சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளில் அவருக்கு மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் மரியாதை ஒற்றுமையின் சின்னமாக விளங்கும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளில், அவரை நினைவு கூர்ந்து, வலிமையான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம் என மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கூறியுள்ளார். இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள், ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இதுகுறித்து டாக்டர் எல். முருகன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது; ‘’பல சமஸ்தானங்களை ஒன்றிணைத்து ஒரே இந்தியாவாக அமைய வழிவகுத்த பாரத ரத்னா #சர்தார்வல்லபாய்பட்டேல் ஜெயந்தியில் ஒற்றுமைக்கான சின்னமாய் விளங்கும் அவரை நினைவு கூர்ந்து, பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களின் ஆட்சியில் வலிமையான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம்’’.இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த...
RNI:TNTAM/2013/50347