முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அதிமுகவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை பொதுச்செயலாளர் சசிகலா நடராஜன் சந்திப்பு

அதிமுகவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சென்னை அசோக் நகரில் உள்ள அவரது இல்லத்தில்  சந்தித்துப் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன், அவரது உடல் நலம் விசாரித்தார் பின்னர் அவரது சந்திப்பு முடிந்த நிலையில் செய்தியாளர் மத்தியில் பேசினர் “ எங்கள் மூத்த அண்ணன் இவர், எனவே மரியாதை நிமித்தமாக பார்ப்பதற்காக வந்தேன். அரசியல் ரீதியாகவும் கலந்து பேசினோம்” எனத் தெரிவித்தார். நீங்களும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செயல்பட வேண்டுமெனத் தேவர் அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த சசிகலா நடராஜன், “ அதிமுகவிலுள்ள அனைவரும் எனக்கு வேண்டியவர்கள் தான். எனவே அனைவரும் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. தலைவர் எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்த போது ஜாதி, மதம் பார்த்ததில்லை. அந்த அடிப்படைக் கொள்கை இப்போது வரை எனது மனதில் உள்ளது. அதிமுக அனைத்து ஜாதி, மதத்தை ஒன்றாக நினைக்கும் இயக்கமாகும். அந்த வழியில் எனது பயணம் தொடரும்” எனக் கூறியவர். மேலும் ஒரு இயக்கத்தில் சில நேரங்களில் இது போல சோதனை உருவாகும், பின்னர் அது சரியாகிவிடும். அதுபோல இப்போது ஏற்பட்டுள

தென்னக இரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக நேரம் மாற்றம்

 சிவகங்கை - மேல கொன்னகுளம், திருப்பாச்சேத்தி - மானாமதுரை மற்றும் சூடியூர்- பரமக்குடி ரயில்வே நிலையங்களிடையே ஆகஸ்ட் மாதம் ரயில் பாதை பராமரிப்புப் பணி நடக்கும் நிலையில்  இராமேஸ்வரம்--மதுரை முன்பதிவில்லாத சிறப்பு இரயில் ஆகஸ்ட் மாதம்., 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை வியாழக்கிழமை தவிர இராமேஸ்வரத்திலிருந்து காலை 11.00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 1:30 மணிக்கு 150 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும். மதுரை--இராமேஸ்வரம் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து மதியம் 12:30 மணிக்கு பதில் மதியம் 1:10 மணிக்கு 40 நிமிடங்கள் தாமதமாக புறப்படும். திருச்சிராப்பள்ளி-மானாமதுரை - திருச்சிராப்பள்ளி முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் மாதம்.,1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை சிவகங்கை-மானாமதுரை ரயில்வே நிலையங்களிடையே பகுதியாக இரத்து செய்யப்படும். திண்டுக்கல் - அம்பாத்துரை நிலையங்களிடையே பராமரிப்புப் பணியால் ஆகஸ்ட் மாதம்., 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளிலும் கோயமுத்தூர் - -நாகர்கோவில் பகல் நேர விரைவு ரயில் 90 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.  சென்னை-குருவாயூர் விரைவு ரயில் மதுரை

தமிழ்நாட்டின் காவல்துறைக்கு குடியரசு தலைவர் கொடி அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகளாகிய நிலையில், இன்று ஒப்படைக்கும் விழா

தமிழ்நாட்டின் காவல்துறைக்கு குடியரசு தலைவர் கொடி அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகளாகிய நிலையில், இன்று ஒப்படைக்கும் விழா  சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதையுடன்  இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலினிடம் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு குடியரசு தலைவர் கொடியை ஒப்படைத்தார். அப்போது வானத்தில் வண்ணப் பலூன்கள் பறக்கவிடப்பட்டது.  நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசிய போது, தமிழக காவல்துறைக்கு குடியரசு தலைவர் கொடி கிடைத்தது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே கிடைத்த பெருமை எனவும், உயிரைப் பொருட்படுத்தாமல் காவல்துறை ஆற்றிய சேவைக்கான அங்கீகாரமென்றும். தமிழகத்தில் கடந்த ஓராண்டில் சாதி, மதக் கலவரங்கள், துப்பாக்கிச் சூடுகள் இல்லை என்றும், சிறை மரணங்களே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இராஜரத்தினம் அரங்கத்தில், காவல் துறையினருக்குக் குடியரசுத் தலைவரின் கொடி வழங்குதல் விழா நடை பெற்றதையொட்டி இன்று போக்குவரத்தில் மாற்

பிரகதாம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் விபத்து

புதுக்கோட்டை நகர் திருக்கோகர்ணத்தில் பிரகதம்பாள் திருக்கோகர்னேஸ்வரர் கோவில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ளது புதுக்கோட்டை சமஸ்தானம் மன்னர்கள் வழிபாடு நடத்தி காலப் பழமை வாய்ந்த கோவில். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கோவிலாகவும் திகழ்கிறது.    இங்கு ஆடித்திருவிழா கொரோனா தொற்றால் இரண்டு ஆண்டுகள் நடைபெறாமலிருந்த நிலையில் ஜூலை மாதம் 23 ஆம் தேதி ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில்  ஒன்பதாவது திருநாளான இன்று ஆடிப்பூரத் தேரோட்டம் நடந்த நிலையில் 300 க்கும் மேற்பட்டோர் குழுமி இருந்த நிலையில்                காலை 8. 50 மணிக்கு முதல் சப்பரத்தில் விநாயகரும், இரண்டாவது சப்பரத்தில் முருகனும், மூன்றாவதாகத் தேரில் ஸ்ரீ பிரகதம்பாளும், நான்காவது தேரில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளியிருக்க. ஒரே நேரத்தில் திரளான பக்தர்கள் தேரை இழுத்ததால்,  நிறுத்துவதற்காகச் சக்கரத்தில் கட்டை போட்ட போது விபத்து நடந்ததாகத் தெரிகிறது. பக்தர்கள் மீது தேர் விழுந்ததில்  ஆறு நபர்கள் பலத்த காயமடைந்தனர். பொதுமக்களுடன் தீயணைப்புத்துறையினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல

கார்கில் செக்டரிலுல்ல கவுரமாக டிராசில் உள்ள 5140 முனைக்கு கார்கில் துப்பாக்கி மலை எனப் பெயர் சூட்டப்பட்டது

 "ஆபரேஷன் விஜய்"யில் பங்கேற்ற வீரர்களின் பங்களிப்புகளுக்குத் தகுந்த கவுரமாக டிராசில் உள்ள 5140 முனைக்கு கார்கில் துப்பாக்கி மலை எனப் பெயர் சூட்டப்பட்டது இந்தியப் படைகளின் வெற்றியை நினைவுகூரும் வகையில், கார்கில் செக்டாரில் உள்ள டிராஸில் உள்ள  5140வது முனைக்கு , "ஆபரேஷன் விஜய்"யில் பங்கேற்ற வீரர்களின்  உச்சபட்ச தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், "துப்பாக்கி மலை" என்று பெயரிடப்பட்டது. இந்திய இராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவு,  துல்லியமான துப்பாக்கிச் சக்தியுடன், எதிரி துருப்புக்கள் மற்றும்  5140வது முனை உட்பட அவர்களின் பாதுகாப்பு நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்த முடிந்தது, இது நடவடிக்கைகளை முன்கூட்டியே முடிப்பதற்கான முக்கிய காரணியாக இருந்தது. பீரங்கி படையின் சார்பில், ட்ராஸில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பீரங்கிப் படையின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் டி.கே.சாவ்லா, லெப்டினன்ட் ஜெனரல் அனிந்தியா சென்குப்தா, தீயணைப்பு  மற்றும் ப்யூரி கார்ப்ஸின் ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் ஆகியோரும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். ஆபரேஷன் விஜய்யில் "கார்கில்&qu

தேசிய சூரியசக்தி தளத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்

மின்சாரத் துறையின் புதுப்பிக்கப்பட்ட விநியோகப் பிரிவுத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் 'ஒளிமிகு இந்தியா ஒளிமயமான எதிர்காலம் - மின்சாரம் @2047' திட்டத்தின் நிறைவுவிழாவில் கலந்து கொண்டார் ரூ. 5200 கோடிக்கும் அதிகமான என்டிபிசியின் பல்வேறு பசுமை மின்சார திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் அடிக்கல் நாட்டினார் தேசிய சூரியசக்தி தளத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார் "எரிசக்தி துறையின் பலம், எளிதாக தொழில் செய்வதற்கும், எளிதாக வாழ்வதற்கும் முக்கியமானது" "இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகள், அர்ப்பணிப்பு மற்றும் அதன் பசுமை இயக்கத்தின் அபிலாஷைகளை வலுப்படுத்தும்" "மின்சார வாகனங்களில் எரிபொருள் மின்கலங்களைக் கொண்ட முதல் இடமாக லடாக் இருக்கும்" "கடந்த 8 ஆண்டுகளில், நாட்டில் சுமார் 1,70,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுவு திறன் சேர்க்கப்பட்டுள்ளது" "அரசியலில், மக்களுக்கு உண்மையைச் சொல்ல தைரியம் இருக்க வேண்டும், ஆனால் சில மாநிலங்கள் அதைத் தவிர்க்க முயற்சிப்பதை நாங்கள் காண்கிறோம்" ‘’சுமார் ரூ.2.5 லட்சம் க

வள்ளுவர் அரிசிக்கு வரியும்.! வறியவர்கள் பிள்ளைக்கு உணவும்

வள்ளுவர் அரிசிக்கு வரியும்.! வறியவர்கள் பிள்ளைக்கு உணவும்        25 கிலோ வரைக்கும் தானே ஜிஎஸ்டி? இந்தா பிடி 26 கிலோ.அரிசி பை.தமிழ்நாடு பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளுக்கு 5 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கும் மத்திய நிதியமைச்சகம் மற்றும் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவால், தமிழகத்தில் அரிசியின் விலை இன்று முதல் கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் 2017 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட அரிசி பிராண்டுகளுக்கு வரி விதித்திருந்தது. ஆனால், பதிவு செய்யப்படாத பிராண்டுகளுக்கு விலக்கு அளித்துள்ளது. தற்போது இந்தத் தளர்வுகள் நீக்கப்பட்டு அரிசி பிராண்டுகளுக்கு இனி 5 சதவீத ஜிஎஸ்டி என்ற முறையைக் கொண்டு வந்துள்ளது. சில்லறை முறையில் அரிசி (Loose rice) ஜிஎஸ்டியின் வரம்பிற்குள் வராது என்றாலும், அரிசி மற்றும் பிற உணவுப் பொருட்கள் FSSAI சட்டத்தின் கீழ் பேக் செய்யப்பட்ட வடிவில் விற்கப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து கடைக்காரர்களுக்கும் மாநில உணவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுவரை ரிஜிஸ்டர்டு பிராண்டுகளுக்கு மட்டுமே 5 சதவீத ஜிஎஸ்டி இருந்த நிலையில், தற்போது பண்டல் பேக்கிங் செய்யப