கள் ஏழை  மற்றும் அடித்தட்டு மக்களுக்கு நேரடியாக சென்று சேர்வதை உறுதி செய்வது  குடிமைப் பணியாளர்களின் பொறுப்பு என்று குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு கூறியுள்ளார். சிறந்த முறையில் பயனாளிகளுக்கான திட்டங்களை அமல்படுத்துவதை குடிமைப் பணியாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். புதுதில்லியில் உள்ள இந்திய பொது நிர்வாகக் கல்வி நிலையத்தின் 68-வது ஆண்டு தினத்தில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் சர்வதேச நினைவு முதலாவது சொற்பொழிவு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், குடிமக்களை சார்ந்த நிர்வாகம் சிறந்த பொதுச் சேவையை அளிக்க முடியும் என்று தெரிவித்தார்.  பொது நிர்வாகம் வெளிப்படைத் தன்மை, நேர்மை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருப்பதன் அவசியம் குறித்தும், அது குடிமக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையிலும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.  இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான பாரத ரத்னா டாக்டர் ராஜேந்திர பிரசாத், செழுமையான,

வாழ்க்கை முறையில் ஆயுஷ் ஒருங்கிணைப்பு

வாழ்க்கை முறையில் ஆயுஷ் ஒருங்கிணைப்பு மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது: ஆயுஷ் அடிப்படையிலான உணவு மற்றும் வாழ்க்கை முறையை ஆயுஷ் அமைச்சகம் ஊக்குவித்து வருகிறது மற்றும் ஊட்டச்சத்து மிக்க இந்தியா என்ற இலக்கை அடைய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுகிறது. குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களிடம் ஊட்டச்சத்தை மேம்படுத்த, ‘ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆயுஷ் உணவு ஆலோசனை ’ என்ற வழிகாட்டு நெறிமுறைகளை ஆயுஷ் அமைச்சகம் தொடங்கியுள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், நிர்ணயிக்கப்பட்ட ஊட்டசத்து தரநிலைகளை மாற்றியமைப்பதில் உணவு மற்றும் பொது விநியோகத்துறைக்கு தேவையான ஆலோசனைகளை ஆயுஷ் அமைச்சகம் வழங்குகிறது. ஆயுஷ் மருந்துகளை ஊக்குவிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மூலம் தேசிய ஆயுஷ் திட்டத்தை ஆயுஷ் அமைச்சகம் அமல்படுத்துகிறது. தேசிய ஆயுஷ் திட்டத்தின் கீழ் ஆயுஷ் சுகாதார நல மையங்களை செயல்படுத்தி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு நிதியுதவிய

தமிழ்நாட்டில் பாதிப்படைந்துள்ள நிலத்தின் அளவு. மண் அரிப்பு குறித்த ஆய்வு

மண் அரிப்பு குறித்த ஆய்வு: தமிழ்நாட்டில் பாதிப்படைந்துள்ள நிலத்தின் அளவு மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கீழ்காணும் தகவல்களை வழங்கினார். மண் அரிப்பு மற்றும் நிலச் சீரழிவின் அளவு மற்றும் தன்மையை நாடு முழுவதும் கண்டறிவதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிவியல் ஆய்வு நடத்தப்படுவதில்லை என்ற போதிலும், வெவ்வேறு முகமைகள்/நிறுவனங்களால் அவ்வப்போது வெவ்வேறு வழிமுறைகள்/அளவுகோல்களைப் பயன்படுத்தி மதிப்பீடு செய்யப்படுகிறது. தேசிய வேளாண் அறிவியல் அகாடமியின் (2010 படி, நாட்டின் சாகுபடி நிலத்தில் மண் அரிப்பின் அளவு (10 டன்னுக்கு மேல் மண் இழப்பு/ஹெக்டர்/வருடத்திற்கு) 92.4 மில்லியன் ஹெக்டேராக இருந்தது. ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனாவின் துணைத் திட்டமான சிக்கலுடைய மண்ணை மீட்டெடுப்பதற்கான திட்டத்தின் கீழ் காரத்தன்மை, உப்புத்தன்மை மற்றும் அமிலத்தன்மையால் பாதிக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுப்பதற்கான உதவிகளை அரசு வழங்குகிறது. 2016-17 முதல் 2020-21 வரை ரூ. 58.76 கோடி மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டு 0.24 லட்சம் ஹெக்டேர் பர

விவசாயத்தில் ரசாயனமற்ற உரங்களின் பயன்பாடு

விவசாயத்தில் ரசாயனமற்ற உரங்களின் பயன்பாடு மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் திரு பகவந்த் குபா கீழ்காணும் தகவல்களை வழங்கினார். உள்ளீட்டு கணக்கெடுப்பு 2016-17-ன் தரவுகளின்படி, அனைத்து பயிர்களின் பரப்பளவு 192439588 ஹெக்டேர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 147283856 ஹெக்டேர் பரப்பளவு அதாவது 76.53 சதவீதம் ஒன்றுக்கு மேற்பட்ட ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டது ஆகும். ரசாயன உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பயிர்களின் நுகர்வு பற்றிய தரவு எதுவும் பராமரிக்கப்படவில்லை. இயற்கை மற்றும் உயிரி உரங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா மற்றும் வடகிழக்கு பிராந்தியத்திற்கான இயற்கை மதிப்பு சங்கிலி மேம்பாட்டு இயக்கம் ஆகிய திட்டங்களை 2015-16-ம் ஆண்டு முதல் அரசு செயல்படுத்தி வருகிறது. உயிரி மற்றும் இயற்கை உரங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இயற்கை வேளாண்மைத் திட்டங்களின் கீழ் நிதி உதவி வழங்கப்படுகிறது. பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா கீழ் ஹெக்டேருக்கு ரூ 31,000 மற்றும் வடகிழக்கு பிராந்தியத்திற்கான