முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மராட்டிய முன்னால் சட்டமன்ற உறுப்பினர் மீது ஆதிதிராவிட பெண் கவுன்சிலர் புகார்

      ம காராஷ்டிர மாநிலம்  தானே மாவட்டத்தில் ஆதிதிராவிடப்  பெண் மாநகராட்சி கவுன்சிலருக்கு பா லியல் வன்கொடுமை செய்த முன்னாள் எம்.எல்.ஏ நரேந்திர மேத்தா உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மீரா-பயாந்தர் மாநகராட்சியின் பெண் கவுன்சிலரான  தன்னை  எம்.எல்.ஏ நரேந்திர மேத்தா பல ஆண்டுகளாக பாலியல் ரீதியாக  வன்கொடுமை செய்து வருவதாக குற்றம்சாட்டும் காணோளிக்  காட்சி இரண்டு நாட்கள் முன்பு சமூக வலைதளங்களில் பரவியது. அந்தப் பெண் அதில் கூறியிருந்த தகவலின் அடிப்படையில் முன்னாள்  எம்.எல்.ஏ நரேந்திர மேத்தா மற்றும் சஞ்சய் தர்கர் என்ற இருவர் மீதும் மீரா- பயாந்தர் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.வன்கொடுமைதடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட இருவரும் தலைமறைவாக உள்ளதால் அவர்களைக் கைது செய்யப்படவில்லை என்று காவல்நிலைய அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வேளாங்கண்ணி கிறிஸ்தவ தவக்கால வழிபாடு

      கி றிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் துவங்கியது ; உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு: இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3 ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் உலக முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாள் சாம்பல் புதன் துவங்கி. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. பேராலயத்தில் நடைபெற்ற 40 நாள் தவக்காலம் சிறப்புத் திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பின்னர் கிறிஸ்தவர்களின் நெற்றியில் பேராலய அதிபர் பிரபாகர் சாம்பல் பூசி 40 நாள் தவக்காலத்தை தொடங்கி வைத்தார்  சூசைமாணிக்கம் பேராலய பங்குத்தந்தை வேளாங்கண்ணியில் விழா ஏற்பாடுகளைச் செய்திருக்றார்கள்

மலேசியாவில் புதிய பிரதமர்

      ம லேசிய நாட்டின் எட்டாவது பிரதமராக முகைதீன் யாசீன் தேர்வு செய்யப்பட் டுள்ளார் அதை முறையாக அந் நாட்டின் மன்னர் அறிவித்தார் புதிய பிரதமர் முஹைதீன் யாசின் - மலேசியா மன்னர் அறிவிப்பு மலேசியா பிரதமர் மகாதீர் முகம்மது பதவி விலகியதைத் தொடர்ந்து, முஹைதீன் யாசினை புதிய பிரதமராக அந்நாட்டின் மன்னர் நியமித்துள்ளார்.மலேசிய அரசியலில் பிரதமர் தேர்வாகும் முன் ஒரு சுனாமியே அடித்து விட்டது... அங்கும் 11பேருடன் ஒரு போராட்டம்  அனைத்துலக ரீதியில் ஏற்பட்டு வரும் ஆபத்துகளால் மலேசியாவின் பொருளியலில்  ஒரு நிச்சயமற்ற நிலையுள்ளது. அத்துடன் மலேசிய மக்களின் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவினங்களினாலும் அதிருப்தியில் இருக்க,  மலேசியாவின் அரசியல் ஆட்டங்கண்டுள்ளது. மலேசியாவில் கடந்த வாரத்தில் இருந்து பிரதமர் இல்லாத அமைச்சர்கள் இல்லாத தலைமைச் செயலாளரை வைத்து மட்டுமே மலேசிய அரசியல் இயங்குகியது என்பது தான் உண்மை. எதுவரை எத்தனை நாள் இது தொடரும்  அல்லது மறுதேர்தல் நடத்துவதா என்பதைக் காலம் தான் தீர்மானிக்க வேண்டும் என இருந்த நிலை  அந்த தீர்மானம் இப்பொழுது அந்த நாட்டு மன்னர் கையில் வந்தது. பின்னால் நடந்த நிகழ்வுகள் அனைத

மதுரை வண்டியூர் சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டண விலக்கு

ம துரை மாவட்ட ஆறு சுங்கச்சாவடிகள்  அறுபது  கிலோ மீட்டர் தூர இடைவெளியில்  இருக்கின்றன. இருபத்திஏழு கிலோ மீட்டர் தூர இடைவெளியில் மூன்று  சுங்கச்சாவடிகள் இருகின்றன. நீதிமன்ற உத்தரவை அடுத்து அங்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  மதுரையில் மாநில நெடுஞ்சாலையிலுள்ள வண்டியூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வசதிகள் அனைத்தையும் செய்துத்தரும் வரை இந்தத் தடை இருக்கும்        வண்டியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியானது, நெடுஞ்சாலை ஆணைய விதிகளை மீறி இருப்பதாக புகார் எழ அத்துடன்  ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தனி வழி  இல்லை என்ற பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள் வண்டியூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தடை விதித்தனர். இதன்படி, இன்று காலை 9 மணி முதல் வண்டியூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படாது. அடிப்படை வசதிகள் செய்துதரும் வரை கட்டணம் வசூலிக்க தடை இருக்கும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அரசு மருத்துவர்களுக்கு போராட்டம் நடந்த உரிமை இல்லை உயர்நீதிமன்றம்

      அ ரசு மருத்துவர்களுக்குப் போராட்டம் நடத்த உரிமையில்லை பணிமாற்ற உத்தரவுக ளை ரத்துசெய்து  உயர் நீதிமன்றம் உத்தரவு அரசு மருத்துவர்களுக்குப் போராட்டம் நடத்த உரிமையில்லை எனத் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களைப் பணிமாற்றம் செய்த உத்தரவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்தது. ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 29.10.2019 ஆம் தேதி முதல் ஐந்து நாட்கள் அரசு மருத்துவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தரப்புப் பேச்சுவார்த்தைக்குப் பின் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு 'சார்ஜ் மெமோ'  குற்றச்சாட்டு குறிப்பாணையும், சிலருக்கு பணி மாறுதல் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன. இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்த நிலையில், நேற்று இறுதித் தீர்ப்பளித்த நீதியரச

இளையராஜா வழக்கில் இரண்டு வாரத்தில் தீர்வு வருமா உயர் நீதிமன்றம் உத்தரவு

பி ரசாத் ஸ்டூடியோ  - இளையராஜா மோதலில்  சென்னை உரிமையியல் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் இரண்டு வாரம் கெடு இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ இடையேயான பிரச்சனை... உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளத தன்னுடைய இட உரிமை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தும் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் இளையராஜா மனு தாக்கல் செய்திருந்தார்.  இசைஞானி இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ஸ்டூடியோ 1-ல் வாடகையாளராக வசித்து இசையமைத்து வந்தார். இதற்காக பிரசாத் ஸ்டுடியோ அதிபர் எல் வி பிரசாத் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் அவர் மறைந்த பின்பு தற்போதைய பிரசாத் ஸ்டுடியோவின் இயக்குநராக இருந்து அதை நிர்வகித்து வரும் எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத்த்துக்கு இதில் உடன்பாடு இல்லை எனத் தெரிகிறது. இளையராஜா தரப்பில் இருந்து அவரது உதவியாளர கபார் என்பவரிடம் இருந்து ’இளையராஜா இசையமைக்கும் பகுதியான ஸ்டூடியோ-1இல் சில மேசைகளைப் போட்டு சுமார் 20 கணினிகளை வைத்து வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது இசையமைப்புப் பணிக்கு இடையூறாக உள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஸ்டூடிய

சூப்பர் சிங்கர் போட்டியாளர் கிரிஷாங்கின் பாடல் வைரலானது

      சூ ப்பர் பாடகர் போட்டியாளர் கிரிஷாங்கின் ‘புத்தியுள்ள மனிதரெல்லாம்’ திரைப்படப் பாடல்  சமூக வலைதளத்தி ல் வைரலாகிறது கிரிஷாங் தனது வகுப்பறையில் பாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது பலரும் பாராட்டி வருகின்றனர்

இடைத்தேர்தலில் வென்ற தி மு க சட்டமன்ற உறுப்பினர் காலமானார்

      கு டியாத்தம் எம்.எல் ஏ காலமானார்  திமுகவின் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ( தனி ) தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் காத்தவராயன்.  கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற 18 தொகுதி இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர். திருமணம் செய்துக்கொள்ளவில்லை. தனது சகோதரரின்  குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். அவருக்கு இதயநோய்  இருந்து வேறு  காரணங்களால்  குணமாகாமல் கடந்த மாதம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டது.  மருத்துவமனைக்கு நேரில் சென்று எம்.எல்.ஏ காத்தவராயன் உடல் நலனை விசாரித்துவிட்டு வந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலை சீரடையவில்லை. அவரது உடல் மிகமோசமான கட்டத்தில் இருந்து வந்த நிலையில் மருத்துவ குழு, எம்.எல்.ஏவின் உறவினரை அழைத்து தகவல் கூறியுள்ளார்கள். இதனை கேட்டு அதிர்ச்சியாகியது அவரது சகோதரர் குடும்பம். இந்த தகவல் உடனடியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்றது. அவர் மருத்துவமனைக்கு சென்று மீண்டும் பார்த்துவிட்டு, மருத்துவர்களிடம் உடல்நிலை குறித்து கேட்டுவிட்டு வந்துள்ளார். இந்த தகவல் வேலூர் மாவட்ட கட்சியினரு

ஜப்பான், தென்கொரியா பயணிகள் இந்தியா வர தற்காலிகத் தடை

    கொ ரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக ஜப்பான், தென் கொரியா நாட்டு பயணிகளுக்கு இந்தியா வர தற்போது விசா நிறுத்தம் தடை உள்துறை அமைச்சரகத்தின் தகவல்  தென்கொரியா, ஜப்பான் நாட்டுப் பயணிகள் இந்தியா வர தற்காலிகமாக தடைவிதித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜப்பான், தென்கொரியாவில் கொரோனா வைரஸ்  தாக்குதல் பரவுவதால் விசா தருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அரசியின் அந்தப்புரத்தை அறியாதவர் அரசிக்கு உரிமை கோரலாமா கௌதம்மேனன்

        த மிழக முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு பேசும்  படம்..'குயின்' தீபாவுக்கு வழக்கு தொடர எந்த தகுதியும் இல்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் கவுதம் மேனன் பதில் மனு தாக்கல் உயிருடன் இருந்த காலத்தில்  ஜெயலலிதாவைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறிய தீபாவுக்கு வழக்குத் தொடர எந்தத் தகுதியும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திரைப்பட இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கணா ரணாவத் நடிக்கும் 'தலைவி' என்ற தமிழ்ப் படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். அதேபோன்று, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் 'குயின்' என்ற இணைய தளத் தமிழ்த் தொடரை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். தன்னுடைய அனுமதியில்லாமல் வெளியாகும் 'தலைவி', 'ஜெயா', 'குயின்' ஆகிய படங்கள்,மற்றும்  இணையதளத் தொடருக்குத் தடை விதிக்கக் கோரி ஜெயலலிதா அண்ணன் ஜெயகுமாரின் திருமணமான  மகளான தீபா உரிமையியல் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுப

சமையல் ஏரிவாயு தேவைக்கு இனி (what's app)கட்செவியஞ்சல் போதும்

    இ னி தொலைபேசியில் உள்ள கட்செவியஞ்சல் எனும் whatsapp-ல் கேஸ் சிலிண்டர் ஆ ர்டர் செய்யலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது போன் செய்தே சிலிண்டர் இதற்கு முன் போன் செய்தே முன்பதிவு செய்யவேண்டும். ஆனால் டிஜிட்டல் இந்தியாவில் எத்தனையோ சிறப்பம்சங்களும், தொழில்நுட்பங்களும் வளர்ந்துக் கொண்டே வருகிறது. அதன்படி தற்போது நவீன முறையில் சிலிண்டர் ஆர்டர் செய்யலாம் என அறிவிப்பு. இனி வாட்ஸ் ஆப் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி நிர்வாக இயக்குநர் பி.ஜெயதேவன், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். தமிழகத்தில் 1.36 கோடி சமையல் எரிவாயு இணைப்பு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தமிழகத்தில் 1.36 கோடி சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போது தொலைபேசி மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதுபோன்று பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண்ணில் இருந்து இனி வாட்ஸ் ஆப் மூலமாகவும் பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. 75888 88824 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலம் சம

இந்து சமய அறநிலையத்துறை தனி வாரியமாக வரலாம் அதுவே ஊழல் ஒழிப்பு

        ஊ ழல் மலிந்துள்ளன துறைகளில் இந்துசமய அறநிலையத்துறையும் ஒன்று சிலைகடத்தல் விவகாரமாகட்டும்,வேறு ஸ்கீம் நிறைவேற்றுவதாகட்டும் ஊழல் தான் இதை தடுக்க மத்திய அரசே தனிவாரியம் ஏற்படுத்தினால் அன்றி வேறு சாத்தியமில்லை ஆகவே விரைவில்  தனி நபர் மசோதா தாக்கலாக வாய்ப்பு உண்டு .இது பிரதமராகும் முன் நரேந்திரமோடி குஜராத் முதல்வராக இருந்த போதே தெரிவித்த மசோதா. "இதர மதங்கள் தன்னிச்சையாக செயல்படும்போது இந்து மதம் மட்டும் அரசு பிடியில் அல்லல் படுவது ஏன்?" என்று சிந்தித்தார்.அதன் தாக்கம் தான் இன்று அவர் மத்திய ஆட்சியில் வந்து விட்டதால் மசோதாவாக தாக்கலாக வாய்ப்பு உண்டு எனத் தகவல் .அப்படி ஆனால் இந்துக் கோவில்கள் இனிமேல் மத்திய அரசு நியமனம் பண்ணும் தனி வாரியத்திடம் கொடுக்கப்படும். மாநில அரசுகளின் கீழ் இயங்கும் அறநிலயத்துறை,தேவஸ்தானம்,தேவசம்போர்டு முதலியன யாவையும் கலைக்கப்பட்டு விடும். உண்மையான சமத்துவம் என்பது எந்த மத விஷயத்திலும் அரசு தலையீடு கூடாது என்ற நீதிமன்ற ஆலோசனைக்கு இணங்க எடுக்கப்படும் முடிவாக இது இருக்கும் வக்பு போர்டு, கிருஸ்துவ டயோஷியஸ் போன்று தன்னிச்சையாக இயங்கவுள்ள இந்து ஆணையத்திடம

நஷ்டத்தில் இயங்கும் ஏர்இன்டியா விற்பனைக்கு வருகிறது

       ந ஷ்டத்தில் இயங்கும்          ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதை வாங்கும் முயற்சியில் பிரபல தொழில் குழுமமான அதானி நிறுவனமும் ஈடுபட்டுள்ளதாக  தகவல். நாங்கள் வாங்கினால், ஏர் இந்தியாவை புதுப்பித்து லாபமுடையதாக ஆக்குவோம்’ என்று அதானி குழும தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இந்த நிறுவனம் ஏற்கனவே விமான நிலையங்கள் பராமரிப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் ஏலம்  எடுத்து பராமரிப்பில்  ஈடுபட்டு வருகிறது. கடந்த 2019ல் அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், குவஹாத்தி, திருவனந்தபுரம், மங்களூரூ ஆகிய 6 விமான நிலையங்கள் பாராமரிப்பு மற்றும் மேலாண்மையை ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தூங்கியவர்களை எழுப்பி கொள்ளையடித்த திருடர்கள் நாகையில் பரபரப்பு

        சு. மணிகண்டன் மாவட்டச் செய்தியாளார்       ,நாகப்பட்டினம்  திரைப்படக் காட்சி போல வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்களைத் தாக்கி நகைகளைக் கொள்ளையடித்துச்சு.மணிகண்டன் மாவட்டச் செய்தியாளார்,நாகப்பட்டினம்.            திரைப்படக் காட்சி போல வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்களைத் தாக்கி நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்மத் திருடர்களுக்கு காவல்துறை  வலைவீச்சு  நாகை மாவட்டம் பொரவச்சேரியைச்  சேர்ந்த பன்னீர் அவரது மனைவி பொண்ணேஸ்வரி , பண்ணீர் தங்கை ராணி ஆகியோர் வழக்கம்போல நேற்றிரவு வீட்டில் உறங்கத்தில் இருக்க நள்ளிரவு வீட்டிற்குள் நுழைந்த 3 பேர் கொண்ட மர்ம திருட்டுக் கும்பல்  உறங்கிய மூவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். தொடர்ந்து மூவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதை சுதாரித்த கொள்ளைக் கும்பல் அவர்களிடம் இருந்த தாலிச் செயின், மோதிரம் உள்ளிட்ட 16 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர். கொள்ளைக் கும்பல் இரும்பு கம்பியால் தாக்கியதில் காயமடைந்த பொண்ணெஸ்வரி மற்றும் ராணி ஆகியோர் நாகபட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இத் தகவல் அறிந்

பள்ளிக்கல்வி பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

        த மிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் 10 ம்  வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்27.ல் தொடங்கி ஏப்ரல்.13 ல் நிறைவு;மே.4ஆம் தேதி முடிவுகள் வெளியீடு: பிளஸ்1 பொதுத்தேர்வு மார்ச்.4.ல் தொடங்கி மார்ச்.26இல் நிறைவு;மே.14ஆம் தேதி முடிவுகள் வெளியீடு. பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச்.2.ல் தொடங்கி மார்ச்.24ல் நிறைவு; ஏப்ரல். 24ஆம் தேதி முடிவுகள் அறிவிப்பு.            10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.45 லட்சம் மாணவர்களும்,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.26 லட்சம் மாணவர்களும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.16 லட்சம் மாணவர்களும் எழுதவுள்ளனர்.என பள்ளிக் கல்வித்துறையின்   அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்

கலவரம் தொடர்பாக உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதியரசர் பணி மாற்றம்

      டெ ல்லி கலவரம் தொடர்பாக பாஜக தலைவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட  டில்லி உயர்நீதிமன்ற நீதிப தி எஸ். முரளிதர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.டெல்லி உயர்நீதிமன்றம் கலவரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது அதில் "அரசியல் தலைவர்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியபோதே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். _வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினால் நடவடிக்கையின் உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை” ஷகீன் பாக் போராட்டம் தொடர்பான விசாரணையின் போது உள்துறை அமைச்சக வழக்கறிஞரிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இத்தகைய கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். தேர்வுகளும்  ஒத்திவைப்பு"என்னது பிஜேபி தலைவர் பேசுன வீடியோவ நீங்க பாக்கலயா ? உங்க ஆபிஸ்ல டிவியே இல்லையா ? ஒரு காவல்துறை அதிகாரி எப்படி இவ்வாறு சொல்ல முடிகிறது மிகவும் கவலையாக உள்ளது,   இவருக்கு அந்த வீடியோவை போட்டுக் காட்டுங்க” நான் பாஜக தலைவர் பேசிய வீடியோவை பார்க்கவில்லை எனக் கூறிய டெல்லி DCP காவல்துறை அதிகாரிக்கு நீதிமன்றத்திலேயே வீடியோவை போட்டு காட்டிய டெல்லி உயர் நீதிமன்றம் வழக்கு விசாரனை தொட

ஆலயத்தில் பூங்கா பூமி பூஜையில் புதையல்

தி ருச்சி  திருவானைக்காவல்திருக்கோவில் வளாகத்தில் பூங்கா அமைப்பதற்காக முத ற்கட்ட பூர்வாங்க பணிக்காக குழி தோண்டிய போது தங்கப் புதையல் கிடைத்தது. தற்போது வரை 500க்கும் மேற்பட்ட தங்க நாணயம் கண்டெடுப்பு. திருக்கோவில் அலுவலகத்தில் வைத்து கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது.மதிப்பீடு செய்த பின் தான் அதன் தொன்மையான நிலை தெரியும்

பங்காரு அடிகளார் ஷஸ்டியப்தபூர்த்தி விழா

     கோ பால் நாயக்கர் மகன் பங்காரு அடிகளார் 80 ஷஸ்டியப்த பூர்த்தி விழா மேல்மருவத்தூர் பங்காரு அடிகள் 80 ம் ஆண்டு  சதாபிஷேக நலத் திட்ட உதவி வழங்கும் விழாவில் ஆன்மீக, அரசியல்  தலைவர்கள் பங்கேற்பு அடிகளாரின் 80வது அவதாரத் திருநாள், பெருமங்கல முத்து விழா மார்ச் 3ம் தேதி மேல்மருவத்தூரில் சிறப்பாக நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு பூஜைகளும், நலத்திட்ட உதவிகளும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு அங்கமாக கலவையில் ஆதிபராசக்தி கல்விக் குழுமத்தின் வளாகத்தில் ஆன்மிககுரு அடிகளார் மற்றும் லட்சுமி பங்காரு அடிகள் பெரு மங்கல முத்து விழா சிறப்பாக நடைபெற்றது. பாத பூஜையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆதிபராசக்தி கலையரங்கத்தை அடிகளார் திறந்து வைத்தார். மேடை நிகழ்ச்சிகள் மூலமந்திரம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. பின்னர் ஆதிபராசக்தி குழுமக் கல்வி செயலர் ஆர்.கருணாநிதி நன்றியுரை ஆற்றினார். விழாவிற்கு ஆதிபராசக்தி கல்வி, மருத்துவ மற்றும் பண்பாட்டு அறநிலையத்தின் அறங்காவலர்கள் கோ.ப.செந்தில்குமார், ப.ஸ்ரீதேவி ரமேஷ், ப.உமாதேவி ஜெய்கணேஷ், ஆஷா அன்பழகன் மற்றும் பல் மருத்த

சி ஏஸ் தேர்வில் தேசிய முதலிடம் பெற்ற மாணவி பிரியா வாழ்த்துக்கள் குவிகின்றன

        கா ர்ப்பரேட் நிறுவனங்களில் நிறுவனச் செயலர் பதவிக்காக இந்திய இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்பனி செக்ரட்டரிஷிப் சார்பில் ஆண்டுதோறும் தேர்வு நடத்தி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில் சி.எஸ் எக்ஸிகியூட்டிவ் பழைய பாடத்திட்டத்துக்கான தேர்வில் சென்னையைச் சேர்ந்த பிரியா என்ற மாணவி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். ICSI பொதுவாக சி.ஏ, சி.எஸ் தேர்வுகள் என்றாலே மிகவும் கடினமாக இருக்கும். அதற்காக நிறைய படிக்க வேண்டும், உழைக்க வேண்டும் என்று நிறைய பேர் சொல்ல நாம் கேட்டதுண்டு, ஆனால் சென்னையைச் சேர்ந்த மாணவி சி.எஸ் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்  அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்

சட்டமன்ற உறுப்பினர் காலமானதால் திமுகவின் பலம் 99 ஆனது

    செ ன்னை, திருவொற்றியூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னால் மீன்வளத்துறை அமைச்சருமான கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். வயது 57  திமுகவின் மீனவரணிச் செயலராகவும் இருந்துள்ளார். கே.பி.பி.சாமி காலமானதால்  திமுக தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 99 தாகக்     குறைந்துதி மு க சார்பில் கடந்த 2016 தேர்தலில்  கே.பி. பி.சாமி 82,205 வாக்குகள்  46.11சதவீதமும் 4,863 வாக்குகள் அ தி மு க வேட்பாளர் பால்ராஜை விட அதிகம் பெற்று வெற்றி பெற்றவராவார்.திமுகவை உலுக்கிய எம்.எல்.ஏ மரணம் அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கே.பி.பி.சாமி, கே.வி.குப்பத்தில் உள்ள இல்லத்தில் காலமானார். இதையடுத்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியினர் சென்றுள்ளனர். கடந்த 2005 ஆம் ஆண்டு கே.வி.குப்பத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவர் மாயமான வழக்கில், கே.பி.பி.சாமி மற்றும் அவரது சகோதரர்கள் கைது செய்யப்பட்டு ஆறு மாதத்திற்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது அவர் மனைவி உமா மாரடைப்பால் காலமானார். 2015 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் இடைத்தே

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செய்தியாளர்கள் சந்திப்பு

    கா ங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செய்தியாளர்களுக்குப் பேட்டி இந்தக் கலவரத்துக்கு மத்திய அரசு, டெல்லி அரசு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும்.  டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அமைதியை நிலைநாட்டத் தவறிவிட்டார். பாஜக தலைவர் கபில் மிஸ்ரா, வன்முறையைத் தூண்டும் வகையில் சர்ச்சைக்குரியவாறு பேசியுள்ளார். டெல்லியில் நிலவும் சூழல் குறித்து காங்கிரஸ் காரியக் கமிட்டி ஆலோசித்தது. டெல்லியில் சூழல் மிகவும் மோசமாக இருப்பதால், அவசரமான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு வார்டிலும் அமைதிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, மக்களிடம் பேச வேண்டும். தேவையான அளவுக்கு போலீஸார் களத்தில் இறக்கப்பட்டு அமைதியை நிலைநாட்டி இயல்பு நிலையை ஏற்படுத்த வேண்டும். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை டெல்லி முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாற்றி, அவர்களின் குறைகளைக் கேட்டறிய வேண்டும் எனக் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது'' இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்தார்.

நாக்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நாடெங்கும் பொருந்தும்

      உ லகிலேயே சாலை விபத்துக்கள் காரணமாக அதிகஉயிர்களைப் பறிகொடுத்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் ஒரு ஆண்டில் மட்டும் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 1.50 லட்சம் பேர். மேலும் பல லட்சக்கணக்கானோர் படுகாயம் அடையவும் சாலை விபத்துக்கள் காரணமாக உள்ளன. எனவே சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் தரப்பில் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவதே சாலை விபத்துக்களுக்கு முக்கியமான காரணமாக உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் விதிகளை பின்பற்ற வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை மத்திய அரசு சமீபத்தில் பல மடங்கு உயர்த்தியது. கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இந்திய அரசால், புதிய மோட்டார் வாகனச் சட்டம் விதிகள்  அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்தியாவை பொறுத்தவரை, இரு சக்கர வாகனங்களி

காங்கிரஸ் மாநிலத் தலைவர் அறிவிப்பு

    த மிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிவிப்பு தமிழக காங்கிரஸ் கட்சியி ன் சொத்துப்பாதுகாப்புக் மற்றும் மீட்புக் குழு உறுப்பினர்கள் நியமனம் குறித்த விபரங்களை வெளியிட்டார்

பூனைகளைச் சோதனை செய்தார்கள் யானைகள் தப்பியது தற்போது தான் பிடிபடுகிறது

        நீ ட் தேர்வுகளில் முறைகேடு செய்த நபருக்கு ஹிந்தி தெரியாதவர் ஹிந்தியில் தேர்வு எழுதியுள்ளார் எப்படி மருத்துவப்  படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து  எழுதி, மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தவர்கள் குறித்த தகவல் தமிழகக் காவல்துறைக்குக் கிடைத்தது. அப்படி  மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் வெங்கடேசன் மகன் உதித்சூர்யா  பாலாஜி மருத்துவக் கல்லூரி மாணவர் டேவிட் மகன்  ராகுல், , சவிதா மருத்துவக் கல்லூரி மாணவி மைனாவதி மகள் பிரியங்கா, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் முகம்மது ஷபி மகன் இர்ஃபான், எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மாணவர் சரவணன் மகன் பிரவீன்,  என பத்துப்பேர் கைது செய்யப்பட்டனர்.நீட் தேர்வு  ஆள்மாறாட்டம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் டிஜிபி ஜாபர்சேட் உத்தரவின் படி ஐஜி சங்கர் மேற்பார்வையில் சிபிசிஐடி போலீஸார் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்திவருகிறார்கள். 2019-2020 ஆம் கல்வி ஆண்டு போல 2018-2019 வது கல்வி ஆண்டிலும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது குறித்து சிபிசிஐடி போலீஸாருக்கு ரகச

பீகார் சட்டசபையில் என் ஆர் சி அமல்படுத்தப் போவதில்லை எனத் தீர்மானம்

      பீ கார் மாநிலத்தில் என்ஆர்சியை அமல்படுத்தக்கூடாது.ஏன சட்டசபையில் ஒரும னதாக தீர்மானம் நிறைவேற்றம்.    பீகார் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.  இரண்டாவது நாளில்  , பீகார் மாநிலத்தில் தேசிய குடிமக்களின் பதிவேட்டை (என்.ஆர்.சி) செயல்படுத்தக்கூடாது என்று சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றியது. இருப்பினும், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (NPR) அதன் 2010 வடிவத்தில் செயல்படுத்த ஒரு தீர்மானத்தை அவர்கள் நிறைவேற்றினர். முன்னதாக ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி போன்ற பிரச்சினைகள் குறித்து கடும் விவாதத்தில் ஈடுபட்டதால் சபாநாயகர் சபையை 15 நிமிடங்கள் ஒத்திவைத்தார். முன்னதாக பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறுகையில், "தேசிய மக்கள்தொகை பதிவு (என்.பி.ஆர்) படிவங்களிலிருந்து 'சர்ச்சைக்குரிய உட்பிரிவுகளை' தவிர்க்க கோரி பீகார் அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது" என்று கூறியிருந்தார்.

சார்பு ஆய்வாளர் வில்சன் கொலையாளி வீடுகளில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை

    சா ர்பு ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொலை தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி லேப்டாப், செல்போன், வங்கி கணக்குப் புத்தகங்களைக் கைப்பற்றியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில்  ஜனவரி மாதம் எட்டாம் தேதி பணியிலிருந்த சிறப்புக் காவல் சார்பு ஆய்வாளர் வில்சன் பயங்கர வாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். வழக்கில் தொடர்புடைய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காஜாமொய்தீன், ஜாபர் அலி, அப்துல் சமது ஆகியோர்  கைது செய்யப்பட்டு,  திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை தேசியப் புலனாய்வு முகமை அதாவது என்.ஐ.ஏ.வுக்கு சமீபத்தில் மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வழக்கு தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் நேற்று நான்கு  இடங்களில்  அதிரடி சோதனை நடத்தினர். நெய்வேலி டவுன்‌ஷிப் ஏழாவது வட்டம் பெரியார் சாலையில் உள்ள என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் காஜாமொய்தீன். இவரது முதல் மனைவி இந்திரா காந்தி.  என்.எல்.சி. பொதுமருத்துவமனையில் செவிலியராக பணியில் இருக்கிறார்.  என்.ஐ.ஏ. துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமா

மதுரையில் இரவில் வண்டி திருடும் சீர்திருத்தபள்ளிச் சிறார் குற்றவாளிகள்

      ம துரையில் இரவு 1 மணிக்கு மேல் மட்டும் பைக்கை திருடும் சிறுவர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மதுரை அனுப்பானடி தமிழன் தெருவை சேர்ந்தவர் வழக்கறிஞர் காரல் மார்க்ஸ், சிம்மக்கல்லில் மக்கள் மருந்தகம் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மருந்தகத்தில் டைல்ஸ் ஒட்டும் பணி நடந்துள்ளது. இரவு 12 மணியளவில் தனது புல்லட்டில் வீட்டிற்கு வந்துள்ளார் காரல் மார்க்ஸ். வழக்கம் போல வாகனத்தை வெளியில் நிறுத்திவிட்டு வீட்டில் மொபைல்ஃபோனை பார்த்துக் கொண்டிருந்த போது இரவு 2:15 மணிக்கு மருந்த டைல்ஸ் பணி நிறைவடைந்ததாக அந்த பணியில் ஈடுபட்ட தொழிலாளர் ஃபோனில் தகவல் தெரிவித்துள்ளார். அப்போது வெளியே வந்த காரல் மார்க்ஸ் தனது பைக் மாயமானது கண்டு அதிர்ந்துள்ளார். உடனே தனது வீட்டின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது சரியாக 1 மணிக்கு காரல் மார்க்ஸ் வீட்டிற்கு வந்த மூன்று பேர் லாவகமாக பைக்கை திருடி செல்லும் காட்சி அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் காரல் மார்க்ஸ். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ப

திருவரங்கம் மாசித்திருவிழா தெப்ப உற்சவம் துவக்கம்

              ஸ்ரீ ரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா நாளை தொடங்குகிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 6ந் தேதி வரை நடைபெறுகின்றது. தெப்பத்திருவிழாவின் முதல் நாள் சுவாமி ஹம்ச வாகனத்திலும், 2வது நாள் ஹனுமந்த வாகனத்திலும், 3வது நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும், 4வது நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5வது நாள் இரட்டை பிரபை வாகனத்திலும், 6வது நாள் யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தெப்பத்திருவிழாவின் 7வது நாளன்று நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார்.திருவிழாவின் 8வது நாளில் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் அடுத்த மாதம் அதாவது மார்ச்.,5-ந் தேதி மாலை நடைபெறுகிறது. சரியாக மாலை 3 மணிக்கு நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் அமைந்துள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு எல்லாம் வந்து சேருகிறார். இரவு 7.15 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தில் இருந்து சுவாமி புறப்பட்டு இரவு 7.30- 9 மணி வரை தெப்ப உற்சவம் கண்

கொடிய விஷமாகிக் குழந்தைகள் இறப்புக்குக் காரணமான இருமல் மருந்து

          இ ருமல் மருந்து குடித்து 9 குழந்தைகள் உயிரிழப்பு. இருமல் மருந்து குடித்த 9 குழந்தைகள் ஜம்மு காஷ்மீரில் அடு த்தடுத்து உயிரிழந்தன. இதன் காரணமாக ஆரம்ப கட்ட விசாரணைக்கு பிறகு, சர்ச்சைக்குரிய இருமல் மருந்தான coldbest- pc மருந்தை தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் திருப்பி அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த மருந்தில் விஷத்தன்மை இருந்ததாகவும், இதுபற்றி ஆரம்பத்திலேயே கண்டறியப்படாதது ஏன் என்பதும் பெரும் கேள்விகளை எழுப்பி உள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் டிஜிட்டல் விஷன் நிறுவனம் Coldbest - PC Syrup என்கிற பெயரில் இருமல் மருந்தை தயாரித்து வருகிறது. இந்த மருந்து இமாச்சல பிரதேசத்தில் தயாரிக்கப்பட்ட போதிலும் சென்னையில் உள்ள மணலியில் இருந்து தான் வேதிப்பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் Coldbest - PC Syrup என்ற இருமல் மருந்தை குடித்த 9 குழந்தைகள் ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் கடந்த 17ம் தேதி அடுத்தடுத்து உயிரிழந்தன. 17 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன. குழந்தைகள் உயிரிழக்கும் அளவுக்கு Coldbest - PC மருந்தில் என்ன இருக்கிறது என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட

தமிழக சட்டமன்றப்பேரவைக் கூட்டம் இரண்டாம் அமர்வு அறிவிப்பு

      த மிழக சட்டப்பேரவைக் கூட்டம் மார்ச் ஒன்பதாம் தேதி கூடும் என சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். 2020 -2021 ,ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை  பிப்ரவரி பதினான்காம் தேதி நிதியமைச்சரான துணை முதலவர் தாக்கல் செய்தார்.  தொடர்ந்து, இருபதாம் தேதி அதன் மீதான விவாதம் நடத்தப்பட்டது. மேலும், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் பற்றிய அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி சட்டப்பேரவையில் வெளியிட்டார். இருப்பினும், அரசின் பட்ஜெட்டை விமர்சித்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் அவையை தொடர்ந்து புறக்கணித்து  வெளிநடப்புச் செய்தனர். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் மீண்டும் மார்ச்  ஒன்பதாம் தேதி கூடும் என சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.இந்தப் பேரவைக் கூட்டத்தின் இரண்டாவது அமர்வில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என தெரிவித்தார்.

விவசாயி மகனான முதல்வருக்கு விவசாயிகள் நடத்தும் பாராட்டுவிழா

  '' மு ன்னேற்ற பாதையிலே மனச வைத்து.... முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து.... மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ ... வழங்கும் குணம் உடையோன் விவசாயி'' ......ஆம் விவசாயிகள் வாழ்வாதரம் காவிரிக் கடலேரமாவட்டங்கள் தமிழக நெற்களஞ்சியமாக விளங்கும் பகுதி இங்குள்ள விவசாயிகள் சார்பில் மார்ச் மாதம் ஏழாம் தேதி திருவாரூரில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த உள்ளனர் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி பாயும் கடலோரப்  பகுதி அறிவித்ததால் முதல்வர்  எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா. விவசாயிகள் சங்கம் சார்பில் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்  காவிரி விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினர். அதேபோல் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமிக்கும் பாராட்டு விழா. இதில் பங்கேற்பதை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியும் உறுதி செய்துள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவ