முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உலக தேனீக்கள் தினத்தில் குஜராத்தில் தேசிய நிகழ்ச்சி

உலக தேனீக்கள் தினத்தைக் குறிக்கும் வகையில் 2022, மே 20 அன்று குஜராத்தில் தேசிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது குஜராத்தின் நர்மதாவில் உள்ள ஏக்தா நகரில்  2022, மே 20 அன்று உலக தேனீக்கள் தினத்தை மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள்  நல அமைச்சகம் கொண்டாடுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர்  கலந்து கொள்வார். மாண்புமிகு பிரதமரின் வழிகாட்டுதல் படி நாட்டின் சிறு விவசாயிகள் பயனடைவதற்காக தேனீ வளர்ப்பை மேம்படுத்த இந்த  நாள் குறிப்பிடத்தக்க வகையில்  அமைந்துள்ளது.             தேனின் சுவை  லயிப்பை பல நூற்றாண்டுகளுக்கு முன் இலக்கியங்களில், பலமொழிகளில், சொலவடைகளில் பதிவு செய்திருக்கிற நிலையில்     மனித இனம். வளர்ச்சி பெற்று வந்த அப்போதைய காலகட்டத்தில் தேனீக்களுக்கு அழிவில்லை. ஆனால், இன்று அழிந்துவரும் பூச்சியினங்களில் ஒன்றாக மாறியிருப்பதால் தேனீக்களின் வாழ்க்கை குறித்துக் கவலைப்படுகிறோம். தேனீக்கள் செய்யும் மகரந்தச் சேர்க்கையினால் தான் தாவரங்கள் பல்கிப் பெருகுகின்றன. அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறாமல் போனால் மனித இனம் கடும் நெருக்கடியைச் ச

ஜமைக்காவின் கவர்னர் ஜெனரல் அளித்த அரசு விருந்து நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத்தலைவர் உரையாற்றினார்

ஜமைக்காவின் கவர்னர் ஜெனரல் அளித்த அரசு விருந்து நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார் ஜமைக்காவிற்கான எனது முதலாவது அரசுமுறை பயணத்தின் போது எனக்கும், எனது தூதுக்குழுவினருக்கும் அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நமது தூதரக உறவுகளின் 60 ஆண்டுகளை குறிக்கும் இத்தருணத்தில் ஜமைக்காவிற்கு இந்திய குடியரசுத்தலைவர் ஒருவர், அரசு முறை பயணம் மேற்கொள்வதும் இதுவே முதன்முறையாகும். மாண்புமிகு கவர்னர் ஜெனரல் அவர்களே, ஜமைக்காவிற்கு இந்தியாவிலும் எங்கள் மக்களிடமும் மிகவும் சிறப்பான இடம் உள்ளது. 1845 மே 10 அன்று 175 ஆண்டுகளுக்கு முன் சுமார் 20 இந்தியர்களை ஏற்றிய கப்பல் ஜமைக்காவிற்கு வந்து சேர்ந்தது. அதன் பிறகு வாழ்க்கையின் பலதரப்பினரான இந்தியர்கள் இந்த அழகிய நாட்டிற்கு வருகை தந்து இதனை தங்களின் தாயகமாக கொண்டுள்ளனர். மேன்மையானவர்களே ! ஜார்ஜ் ஹெட்லி, மைக்கேல் ஹோல்டிங், கிரிஸ் கெயில் போன்ற கிரிக்கெட் ஆளுமைகளின் பெயர்கள் இந்தியாவில் பல தலைமுறை கிரிக்கெட் ரசிகர்களால் வியக்கப்பட்டவை. ஏற்கனவே, நீங்கள் அறிந்திருப்பதுபோல், இந்தியர்கள் கிரிக்கெட் ஆ

முழுமையான பங்கு விலக்கல் மற்றும் ஓரளவு பங்கு விற்பனைக்கான மாற்று நடைமுறைகளுக்கும், அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல்

பங்கு விலக்கல் மற்றும் துணை நிறுவனங்கள் அதன் கிளைகளை மூடுவதற்கும் மற்றும் கூட்டு நிறுவனங்களின் பங்கு விற்பனைக்கும் தேவையான மாற்று நடைமுறைகளுக்கு கூடுதல் அதிகாரமளிக்கவும் ஒரு நிறுவனத்தின் / அதன் தாய் பொதுத் துறை நிறுவனத்தின் இயக்குநர் குழு பரிந்துரைப்பதற்கான அதிகாரம் அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஒரு பொதுத்துறை நிறுவனம் அதன் கிளை அல்லது பிரிவுகளை மூடுவதற்கோ அல்லது அவற்றின் பங்குகளை விற்பனை செய்வதற்கோ பரிந்துரைப்பதற்கு ஏற்ப, கூடுதல் அதிகாரம் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. முழுமையான பங்கு விலக்கல் மற்றும் ஓரளவு பங்கு  விற்பனைக்கான மாற்று நடைமுறைகளுக்கும், அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போதைய விதிமுறைகளின்படி மகாரத்னா, நவரத்னா, மற்றும் மினிரத்னா வகையைச் சேர்ந்த  பொதுத்துறை நிறுவனங்களின்  இயக்குநர்கள் குழு, அந்தந்த நிறுவனங்களின் பங்கு முதலீடு மூலம்  நிதி ரீதியான கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளவும், துணை நிறுவனங்களை ஒருங்கிணைத்தல் அல்லது அவற்றைக் கையகப்படுத்திக் கொள்ளும் வகையில் குறிப்பிட்ட சில அ

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோவுடன் 55 புதிய தொழில்கள் பதிவு

கடந்த இரண்டே ஆண்டுகளில் விண்வெளித் துறையைச்சேர்ந்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோவுடன் 55 புதிய தொழில்கள் பதிவு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார் கடந்த இரண்டே ஆண்டுகளில் விண்வெளித் துறையைச்சேர்ந்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோவுடன் 55 புதிய தொழில்கள் பதிவு செய்திருப்பதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். புதுதில்லியில் நடைபெற்ற அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் நான்காவது கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார். இந்த 55 புதிய தொழில்களில் 29 செயற்கை கோள் சம்பந்தப்பட்டவை, 10 விண்வெளி பயன்பாடு மற்றும் உற்பத்தி பொருட்கள், 8 செலுத்துவாகனம் சம்பந்தப்பட்டவை, 8 புவிசார் நடைமுறைகள் மற்றும் ஆராய்ச்சி என்றும் அவர் கூறினார். இவற்றில் 9 திட்டங்கள் 2022 -23க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டுப் பெருவிழாவை குறிக்கும்  வகையில் 75 மாணவர்களின் செயற்கை கோள்கள் இந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட உள்ளன என்றும் அவர்

பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த மேல்நிலை(10+2) அளவிலான தேர்வு 2021

பணியாளர் தேர்வாணையம்  ஒருங்கிணைந்த மேல்நிலை(10+2) அளவிலான தேர்வு 2021 மத்திய அரசின் தென்மண்டல பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) அளவிலான தேர்வு 2021 (நிலை-1) கணினி அடிப்படையில் நடத்தவுள்ளது. 2) தென் மண்டலத்தில் 2,94,445 விண்ணப்பதாரர்கள் இத்தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி & வேலூரிலும், ஆந்திரப்பிரதேசத்தில் திருப்பதி, நெல்லூர், கர்நூல், சிராலா, குண்டூர், காக்கிநாடா, ராஜமுந்திரி, விஜயவாடா, விசாகப்பட்டினம் & வைசியநகரம் மற்றும் தெலங்கானாவில் ஐதராபாத், கரீம்நகர் &  வாரங்கல் ஆகிய  இருபது நகரங்களில் உள்ள 23 மையங்களில் நடைபெற உள்ளது. 3) தென்மண்டலத்தில் இத்தேர்வு 24.05.2022 முதல் 27.05.2022 வரையிலும், 30.05.2022 முதல் 03.06.2022  மற்றும் 06.06.2022 முதல் 10.06.2022 வரையிலும் மொத்தம் 14 நாட்கள் நடைபெற உள்ளது. ஒரு நாளைக்கு 3 ஷிப்டுகள்  -  முதல் ஷிப்டு காலை 9 மணி முதல் 10 மணி வரை, 2-வது ஷிப்டு பிற்பகல் 12.30 மணி  முதல் 01.30 மணி வரையிலும் 3-வது ஷிப்டு மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் நடைபெறும்

முன்னால் பிரதமர் படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளியின் தண்டனைக் காலம் முடிந்த நிலையில் உச்சநீதிமன்ற அமர்வு விடுவிக்க உத்தரவு

முன்னால் பிரதமர் படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளியின் தண்டனைக் காலம் முடிந்த நிலையில் உச்சநீதிமன்ற அமர்வு  விடுவிக்க உத்தரவு. முன்னால் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற  பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு. அரசமைப்புச் சட்டத்தின் 142 வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்ற. நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தியாவில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு நபர்கள் தற்போது ஆயுள் தண்டனை அனுபவிக்கிறார்கள். முன்னதாக இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்நாட்டில் பல்வேறான அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். ஏழு பேரையும் விடுவிக்கப் போவதாக முன்னால் முதல்வர் ஜெ. ஜெயலலி

டெல்லி நீதிமன்றத்தில். சித்ரா ராமகிருஷ்ணா, அரவிந்த் சுப்ரமணியன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

சித்ரா ராமகிருஷ்ணா, அரவிந்த் சுப்ரமணியன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் டெல்லி நீதிமன்றத்தில் தள்ளுபடி தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் முன்னாள் குழு இயக்க அதிகாரியும், ஆலோசகருமான ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  இந்த வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் அரவிந்த் சுப்ரமணியன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க சிபிஐ சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகர்வால் மறுத்துவிட்டார். இது சித்ரா ராமகிருஷ்ணாவின் முதல் ஜாமீன் மனுவாகவும், விசாரணை நீதிமன்றத்தில் அரவிந்த் சுப்ரமணியனின் இரண்டாவது ஜாமீன் மனுவாகவும் இருந்தது.

கற்பித்தலை மேம்படுத்தும் சூழலை உருவாக்க மாளவியா இயக்கத்தை செயல்படுத்துமாறு மத்திய அமைச்சர் வேண்டுகோள்

நாடு தழுவிய கற்பித்தலை மேம்படுத்தும் சூழலை உருவாக்க மாளவியா இயக்கத்தை செயல்படுத்துமாறு தர்மேந்திர பிரதான் வலியுறுத்தல் நாடு தழுவிய கற்பித்தலை மேம்படுத்தும் சூழலை உருவாக்க மாளவியா இயக்கத்தை செயல்படுத்துமாறு திரு தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார். உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து இன்று ஆய்வு நடத்திய அமைச்சர் இவ்வாறு கூறினார்.  21ஆம் நூற்றாண்டில் இந்தியா சந்திக்கும் சவால்களை  சமாளிப்பதற்கான ஆசிரியர் தகுதித் திறனை மேம்படுத்தும் பலபரிமாண அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறினார். ஆசிரியர் கல்வி குறித்த தேசிய கல்விக் கொள்கை அம்சம் பற்றி குறிப்பிட்ட அவர், இந்திய விழுமியங்கள்,  மொழிகள்,  அறிவு பாரம்பரியங்கள் குறித்து  கவனம் செலுத்தும் வகையில் இந்த அணுகுமுறை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

விமானத்தில் தங்கம் கடத்தியவர் கைது: 1.915 கிலோ தங்கம் பறிமுதல்

விமானத்தில் தங்கம் கடத்தியவர் கைது: 1.915 கிலோ தங்கம் பறிமுதல் துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் திருச்சிக்கு வந்த ஜெயசுதா என்பவரை சந்தேகத்தின் சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் விசாரித்தனர். அப்போது அவரை சோதனையிட்டதில் 2.119 கிலோ தங்கப்பசையை மறைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ரூ. 85.93 லட்சம் மதிப்புள்ள 1.915 கிலோகிராம் எடையுள்ள ஒரு தங்கக்கட்டி இருந்தது. இதனை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் கைப்பற்றி, பயணியை கைது செய்தனர். மேலும் சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு விலங்குகள் மீட்பு பாங்காக்கிலிருந்து வன விலங்குகள் கடத்தி வரப்படுவதாக சென்னை விமானநிலைய சுங்கத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 15 ஆம் தேதி பாங்காக்கிலிருந்து வந்த விமானப் பயணியிடம் சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் பெட்டியில் வெள்ளை முள்ளம்பன்றி, டாமரின் வகை குரங்கு ஆகியவற்றை கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. இதேபோல கடந்த 16 ஆம் தேதி பாங்காக்கிலிருந்து தாய் ஏர்வேஸ் விமானத்தில் சென்னை வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சாஹிப் தம்பியை சந்தேகத்தின் அடிப்படை

சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கோயில் ஆய்வுத் திட்டம்

புராதனச் சின்னங்களைப் பாதுகாத்து, அவற்றின் சிறப்பை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல இந்திய தொல்லியல் துறை வேண்டுகோள் புராதன சின்னங்களை பாதுகாத்து, அவற்றின் சிறப்பை இளைய தலைமுறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும் என இந்திய தொல்லியல் துறை, கோயில் ஆய்வுத் திட்டத்தின் உதவி தொல்பொருள் ஆய்வாளர்  குமரன் தெரிவித்துள்ளார். சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கோயில் ஆய்வுத் திட்டம் (தென் மண்டலம்) சார்பில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலய வளாகத்தில் இன்று நடந்த கல்லூரி மாணவர்களுக்கான கோயில் சிற்பக் கலை மற்றும் கட்டடக் கலை சார்ந்த கலாச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இவ்வாறு அவர் பேசினார். மேலும் அவர் பேசுகையில், ஒவ்வொரு வருடமும் சர்வதேச அருங்காட்சியக தினம் கொண்டாடப்படுகிறது என்றும், சோழர்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை புத்தகத்தில் படிப்பதோடு மட்டுமல்லாமல் நேரடியாக பார்ப்பதால் மாணவர்கள் இன்னும் அறிந்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.  இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் ஹிந்து நாடார் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்திய தொல்லியல் துறை, கோயில் ஆய்வ

இந்தியன்ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் செயல் இயக்குநர் மற்றும் மாநிலத் தலைவராக வி சி அசோகன் பொறுப்பேற்றார்

இந்தியன்ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் செயல் இயக்குநர் மற்றும் மாநிலத் தலைவராக வி சி அசோகன் பொறுப்பேற்றார் வி சி.அசோகன் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் செயல் இயக்குநர் மற்றும் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் எண்ணெய் நிறுவனங்களின் மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளராகவும் அவர் செயலாற்ற உள்ளார். தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ரீஜினல் இன்ஜினியரிங் காலேஜ், திருச்சிராப்பள்ளி வர்த்தக மேலாண்மைப் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்.திரு.அசோகன் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உத்தரபிரதேசம் குஜராத் போன்ற பல மாநிலங்களிலும் மார்க்கெட்டிங் பிரிவில் பல்வேறு தலைமை பதவிகளையும் வகித்து வந்துள்ளார். திரு. அசோகன் இந்த பதவியை ஏற்றுக்கொள்ளும் முன் கேரள மாநிலத்தின் செயல் இயக்குநராகவும் மாநில தலைமை பொறுப்பினையும் வகித்துள்ளதோடு அங்கு பல முன்முயற்சிகளுக்கு வழிகாட்டுதல்களையும் அளித்துள்ளார். அவர் பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளதோடு எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் உலக அளவிலான முன்னணி நிறுவனங்கள் மற்றும்

காலம் கடந்த நிலையில் சசிகலா நடராஜன் வருகை அரசியலில் பலன் தருமா

 காலம் கடந்த நிலையில் சசிகலா நடராஜன் வருகை அரசியலில் பலன் தருமா ?                          சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடந்த தனது ஆதரவாளர் வீட்டுத் திருமண நிகழ்வில் சசிகலா நடராஜன் பங்கேற்றார் திருமண நிகழ்ச்சியில் பேசியவர் குரங்கு கதை சொன்ன நிலையில் அது விவாதத்தை ஏற்படுத்திய நிலையில். . அவர் பேசிய விபரம்: அ.தி.மு.க. உண்மையான தொண்டர்களின் தியாகத்தால் உருவானது. எதிர்கட்சியினர் எத்தனை கணக்குகள் போட்டாலும் நானிருக்கும் வரை அதிமுகவை யாராலும் அழிக்க முடியாதென்றார் கட்சியைக் காப்பாற்றி மீண்டும் வலிமை கொண்ட இயக்கமாக உருவாக்க தகுந்த நேரம் வந்து விட்டதென்றார் மாங்கொட்டையை ஊன்றி மரமாக வளரச் செய்தால் இஷ்டத்திற்கு மாம்பழங்களை பறித்துச் சாப்பிடலாம் என ஒரு குரங்கு மாங்கொட்டையை மண்ணுக்குள் புதைத்து நீரூற்றியது.சிறிது காலமாகியும் செடி வளரவில்லை. குரங்கிற்கோ அவசரம். அந்த அவசர புத்தி குரங்கு மண்ணில் புதைத்து வைத்திருந்த மாங்கொட்டையை எடுத்து பார்ப்பதும் மீண்டும் மண்ணில் புதைப்பதுமாக இருந்தது. இதனால் செடி முளைக்கவில்லை. ஆத்திரமடைந்த குரங்கு மாங்கொட்டையைத் துார எறிந்து விட்டு வருத்தப்பட்டது.