ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய பின்னர் .ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் பதவி விலகிய நிலையில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார். ஆளுநரும் அதை ஏற்றுக்கொண்ட நிலையில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார்.ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரானவர் காங்கிரஸ் கட்சியின் இந்தியா கூட்டணியில் உள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய முதல்வராக ஹேமந்த் சோரனின் மனைவி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சம்பாய் சோரன் தேர்வாகியுள்ளார்சம்பாய் சோரனுக்கு 41 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் உள்ளது. 81 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டசபையில் சம்பாய் சோரனுக்கு 41 உறுப்பினர்களின் ஆதரவு . ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி துவங்கப்பட்ட காலத்திலிருந்து, ஹேமந்த் சோரனின் தந்தை ஷிபு சோரனுடன் கட்சியிலிருந்து வருபவர் சம்பாய் சோரன். தற்போது ஜார்கண்ட...
RNI:TNTAM/2013/50347