முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இலஞ்ச வழக்கில் நிலஅளவைத் துணை ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

திருச்சிராப்பள்ளி இலஞ்சம் பெற்ற வழக்கில் நிலஅளவைத் துணை ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை.  இலஞ்சம் வாங்கிய வழக்கில் நில அளவைத் துணை ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சிராப்பள்ளி ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இது குறித்து விஜிலென்ஸ் தரப்பில் தரும் தகவலானது: திருச்சிராப்பள்ளி  கொட்டப்பட்டு இந்திராநகர் வெ. சக்கரவா்த்தி ( வயது 82). இவா், தனது வீட்டு மனைகளுக்கு தனிப் பட்டா வழங்கக் கோரி திருச்சிராப்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தது தொடா்பாக  2007ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் 16 ஆம் தேதி அப்போது பணியில் இருந்த  நிலஅளவை துணை ஆய்வாளர் ஏ. கணேசமூா்த்தி (தற்போது வயது 62) என்பவரை சந்தித்துள்ளாா். அவா், தனி பட்டா வழங்குவதற்கு ரூ.1,000 இலஞ்சமாகத் தரும்படி  கேட்டுள்ளாா். அதைக் கொடுக்க விரும்பாத சக்கரவா்த்தி திருச்சிராப்பள்ளி ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புப்  பிரிவில் புகாரளித்ததன் பேரில் வழக்குப் பதிவு செய்த திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவினர், வட்டாட்சியா் அலுவலகத்தில் இலஞ்சம் பெற்ற சக்கரவா்த்தியிடமிருந்து ரூபாய் . 1,000 த்தை

மேட்டுப்பாளையம் - கோயமுத்தூர் ரயில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படும்

மேட்டுப்பாளையம் - கோயமுத்தூர் ரயில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படும் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகனின் கோரிக்கையை ஏற்று ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகனின் கோரிக்கைக்கு இணங்க, மேட்டுப்பாளையம் – கோவை ரயில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படும் என்றும், சென்னை எழும்பூர் -  திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும்  ரயில்வேத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன், ரயில்வே துறை அமைச்சகத்திற்கு எழுதியிருந்த கடிதத்தில், தமது தமிழ்நாட்டுப் பயணத்தின் போது ஏராளமான பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், மேட்டுப்பாளையம் – கோவை ரயிலை ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண்டும் என்று தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக குறிப்பிட்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமைகளில் ரயிலை இயக்கினால், அந்த மார்க்கத்தில் பயணிக்கும் நூற்றுக்கணக்கான பயணிகள் பயனடைவார்கள் என்றும் இது குறித்து உரிய நடவடிக்கை

புவனேஸ்வரில் சுமங்கலம் பஞ்சமகாபூத மாநாட்டு வரிசையில் வாயு குறித்த மாநாடு

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சுமங்கலம் பஞ்சமகாபூத மாநாட்டு வரிசையில் வாயு குறித்த மாநாடு புவனேஸ்வரில் நடைபெறுகிறது 75-வது ஆண்டு விடுதலைப் பெருவிழா கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக தூய்மையான காற்றின் அவசியம் குறித்த மாநாடு, ‘வாயு – முக்கிய ஆதாரமான உயிர் சக்தி” என்ற தலைப்பில் புவனேஸ்வரில் டிசம்பர் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. சிக்ஷா ஓ அனுசந்தன் பல்கலைக் கழகம் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. காற்றின் தரம் குறித்த பிரச்சினைகள் தொடர்பாக அறிவியல் ரீதியான விவாதங்களை நோக்கமாகக் கொண்டும், பருவநிலை மாற்றம், மாசுக் கட்டுப்பாடு போன்றவை தொடர்பான புரிதல்களை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒடிசா மாநில ஆளுநர் திரு.கணேஷி லால், மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் திரு.பூபேந்தர் யாதவ், மத்திய கல்வி அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான், மத்திய சுற்றுச்சூழல்துறை இணையமைச்சர் திரு.அஸ்வினி குமார் சௌபே உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களை அடிப்படையாகக் கொண்டே இயற்கையின் அனைத்து அம்

பேறுகால இறப்பு விகிதம் கடந்த 8 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

பேறுகால இறப்பு விகிதம் கடந்த 8 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.மன்சுக் மாண்டவியா பேறுகாலத்தின்போது ஏற்படும் தாய், சேய் இறப்பு விகிதம் நாட்டில் குறைந்திருப்பது புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்த சாதனைக்காக பாராட்டுத் தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.மன்சுக் மாண்ட்வியா, இதுதொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:   “2014-16-ஆம் ஆண்டுகளில் 1 லட்சம் குழந்தை பிறப்புக்கு 130 என்ற அளவில் இருந்த பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் 2018-20 காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவாக 97 என குறைந்துள்ளது. பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு சுகாதார முன்முயற்சிகளை மேற்கொண்டு தரமான பேறுகால சிகிச்சை மற்றும் பராமரிப்பை உறுதி செய்திருப்பது, பேறுகால இறப்பை பெருமளவு குறைக்க உதவியுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பேறுகால இறப்பு தொடர்பாக இந்திய  தலைமைப் பதிவாளர் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில், இந்தியாவின் பேறுகால இறப்பு விகிதம் குறைந்து இதில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள

புகழோடு மறைந்த பிடி

களிறு என்பது ஆண் யானை, பிடி என்றால் பெண் யானை  'அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த  தொல்லை போம் போகாத் துயரம் போம் நல்ல  குணமதிகமாம் அருணைக் கோபுரத்தில் மேவும்  கணபதியைக் கைதொழுதற் கால்'......  முதல்முதலாக மனக்குள விநாயகர் ஆலயம்  புதுச்சேரிக்கு கேரளாவிலிருந்து 1996 ஆம் ஆண்டு நன்கொடையாக யானை இலட்சுமி வந்தது.  அப்போதைய முதல்வர் ஜானகிராமன்," இலட்சுமி" எனப் பெயர் வைத்தார்.   மனக்குள விநாயகர் ஆலயத்தில் அதன் பங்கு சிறப்பானது . புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி, ஈஸ்வரன் கோயிலிலுள்ள தனது தங்கும் கொட்டடியிலிருந்து காலை 6 மணிக்கு தினமும்  நடைப்பயிற்சி  வருவது வழக்கம். போல இன்றும் அதிகாலையில் யானை லட்சுமி தனது பாகனுடன் வந்துள்ளது. அப்போது மிஷன் வீதி கலவை கல்லூரியருகே காலை  6:30 மணிக்கு திடீரென சாலையில் சுருண்டு விழுந்து பின் இறந்தது. அப்படி மயங்கி விழுந்தபோது அதனருகில் நின்ற காரின் மீது விழுந்து சாலையில் சாய்ந்துள்ளது. இதில் காரும் சேதமானது. புதுச்சேரிக்கு 1998 ஆம் ஆண்டு ஐந்து வயதில் அழைத்துவரப்பட்ட யானை லட்சுமிக்கு தற்போது 33 வயதாகியுள்ளது. இறந்த

கோயமுத்தூரில் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய பொறியாளர் உள்ளிட்ட இருவர் கைது

கோயமுத்தூரில் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய பொறியாளர் கைது  கோயமுத்தூர்  போத்தனூர் பாரத் நகரில் இருக்கும்  கார்த்திகேயன். மலுமிச்சம்பட்டி எம்பிஜி நகரில் தன்னுடைய வீட்டிற்கு தற்காலிக மின் இணைப்புக் கேட்டு மலுமிச்சம்பட்டி மின் வாரிய அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார்.    கார்த்திகேயன் வீடுள்ள இடத்தின் அருகில்  மின்கம்பம் அமைக்க வேண்டுமென மின்சார வாரிய எஸ்டிமேட் அலுவலர் தெரிவித்தார். இதற்கு மதிப்பீட்டுக் கட்டணமாக ரூபாய்.37,910 ஐ ஆன்லைன் மூலமாகச் செலுத்தினார். அதைத் தொடர்ந்து, இளநிலை மின்சார வாரியத்தின் பொறியாளர் சுப்பிரமணியன் ‘‘மின் இணைப்பு வழங்கத் தேவையான பணிகள் முடிந்து விட்டது.  ஆகவே எனக்கு ரூபாய் .7 ஆயிரம் இலஞ்சமாகத் தர வேண்டும்’’ எனக் கேட்டுள்ளார்.  பேரம் பேசி கார்த்திகேயன் ரூபாய் .5 ஆயிரம் இலஞ்சம் தருவதாக ஒப்புக்கொண்டு கூறிவிட்டு இதுபற்றிய விபரம்  கோயமுத்தூர்  இலஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார். இந்த நிலையில் நேற்று கார்த்திகேயன், மலுமிச்சம்பட்டி மின்சார வாரிய அலுவலகம் சென்றார். அங்கிருந்த மின் வாரிய போர்மேன் சங்கர்கணேஷ், மின்சாரவாரிய இளநிலை  பொறியாளர்

பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு குறித்து அறிவிக்கை

தமிழ் நாட்டில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் ஆங்கில வழி மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு  வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வுகளை நடத்த வேண்டுமென்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.. உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள், மற்றும் ஆங்கில வழி மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் 15 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரை நடக்கும். 6,8,10 மற்றும் 12 ஆம்  வகுப்புகளுக்கு முற்பகலிலும், 7,9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வுகள் நடக்கும். இந்தத் தேர்வுகளுக்கான அனைத்து மாவட்டங்களிலும் வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப் பள்ளிகள் மூலம் வழங்கப்படும்.

ஊழல் வழக்குகள் - விரைந்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஊழல் வழக்குகள் - விரைந்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. 1983 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை விசாரணை நிலுவையிலுள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு. ஊழல் வழக்குகள் காரணமாக வழங்கப்படாத ஓய்வு காலப் பலன்களை வழங்கக் கோரிய வழக்கில் உத்தரவு. ஊழல் வழக்குகள் பல ஆண்டுகள் நிலுவையில் இருந்தால் குற்றவாளிகள் தப்பித்து விடுவார்கள் - என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை.அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அண்ணாதுரை என்பவர் தாக்கல் செய்த வழக்கைப் பொறுத்தவரை, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர், ஓய்வுகாலப் பலன்களைப் பெற்று விட்டதால், மனுதாரருக்கும் சில பலன்களை வழங்கி விட்டு, குற்ற வழக்கு முடிவுக்கு வந்த பின் மீதப் பலன்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதேபோல,  நள்ளிரவில் இரு பெண்கள் வசிக்கும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக நீடாமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரனை பணி நீக்கம் செய்த உத்தரவை உறுதி செய்

குருஷேத்ராவில் இன்று நடைபெற்ற சர்வதேச கீதை கருத்தரங்கில் குடியரசுத்தலைவர்

ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் இன்று நடைபெற்ற சர்வதேச கீதை கருத்தரங்கில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு,  பங்கேற்றார். மேலும், ஹரியானா முதலமைச்சரின் சுகாதார ஆய்வுத் திட்டம், அனைத்து பொது போக்குவரத்துகளுக்கும் மின்னணு வழியில்  பயணச் சீட்டு பெறும் திட்டம் ஆகியவற்றை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்ததோடு சிர்ஸாவில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையான உணர்வில் உலகளாவிய நூலாக இருக்கிறது என்றும் இது பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மற்ற நூல்களோடு ஒப்பிடுகையில் கீதைக்கு ஏராளமான விளக்க நூல்கள் எழுதப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். சுயநலம் இல்லாமல் கடினமாக உழைப்பது வாழ்க்கையின் சரியான பாதை என்பதை கீதை கற்றுத்தந்துள்ளதாக திருமதி திரௌபதி முர்மு தெரிவித்தார். மகிழ்ச்சியையும், நேரத்தையும், லாபத்தையும், நஷ்டத்தையும் சம உணர்வோடு ஏற்பதும், கௌரவம் அல்லது அகௌரவம் பாதிக்காமல் அனைத்து சூழ்நிலைகளையும் சமச்சீராக பராமரிப்பதும் கீதை வழங்கியுள்ள மிகவும் பயனுள்ள