டெல்லி உச்சநீதிமன்றத்தில் சசிகலா நடராஜன் கேவியட் மனு தாக்கல் அதிமுக பொதுச்செயலாளர் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சசிகலா நடராசன் கேவியட் மனு தாக்கல் கட்சி சின்னம் விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தனது கருத்தையும் கேட்க வேண்டும் எசந கேவியட் மனு அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான வழக்கில் எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பு மேல்முறையீடு செய்தால் தமது தரப்புக் கருத்தையும் கேட்க வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் சசிகலா நடராஜன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா மறைந்த பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். அப்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி சசிகலா நடராஜனை முதல்வராக தேர்வு செய்த நிலையில் ஆளுநர் விடுப்பில் சென்று விடவே அவர் பல வகையில் முயற்சித்தார். ஆனால் முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா நடராஜன் சிறைத் தண்டனையை அனுபவிக்
RNI:TNTAM/2013/50347