முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குஜராத் கெவாடியாவில் தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சி: மத்திய உள்துறை அமைச்சர் பங்கேற்பு

குஜராத் கெவாடியாவில் தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சி: மத்திய உள்துறை அமைச்சர் பங்கேற்பு சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளில், குஜராத் கெவாடியாவில் நடந்த தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா தலைமை விருந்தினராக பங்கேற்றார். இரும்பு மனிதர் என அழைக்கப்பட்ட இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் படேலின் ஒற்றுமை சிலை அமைந்துள்ள இடத்தில், திரு.அமித்ஷா மலர் தூவி மரியாதை  செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய வீடியோ தகவல் ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரு அமித்ஷா பேசியதாவது: நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் மற்றும் இரும்பு மனிதர் என அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினத்தை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாட பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கிய பாரம்பரியத்தை நாம் முன்னெடுத்து செல்கிறோம். நாட்டின் 75வது சுதந்திர ஆண்டை விடுதலையின் அம்ரித் மகோத்ஸவமாக கொண்டாட பிரதமர் முடிவு செய்துள்ளார். இதை நாம் கொண்டாடும் வேளையில், தேசிய ஒற்றுமை தினம் இந்தாண்டு பலவிதமான முக்கியத்துவத்தை பெறுகிறது. துடிப்பான, வளர்ச்சியடைந்த, செழிப்பான, பாதுகாப்பான, ப

அனல்மின் நிலையங்களில் வேளாண் கழிவுகள் பயன்பாட்டு நிலை குறித்து மின்துறை செயலாளர் ஆய்வு

நாட்டின் அனல்மின் நிலையங்களில் வேளாண் கழிவுகள் பயன்பாட்டு நிலை குறித்து மின்துறை செயலாளர் ஆய்வு செய்தார் அனல்மின் நிலையங்களில் வேளாண் கழிவுகள் எரிக்கப்படும்   நிலை குறித்து மத்திய மின்துறை செயலாளர் திரு அலோக் குமார் 2021 அக்டோபர் 28 அன்று ஆய்வு செய்தார். இந்தக் கூட்டத்தில் மத்திய மின்சார ஆணையம், தேசிய அனல்மின் கழகத் (என்டிபிசி) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், தேசிய வேளாண் கழிவுகள் இயக்கத்தின் இயக்குநர், மின்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். மின்துறை அமைச்சகம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் பயனாக என்டிபிசி மற்றும் பல்வேறு மாநிலங்களின் வேளாண் கழிவுகள் கொள்முதல் கீழ்க்காணுமாறு அதிகரித்துள்ளது. 1) என்டிபிசி ஆர்டர் செய்த 8,65,000 டன் வேளாண் கழிவுத் துகள்களின் விநியோகம் நடைமுறயில் உள்ளது. மேலும் அக்டோபரில் 65,000 டன்களுக்கு என்டிபிசி ஆர்டர் தந்துள்ளது. கூடுதலாக 25,00,000 டன் கொள்முதலுக்கான பணி நடைமுறயில் உள்ளது. இவற்றை விற்பனை செய்வதற்கான விண்ணப்பம் நவம்பர் 1ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுகிறது. 2) ஹரியானா, பஞ்சாப், உத்

அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உடனான தமது முதல் கூட்டத்தை தமிழ்நாடு ஆளுநர் இன்று நடத்தினார்.

 தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டத்தை தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி நடத்தினார் அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உடனான தமது முதல் கூட்டத்தை தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (30.10.2021) நடத்தினார். அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் சாதனைகள் குறித்து துணைவேந்தர்கள் வழங்கிய பவர்பாயின்ட் விளக்கக்காட்சிகளை அவற்றின் வேந்தரான ஆளுநர் கண்டார். அரசு பல்கலைக்கழங்களின் நிலை குறித்தும் நிதி உள்ளிட்டவற்றை வழங்கி மாநில அரசு அவற்றுக்கு எவ்வாறு உதவுகிறது என்பது குறித்தும் மாநில அரசின் மூத்த செயலாளர்கள் ஆளுநரிடம் எடுத்துரைத்தனர். கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர், 20 அரசு பல்கலைக்கழகங்களை கொண்டிருப்பதற்காக தமிழ்நாட்டை பாராட்டினார். மாநிலத்தில் மாணவர் சேர்க்கை விகிதம் சிறந்த முறையில் இருப்பதற்காகவும் அவர் பாராட்டு தெரிவித்தார். மாநிலத்தின் உயர்கல்வி விரிவடைந்திருக்கும் நிலையில், சிறப்பான கல்வி மற்றும் தரமான ஆராய்ச்சி மீது கவனம் செலுத்துமாறு துணைவேந்தர்களை ஆளுநர் கேட்டுக்கொண்டார். வலிமைகளை மேம்படுத்தவும், பலவீனங்களை சரி செய்யவு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 112 கோடி தடுப்பூசி டோஸ்கள்

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கிட்டத்தட்ட 112 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, கிட்டதட்ட 112  கோடிக்கும் மேற்பட்ட (1,11,98,78,225) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 13 கோடிக்கும் மேற்பட்ட (13,00,66,651) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு மும்பையில் உள்ள எம்டிஎல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட  போர்க்கப்பல், இந்திய கடற்படையிடம்   கடந்த 28ம் தேதி ஒப்படைக்கப்பட்டது.  15 பி திட்டத்தின் கீழ், 4 போர்க்கப்பல்களை, மும்பையில் உள்ள மஸ்கான் டாக்ஸ் லிமிடெட்(எம்டிஎல்)  என்ற கப்பல் கட்டும் நிறுவனம் தயாரிக்க கடந்த 2011ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு நாட்டின் முக்கிய நகரங்களான விசாகப்பட்டினம், மர்முகோவா, இம்பால் மற்றும் சூரத் என பெயரிடப்பட்டன.  இதில் 127ஒய் 12704 (விசாகப்பட்டினம்) என்ற கப்பல் தயாரிக்கும் பணி முடிவடைந்து, இந்திய கடற்படையிடம் கடந்த 28ம் தேதி வழங்கப்பட்டது.   இந்த போர்க்கப்பலின் வடிவமைப்பு,  இந்திய கடற்படையின்  வடிவமைப்பு இயக்குனரகத்தால் உருவாக்கப்பட்டு,  மும்பை உள்ள எம்டிஎல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.  163 மீட்டர் நீளம் கொண்ட இந்த போர்கப்பல், 30 நாட் வேகத்தில் செல்லும். இந்த கப்பலில் உள்ள 75 சதவீத பொருட்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை.  இந்த கப்பலில் பெங்களூர் பெல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகள், பிரம்மோ

குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டங்களுடன் நவம்பர் 3 ஆம் தேதி அன்று பிரதமர் ஆய்வுக்கூட்டம்

குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டங்களுடன் நவம்பர் 3 ஆம் தேதி அன்று பிரதமர் ஆய்வுக்கூட்டம் நடத்தவுள்ளார் ஜி-20 உச்சிமாநாடு, சிஒபி-26 ஆகியவற்றில் பங்கேற்று நாடு திரும்பியவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி, குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டங்களுடன் நவம்பர் 3-அன்று நண்பகல்வாக்கில் காணொலி காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம் நடத்தவுள்ளார். இந்தக் கூட்டம், கொவிட் தடுப்பூசி முதல் டோஸை 50 சதவீதத்திற்குக் குறைவாகவும், இரண்டாவது டோஸினைக் குறைந்த எண்ணிக்கையிலும் செலுத்தியுள்ள மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். ஜார்க்கண்ட், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, மேகாலயா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் அதிகமான மாவட்டங்களிலும் மற்ற மாநிலங்களில் குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் கலந்துரையாடுவார். இந்த நிகழ்வில் இம்மாநிலங்களின் முதலமைச்சர்களும் பங்கேற்பார்கள்.

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் 140 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் ஒரு பெண் கைது

புதுக்கோட்டை நகர் திருக்கோகர்ணம் பகுதியில் ஒரு வீட்டிலிருந்து கஞ்சா பொட்டலங்கள் தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் கை மாறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் திருச்சிராப்பள்ளி சரக காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சரவணன், சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுனர்.       திருக்கோகர்ணம் காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் காவலர்கள் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது கோவில்பட்டி பகுதியில் சந்தேகப்பட்டு பெண் ஒருவரை பிடித்து விசாரித்ததில் திருக்கோகர்ணம் அய்யப்பன் மனைவி ஜானகி (வயது40) எனத் தெரிந்ததில் அவர் வைத்திருந்த பையை காவலர்கள் சோதனை செய்த போது அதில் இரண்டு கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட மேலும் ஜானகியிடம் காவல் துறை கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்த நிலையில். திருக்கோகர்ணம் அபிராமி நகரிலுள்ள அவரது வீட்டில்  சோதனை நடத்திய போது. பல பண்டலாக பதுக்கிய. மொத்தம் 138 கிலோ உள்ளிட

முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தியின் நினைவுநாளில் பிரதமர் மற்றும் ராகுல் காந்தி அஞ்சலி

 முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தியின் நினைவுநாளில் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார் முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தியின் நினைவுநாளில் அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். “இந்தியாவின் முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தி அவர்களின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்” என்று பிரதமர் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 37 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.  1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி தனது  3 மெய்க்காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  37 ஆவது நினைவு தினத்தில் அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்துவது வழக்கம். அந்தவகையில்   ராகுல் காந்தி இந்திராகாந்தி நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார்..

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளில் குடியரசுத் தலைவரின் புகழஞ்சலி

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளில் குடியரசுத் தலைவர் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தியுள்ளார் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான இன்று (31, அக்டோபர் 2021) குடியரசுத்தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தினார். சர்தார் வல்லபாய் படேலின் உருவப்படத்திற்குக் குடியரசுத் தலைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையின் அதிகாரிகளும் மலரஞ்சலி செலுத்தினர். சர்தார் வல்லபாய் படேலின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த புதுதில்லியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சதுக்கத்திற்கும் குடியரசுத் தலைவர் சென்றிருந்தார்.              ஒற்றுமை வாரத்தை கொண்டாடுகிறது தேசிய ரயில் அருங்காட்சியகம்: இன்று முதல் நவம்பர் 14ம் தேதி வரை சர்தார் வல்லபாய் படேல் கண்காட்சி சர்தார் படேல் பற்றிய கண்காட்சியை அமைத்து ஒற்றுமை வாரத்தை, இன்று முதல் நவம்பர் 14ம் தேதி வரை  இந்திய ரயில்வேயின் தேசிய ரயில் அருங்காட்சியகம்  கொண்டாடுகிறது. இந்த கண்காட்சி தில்லியில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்திய மாநிலங்களை ஒருங்கிணைக்க, முக்கிய முயற்சிகள்  மேற்கொண்டதற்காக சர்தார் வல்லபாய் படேல் ந

பசும்பொன் சென்று வழியில் அராஜக செயலில் ஈடுபட்ட 13 நபர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

அக்டோபர் மாதம் 29 மற்றும் 30 ஆம் தேதி நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள வந்த கமுதி அருகே மண்டலமாணிக்கம் பகுதி இளைஞர்களில் சிலர், TN-66 G 0745 என்ற பதிவெண் கொண்ட காவல்துறை வாகனத்தின் கூரை மீது ஏறி ஆட்டம் போட்டதால், 13 பேர் மீது காவல்துறையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  காவல்துறை வாகனத்தை வழிமறித்து, வாகனத்தின் கூரை மீது ஏறிச் சேதப்படுத்தி, ஓட்டுனரை அசிங்கமாப் பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விழாவிற்கு சென்ற போது அரசு வாகனத்தின் மீது ஏறி, நடனமாடி அட்டூழியம் செய்த 13 பேர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலதரப்பட்டவர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் கைதுசெய்ய உத்தரவு பசும்பொன் கிராமத்திற்கு மரியாதை செலுத்த, தனியார் வாகனங்களில் அனுமதி பெற்றுத்தான் சென்றனர். இளைஞர்கள் சிலர் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அளவுக்கதிகமாக வாகனத்தின் கூரையின் மீதேறி ஆபத்தான முறையிலும் பயணம் செய்தனர். அதுமட்டுமின்றி இளைஞர்களில் சிலர் குடிபோதையில் அரசு, காவல்துறை

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சக்ரதாவில் நடந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சக்ரதாவில் நடந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.  பிரதமர் அலுவலகம் சுட்டுரையில் விடுத்துள்ள தகவலில் கூறியிருப்பதாவது: உத்தரகாண்ட் மாநிலத்தில் சக்ரதாவில் நடந்த சாலை விபத்து மிகவும் சோகமானது. நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளன.  இந்த விபத்தில் உறவினர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடையவும், நலமுடன் இருக்கவும் பிரார்த்திக்கிறேன்: பிரதமர் மோடி’’

மகாராஷ்டிரா,ஆந்திரா, தெலுங்கானா. மேற்கு வங்காளம் சட்ட மேலவைக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் அட்டவணையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ,

சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் மகாராஷ்ட்ர சட்ட மேலவைக்கு இடைத்தேர்தல் தொடர்பாக மகாராஷ்ட்ர சட்ட மேலவை உறுப்பினர் திரு சரத் நாம்தேவ் ரான்பைஸ் 23.9.2021 அன்று மரணமடைந்ததை அடுத்து அந்தப் பதவிக்கான இடம் காலியாக உள்ளது. இந்த இடத்திற்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் மேலவை உறுப்பினரைத்   தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படும் நாள் 9 11 2021 (செவ்வாய்) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 16.11. 2021(செவ்வாய்) வேட்பு மனுக்கள் பரிசீலனை 17.11. 2021 (புதன்) வேட்புமனுக்களைத் திரும்பப்பெற கடைசி நாள் 22.11.2021 (திங்கள்) தேர்தல் தேதி 29.11.2021 (திங்கள்) வாக்குப்பதிவு நேரம் காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை வாக்குகள் எண்ணிக்கை 29.11.2021 திங்கள் மாலை 5 மணி தேர்தல் தொடர்பான பணிகள் 1.12. 2021 புதன் கிழமைக்கு முன்னதாக நிறைவு செய்யப்படும் இந்த இடைத்தேர்தலில் கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் முறையாகக்  கடைபிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய மூத்த அதிகாரி ஒருவரைப் பணியமர்த்துமாறு மகாராஷ்ட்ர மாநிலத் தலைமை செயலாளருக்குத்   தேர்தல் ஆணையம் உத்த

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் சோதனையில், ரூ.27.31 லட்சம் மதிப்புள்ள 555 கிராம் தங்கக்கட்டி பறிமுதல்

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் சோதனையில், ரூ.27.31 லட்சம் மதிப்புள்ள 555 கிராம் தங்கக்கட்டி பறிமுதல் சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் இன்று (30.10.2021) சென்னை வந்த ஆண் பயணி ஒருவரை, விமான நிலையத்தின் வெளியேறும் பகுதியில், சுங்கத்துறை அதிகாரிகள் வழிமறித்து சோதனை செய்தனர். அவரது உடலை பரிசோதித்தபோது, மலக்குடலில் 4 பொட்டலகங்களாக மறைத்து கடத்தி வரப்பட்ட 650 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை உருக்கியபோது, ரூ.27.31 லட்சம் மதிப்புள்ள (இந்திய சந்தை மதிப்பு) 555 கிராம் தங்கக்கட்டியாக கிடைத்தது. இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், அந்த பயணியை கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருவதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசும்பொன் தேவர் திருமகனின் 114 வது ஜெயந்தி 59 வது குருபூஜை மற்றும் ஆன்மீக, அரசியல் விழா

பசும்பொன் தேவர் திருமகனின் ஆன்மீக, அரசியல் வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையி்ல் அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி துவங்கியது ஆன்மீக விழாவும், 29 ஆம் தேதி அரசியல் விழாவும், 30 ஆம் தேதி குருபூஜை ஜெயந்தி விழாவும் தேவர்  நினைவாலயத்தில் கொண்டாடாடப்பட்டது. இந்த ஆண்டு பசும்பொன்  உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனின் 114 ஆவது ஜெயந்தி விழாவும், 59 ஆவது ஆண்டு குரு பூஜையும்  கொண்டாடப்பட்டது  அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நடராஜன் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் தேவர் வாழ்ந்த இல்லத்தில்  வழிபட்டு நினைவில்லத்தின் பொறுப்பாளர் தேவரின் சகோதரி மருமகள் காந்திமதி அம்மாவிடம் பேசினார்.நேற்று முன்தினம் யாகசாலை பூஜை மற்றும் லட்சார்ச்சனையுடன் ஆன்மிக விழா தொடங்கியது. மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது முழு வெண்கல திருவுருவ சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் தமிழக அமைச்சர்கள், திமுக  நிர்வாகிகள், மதுரை மாவட்ட ஆட்சியர் பங்கேற்றனர். பசும்பொன்னில் இன்று தேவர் நினைவிடத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களும் நேரில் செ