ஊரடங்கில் அதிகம் பாதிப்புகள் அடித்தட்டுத் தினக்கூலிகளுக்கே பட்டினி ச் சாவுகள் வராமல் தடுக்க தலைவர்கள் கோரிக்கை
வாழும் மக்களில் மூன்று வகை அதில் தற்போது அதிகம் பாதிப்புகள் அடித்தட்டு தினக்கூலிகள் மற்றும் அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று மாலை வந்த பிறகு உணவு சமைத்து உண்ணும் அடித்தள மக்களின் நிலை தான் தற்போது மிகவும் பாதிப்பு . உழைக்கும் வர்க்கம் ஒரு வாரம் முழுவதும் வேலை செய்து சனிக்கிழமை ஊதியம் வாங்கி சனியோ, ஞாயிறன்று தான் அடுத்த வாரத்திற்குத் தேவையான பொருள்களை அவர்கள் வாங்க இயலும். சரி, மற்ற அடுத்த வர்க்கமும் சற்று இரண்டு வாரமோ, தேவைக்கு நித்தமும் வாங்கும். அரிசி , பருப்பு ஒரு மாதம் வாங்கும் குடும்பம் மாத ஊதியம் வழங்கப்படும் முதல் வாரத்தில் வாங்கிய மளிகை அப்போது இந்த முழு ஊரடங்கை எதிர் நோக்கி முன் தீர்மானிக்கும் சக்தியும் இல்ல்லாமல் இருக்கிறதை வைத்து வாங்கி இருப்பார்கள். இப்போது தொடர்ந்து இழுத்து மூடி வைத்தால் எப்படி அவர்கள் உயிரோடு இருக்க வேண்டிய உணவுப் பொருள்களை வாங்குவது? அரசு உயர் அலுவலர்கள், அரசியல்வாதிகள் போன்று எங்கிருந்தோ வரும். பொது மக்கள் எங்கு போவார்கள்? இது ஒரு நாடோடி பழைய இரும்பு குப்பை நெகிழி (பிளாஸ்டிக்) சேகரிப்பு நபர்கள் கயலான் கடை அருகில் பேசிய வார்த்தைகள் இவை மனதை உருக்கும் சீக