முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பொருளாதாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உயர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேரில் ஆஜராகாத உயர் அதிகாரிக்கு 'வாரன்ட்'

உயர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேரில் ஆஜராகாத உயர் அதிகாரிக்கு 'வாரன்ட்' நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் மற்றும் செயலர் அன்சுல் மிஸ்ரா இ ஆ ப வுக்கு ஜாமினில் வரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கத்துக்காக, சென்னை, தரப்பாக்கத்திலுள்ள நிலம், நிறுவனப் பகுதியாக அறிவிக்கப்பட்ட  பின், நிலம் கையகப்படுத்தும் முடிவு கைவிடப்பட்டதையடுத்து, மீண்டும் குடியிருப்புப் பகுதியாக மறுவகை செய்யக் கோரி, கிரிஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. தொழில்நுட்ப குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், நான்கு மாதங்களில் சி.எம்.டி.ஏ., முடிவெடுக்கும்படி, 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம், உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அந்த உத்தரவை அமல்படுத்தாததால், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் மற்றும் செயலருக்கு எதிராக நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கை, கிரிஷ் தாக்கல் செய்தார்.  இவ்வழக்கில், உறுப்பினர் மற்றும் செயலர் அன்சுல் மிஸ்ரா ஆஜராக,  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மனு, தலை...

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை மூலம் 3.15 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 3.15 கிலோ தங்கம் பறிமுதல். சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 3.15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து சென்னை வரும் விமானங்களில் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நவம்பர் 28ம் தேதி இரவு முதல் 29ம் தேதி காலை வரை சுங்கத்துறையின் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது திருச்சியைச் சேர்ந்த முகமது ஐசக், சென்னையைச் சேர்ந்த சாதிக் அலி, முகமது நாகூர் ஹனிபா ஆகியோர் துபாயில் இருந்த வந்த ஒரு விமானத்தில் வந்தனர். அவர்கள் கொண்டு வந்த எல்சிடி மானிட்டரில், மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.36 கிலோ எடையுடன் கூடிய  தங்க தகடுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் வந்த சிவகங்கை மற்றும் சென்னையைச் சேர்ந்த 4 பயணிகளிடம் சோதனை செய்யப்பட்டது. அவர்களும் எல்சிடி மானிட்டர்கள் மற்றும் பைகளில்  28 தங்க தகடுகள், 10 மெல்லிய தங்க தகடுகளை மறைத்து வைத்திருந்தனர். அவைகளும் பறிமுதல் செய்யப்பட்ட...

வேளச்சேரி பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணம் காட்டி கடன் வாங்கி மோசடி நபர்கள் கைது

தொழில் அதிபர்களைப் போல் நடித்து ரூ.3.86 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்தோமெனக் கைதாகிய கும்பல் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை, வேளச்சேரி, பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையின் மேலாளர் தில்லை கோவிந்தன். காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில் நீலாங்கரையைச் சேர்ந்த, முகமது முசாமில், அய்யாதுரை, கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் பாலவிஜய், ஆகியோர், எங்கள் வங்கிக் கிளையில், வருமான வரித்துறையின் ஆவணங்களைப் போலியாகத் தாக்கல் செய்து, கார் கடன் வாங்கி மோசடி செய்ததாகவும்இது குறித்து, மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரித்து, வெள்ளிக்கிழமை முகமது முசாமில் (வயது 34) பாலவிஜய் (வயது 35) அய்யாதுரை, (வயது32) ஆகியோரை விசாரித்ததில் மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

பண்ருட்டி அருகே வரி ஏய்ப்பால் நடந்த வருமானவரித் துறை சோதனை

நிதியமைச்சகத்தின் சார்பில் வந்த செய்தியில் நிதி அமைச்சகம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை சோதனை சென்னையில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வடிவமைப்பாளர், அதன் முன்னாள் இயக்குநர் மற்றும்  பிரபல எவர்சில்வர் வியாபாரி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் 27.11.2020 அன்று சோதனை நடத்தினர்.சென்னை மும்பை ஹைதராபாத் மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில உள்ள மொத்தம் 16 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.  முன்னாள் இயக்குநரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் கடந்த மூன்று ஆண்டுகளில் சேர்த்திருந்த ரூபாய் 100 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டன. தகவல் தொழில்நுட்பம் சிறப்பு பொருளாதார மண்டல வடிவமைப்பாளர், தற்போது பணி நடைபெற்று வரும் திட்டத்தில்  போலியாக கணக்கு காட்டி ரூபாய் 160 கோடி பெற்றிருப்பதும் கண்டறியப்பட்டது. சோதனையின்போது தகவல் தொழில்நுட்பம் சிறப்புப் பொருளாதார மண்டல வடிவமைப்பாளர் வாங்கிய பங்கு பரிவர்த்தனைகள் குறித்தும் தெரியவந்தது.  இந்த பங்குகளை வி...

மெஹாவாட்டிலிருந்து ஜிஹாவாட் மறுமுதலீட்டுத்திட்டம், 2020 பிரதமர் துவங்கி வைக்கிறார்

பிரதமர் அலுவலகம் ரீ-இன்வெஸ்ட் 2020-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார் மெகாவாட்டுகளில் இருந்து ஜிகாவாட்டுகளை அடையும் திட்டங்கள் நிஜமாகி வருகின்றன: பிரதமர் இந்தியாவின் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் கடந்த ஆறு வருடங்களில் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது: பிரதமர் வலுவான சுற்றுச்சூழல் கொள்கைகள் வலிமையான பொருளாதாரமாகவும் ஆகலாம் என்பதை இந்தியா செய்து காட்டியுள்ளது: பிரதமர் மூன்றாவது சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டு மாநாடு மற்றும் கண்காட்சியை (ரீ-இன்வெஸ்ட் 2020), காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் நடத்தப்படும் இந்த மாநாடு, இன்று முதல் 28 நவம்பர் வரை நடக்கிறது. 'நீடித்த எரிசக்தி மாற்றத்துக்கான புதுமைகள்' என்பது ரீ-இன்வெஸ்ட் 2020-இன் மையக்கருவாகும். இம்மாநாட்டின் முந்தைய பதிப்புகளில் விவாதிக...

இல்லத் தொலைபேசியில் இனி நடமாடும் தொலைபேசிக்கு ஜனவரி15 முதல் 0 சேர்த்துப் பேசவேண்டும்

தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 2021 ஜனவரி 15-இல் இருந்து தொலைபேசியில் இருந்து அலைபேசிக்கு செய்யப்படும் அழைப்புகளின் போது '0' அழுத்த வேண்டும். போதுமான எண் வளங்களை தொலைபேசி மற்றும் அலைபேசி சேவைகளுக்கு வழங்கும் விதமாக, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டு தொலை தொடர்புத் துறை புதிய முடிவொன்றை எடுத்துள்ளது. இதன் படி, 2021 ஜனவரி 15-இல் இருந்து தொலைபேசியில் இருந்து அலைபேசிக்கு செய்யப்படும் அழைப்புகளின் போது '0' அழுத்த வேண்டும். தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்ணை அழுத்துவதற்கு முன்னர் தொலைபேசியில் பூஜ்ஜியத்தை அழுத்தி, அழைக்க வேண்டும். .

உள்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டிய இந்தியன் ஆயில் நிறுவனத் திட்டங்கள்

மத்திய உள்துறை அமைச்சர் சென்னையில் அடிக்கல் நாட்டிய இந்தியன் ஆயில் நிறுவன திட்டங்களின் விவரங்கள். மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கடந்த 21-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிச்சாமி, துணை முதலமைச்சர் திரு ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் சென்னையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கடந்த 2019-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது தமிழக அரசின் தொழில் ஆலோசனை மன்றத்துடன் ரூபாய் 7900 கோடி முதலீடு செய்வதற்கு கையெழுத்திடப்பட்டது. இதன் அடிப்படையில் இந்த மூன்று திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த திட்டங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு: பெட்ரோல் முனையம்- வல்லூர்: காமராஜர்...

ஏழை விவசாயிகள் தற்சார்புக்காக கூட்டுறவு அமைப்புகள் முக்கியப்பங்காற்ற அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கருத்து

விவசாயத்துறை அமைச்சகம் கிராமங்கள் மற்றும் ஏழை விவசாயிகளை தற்சார்பாக்க கூட்டுறவு அமைப்புகள் முக்கிய பங்காற்ற வேண்டும்: அமைச்சர் திரு தோமர். கிராமப்புறங்களில் திறன் வளர்த்தல் பயிற்சிகளை அளிப்பதற்காக சஹாக்கர் பிரக்யா என்னும் திட்டத்தை மத்திய வேளாண், விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மற்றும் உணவு பதப்படுத்துதல் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 45 புதிய பயிற்சிகள் நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள தொடக்க கூட்டுறவு சங்கங்களில் தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தால் வழங்கப்படும். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கிராமங்கள் மற்றும் ஏழை விவசாயிகளை தற்சார்பாக்க கூட்டுறவு அமைப்புகள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று கூறினார்.

காசியில் (வாரணாசி) காதிப் பொருள்களின் கண்காட்சி

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம் சார்பில் வாரணாசியில் (காசி) டிசம்பர் 7 வரை கண்கவர் காதி பொருட்கள் கண்காட்சி காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் வாரணாசியில் ஏற்பாடு செய்துள்ள காதி கண்காட்சியில் ஜம்மு காஷ்மீரில் பிரசித்திப் பெற்ற தேன், கைத்தறிப் பட்டு, பருத்தி மற்றும் கம்பளி ஆடைகள், மூலிகை மருந்துகள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் திரு வினய் குமார் சக்சேனா தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம், உத்தராகண்ட், பீகார், ஜார்கண்ட், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய 8 மாநிலங்களைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் இந்தக் கண்காட்சியில் அரங்குகள் அமைத்துள்ளனர்.  90 அரங்குகள் கொண்ட இந்த கண்காட்சி வரும் டிசம்பர் 7ஆம் தேதி வரை நடைபெறும். லக்னோவைத் தொடர்ந்து கொவிட்-19 பொது முடக்கத்திற்குப் பிறகு இரண்டாவதாக வாரணாசியில் இந்த கண்காட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

ரூ 400 கோடி இலஞ்சம் பெற்ற வழக்கில் கர்நாடக முன்னால் அமைச்சரை சிபிஐ கைது செய்தது

கர்நாடக முன்னால் அமைச்சர் ரோசன்பெய்க் விசாரணை மற்றும் கைது. பொதுமக்களிடம் வசூலித்த ரூ.1,600 கோடியில் ரூ.400 கோடியை ரோஷன் பெய்க்கிடம் லஞ்சமாக கொடுத்ததாக மன்சூர் கான் திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருந்தார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க்கிடம் சிபிஐ கடந்த ஓராண்டுக்கும் மேலாக விசாரணை நடத்தி வந்தது பணமோசடி நபரிடம் ரூ.400 கோடி லஞ்சம் பெற்ற வழக்கு... கர்நாடக முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க் கைது. பெங்களூரு: ஐஎம்ஏ பணமோசடி வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு சிவாஜி நகரில் நகைக்கடை நடத்தி வந்த மன்சூர் கான், கவர்ச்சிக்கரமான அறிவிப்புகளை வெளியிட்டு பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் கடந்தாண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே பொதுமக்களிடம் வசூலித்த ரூ.1,600 கோடியில் ரூ.400 கோடியை ரோஷன் பெய்க்கிடம் லஞ்சமாக கொடுத்ததாக மன்சூர் கான் திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருந்தார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க்கிடம் சிபிஐ கடந்த ஓராண்டுக்கும் மேலாக விசாரணை ...

புதிய வாகனம் வாங்கும்போது பழைய காப்பீட்டுப் பலன் உண்டு

கார் உரிமையாளர் அதந் காப்பீட்டு பாலிசியை கிளைம் எதுவும் இல்லாத பட்சத்தில் No claim bonus கூடிக்கொண்டே வந்து ஐம்பது சதவீதம் வந்தவுடன் நின்று விடும். கிளைம் இல்லை. இப்போது காரை விற்று பின் வேறு கார் வாங்க முடிவு செய்தால் அந்த இன்சூரன்ஸ் நிறுவனம் சென்று NCB certificate எனக் கேளுங்கள் எழுத்துப் பூர்வமாக... அந்த Certificate ஐ புதிய கார் எடுக்கும்போது அவர்களிடம் கொடுத்து புதிதாக எடுக்கும் வாகன பிரிமியத்தில் உங்கள் பழைய காரின் No claim bonus எவ்வளவு இருக்கிறதோ. அதே அளவு Discount பெற்றுக்கொள்ள முடியும் No claim bonus என்பது காருக்கு அல்ல. விபத்தில் சிக்காமல் காரை இயக்கி வந்தாரே அந்த காரின் உரிமையாளருக்குத் தான் No claim bonus. புதிய வாகனம் வாங்கும்போது இந்தப் பயனை அடையமுடியும் .

லட்சுமி விலாஸ் வங்கி கட்டுப்பாடு குறித்து யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு

தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமி விலாஸ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் Moratorium கட்டுப்பாட்டை விதித்துள்ளதன் காரணமாக இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் டிசம்பர் 16 ஆம் தேதி வரை மொத்தமாக 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். வங்கியின் நிர்வாகக் குழுவில் நிலவிய பிரச்சனைகள், வாராகடன், மோசமான நிதி மேலாண்மை போன்ற பல காரணங்களால் லெட்சுமி விலாஸ் வங்கிக்கு ஆர்பிஐ அறிவுரை காரணமாக வேகமாக ஏடிஎம் விரைந்த லெட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள். பதற்றம் அடைய வேண்டாம்.என ஆர்பிஐ அறிவுரை! லெட்சுமி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்து இருக்கும் மக்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம், உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளதென்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி மற்றும் செபியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு இந்த வங்கி செயல்பட்டு வந்தது. வங்கியில் நிலவி வரும் குளறுபடிகளை ஆர்பிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது வங்கியிலிருந்து 25 ஆயிரத்திற்கும் அதிகமாக பணம் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தை சேர்ந்த வங்கி என்பதால், இதில் தமிழர்கள் பலர் கணக்கு வைத்துள்ளனர். இதையடுத்து லெட்சுமி விலா...

மோகன்லால் ஜுவல்லரி குழுமத்தில் வருமானவரி சோதனையில் சிக்கிய பணம்

மத்திய நேரடி வரி வாரியத்தின், வருமான வரி கமிஷனர் சுரபி அலுவாலியா வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னையில், தங்க நகை மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில், நவ., 10ல் வருமான வரித்துறை சோதனை நடந்தது. சென்னை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, கோவை, மும்பை மற்றும் கோல்கட்டா நகரங்களில், 32 இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையில், கணக்கில் காட்டாமல் பல்வேறு இடங்களில், தங்கள் நகைகளை இருப்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்படி, கணக்கில் காட்டாத, 400 கோடி ரூபாய் மதிப்பிலான, 814 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு, வரி கணக்கிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது வர்த்தக இருப்பு என்பதால், இந்த தங்கம் பறிமுதல் செய்யப்படவில்லை. அதே போல, குழுமத்தின் ஆவணங்களில், 2018 - -19ம் நிதியாண்டில் நிகர வருவாய் என, 102 கோடி ரூபாய் குறிப்பிடப்பட்டுள்ளது. அது, கணக்கில் காட்டப்படவில்லை. இதேபோல, 2019 -- 20, 2020 -- 21ம் நிதியாண்டுக்கான கணக்கு விபரங்கள் சேகரிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், கணக்கில் காட்டாமல், கூடுதலாக, 50 கிலோ தங்கம் வர்த்தக கட்டடத்தில் இருப்பு வைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இ...

சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அமைச்சர் பியூஸ் கோயல் இந்திய முதலீட்டுக்கு அழைப்பு

வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் : சர்வதேச முதலீட்டாளர்களிடம் அமைச்சர் திரு பியூஷ் கோயல் இந்தியாவின் பிரம்மாண்ட உள்நாட்டு சந்தையையும், வர்த்தகத்துக்கு உகந்த சூழலையும் கருத்தில் கொண்டு இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு, மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க வங்கி ஏற்பாடு செய்திருந்த ‘இந்தியா : மாற்றத்தின் உந்து சக்தி' என்ற தலைப்பிலான மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் திரு பியூஷ் கோயல், முதலீடுகளுக்கு உகந்த மதிப்பை இந்தியா வழங்கி வருகிறது என்று கூறினார். சர்வதேச மதிப்பீடுகளில் இந்தியா, நம்பிக்கைக்கு உகந்த நாடாக கருதப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். வெளிப்படைத் தன்மையையும், திறந்த ஜனநாயகத்தையும் இந்தியா பெற்றுள்ளதாகக் கூறிய அவர், மிகப்பெரும் வர்த்தகங்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அதிக அளவில் வர்த்தகத்தில் ஈடுபடாத துறைகளிலும் வணிகம் புரியும் வகையில் வர்த்தகங்களுக்கு அதிகாரம...

வேலை வாய்ப்பு குறித்து போலியான கட்செவியஞ்சல் செய்தி வருமானவரித் துறை எச்சரிக்கை

வேலைவாய்ப்புகள் குறித்த போலியான வாட்ஸ்அப் தகவல் : வருமானவரித் துறை எச்சரிக்கைi தமிழ்நாட்டில் உள்ள வருமான வரித்துறைக்கு கண்காணிப்பாளர் - 01, தனி செயலாளர் - 01, ஆய்வாளர் - 02, உதவியாளர் - 03 ஆ கிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடப்பதாக வாட்ஸ்அப்பில் சில தகவல்கள் உலா வருவதாக  வருமானவரித் துறையின் கவனத்திற்கு வந்துள்ளது. கடந்த அக்டோபர் 12 அன்று இது தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட்டதாகவும், அதில் இருந்து 60 நாட்களுக்குள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பாக தெரிவிக்கப்படுவது யாதெனில், 'தனி செயலாளர்' பதவி முழுக்க முழுக்க பதவி உயர்வின் அடிப்படையில் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது, இந்தப் பதவிக்கு நேரடி பணி நியமனம் இல்லை. 'ஆய்வாளர் மற்றும் வரி உதவியாளர்' பதவிகளுக்கான ஆட்சேர்ப்பைப் பொருத்தவரையில், பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மட்டுமே இது நடைபெறுகிறது. மேலும், 'கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர்' ஆகிய பதவிகள் வருமானவரித் தறையில் இல்லை என்று தெளிவுபடுத்தப்படுகிறது. எனவே, வருமானவரித் துறையில் ஆட்சேர்ப்பு நடத்துவதாக வெளியாகியுள்ள அறிவிக்...

நிதி ஆணைய அறிக்கை குடியரசு தலைவரிடம் சமர்ப்பித்த ஆணையத்தின் உறுப்பினர்கள்

நிதி ஆணையம் 2021-22 -2025-26 நிதி ஆணைய அறிக்கை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பு. திரு என் கே சிங் தலைமையிலான பதினைந்தாவது நிதி ஆணையம், 2021-22-ஆம் ஆண்டு முதல் 2025-26-ஆம் ஆண்டு வரையிலான காலத்துக்கான, தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்திடம் இன்று சமர்ப்பித்தது. ஆணையத்தின் உறுப்பினர்கள் திரு அஜய் நாராயண் ஜா, பேராசிரியர் அனூப் சிங், டாக்டர் அசோக் லாஹிரி மற்றும் டாக்டர் ரமேஷ் சந்த், மற்றும் ஆணையத்தின் செயலாளர் திரு அர்விந்த் மேத்தா ஆகியோர் இநிகழ்வின் போது ஆணையத்தின் தலைவருடன் இருந்தனர். குறிப்பு விதிமுறைகளின் படி, 2021-22-ஆம் ஆண்டு முதல் 2025-26-ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டு காலத்துக்கான தனது அறிக்கையை நிதி ஆணையம் 2020 அக்டோபர் 30-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். 2020-21-ஆம் ஆண்டுக்கான பரிந்துரைகள் அடங்கிய தனது அறிக்கையை ஆணையம் கடந்த வருடம் சமர்ப்பித்தது. இது மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 2020 ஜனவரி 30 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தனித்துவமான மற்றும் பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து பரிந்துரைகளை வழங்குமாறு குறிப்பு விதிமுறைகளில் ஆணையம் கேட்டுக் கொள்ளப்பட...

காஷ்மீர் குங்குமப்பூ சாகுபடி வடகிழக்கு மாகாணங்களில் சோதனை முயற்சியில் வெற்றி

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வட கிழக்கு மாகாணங்களில் குங்குமப்பூ பயிர் சோதனை வெற்றி காஷ்மீரில் மட்டுமே இதுவரை விளைந்து வந்த குங்குமப்பூ தற்போது இந்தியாவின் வட கிழக்கு பகுதிகளிலும் விரைவில் காணப்படும். காஷ்மீரிலிருந்து  சிக்கிம் மாநிலத்தின் தென் பகுதியான யாங்யாங்-கில் பயிரிடப்பட்ட குங்குமப்பூ தாவரங்கள் அங்கே தற்போது பூத்துக் குலுங்குகின்றன. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தட்பவெப்பம் குங்குமப்பூ உற்பத்திக்கு உகந்ததாக கருதப்படுகிறது.  ஜம்மு காஷ்மீரின் பாம்போர் பகுதி,  குங்குமப்பூ உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது இதையடுத்து பட்காம், ஸ்ரீநகர் மற்றும் கிஷ்டிவார் மாவட்டங்களும் நாட்டின் குங்குமப்பூ  உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.           இந்திய...

நடந்து முடிந்த வருமானவரி சோதனையில் பலகோடி பணம் நகை பறிமுதல்

நிதி அமைச்சகம் கேரளா, மேற்கு வங்கம், தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனை, பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், நகைகள் பறிமுதல். கேரள மாநிலத்தில் அறக்கட்டளை ஒன்றுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனை, மேற்கு வங்கத்தில் நிலக்கரி வர்த்தக நிறுவனம் ஒன்றில் நடந்த வருமானவரி சோதனை ஆகியவற்றில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கேரள மாநிலம் திருவல்லாவில் உள்ள மதபோதகர் ஒருவருக்குச் சொந்தமான குழுமத்தின் பல்வேறு அறக்கட்டளைகளில் நவம்பர் 5-ஆம் தேதி வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தொண்டு, மத அறக்கட்டளைகளாக 1961-ஆம் ஆண்டு வருமானவரி சட்டத்தின் விலக்குப் பெற்று இவை நடத்தப்பட்டு வந்தன. இந்த குழுமத்துக்குச் சொந்தமாக நாடு முழுவதும் வழிபாட்டு இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. கேரள மாநிலத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா, சண்டிகர், பஞ்சாப் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் உள்ள 66 இடங்களில் வருமானவரி சோதனைகள் நடைபெற்றன. இந்த குழ...

கடத்தல் தங்கம் விமான நிலையத்தின் சுங்கத்துறை மீட்டது

சென்னை விமான நிலையத்தில் 1.31 கிலோ தங்கம் பறிமுதல். உளவுத் தகவல் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் வந்த சென்னையைச் சேர்ந்த முகமது ஆசிப்(24), இண்டிகோ விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது ஷரிப்(39) ஆகியோரிடம் சுங்க அதிகாரிகள் தீவிர பரிசோதனை நடத்தினர். இதில் முகமது ஆசிப்பிடம் நடத்திய சோதனையில், 140 மற்றும் 123 கிராம் எடையில் 2 தங்கப் பசை பாக்கெட்டுகள், அவரது பேன்ட் பின் பாக்கெட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. முன் பாக்கெட்டில் 30 கிராம் எடையில் தங்க துண்டு ஒன்றையும் வைத்திருந்தார்.  ஷரிப்பிடம் நடத்தப்பட்ட சோதனையில், 419 கிராம் தங்கப் பசை அவரது ஆசன வாயில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து 359 கிராம் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவர்கள் இருவரிடமும் மொத்தம்  512 கிராம் அளவில் 24 கேரட் தங்கம், சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.27.6 லட்சமாகும். கடந்த சனிக்கிழமை அன்று துபாயில...

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு டிஜிட்டல் உயிர்வாழ்சான்றிதழ் சமர்ப்பிக்க வழிமுறைகள்

பணியாளர் ஓய்வூதியத் திட்டம் 1995-இன் ஓய்வூதியர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்காக பல்வேறு வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய கொவிட்-19 சூழலில், பணியாளர் ஓய்வூதியத் திட்டம் 1995-இன் ஓய்வூதியதாரர்கள் மின்னணு வாயிலாக உயிர்வாழ் சான்றிதழை சமர்பிப்பதற்கு அவசரம் காட்டுவதைத் தவிர்க்கும்படி தொழிலாளர்  வருங்கால வைப்புநிதி அமைப்பு,  வேண்டுகோள் விடுத்துள்ளது. புதிய வழிகாட்டுதல்களின்படி ஓய்வூதியதாரர்களுக்கான உயிர் வாழ் சான்றிதழை (ஜீவன் பிரமான் பத்திரம்- ஜேபிபி) ஆண்டு முழுவதும் சமர்பிக்கலாம். இது பதிவு செய்த தேதியில் இருந்து ஒரு ஆண்டுக்கு செல்லுபடியாகும். 2020-ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியத் தொகை உத்தரவு வழங்கப்பட்ட ஓய்வூதியதாரர்கள் ஒரு ஆண்டு பூர்த்தியாகாமல் ஜேபிபி-யை பதிவேற்றம் செய்யத் தேவையில்லை. கடந்த ஆண்டுகளைப் போலவே, ஓய்வூதியதாரர்களுக்கான உயிர் வாழ் சான்றிதழ் பதிவுக்காக வங்கிக் கிளைகளையும் அணுகலாம். ஓய்வூதியதாரர்கள் வங்கிக் கிளைகளுக்குச் செல்லும்போது தங்களது ஓய்வூதியத் தொகை உத்தரவு எண், ஆதார் அட்டை, ஆதார் அட்டையுடன் இணைக்கப...