முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அப்பாஸ் அமினியின் 'எண்ட்லெஸ் பார்டர்ஸ்' என்ற பாரசீக திரைப்படம் சிறந்த படத்திற்கான தங்க மயில் விருது

54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அப்பாஸ் அமினியின் 'எண்ட்லெஸ் பார்டர்ஸ்' என்ற பாரசீக திரைப்படம் சிறந்த படத்திற்கான தங்க மயில் விருது வென்றது; அரசியல் மற்றும் உணர்ச்சி எல்லைகளைக் கடந்து பாரபட்சங்களை எதிர்கொள்ளும் அன்பின் சக்தியை படம் சித்தரிக்கிறது பல்கேரிய இயக்குநர் ஸ்டீபன் கோமண்டரேவ் சிறந்த இயக்குநருக்கான வெள்ளி மயில் விருதை 'பிளாகாஸ் லெசன்ஸ்' படத்திற்காக பெற்றார் . 'எண்ட்லெஸ் பார்டர்ஸ்' படத்தில் நுணுக்கமான, சிறந்த நடிப்புக்காக பவுரியா ரஹிமி சாமுக்கு சிறந்த நடிகருக்கான வெள்ளி மயில் விருது வழங்கப்பட்டது. 'பார்ட்டி ஆஃப் ஃபூல்ஸ்' படத்தில் பரந்த அளவிலான உணர்ச்சிகளை தடையின்றி வெளிப்படுத்தியதற்காக மெலனி தியரிக்கு சிறந்த நடிகைக்கான வெள்ளி மயில் விருது வழங்கப்பட்டது. 'காந்தாரா' படத்துக்காக இந்திய திரைப்பட இயக்குநர் ரிஷாப் ஷெட்டிக்கு நடுவர்களின் சிறப்பு விருது கிடைத்துள்ளது. இந்தப் படம் மனிதர்களுக்கும், இயற்கைக்கும் இடையிலான கருத்தியல் மோதலை ஆராய்கிறது சிறந்த அறிமுக படத்திற்கான விருது இயக்குநர் ரெகர் ஆசாத் கயாவுக்கு 'வென் தி சீட்லிங்க்ஸ் குரோ

தேசிய பாதுகாப்பு அகாடமியில் என்.டி.ஏ இலையுதிர் கால கண்காட்சி

தேசிய பாதுகாப்பு அகாடமியில் என்.டி.ஏ இலையுதிர் கால கண்காட்சி 2023 தொடங்கியது என்.டி.ஏ இலையுதிர் கால கண்காட்சி – 2023, நவம்பர் 27 அன்று தேசிய பாதுகாப்பு அகாடமியின் குடும்ப நல அமைப்பின் தலைவர் திருமதி ரெய்மன் கோச்சார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்தக் கண்காட்சியில் 23 உட்புற மற்றும் வெளிப்புறப் பொழுதுபோக்கு அரங்குகளில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. நவம்பர் 27 - 29  வரை இக்கண்காட்சி நடைபெறும். பயிற்சியில் தேர்ச்சி பெறும் வீரர்களின் பெருமைமிக்க பெற்றோர்கள் தேசிய பாதுகாப்பு அகாடமியின் படைப்பாற்றல் திறமைகளைக் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்தத் தனித்துவமான அகாடமியின் 75 மகத்துவமான ஆண்டுகளைப் பற்றிய ஒரு பார்வையையும் இந்தக் கண்காட்சி வழங்குகிறது.  75 ஆண்டுகளில் அகாடமியின் வளர்ச்சி குறித்த அம்சங்கள் பல்வேறு  அரங்குகளில் காணப்படுகிறது. வீரர்களின் உற்சாகமும், பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலும் கண்காட்சியை நடத்துவதற்கான திறமையை அற்புதமாக வெளிப்படுத்தின.

நடிகைகள் திரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது மன்சூர் அலிகான் மானநஷ்ட வழக்கு.

நடிகர் மன்சூர் அலிகான் இன்று நடிகைகள் திரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு. நடிகர் மன்சூர் அலிகான் லியோ திரைப்படம் விழாவில் நடிகை த்ரிஷா குறித்துத் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு  சம்மன் அனுப்பப்பட்ட பின் அவர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்த பின் நடிகை திரிஷாவிடம் மன்னிப்புக் கேட்டார். அதற்கு நடிகை திரிஷாவும் மன்னிப்பது தெய்வீகமென கருத்தை பதிவிட்டிருந்தார்.  நடிகர் மன்சூரலிகான் தனது பதிவில்  நான் பேசிய கருத்தில் திரிஷாவின் மனம் புண்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அதனால் மனம் வருந்தி திரிஷாவிடம் மன்னிப்புக் கேட்கிறேன் . அவருக்கு திருமணம் நடக்கும் போது ஆசிர்வாதம் செய்யத் தான் வருவேன் எனக் தெரிவித்திருந்தார்.  தற்போது அவர் நடிகைகள் திரிஷா,  குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி   மீது மானநஷ்டஈடு வழக்கு, கிரிமினல் மற்றும் சிவில் சூட், போடவும் திட்டமிட்டுக் கலவரம் உண்டு பண்ண, பொது அமைதியை பத்து நாட்களாகக் கெடுத்து, மடைமாற்றம் செய்யத் தூண்டிய அனைத்துப் பிரிவுகளிலும் வழக்குத் தொடுக்கப்படும். எனது வழக்

மணல் ஒப்பந்தக் குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்த குற்றம் நீதிமன்றத்தில் விவாதம்

தமிழ்நாட்டில் அதிகார வரம்பை மீறி அரசு நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் அமலாக்கத் துறை செயல்படுவதாக தமிழ்நாடு அரசு ஊழலுக்கு ஆதரவாகத் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. தமிழ்நாட்டில் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்தக் குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அலுவலர்கள் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மணல் வியபாரத் தொழில் நடத்தும் எஸ்.ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், ரத்தினத்தின் உறவினர் கோவிந்தன், மணல் குவாரி குத்தகைதாரர் கரிகாலன் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியற்றி ஓய்வுபெற்ற பொறியாளர் திலகம், நீர்வளத்துறையின் முதன்மைப் பொறியாளர் முத்தையா ஆகியோருக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் எழிலகத்தில் உள்ள அரசு நீர்வளத்துறை அலுவலகம் உள்ளிட்ட 34 இடங்களில் நடந்த சோதனை இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்த நிலையில் மணல் குவாரி அதிபர் இராமச்சந்திரன், திண்டுக்கல

ஹிம்மத்நகரில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம்

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு வீரேந்திர குமார் 'சமாஜிக் அதிகாரித ஷிவிர்' எனப்படும் சமூக வலுவூட்டல் முகாமை குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் தொடங்கி வைத்தார் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு வீரேந்திர குமார், குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஹிம்மத்நகரில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான சமாஜிக் அதிகாரித ஷிவிர் எனப்படும் சமூக வலுவூட்டல் முகாமை இன்று (25-11-2023) தொடங்கி வைத்தார். இதன் கீழ் ஹிம்மத்நகரில் உதவி உபகரணங்கள் விநியோக முகாம் நடைபெற்றது.  இதேபோல் நாடு முழுவதும் 9 மாநிலங்களை உள்ளடக்கிய மற்ற 19 இடங்களிலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது. இவற்றில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத் திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறை, இந்திய செயற்கை கால்கள் உற்பத்திக் கழகமும் இணைந்து இந்த விநியோக முகாம்களை ஏற்பாடு செய்தன. குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட

பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலர் வி.பி.சிங் சிலை நாளை தமிழ்நாடு அரசின் சார்பில் திறப்பு

 தமிழ்நாடு அரசின் சார்பில் முன்னாள் இந்திய பிரதமர் வி.பி.சிங்கிற்கு சிலை திறப்பு  சென்னை மாநிலக் கல்லூரியில் ரூபாய்.52 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. வி.பி.சிங் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 11 மணிக்குத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கிறார். மேலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்வார்கள் .  சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு நிகழ்ச்சியாக  இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக நடக்கின்றன. ஏப்ரல் மாதம் நடந்த தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரிலஹ, (20.04.2023) ஆம் தேதி சட்டப் பேரவை விதி எண் 110 ன் கீழ்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என அறிவித்தார் .   அதைத் தொடர்ந்து சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பேரவை மற்றும் பேராசிரியர்கள் வேண்டுகோளை ஏற்று சமூகநீதிக் காவலரான வி.பி. சிங்கிற்கு

கோவாவில் நடைபெரும் 54-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா

கோவாவில் இந்திய சர்வதேச திரைப்படவிழா 'ஃபேமிலி ஆல்பம்' திரைப்படத்தை உருவாக்குவதில் தனிப்பட்ட அனுபவங்கள் உத்வேகம் அளித்தன - பெற்றோர்களும் குழந்தைகளும் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொள்ள படம் உதவும்: உருகுவே திரைப்பட இயக்குனர் கில்லெர்மோ ரோகாமோரா கோவாவில் நடைபெற்று வரும் 54-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் பிரதிநிதிகள் மற்றும் ஊடகங்களுடனான கலந்துரையாடல் இன்று (25-11-2023) நடைபெற்றது. இதில் உலக சினிமா (சினிமா ஆஃப் தி வேர்ல்ட்) பிரிவின் கீழ் திரையிடப்பட்ட 'ஃபேமிலி ஆல்பம்' என்ற திரைப்படத்தின் இயக்குநர் கில்லெர்மோ ரோகாமோரா தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். தமது தனிப்பட்ட அனுபவங்கள் படத்தை வடிவமைப்பதில் எவ்வாறு உத்வேகம் அளித்தன என்பது குறித்து உருகுவே இயக்குனர் கூறுகையில், இது தமது குடும்ப அனுபவத்தைப் பற்றியது என்றும் தமது பெற்றோர் விவாகரத்து பெற்றபோது தமக்கு 16 வயது என்றும் கூறினார்.  ஸ்பானிஷ் மொழிப்படமான இப்படம், பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான சிக்கலான உறவு மற்றும் தந்தை மகன் உறவை மையமாகக் கொண்டதாகும் என அவர் தெரிவித்தார். பெற்றோர் மற்றும் குழந்தைகள் இரு

சந்திரயான் -3 மற்றும் ஆதித்யா -எல் 1 திட்டங்களின் இரட்டை வரலாற்றுச் சாதனைகளைக் கண்டது அமைச்சர் தகவல்

கேரளாவின் தும்பாவிலிருந்து பேரொலி எழுப்பிப் பாய்ந்த இந்தியாவின் முதலாவது செலுத்து வாகனத்தின் வைர விழா 2023 ஆம் ஆண்டுடன் ஒத்துப்போகிறது, இது சந்திரயான் -3 மற்றும் ஆதித்யா -எல் 1 திட்டங்களின் இரட்டை வரலாற்றுச் சாதனைகளைக் கண்டது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார் கேரளாவின்  தும்பாவிலிருந்து பேரொலி எழுப்பிப் பாய்ந்த இந்தியாவின் முதலாவது செலுத்து வாகனத்தின்  வைர விழா 2023 ஆம் ஆண்டுடன் ஒத்துப்போகிறது, இது சந்திரயான் -3 மற்றும் ஆதித்யா -எல் 1 திட்டங்களின்  இரட்டை வரலாற்றுச் சாதனைகளைக் கண்டது  என்று மத்திய விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தெரிவித்தார். சந்திரயான் -3 நிலவில் தரையிறங்கிய நாளான ஆகஸ்ட் 23 ஆம் தேதியை 'தேசிய விண்வெளி தினமாக' பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்த ஆண்டாக 2023 ஆம் ஆண்டு வரலாற்றில் இடம்பெறும் என்றும்  அவர் கூறினார். தும்பாவில்  உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் நடந்த விழாவில், முதலாவது சவுண்டிங் ராக்கெட் செலுத்தப்பட்டதன் 60 வது ஆண்டு  தினத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) பிரதமர் அலு

ஆண்டுக்கு ரூபாய் 6000 வழங்கும் திட்டத்தில் தமிழ்நாட்டில் 46 லட்சம் விவசாயிகள் பயனடைவதாக மத்திய அமைச்சர் தகவல்

விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ. 6000 வழங்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 46 லட்சம் விவசாயிகள் பயனடைகின்றனர்: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.6000 வழங்கும்  திட்டத்தில்  தமிழ்நாட்டில் 46 லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருவதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் பற்றி பொதுமக்களிடையே குறிப்பாக கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வளர்ச்சியடைந்த  இந்தியாவுக்கான சபத யாத்திரை குறித்து சென்னையில் இன்று  அமைச்சர் ஆய்வு செய்தார். வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றின்  உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சிறு குறு வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான வியாபாரிகளுக்குக் கடன் வழங்கப்பட்டிர

ஸ்ரீ வைத்தியநாத சுப்பிரமணிய தண்டாயுதபாணி ஸ்ரீ வாலையம்மன் ஆலய வருஷாபிஷேக விழா

காரைக்குடி ஸ்ரீ வைத்தியநாத சுப்பிரமணிய தண்டாயுதபாணி ஸ்ரீ வாலையம்மன் ஆலய வருஷாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கோவிலூர் ரோடு அரசு போக்குவரத்துக்கழகப் பணிமனை எதிர்புறம் உள்ள ஜெயம் நகர்  பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வைத்தியநாத சுப்பிரமணிய தண்டாயுதபாணி மற்றும்  ஸ்ரீ வாலையம்மன் ஆலயத்தில் குடமுழுக்கு நடத்திய பின்னர் ஒரு ஆண்டு பூர்த்தியாகும் வருஷாபிஷேக விழா நவம்பர் மாதம் 23 ஆம் தேதி வியாழன் மாலை 4:30 மணிக்கு அனுக்ஞை விக்னேஷ்வர பூஜையும், தன பூஜை, புன்யாகவாசனம் வாஸ்து சாந்தியும், முதல் கால யாக வேள்வியும், த்ரவ் யாகுதி, பூர்ணா குதியும்  தீபாராதனையும் நடந்தது  தொடர்ந்து நவம்பர் மாதம்  24 ஆம் தேதி  வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், இரண்டாம் காலயாக வேள்வியும், கோ பூஜை, த்ரவ் யாகுதி, பூர்ணாகுதியும், தீபாராதனையும் சிறப்பாக  நடைபெற்றது வேள்வி யாகத்தில் வைத்துப் பூஜிக்கப்பட்ட புனித நீரை சாமிநாத சிவாச்சாரியார் குழுவினர் மற்றும் ஆலய பூஜகர் பாண்டியன் ஆச்யசாரியார், மற்றும்  ஆணந்தன் ஆச்சாரியார் மற்றும் நிர்வாக அறங்காவலர் ஆர்.மாணிக்கவாசம் ஆகியோர்