திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டம், மாராடி கிராமத்தில் அஸ்வின் மனைவி சத்யா (வயது 35). என்பவருக்கு மாராடியில் அரசின் இலவச வீட்டு மனைப் பட்டா ஒதுக்கப்பட்டது. சத்யாவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட 138 பயனாளிகளுக்கும் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கும் நிகழ்வு 22.ஆகஸ்ட்.2023 ஆம் தேதியன்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. அன்றைய தினம் நடந்த விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இலவச வீட்டு மனைப் பட்டாவின் பிரதியைப் பெற முடியாததால் சத்யா மறுநாள் 23 ஆம் தேதியன்று கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் சுமதியிடம் தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனைப் பட்டாவின் பிரதியைத் தருமாறு கேட்டதற்கு கிராம நிர்வாக அலுவலர் சுமதி (வயது 34) தனக்கு ரூபாய் பத்தாயிரம் பணம் இலஞ்சமாகத் தந்தால் மட்டுமே உங்களுக்கு வீட்டுமனைப் பட்டா பிரதி வழங்க முடியும் எனக் கூறிய தகவலை சத்யா, அவரது கணவர் அஸ்வினிடம் சத்யா தெரியப்படுத்தியபோது அவர், யாருக்கும் பணம் தராமல் பட்டா பெறுமாறு கூறியதன் காரணமாக சத்தியா மீண்டும் 29.ஆம் தேதியன்று மாராடி கிராம நிர்வாக அலுவலர் சுமதியை அலுவலகத்தில
RNI:TNTAM/2013/50347