முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தில்லையில் தொல்லை தரும் தீட்சிதர்கள் vs அறநிலையத்துறை நடத்தும் தாண்டவம்

பல குடும்பங்களில் மதுரையின் ஆட்சியா? இல்லை  சிதம்பரத்தின் ஆட்சியா ? என்ற வழக்கு நடைமுறை இன்றும் உண்டு அந்தத் தில்லை சிற்றம்பலத்தில் ஏற்படுத்தப்படும் பிரச்சனைகளை பற்றிய பதிவில் பலர் சிவனடியார்கள் மற்றும் அந்தணர்களும் நிறைய கவலைகளையும் சிறு கண்டனங்களையும் தீக்க்ஷிதர்களின் பேரில் வைக்கிறார்கள். தயவு செய்து உடனே அவர்களை கிரிப்டோ சைவர்கள்  என்று வகைபடுத்த வேண்டாம். அவர்கள் ஹிந்து தர்மத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும் சைவம் வைணவம் சாக்கியம் கௌமாரம் , காணாபத்தியம் என்ற வேறுபாடு காட்டாத ஆழ்ந்த புலமை மிக்கவர்கள் தான்.  முன்னால் சட்ட அமைச்சரும் தற்போதய பாஜகவின் மூத்த தலைவருமான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி பெற்றுத்தந்த உச்சநீதிமன்ற உத்தரவு இன்றுவரை நடைமுறையில் இருந்தாலும் சாமானிய மக்களில் தமிழ்வழி வழிபடும் பக்தர்கள் நிலை ஜனநாயக நாட்டில் சமத்துவம் இல்லை என்பதே மன்னர் ஆட்சிகள் மாறிப்போனாலும்  என்னைப் பொறுத்தவரை சிற்றம்பல தரிசனங்களின் போது எனக்கு தீக்க்ஷிதர்களின் பேரில் எந்தக் கண்டனங்களுமில்லை. நாம் கண்ணில் கண்ட சிறுவயது காட்சி இன்றும் மனதில் பதிந்தது  பட்டமங்கலம்  தெட்ஷ்ணாமூர்த்தி குரு பகவான் நடத்திய த

லோக் ஆயுக்தா சோதனையில் வட்டாட்சியர் வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கியது பணம்

வட்டாட்சியர்  வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கியது பணம். லோக் ஆயுக்தா அதிகாரிகளின்  சோதனையில்  ஊழல் செய்வதை தடுக்கும் நோக்கில் லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை இயங்கி வருகிறது கர்நாடக மாநிலத்தின் தமிழ் நாட்டை விட சிறப்பாகவே இயங்கி வரும் நிலையில், பல்வேறு நகரங்களிலும் லோக் ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாகப் பணம் கைப்பற்றப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் அரசுத்துறையில் பணி செய்யும்  பணியாளர்கள் ஊழல் செய்வதை தடுக்கும் நோக்கில் லோக் ஆயுக்தாவின் இலஞ்ச ஒழிப்புத்துறை இயங்குகிறது அவ்வப்போது திடீர் சோதனைகளையும் நடத்தி வருகிறது. கர்நாடகத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில், ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் வீடுகளில் சோதனையை நடத்தி வந்தது. மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மாதெல் விருபாக்சப்பா என்பவரின் வீட்டிலும்  நடத்தப்பட்ட சோதனையில் 8 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பணம் சிக்கியதால் அது கர்நாடக மாநிலத் தேர்தலில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் லோக் ஆயுக்தா காவல்துறையினர், பெங்களூரு, தும்கூரு, சிக்கபல்லாபூர், கலபுரகி, யாதகிரி, விஜயபுரா, பாகல்கோட் ஆகிய பகுதிகளில் திட

தமிழ்நாட்டின் 49-வது தலைமைச் செயலராகிறார் சிவ்தாஸ் மீனா

தமிழ்நாட்டின் 49-வது தலைமைச் செயலராகிறார் சிவ்தாஸ் மீனா அறிவிப்பு வெளியாகிறது தமிழ் நாட்டின் மாநில தலைமைச் செயலராகப் பொறுப்பு வகிக்கும் வெ.இறையன்பு ஜூன் 30 ல் ஓய்வு பெறுவதால்  49 வது தலைமைச் செயலாளராக,  நகராட்சி நிர்வாகத் துறைச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் சிவ்தாஸ் மீனா நியமிக்கப்படுவதற்கான அறிவிப்பு  வெளியாகிறது. 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, மே மாதம்  7-ஆம் தேதி தமிழ்நாடு  முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்று முதல் மாநில தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் அவர் தலைமைச் செயலராகப் பணியாற்றிய நிலையில் இன்று  ஒய்வு பெறுகிறார். அவர் ஓய்வுபெறும் நிலையில், புதிய தலைமைச் செயலாளராக யார் வரவேண்டும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில். ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் முதல் நிலையிலுள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.கே.பிரபாகர் மற்றும் சிவ்தாஸ் மீனா ஆகிய மூவரது பெயர்கள் மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில்.  நகராட்சி நிர்வாகத் துறைச் செயலாளராகப் பொறுப்பிலுள்ள சிவ்தாஸ் மீனாவை, தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர

சர்க்கரை ஆலைகளுக்கு வங்கிகள் மூலமாக கடன் வழங்கப்படும் கால அளவை மத்திய அரசு நீட்டித்தது

எத்தனால் திட்டங்களுக்கு கடன் வழங்கும் கால அளவை செப்டம்பர் 30 வரை மத்திய அரசு நீட்டிப்பு எத்தனால் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காக சர்க்கரை ஆலைகளுக்கு அளிக்கப்படும் நிதி உதவி நீட்டிப்புத் திட்டத்தின் கீழ் புதிய சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்கவும், பயன்பாட்டில் உள்ள ஆலைகளை விரிவுபடுத்தவும் சர்க்கரை ஆலைகளுக்கு வங்கிகள் மூலமாக கடன் வழங்கப்படுவதை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மேலும் இந்த ஆலைகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டிக் கழிவை அரசு ஏற்றுக்கொள்கிறது. கடன்கள் வழங்கும் கால அளவை செப்டம்பர் 30, 2023 வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக எத்தனால் சம்பந்தமான திட்டங்களுக்கு கடன் வழங்குவதற்கான கால அளவு இந்த ஆண்டு மார்ச் 31 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் பலதரப்பட்ட சவால்களினால் உரிய காலத்திற்குள் கடன்களை வழங்க இயலவில்லை.  எனவே தற்போது இந்த கால அளவு நீட்டிக்கப்படுகிறது.  இந்த முடிவால் வேளாண் பொருளாதாரம் ஊக்குவிக்கப்படுவதோடு, புதை படிம எரிபொருள் மீதான சார்பும், கச்சா எண்ணெய் இறக்குமதியும், காற்று மாசும்‌ குறையும். பெட்ரோலுடன் எத்தனால் கலக்கும் திட்டத்திற்காக எத்தனால் உற்பத்தி

மூன்று ஆண்டுகளில் ஜெம் மூலம் கொள்முதல் வளர்ச்சி 10 மடங்கு அதிகரிப்பு

கடந்த மூன்று ஆண்டுகளில் ஜெம் மூலம் கொள்முதல் வளர்ச்சி 10 மடங்கு அதிகரித்துள்ளது: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஜெம் எனப்படும்  அரசின் இ-சந்தை மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் கொள்முதல் வளர்ச்சி 10 மடங்கு அதிகரித்திருப்பதாக மத்திய வர்த்தகம், தொழில், உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர்  திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.  புதுதில்லியில் நேற்று ஜெம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த க்ரேடா-விக்ரேடா கௌரவ் சம்மான் சமரோவா 2023 விழாவில் உரையாற்றிய அவர், இ-சந்தையில் அனைத்து பங்குதாரர்களுக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.  நாடு முழுவதும் பொது கொள்முதலில் வெளிப்படையான மாற்றத்தை உருவாக்கியிருப்பதாகக் கூறிய அவர், புதிய தொழில்நுட்பங்கள் மூலம் கொள்முதல் நடைமுறையின் தனித்துவம் வாய்ந்த வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கனவை ஜெம் நனவாக்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.   கடந்த 7 ஆண்டுகளில் அரசு இ-சந்தையின் பலன்கள் மற்றும் அதன் பன்முகத்தன்மையிலான வளர்ச்சிக் குறித்தும் விளக்கினார். மத்திய மற்றும் மாநில அரசுகளின் துறைக

12 புத்தொழில் நிறுவனங்கள் தங்களது புதுமைக் கண்டுபிடிப்புகளுக்காக 5000 டாலர் நிதியைப் பெற்றது.

இளையோர் பங்கேற்கும் தேசிய ஆய்வக புதுமைக் கண்டுபிடிப்புகள் உரையாடல் 2022-ல் 9 மாநிலங்களைச் சேர்ந்த 12 புத்தொழில் நிறுவனங்கள் வெற்றி பெற்றன வெற்றிபெற்ற 12 புத்தொழில் நிறுவனங்கள் தங்களது புதுமைக் கண்டுபிடிப்புகளுக்காக 5000 டாலர் நிதியைப் பெற்றது. வேளாண்மை, கல்வி தொழில்நுட்பம், மகளிர் வாழ்வாதாரம், சுழற்சிப் பொருளாதாரம், உயிரி பன்முகத்தன்மை ஆகிய துறைகளில் ஆய்வு செய்து வரும் 9 மாநிலங்களைச் சேர்ந்த 12 புத்தொழில் நிறுவனங்கள் ஐந்தாவது இளையோர் பங்கேற்கும் இந்திய தேசிய ஆய்வகப் புதுமைக் கண்டுபிடிப்புகள் உரையாடலில் 2022-ல்  வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆசிய பசிஃபிக் பிராந்தியத்தில் இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல், முதலீடு செய்தல் ஆகியவற்றுக்காக பொதுவான திட்டத்தை ஏற்படுத்தும் நோக்கில்  ஐநா வளர்ச்சித் திட்டம், சிட்டி அறக்கட்டளை ஆகியவை இணைந்து 2017-ம் ஆண்டு இளையோர் பங்கேற்கும் ஆய்வகத்தை தொடங்கியது. அதன் மூலம் அவர்கள் தலைமைத்துவம், சமூகப் புதுமைக் கண்டுபிடிப்புகள், தொழில்முனைவு மூலமாக நீடித்த வளர்ச்சி நோக்கங்களை அமல்படுத்த முடியும். 2019-ம் ஆண்டு நித்தி ஆயோக்கின் அடல் புதுமைக் கண்டுபிடிப்பு இயக்கத

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 44-வது பிரிவு பொது சிவில் சட்டத்தை பரிந்துரைக்கிறது பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு

 பொது சிவில் சட்டம் அவசியமானதென அதை  அமல்படுத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 44-வது பிரிவு பொது சிவில் சட்டத்தை பரிந்துரைக்கிறது. இந்தியாவில் உள்ள இரண்டு சட்டங்களில் சிவில் சட்டம், மற்றோன்று கிரிமினல் சட்டம். அந்த கிரிமினல் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் சிவில் சட்டம் பொதுவானதில்லை. சட்டம் பல்வேறு சிக்கல்களைக் கொண்டது. மத ரீதியான நிறைய சிக்கல் அதனால் வரும். இந்தச் சட்டத்தின்படி இந்திய குடிமகன்கள் எல்லோருக்கும் திருமணம், சொத்து, விவாகரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் ஒரேவிதமான சட்டமிருக்கும். அவர்கள் பின்பற்றும் தனி மதம் சார்ந்த சட்டங்கள் செல்லுபடியாகாது. உதாரணமாக பொது சிவில் சட்டம் வந்தால் இஸ்லாமிய மக்கள், ஷரியத் சட்டத்தை பின்பற்ற முடியாது. பொது சிவில் சட்டம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில்  மத்தியில் அமைந்த பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முடிவிலுள்ளது. இதுதொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி

தமிழ்நாடு காவல்துறையில் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. உள்பட ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழ்நாடு காவல்துறையில் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. உள்பட ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவு. தமிழ்நாடு  உளவுத்துறை ஏ.டி.ஜி.பி., டேவிட் தேவாசீர்வாதம் உள்பட, மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்து அரசு உத்தரவு. உள்துறைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.,யான, டேவிட் தேவாசீர்வாதம், காவல் தலைமையக, ஏ.டி.ஜி.பி.,யாகவும்  ஆவடி, காவல்துறை ஆணையராக உள்ள அருண், சென்னை மாநகர சட்டம், ஒழுங்கு பிரிவு, ஏ.டி.ஜி.பி.,யாகவும்  சென்னை, சட்டம், ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,யான  சங்கர், ஆவடி, காவல்துறை  ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறை ஐ.ஜி.,யான செந்தில் வேலனுக்கு, உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.,யாக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

ஆருத்ரா கோல்டு மோசடியில் வில்லன் நடிகரின் நீடிக்கும் தலைமறைவு

ஆருத்ரா கோல்டு மோசடியில் நடிகர் ரூசோவிடம் நடிகர் ஆர்.கே. சுரேஷ் வாங்கிய ரூபாய் .15 கோடி.  ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடியில்  நிறுவன முதலீட்டாளர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூபாய் .2438 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 21 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து, ரூபாய்.2,438 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் பொருளாதாரக் குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறை, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது. விசாரணையில், அந்த நிறுவனம் ஒரு லட்சத்து 9,255 பேரிடம், மொத்தம் ரூ.2,438 கோடி முதலீடு பெற்று மோசடி செய்தது  தொடர்பாக இதுவரை 11 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நிறுவனத்தின் நிறுவனர் ராஜசேகர், உஷா, மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டதால், ரெட்கார்னர் நோட

கருப்பு உடை குறித்த பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் சுற்றறிக்கை வாபஸ்

கருப்பு நிறமல்லாத உடைகளை அணிந்து வருமாறு சேலம் மாவட்டக் காவல் துறை அறிவுறுத்தியதாக பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார்.  இப்பொழுது மாவட்டக் காவல்துறை அதனை மறுத்திருக்கிறது.கறுப்பு உடை அணிந்து வரக் கூடாதென்ற பெரியார் பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. மாணவர்கள் பெற்றோரின் நலனைக் கருத்தில் கொண்டு அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் தற்போது  தெரிவித்துள்ளார்.  சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் இன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சேலம் மாவட்டக் காவல்துறையினர் அறிவுறுத்தலின் படி, பட்டமளிப்பு விழாவில் கறுப்பு நிறமல்லாத உடைகளை அணிந்து வர அறிவுறுத்தப்பட்டது. மாணவர்கள் மற்றும் பெற்றோரின் நலனைக் கருத்தில் கொண்டு அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.  பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்

அந்தமானில் தங்கம் உள்ளிட்டஆபரணங்களில் ஹால்மார்க் தரமுத்திரை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை, தங்கம் உள்ளிட்டஆபரணங்களில் ஹால்மார்க் தரமுத்திரை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அந்தமானில்இன்று நடத்தியது. இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் / கலைப் பொருள்களுக்கான தரமுத்திரை உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகம் இன்று அந்தமானில் 2 முக்கிய நிகழ்ச்சிகளை நடத்தியது. 26.06.2023 காலையில் தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களில் ஹால்மார்க் தரமுத்திரை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் மாலையில், தரப்படுத்துதல் மற்றும் தரம் குறித்த யூனியன் பிரதேச அளவிலான குழுக்கூட்டமும் நடைபெற்றன. தரமுத்திரை குறித்த நகைக் கடை விழிப்புணர்வு நிகழ்ச்சியில், நகை வியாபாரிகள் சங்கத் தலைவர்கள் மற்றும் நகை வியாப

கால்நடைகளின் நலன் சார்ந்த.என்ஏஎன்டிஐ (புதிய மருந்து மற்றும் தடுப்பூசி முறை) இணையதளம்

கால்நடைகளின் நலன் மற்றும் அது சார்ந்த துறைகளை மேம்படுத்தும் வகையிலான என்ஏஎன்டிஐ (புதிய மருந்து மற்றும் தடுப்பூசி முறை) இணையதளத்தை திரு பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்தார் என்ஏஎன்டிஐ (புதிய மருந்து மற்றும் தடுப்பூசி முறை) இணையதளத்தை மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா  புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். இந்த இணையதளம் மூலம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் சுகம் இணையதளத்துடன் ஒருங்கிணைந்து கால்நடை  உற்பத்திப் பொருட்களை மதிப்பீடு செய்வதற்கும், வெளிப்படைத்தன்மையுடன் ஒழுங்குமுறை ஒப்புதல் அளிப்பதற்கும் தடையின்றி வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார். இந்த முன்னெடுப்பு டிஜிட்டல் இந்தியாவை மேம்படுத்தவும், கால்நடைகள் நலன் மற்றும் கால்நடைகள் தொழில்துறையை மேம்படுத்தவும் உதவும் என்று அவர் தெரிவித்தார்.

சிறுவர்,சிறுமிகள் யூனம் மலைக்கு செல்வதற்கான மலையேற்றப் பயணம் 2023

அகில இந்திய தேசிய மாணவர் படையைச் சேர்ந்த சிறுவர்கள், சிறுமிகள் யூனம் மலைக்கு செல்வதற்கான மலையேற்றப் பயணம் 2023-ஐ பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட் கொடியசைத்து தொடங்கிவைத்தார் அகில இந்திய தேசிய மாணவர் படையைச் சேர்ந்த சிறுவர்கள், சிறுமிகள் இமாசலப்பிரசேதம் மாநிலத்தில் உள்ள யூனம் மலைக்கு   செல்வதற்கான மலையேற்றப் பயணம் 2023-ஐ பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட் 2023, ஜூன் 26 அன்று புதுதில்லியில் கொடியசைத்து தொடங்கிவைத்தார். அத்துடன் இந்த மலையேற்றப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த தேசிய மாணவர் படையைச் சேர்ந்தவர்களுக்கு சான்றிதழ்களை அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர், மலையேற்றக் குழுவின் முயற்சியைப் பாராட்டுவதாகக் கூறினார். இந்த சாகசப் பயணம் மேலும் இது போன்ற நடவடிக்கைகளில் மேற்கொள்வதற்கு அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் என்று கூறினார். இது போன்ற நடவடிக்கைகள் அவர்களுக்கு தலைமைத்துவப் பண்பை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மலையேற்றம், பாறை ஏறுதல், பனிச்சறுக்கு, பாலைவனப் பயணம் உள்ளிட்ட ஏராளமான வீரதீர, விளையாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்பத

ஜூன் 28 ல் சென்னையில் மின்சார வாகனம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கு

மின்சார வாகனம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கு: இந்தியத் தரநிர்ணய அமைவனம் ஜூன் 28 அன்று சென்னையில் நடத்துகிறது இந்தியாவில்  மின்சார வாகனத் தொழில்துறை 90 சதவீத வளர்ச்சி அடைந்திருப்பதாக அண்மைக்கால அறிக்கை தெரிவிக்கிறது. மத்திய அரசின் பல்வேறு கொள்கைகள் முன்முயற்சிகள் காரணமாக மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மின்சார வாகன உற்பத்தியை ஊக்கப்படுத்தும் திட்டத்துடன்  இவற்றை வாங்குவதற்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தையும் அரசு செயல்படுத்துகிறது. இதனால் இருசக்கர மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனச் சந்தை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. 2030-க்குள் அதிவேக மின்சார வாகனப்பயன்பாட்டுக்கு நாடு முன்னேறிச் செல்லும் என்பதால் வாகனங்களிலிருந்து வெளியேறும் கரியமில வாயுவை சுமார் ஒரு ஜிகா டன் அளவுக்கு குறைக்க முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மாநிலத்தில் பாதுகாப்பான, தரமான, நம்பகமான, பொருத்தமான, உள்கட்டமைப்பை உறுதி செய்வதில், தர நிர்ணய அமைவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது. தர நிர்ணயம் என்பது அனைவரையும் உள்ளடக்கியதாகவும், உண்மை

போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம்

போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தையொட்டி மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் செய்தி பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி உள்துறை அமைச்சகம் மேற்கொண்ட போதைப் பொருளுக்கு எதிரான சகிப்பின்மைக் கொள்கை வெற்றிகரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார். இந்தக் கொள்கையின்  முக்கிய அம்சங்களில் ஒன்று “ஒட்டுமொத்த அரசு அணுகுமுறை” என்பதாகும். பல்வேறு துறைகளின்  ஒருங்கிணைப்பு என்பது இந்தக் கொள்கையை மேலும் தீவிரமாக செயல்படுத்துகிறது. போதைப் பொருள் மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தையொட்டி, இன்று (26.06.2023)  மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா வெளியிட்ட செய்தியில், போதைப் பொருளுக்கு எதிராகப் போராடும் அனைத்து மக்களுக்கும் அமைப்புகளுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.   இந்த முறையின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு தேசிய அளவில் ‘போதைப் பொருள் ஒழிப்பு இருவார நிகழ்வுக்கு’ ஏற்பாடு செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி

ஊடக வெளிச்சத்தால் உதவிகள் கிடைத்த தனியார் பேருந்து பெண் ஓட்டுனர்

தனியார் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளாவுக்கு சொகுசுக் கார் பரிசு கொடுத்த நடிகர் கமலஹாசன். தன் சொந்தப் பணத்தில் அநாதை மற்றும் உரிமை கோராத பிணங்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்து வைத்த மணிமாறனுக்கு  நடிகர் ரஜினிகாந்த் ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார். போட்டிக்கு விளம்பர மோகத்தில் தனியார் பேருந்தில் அரசியல் நடவடிக்கைக்காக வேலை போன ஒரு தனியார் பேருந்து பெண் ஓட்டுனருக்கு நடிகர் கமலஹாசன் கார் வாங்கிக் கொடுக்கிறார்.(அந்தப் பொண் அப்புடி எந்த ஒரு சாதனையோ ஒரு  தியாகமும் செய்துள்ளதென இந்த கார் பரிசு அது அவருக்கே வெளிச்சம்). இது தான் நடிகர்  ரஜினிகாந்துக்கும் நடிகர் கமலஹாசனுக்குமுள்ள வித்தியாசம். இந்தப் பெண் பிள்ளையின்  முகம் சினிமாவிற்கானது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்ஷிற்கு அடுத்து வரிசையில் வசூலை அள்ளுவார். ஒரு வாய்ப்புத் தாருங்க பிக்பாஸ் எனவாகவும் இது இந்த நிகழ்வு  அமையும்  முன்பே இந்த வடிவம் குறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினரும், தேசிய மகளிர் பிரிவுத் தலைவருமான வானதி சீனிவாசன் முதலில் பேருந்தில் பயணம் செய்ய அந்தத் தகவல் பரவியதால் அதை் தொடர்ந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி கருணாநிதி  பயணம் செய்யும் போ