முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாரத ஸ்டேட் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை

நிதி அமைச்சகம் பாரத ஸ்டேட் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு, தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் நிதியளிக்க தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018ம் ஆண்டு அறிவித்தது. இந்த தேர்தல் பத்திரத்தை தகுதியான அரசியல் கட்சிகள் மட்டுமே தங்களின் வங்கி கணக்கு மூலம் பணமாக்க முடியும். இந்த தேர்தல் பத்திரங்கள் பாரத ஸ்டேட் வங்கியின் 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் 1.10.2021 முதல் 10.10.2021 வரை வழங்கி, பணம் ஆக்க அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இந்த தேர்தல் பத்திரத்தை, டெபாசிட் செய்த தேதியிலேயே, அரசியல் கட்சிகளின் வங்கி கணக்குக்கு பணம் சென்று விடும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  உள்ளவர்கள் இந்த தேர்தல் பத்திரங்களை, சென்னை பாரிமுனையில்  உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் பிரதான கிளையில் பெற முடியும்.

சர்வதேச முதியவர்கள் தினத்தை முன்னிட்டு மூத்த குடிமக்களை கௌரவிக்கும் வயோ நமன் நிகழ்ச்சி: அக்டோபர் 1-ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் தொடங்கி வைக்கிறார்

சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சர்வதேச முதியவர்கள் தினத்தை முன்னிட்டு மூத்த குடிமக்களை கௌரவிக்கும் வயோ நமன் நிகழ்ச்சி: அக்டோபர் 1-ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் தொடங்கி வைக்கிறார் சர்வதேச முதியவர்கள் தினத்தை முன்னிட்டு மூத்த குடிமக்களை கௌரவிக்கும்  வகையில் வயோ நமன் என்ற நிகழ்ச்சியை அக்டோபர் 1 அன்று காலை 11:55  முதல் பிற்பகல் 1:05 வரை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நடத்தவிருக்கிறது. மூத்த குடிமக்கள் நலனுக்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ஆம் தேதியை சர்வதேச முதியவர்கள் தினமாக அமைச்சகம் கொண்டாடி வருகிறது. குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, வயோஷேஷ்த்ர சம்மான் விருதுகளை வழங்குவார். 14567 என்ற மூத்த குடிமக்களுக்கான உதவி எண்ணையும் அவர் நாட்டிற்கு அர்ப்பணிப்பார். மேலும் இந்த நிகழ்ச்சியின் போது மூத்த குடிமக்களுக்கான இணையதளங்களையும் அவர் தொடங்கி வைப்பார். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் விரேந்திர குமார், இணை அமைச்சர்கள் திருமதி பிரதிமா பௌமிக், திரு ராம்தாஸ் அத்வாலே, திரு ஏ. நாராயணசாமி, செயல

ராஜ்கோட்- கனால் மற்றும்.நிமச்-ரத்லம் இரட்டை ரயில் பாதை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு மத்தியப் பிரதேசத்தில் நிமச்-ரத்லம் இரட்டை ரயில் பாதை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் மத்தியப் பிரதேசத்தில் நிமச்-ரத்லம் ரயில்வே வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான  பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.  இத்திட்டத்துக்கான மொத்த மதிப்பீட்டு செலவு ரூ. 1,095.88 கோடி. இத்திட்டத்தை நிறைவு செய்யும் போது இதன் செலவு ரூ. 1,184.67  கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் 132.92 கி.மீ தூரத்துக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இத்திட்டம் 4 ஆண்டுகளில் முடிக்கப்படும்.   இந்த வழித்தடத்தில் மின் நிலையங்கள், சிமெண்ட் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால், சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும். இதன் மூலம் இந்த வழித்தடத்தில் சரக்கு மற்றும் பயணிகள் ரயில் போக்குவரத்தும் அதிகரிக்கும். உன்சாகர் கோட்டை முதல் பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்களும், இந்த வழித்தடத்தில் உள்ளன. இதனால் இத்திட்டம் சுற்றுலாத்துறையையும் ஊக்குவித்து, பயணிகள் ரயில் போக்குவரத்தையும் அதிகரிக்

மருந்து நிறுவனங்களின் முறைகேடுகளுக்கு தேசிய மருந்து விலை ஆணையகம் ஆதரவு அளிக்கிறது என்ற ஊடக செய்திகளுக்கு ஆணையகம் கடும் கண்டனம்

இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் மருந்து நிறுவனங்களின் முறைகேடுகளுக்கு தேசிய மருந்து விலை ஆணையகம் ஆதரவு அளிக்கிறது என்ற ஊடக செய்திகளுக்கு ஆணையகம் கடும் கண்டனம் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் மருந்துத் துறையின் கீழ் செயல்படும் ஒழுங்குமுறை அமைப்பான தேசிய மருந்து விலை ஆணையகம், குறிப்பிட்ட மருந்துகளுக்கான உச்சவரம்பு விலையை நிர்ணயித்து, இதர மருந்துகளின் விலையை கண்காணித்து, மருந்துகளின் மலிவு தன்மை மற்றும் அணுகலை உறுதி செய்து வருகிறது. அதிகபட்ச சில்லறை விலை ஒரே போல இருந்தாலும், தேசிய மருந்து விலை ஆணையகத்தின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் பல மருந்துகளை வெவ்வேறு விலைகளுக்கு வெவ்வேறு துறைகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் மருந்து நிறுவனங்கள் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஜம்மு மருந்தக விநியோகஸ்தர்கள் சங்கம் குற்றம் சாட்டியிருப்பதாக டெய்லி எக்ஸ்கெல்சியர் என்ற நாளிதழ் செப்டம்பர் 22-ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது. மருந்து நிறுவனங்களின் சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கு  தேசிய மருந்து விலை ஆணையகம் ஆதரவளிக்கிறது போன்ற பொய்யான செய்திகளை ஆணையகம் வன்மையாகக் கண்டிக்கிறது. மருந்து விலை கட்டுப்பா

இந்திய கடற்படை மற்றும் ஆஸ்திரேலிய கடற்படை இடையே பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்து

பாதுகாப்பு அமைச்சகம் இந்திய கடற்படை மற்றும் ஆஸ்திரேலிய கடற்படை இடையே பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்து இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கடற்படை உறவுகளை மேம்படுத்துவதற்கான கூட்டு வழிகாட்டுதல் ஒப்பந்தத்தில், இருநாட்டு கடற்படை தலைவர்களும் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி கையெழுத்திட்டனர். இதைத் தொடர்ந்து, இரு நாட்டு கடற்படைகளும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான விதிமுறைகள் குறித்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. காணொலி காட்சி மூலம் நடந்த இந்த விழாவில், இந்திய கடற்படை சார்பில் ரியர் அட்மிரல் ஜஸ்விந்தர் சிங், ஆஸ்திரேலிய கடற்படை சார்பில் துணை தளபதி ரியர் அட்மிரல் கிரிஸ்டோபர் ஸ்மித் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம், பரஸ்பர புரிதல், நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை, மேம்பட்ட நல்லெண்ணம் மற்றும் இருதரப்பின்  கவலைகள் மற்றும் எதிர்கால செயல்பாடுகளில் புரிதல் ஆகியவற்றின் பரந்த நோக்கத்தை வலியுறுத்துகிறது. மேலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகள் இடையேயான  பேச்சுக்களை நடத்துவதற்கான விரிவான வழிகாட்டுதலை வழங்குகிறது. இந்த பேச்சுக்களின் முடிவுகளின் அடிப்படையில் தனி ஒப்பந்தங்களை செயல்படுத்துவத

நாடு முழுவதும் அறிவியல் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் : டாக்டர் ஜித்தேந்திர சிங் தகவல்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நாடு முழுவதும் அறிவியல் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் : டாக்டர் ஜித்தேந்திர சிங் தகவல் குழந்தைகள் மற்றும் இளம் தலைமுறையினர் இடையே அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிக்க நாடு முழுவதும் அறிவியல் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார். மக்கள் இடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்க அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வகங்களில், அறிவியல் அருங்காட்சியகத்தை அமைக்க சிஎஸ்ஐஆர்  மற்றும் அறிவியல் அருங்காட்சியகங்களின் தேசிய கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், மத்திய இணைஅமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். அதன்பின் டாக்டர் ஜித்தேந்திர சிங் பேசுகையில், ‘‘21ம் நூற்றாண்டு சவால்களை சந்திக்க மக்கள் இடையே அறிவியல் சிந்தனையை ஏற்படுத்த வேண்டும். மக்கள் இடையே அறிவியல் சிந்தனை விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியதன் முக்க

38-வது பிரகதி கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்

பிரதமர் அலுவலகம் 38-வது பிரகதி கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார் மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்திறன் மிக்க ஆளுகை, மற்றும் திட்டங்களை உரிய நேரத்தில் செயல்படுத்துதல் ஆகியவற்றுக்கான தகவல் மற்றும் தகவல் தொடர்பு பல்முனை தளமான பிரகதியின் முப்பத்தி எட்டாவது  கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், எட்டு திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில் 4 ரயில்வே அமைச்சக திட்டங்கள், 2 மின் அமைச்சக திட்டங்கள் மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சகம், விமான போக்குவரத்து அமைச்சகத்தின் தலா ஒரு திட்டங்களும் அடங்கும்.  ஒடிசா, ஆந்திரப்பிரதேசம், பிஹார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய 7 மாநிலங்களில் நடைபெறும் இந்த திட்டங்களின் மொத்த செலவு ரூ.50,000 கோடி.  கடந்த 37 பிரகதி கூட்டங்களில், ரூ.14.39 லட்சம் கோடி மதிப்பிலான 297 திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது

ஐபிபிஐ அக்டோபர் 1 ஆம் தேதி 5 வது ஆண்டு தினத்தைக் கொண்டாடுகிறது

பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம் 5 வது ஆண்டு தினத்தை அக்டோபர் 1 ஆம் தேதி கொண்டாடுகிறது ஐபிபிஐ நொடிப்பு நிலை மற்றும் திவால் வாரியம்(ஐபிபிஐ) தனது 5வது ஆண்டு தினத்தை 2021 அக்டோபர் 1ம் தேதி  கொண்டாடுகிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் டாக்டர் பிபெக் தெப்ராய், இந்த விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, திவால் நிலை விதிமுறை ஆய்வறிக்கை குறித்து ஆண்டு தின உரை நிகழ்த்துகிறார். ஆண்டு விழாவை முன்னிட்டு ‘ஐந்தாண்டு நொடிப்பு நிலை மற்றும் திவால் விதிமுறை’ குறித்த புத்தகம், திவால் நிலை விதிமுறையில் எனது முத்திரை. திவால் நிலை விதிமுறையின் 5 ஆண்டு பயணம் குறித்து மின்னணு-புத்தகம் ஆகியவை வெளியிடப்படுகின்றன.  இந்நிகழ்ச்சி புது தில்லி, லோதி ரோட்டில் உள்ள இந்தியா ஹேபிடட் மையத்தில் உள்ள ஸ்டீன் அரங்கத்தில் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்பதற்கான இணைப்பு  https://ibbi.gov.in/annualday2021

ஜெய்ப்பூரில் சிபெட்: பெட்ரோ ரசாயனங்கள் தொழில்நுட்ப நிறுவனத்தை பிரதமர் திறந்து வைத்தார்

பிரதமர் அலுவலகம் ஜெய்ப்பூரில் சிபெட்: பெட்ரோ ரசாயனங்கள் தொழில்நுட்ப நிறுவனத்தை பிரதமர் திறந்து வைத்தார் ராஜஸ்தானில் 4 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார் ஜெய்ப்பூரில் சிபெட்: பெட்ரோ ரசாயனங்கள் தொழில்நுட்ப நிறுவனத்தை செப்டம்பர் 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார். மேலும் ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாரா, சிரோஹி, ஹனுமன்கர் மற்றும் தௌசா ஆகிய மாவட்டங்களில் 4 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். “மாவட்டம்/ பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமனைகளுடன் இணைந்த புதிய மருத்துவ கல்லூரிகளின் உருவாக்கம்” என்ற மத்திய அரசின் நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்த மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரிகளை நிறுவுவதற்கு தகுதி குறைந்த, பின்தங்கிய மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. திட்டத்தின் மூன்று கட்டங்களின் கீழ் நாடு முழுவதும் 157 புதிய மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிபெட் பற்றி: ராஜஸ்தான் மாநில அரசுடன் இணைந்து  ஜெய

59-வது தேசிய பாதுகாப்பு கல்லூரி பட்டதாரிகளிடையே மத்திய அமைச்சர் உரை

பாதுகாப்பு அமைச்சகம் 59-வது தேசிய பாதுகாப்பு கல்லூரி பட்டதாரிகளிடையே மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உரை நாட்டின் நலனை பாதுகாப்பதற்காக, ஆயுதப்படைகள் இடையே எதிர்கால ராணுவ உத்திகள் மற்றும் நடவடிக்கைகளில் ஆக்கபூர்வமான ஒருங்கிணைப்புக்கு  பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். புது தில்லியில் இன்று 59-வது தேசிய பாதுகாப்பு கல்லூரி பாடப்பிரிவு பட்டதாரிகளிடையே‌ (2019 பிரிவு) அவர் உரையாற்றினார். எல்லைப் பிரச்சினைகள் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் போன்ற பிரச்சினைகளில் அரசின் துணிச்சலான அணுகுமுறை, அண்மைக்காலங்களில் இந்தியாவை வலிமைப்படுத்தி இருப்பதாகவும், தற்போது இந்தியாவிற்கு மிகப் பெரும் சர்வதேச பங்களிப்பும் பொறுப்பும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்பதை மீண்டும் வலியுறுத்திய திரு ராஜ்நாத் சிங், அதேவேளையில், அதன் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்களுக்கு தக்க பதிலடியை இந்தியா தரும் என்றும் எச்சரித்தார். “உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இனி ஒருபோதும் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது. ப

புதுக்கோட்டை திகில் ! ஊரக வளர்ச்சித் துறையில் ஊழல் பெருச்சாளிகள் சோதனையில் சிக்கிய பலகோடி ஆவணங்கள் மற்றும் நகை,ரொக்கம்

புதுக்கோட்டை திகில் ஊரக வளர்ச்சித் துறையில ஒரு ஊழல் பெருச்சாளி சோதனையில் சிக்கிய பலகோடி ஆவணங்கள் மற்றும் நகை,ரொக்கம்  வளர்ச்சித் துறையில ஒரு கடைநிலை உதவியாளரின் சொத்து 15 கோடி.   அப்படியானால் அந்தத் துறையின் அமைச்சராக இருந்த வேலுமணி யின் சொத்து ?. புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் ஆதரவாளர்கள் என்று கூறப்படும் முருகானந்தம் மற்றும் அவரது சகோதரர் வீடுகள் உள்ளிட்ட 6 இடங்களில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை. நடத்தினர். புதுக்கோட்டை சார்லஸ் நகரிலுள்ள ஊரக வளர்ச்சித் துறையில் பணி புரியும் முருகானந்தம் என்பவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.. இவர் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் நெருங்கிய தொடர்பில் இருந்தாக தகவல் வெளியாகியுள்ளதுரூ.15¾ கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு:அரசு ஊழியரின் வீடு உள்பட 6 இடங்களில் நடந்த  சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன அவரது வீடு, சகோதரர்கள் வீடு உள்பட 6 இடங்களில் லஞ்ச

இந்திய கடற்படை, கடலோர காவல் படையின் ஒருங்கிணைந்த மருத்துவ வெளியேற்ற நடவடிக்கை

பாதுகாப்பு அமைச்சகம் இந்திய கடற்படை, கடலோர காவல் படையின் ஒருங்கிணைந்த மருத்துவ வெளியேற்ற நடவடிக்கை விரைவான ஒருங்கிணைந்த நடவடிக்கையின் காரணமாக கொச்சி அருகே பயணித்துக் கொண்டிருந்த எம்வி லிரிக் போயட் என்ற சரக்கு கப்பலிலிருந்து மருத்துவ வெளியேற்ற நடவடிக்கையை தெற்கு கடற்படை கட்டுப்பாட்டு தலைமையகம் மேற்கொண்டது. மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் உதவியுடன் செப்டம்பர் 28-ஆம் தேதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கப்பலில் பயணம் செய்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என்று செப்டம்பர் 28, 2021  மாலை 4 மணிக்கு கடலோர காவல் படை தலைமையகத்திடமிருந்து தெற்கு கடற்படை கட்டுப்பாட்டு தலைமையகத்திற்கு தகவல் வந்தது. கொவிட் நெறிமுறைகளைப் பின்பற்றி ஐஎன்எஸ் கருடாவிற்கு அழைத்துவரப்பட்ட நோயாளி, ஐஎன்ஹெச்எஸ் சஞ்சீவனி கடற்படை மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

புத்துயிர் பெற்றது இந்திய ஹாக்கியின் பெருமை

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்  புத்துயிர் பெற்றது இந்திய ஹாக்கியின் பெருமை ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கு இந்திய ஹாக்கி குழுவினருக்கு 41 ஆண்டுகள் தேவைப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ்-2020 போட்டியில் வெற்றிக்கனியைப் பறித்ததும் இந்திய ஆடவர் ஹாக்கி குழுவினர் வரலாற்றில் தடம் பதித்தனர். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் வென்ற வெண்கலம், வெறும் பதக்கம் மட்டுமல்ல, கோடிக்கணக்கான  மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் கனவுகளின் நிறைவேற்றமும் கூட. வீரர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவின்போது தங்களது கையெழுத்து பொறிக்கப்பட்ட ஹாக்கி மட்டையை குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பிரதமருக்கு பரிசாக அளித்தனர். லட்சக்கணக்கான ஹாக்கி வீரர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த மட்டை, பிரதமரின் பரிசுப் பொருட்கள் அடங்கிய மின்னணு ஏலத்தில் தற்போது இடம்பெற்றுள்ளது. இதனைப் பெற விரும்புபவர்கள் www.pmmementos.gov.in என்ற இணையதளத்தில் நடைபெறும் ஏலத்தில்  கலந்து கொள்ளலாம். செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கிய மின்னணு ஏலம், அக்டோபர் 7 வரை நடைபெறும். மின்னணு ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை, கங்கை நத

தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு

தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் அளித்துள்ள புகார்கள் மீதான நடவடிக்கைகளைக் குறித்து கேட்டறிந்தார். சேலம் மாவட்டத்தில் ஆய்வுப் பணி முடித்து, முன்னறிவிப்பின்றி, தர்மபுரி மாவட்டம் போகும் வழியில் அமைந்துள்ள B2 அதியமான் கோட்டை காவல் நிலையத்தை ஆய்வு  செய்தார்கள். அங்கு  பணியிலிருந்த காவல்துறை ஆய்வாளர் மற்றும் காவலர்களிடம் வழக்குப் பதிவேடு, பொதுமக்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்கள். அதன் பின்னர் பொதுமக்களின் புகார்கள் மீது விரைவாகவும் நியாயமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவலர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்கள்.

மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இதுவரை 85.42 கோடி கொவிட் தடுப்பூசிகள் விநியோகம்

 சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம். மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இதுவரை 85.42 கோடி கொவிட் தடுப்பூசிகள் விநியோகம் நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு, செப்டம்பர் 28-ஆம் தேதி வரை, 85.42 கோடிக்கும் அதிகமான  (85,42,35,155) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் 83.80 கோடி (83,80,140) டோஸ் தடுப்பூசிகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 4.57 கோடி (4,57,98,120) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் வசம் உள்ளன.கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல் நாடு தழுவிய கொவிட் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 87.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இந்தியா தினமும் 20,000 க்கும் குறைவான புதிய தொற்று  பாதிப்புகள் பதிவாகி உள்ளன; கடந்த 24 மணி நேரத்தில் 18,870 புதிய தொற்று பாதிப்புகள் காணப்படுகின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1%க்கும் குறைவாக, 0.84% ஆகும். மார்ச் 2020 பிறகு குறைந்தது இந

தொழிலதிபரைக் கொல்ல முயன்ற ஏழு பேர் கைது, கும்பல் தலைவன் ஜான் பாண்டியனுக்கு. தனிப்படை காவல்துறை வலைவீச்சு

தொழிலதிபரைக் கொல்ல முயன்ற ஏழு பேர் கைது,  கும்பல் தலைவன் ஜான் பாண்டியனுக்கு. தனிப்படை காவல்துறை வலைவீச்சு . கோயமுத்தூர்: தொழிலதிபரைக் கொல்ல முயன்ற வழக்கில் விசாரணை நடத்த, தமிழக முன்னேற்ற கட்சியின் ஜான் பாண்டியனை விசாரிக்க தனிப்படை காவல்துறையினர் விரைந்துள்ளனர். கோயமுத்தார் வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் வசித்து வரும் தீபக் அரோரா.(வயது39) . அவரது மனைவி பிரியா.. துருவ் என்டர்பிரைசஸ் எனும் இருசக்கர வாகன ங்களுக்கு எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் மற்றும் ஹெல்மெட் விற்பனை செய்யும் தீபக் அரோரா நடத்தும்  பிரியா அரோரா  2018 ஆம் ஆண்டு மணியக்காரம்பாளையம் பகுதியில் நாலரை சென்ட் மனையிடத்தை வாங்கி தனது விற்பனைக் கடை நடத்தி வருகிற நிலையில் அவரது மனைவி பிரியா அரோராவிற்கு  வேறு இளைஞருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக அறிந்த தீபக் அரோரா அவரை கண்டித்ததனால், பிரியா பிரிந்து சென்றார். அதன்பிறகு தீபக் அரோரா, பிரியா பெயரில் வாங்கிய சொத்துக்களைக் கைப்பற்ற முயற்சித்தார்..அதனால் பிரியா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்தார்.அதனால் தீபக் சொத்துக்களைக் குறித்து நீதிமன்றத்தில் பிரியா மீது சிவில் வழக்கு ம் தொடர்ந்தார். இ