முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரெளபதி முர்மு வேட்புமனு தாக்கல்

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரெளபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்தியாவின் 14 வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தின் இராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம், 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைவதையடுத்து, நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஜுவை மாதம் 18 ஆம் தேதி நடைபெறுகிறது .  பதிவாகும் வாக்குகள், ஜூலை மாதம் 21 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய நிலையில், 29 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து பொது வேட்பாளருக்கு ஆதரவு அளித்தால், தேர்தல் நடைபெறாமல், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார். ஆனால் தற்போது எதிர் கட்சிகள் சார்பில் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டதால் நடைபெறு

மேம்படுத்தப்பட்ட ஆயுஷ் நல்வாழ்வு மையத்தை குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் தொடங்கிவைத்தார்

குடியரசு தலைவர் மாளிகையில் மேம்படுத்தப்பட்ட ஆயுஷ் நல்வாழ்வு மையத்தை குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் தொடங்கிவைத்தார் புதுதில்லி குடியரசு தலைவர் மாளிகையில் மேம்படுத்தப்பட்ட ஆயுஷ் நல்வாழ்வு மையத்தை குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் தொடங்கிவைத்தார். இந்த தொடக்க நிகழ்ச்சியில் திருமதி சரிதா கோவிந்த் உடனிருந்தார். மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், இணையமைச்சர் திரு மூஞ்ச்பாரா மகேந்திரபாய் காலுபாய் மற்றும் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். குடியரசுத் தலைவர் செயலகமும், ஆயுஷ் அமைச்சகமும் இணைந்து 2015 ஜூலை 25 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆயுஷ் நல்வாழ்வு மையத்தை தொடங்கின. குடியரசுத் தலைவர், குடியரசுத் தலைவர் செயலக அதிகாரிகள், குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியிருப்போர் ஆகியோரின் மருத்துவ தேவைகளை  நிறைவு செய்ய இந்த மையத்தில் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஓமியோபதி, இயற்கை வைத்தியம் ஆகிய சிகிச்சை வசதிகள் இடம்பெற்றுள்ளன. குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள ஆயுஷ் நல்வாழ்வு மையம் “ நிறுவுதல், செயல்பாடு மற்றும் முக்கிய மைல்கல்” என்பது பற்றிய ஆவண நூல் இன்று குடியரசுத் தலைவர் ம

மாற்றுத்திறன் குறித்த மத்திய ஆலோசனை வாரியத்தின் 5வது சந்திப்பு

மாற்றுத்திறன் குறித்த மத்திய ஆலோசனை வாரியத்தின் 5வது சந்திப்பு மத்திய சமுகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தலைமையில் இன்று (ஜுன் 24) மாற்றுத்திறன் குறித்த மத்திய ஆலோசனை வாரியத்தின் 5வது கூட்டம் புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சகத்தின் இணையமைச்சர் செல்வி பிரதிமா பவுமிக், 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் குறித்த விதிகளை அறிவிக்கை செய்யவேண்டும் என்றும் மாநில ஆலோசனை வாரியங்களையும், மாவட்ட அளவிலான குழுக்களையும், மாவட்ட அளவில் சிறப்பு நீதிமன்றங்களையும் விரைந்து அமைக்கவேண்டும்  என்றும் மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய ஆலோசனை வாரியம் அறிவுறுத்தியது. மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை திட்டத்தை விரைவுப்படுத்துமாறு அறிவுறுத்திய வாரியம், அப்போதுதான் 2022 ஆகஸ்ட் மாத வாக்கில் முழுமைத் தன்மையை எட்டமுடியும் என்று கூறியது. மேலும் மாற்றுத் திறனாளிகள் கவுரவமான வாழ்க்கையை நடத்த அவர்களுக்கான உத

செட்ஸ்-இன் 21-வது நிறுவன தினத்தை முன்னிட்டு சென்னையில் இன்று நடைபெற்ற விழா

சைபர் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதுமைகள் ஆகியவை, தற்சார்பு இந்தியாவிற்கான காலத்தின் கட்டாயம்: இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் சைபர் பாதுகாப்பு என்பது காலத்தின் கட்டாயம் என்றும், செட்ஸ் என்று அழைக்கப்படும் மின்னனு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பிற்கான கழகம், கணினி சார்ந்த அச்சுறுத்தல்களையும் பாதுகாப்பு மீறல்களின் சவால்களையும் எதிர் கொள்ள வேண்டும் என்றும், இதற்காக ஆராய்ச்சி மற்றும் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரும், செட்ஸ் அமைப்பின் தலைவருமான பேராசிரியர் அஜய் குமார் சூட் வலியுறுத்தியுள்ளார். செட்ஸ்-இன் 21-வது நிறுவன தினத்தை முன்னிட்டு சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில் தலைமையுரை நிகழ்த்திய அவர், போட்டியாளர்களைவிட ஒரு படி முன்னேற வேண்டிய அவசியம் இருப்பதால், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் செட்ஸ் மேன்மை அடைய வேண்டும் என்று குறிப்பிட்டார். தற்சார்பு இந்தியாவை அடைவதற்கு இதுதான் இந்தக் கழகத்தின் மைய நோக்கமாக இருக்க வேண்டும் என்றார் அவர். தொழில்நுட்பம் எவ்வாறு

இந்திய விமானப்படை தனது முதலாவது கருத்தரங்கை நடத்தியது

பாதுகாப்பு அமைச்சகம் இந்திய விமானப்படை தனது முதலாவது கருத்தரங்கை நடத்தியது இந்திய விமானப்படை அதன் முதலாவது போர்த்திறன் மற்றும் வான்வெளி செயல்திட்டம் குறித்த கருத்தரங்கை, புதுதில்லியில் உள்ள விமானப்படை கலையரங்கில் 24 ஜூன் 2022 அன்று நடத்தியது. விமான போர்த்திறன் கல்லூரி மற்றும் வான் சக்தி கல்வி மையம் ஆகியவற்றின் சார்பில் இந்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது. விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி ஆர் சவுத்ரி இக்கருத்தரங்கில் சிறப்புரையாற்றினார். இதில் முப்படைகளையும் சேர்ந்த உயர் அதிகாரிகள் வான் சக்தி வல்லுனர்கள், நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய கல்லூரிகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் இதில் கலந்து கொண்டுள்ளார்

இந்திய கப்பற்படையால் செங்குத்தாக செலுத்தும் முறையில் தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் குறைந்த தூர ஏவுகணை வெற்றிகரமான பரிசோதனை

ஒடிசாவின் கடற்கரைக்கு அப்பால் டிஆர்டிஓ & இந்திய கப்பற்படையால் செங்குத்தாக செலுத்தும் முறையில் தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் குறைந்த தூர ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது ஒடிசாவின் கடற்கரைக்கு அப்பால் சந்திப்பூர் ஒருங்கிணைந்த பரிசோதனை தளத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு  (டிஆர்டிஓ), இந்திய கப்பற்படை கப்பலிலிருந்து செங்குத்தாக செலுத்தும் முறையில்  தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் (விஎல்-எஸ்ஆர்எஸ்ஏஎம்)  குறைந்த தூர ஏவுகணை 2022 ஜூன் 24 அன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ராடாரில் காணமுடியாத இலக்குகள் உட்பட  நெருக்கமான தூரங்களில் ஏற்படும் பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்காக கப்பலில் பொருத்தப்படுவது விஎல்-எஸ்ஆர்எஸ்ஏஎம் ஆகும். வெற்றிகரமான இந்த சோதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, இந்திய கப்பற்படை, தொழில் நிறுவனம் ஆகியவற்றிற்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். வான் வழி தாக்குதல்களுக்கு எதிராக இந்திய கப்பற்படை கப்பல்களின் பாதுகாப்பு திறனை மேலும் விரிவுப்படுத்துவதற்கான ஒரு சாதனம் இது என்று

புதிய சைனிக் பள்ளிகளில் 2 ஆம் சுற்று ஆன்லைன் கவுன்சிலிங் தொடக்கம்

 பாதுகாப்பு அமைச்சகம்  புதிய சைனிக் பள்ளிகளில் 2 ஆம் சுற்று ஆன்லைன் கவுன்சிலிங் தொடக்கம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள 10 சைனிக் பள்ளிகளில் உள்ள 534 இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் சுற்று ஆன்லைன் கவுன்சிலிங் இணைய தளத்தை சைனிக் பள்ளி சங்கம் இன்று முதல் திறந்துள்ளது. இந்த https://sainikschool.ncog.gov.in/ecounselling இணையதளம் ஜூன் 26, 2022 வரை திறந்திருக்கும். அகில இந்திய சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு – 2022 இல் தேர்வாகி பள்ளிகளில் இணைந்தவர்கள், முதல் சுற்றில் இடம் ஒதுக்கியும், அதற்கு விருப்பமில்லாதவர்கள், முதல் சுற்றில் தேர்வாகி சம்பந்தப்பட்ட பள்ளியில் இணைந்து பள்ளியில் கட்டணத்தை செலுத்தாதவர்கள் ஆகியோர் 2 ஆம் சுற்று ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது. இதில் 3 பள்ளிகள் வரை மாணவர்கள் தேர்வு செய்ய முடியும்

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது  குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள  ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “ஆப்கானிஸ்தானில் இன்று நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம் பற்றிய செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. விலைமதிப்பற்ற உயிர் இழப்பிற்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த கடினமான தருணங்களில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா துணை நிற்கும். முடிந்த அளவு அனைத்து பேரிடர் நிவாரண பொருட்களையும் விரைவில் வழங்க இந்தியா தயாராக உள்ளது” என்று கூறியுள்ளார்.

பிரதமர் ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் சுற்றுப்பயணம்

பிரதமர் ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் 2022, ஜூன் 26 முதல் 28 வரை பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜெர்மனியின் தலைமையின் கீழ் ஜூன் 26,27- 2022ல் நடைபெற உள்ள ஜி- 7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டு பிரதமர்  திரு ஓலஃப் ஸ்கால்ஸ் அழைப்பின் பேரில், ஜெர்மனி செல்கிறார். அப்போது இரண்டு கட்டங்களாக சுற்றுச்சூழல், எரிசக்தி, பருவநிலை, உணவு பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம்  ஆகிய தலைப்புகளில்  உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முக்கிய விவகாரங்களை சர்வதேச நாடுகள் மூலம் வலிமைப்படுத்தும் வகையில், அர்ஜென்டினா, இந்தோனேஷியா, செனகல் மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளும் இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே பிரதமர் மற்ற நாட்டு தலைவர்களுடன் இரு தரப்பு பேச்சு நடத்தவுள்ளார். பிரதமர் கடைசியாக கடந்த மே மாதம் 2-ம் தேதி ஜெர்மனி சென்று அங்கு நடைபெற்ற இந்தியா-ஜெர்மனி இடையேயான இரு தரப்பு ஆலோசனையின் ஆறாவது கூட்டத்தில் கலந்துகொண்டார். ஜி-7 மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு பிரதமர், ஜூன் 28ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட் செல்கிறார். அ

சூளகிரியில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சி

மத்திய மக்கள் தொடர்பு அலுவலகத்தின் தர்மபுரி கள அலுவலகம் சார்பில் சூளகிரியில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சி மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திற்குட்பட்ட மத்திய மக்கள் தொடர்பு அலுவலகத்தின் தர்மபுரி கள அலுவலகம், சூளகிரியில் உள்ள பெருமாள் மணிமேகலை பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின்  காவிரிப்பட்டிணம் கிளையுடன் இணைந்து சர்வதேச யோகா தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியை தொடங்கிவைத்து பேசிய கிருஷ்ணகிரி அஞ்சல் துறை கண்காணிப்பாளர் திரு பி ராகவேந்திரன், யோகா கலை, மனித குலத்திற்கு இந்தியா வழங்கிய நன்கொடை என்றார். சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது, இளைஞர்களிடையே யோகா பற்றிய விழப்புணர்வை ஏற்படுத்த உதவியிருப்பதாக கூறினார்.  யோகாவை நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக கடைப்பிடித்தால், உடலுக்கும், மனதிற்கும் மிகுந்த  பயனளிக்கும் என்றும் தெரிவித்தார். யோகா பயிற்சி, ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்த உதவும் என்று குறிப்பிட்ட அவர், ஏராளமான சுகாதார பலன்கள் மிகுந்த யோகாவை உலகம் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். சர்வதேச

ஃபாக்ஸ்கான் தலைவர் திரு யங் லியூவுடன் பிரதமர் சந்திப்பு

 ஃபாக்ஸ்கான் தலைவர் திரு யங் லியூவுடன் பிரதமர் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஃபாக்ஸ்கான் தலைவர்  திரு யங் லியூவை சந்தித்தார். பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; “ஃபாக்ஸ்கான் தலைவர்  திரு யங் லியூவை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. செமிகண்டக்டர்கள் உட்பட, இந்தியாவில் மின்னணு சாதன உற்பத்தி திறனை விரிவுபடுத்துவது என்ற அவர்களது திட்டத்தை நான் வரவேற்கிறேன். கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத நிலையை உருவாக்குவது என்ற நமது நிலைப்பாட்டிற்கு ஏற்ப, மின்சார வாகனங்கள் உற்பத்திக்கு நாம் ஊக்கமளிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் வர்த்தக மன்றம் 2022-இன் துவக்க விழாவில் பிரதமர் உரை

பிரிக்ஸ் வர்த்தக மன்றம் 2022-இன் துவக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை மாண்புமிகு பெருமக்களே, பிரிக்ஸ் வர்த்தக சமூகத்தின் தலைவர்களே, வணக்கம்! வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் இந்தக் குழு, சர்வதேச வளர்ச்சியின் உந்துசக்தியாக வளரும் என்ற நம்பிக்கையோடு பிரிக்ஸ் அமைப்பு நிறுவப்பட்டது. ஒட்டுமொத்த உலகமும் கொவிட் தொற்றுக்குப் பிந்தைய நிவாரணத்தில் இன்று கவனம் செலுத்தி வரும் வேளையில், பிரிக்ஸ் நாடுகளின்  பங்களிப்பு மீண்டும் தொடர்ந்து முக்கியத்துவம் பெறும். நண்பர்களே, பெருந்தொற்றினால் ஏற்படும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக “சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம்” என்ற தாரக மந்திரத்தை இந்தியாவில் நாங்கள் பின்பற்றுகிறோம். இந்திய பொருளாதாரத்தின் செயல்பாடுகளிலிருந்து இந்த அணுகுமுறையின் பலன்கள் நிரூபணமாகின்றன. விரைவாக வளர்ந்து வரும் மாபெரும் பொருளாதாரமாக உருவாகும் வகையில், இந்த ஆண்டு 7.5% வளர்ச்சியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். வளர்ந்து வரும் 'புதிய இந்தியாவின்’ ஒவ்வொரு துறையிலும் உருமாறும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. நான்கு முக்கிய அம்சங்களில் இன்று உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்ப

அசாமின் வெள்ள நிலவரம் குறித்து மத்திய அரசு தொடர்ந்து கண்காணிப்பு

அசாமின் வெள்ள நிலவரம் குறித்து மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மாநில அரசுடன் இணைந்து பணியாற்றுகிறது: பிரதமர் அசாமின் வெள்ள நிலவரம் குறித்து மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இத்தகைய சவாலை எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மாநில அரசுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் சுட்டுரைச் செய்திகளில் தெரிவித்திருப்பதாவது: “கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக அசாம் மாநிலத்தின் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நிலவரம் குறித்து மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், இத்தகைய சவாலை எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மாநில அரசுடன் இணைந்து பணியாற்றுகிறது.” “வெள்ளம் பாதித்த பகுதிகளில் ராணுவமும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் உள்ளனர். அவர்கள், மீட்பு பணிகளை மேற்கொள்வதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளையும் வழங்குகிறார்கள். மீட்புப் பணிகளின் ஒரு பகுதியாக, விமானப் படை, சுமார் 250 முறைகள் பயணித்துள்ளது.” “முதலமைச்சர் @himantabiswa, அசா

தோட்டக்கலைத் துறையை ஊக்குவிப்பதன் மூலம், சுயசார்பை அடையலாம் வேளாண்மை துறை அமைச்சர் தகவல்

உரங்கள் மற்றம் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை குறைக்க தனியார் நிறுவனங்கள் அரசுடன் கைகோர்க்கவேண்டும்: மத்திய வேளாண் அமைச்சர் விவசாயத்தில்உரங்கள் மற்றம் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை குறைக்க தனியார் நிறுவனங்கள் அரசுடன் கைகோர்க்கவேண்டும் என மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேசத்தின் சோலன் நகரில் ஃபிக்கி சார்பில் நடந்த விவசாயத்தில் ரசயானங்கள் பயன்பாடு குறித்து 11 வது மாநாட்டில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு பேசிய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், விவசாயத்துறையில் விவசாயிகளுக்கு  உழைப்புக்கேற்ற ஊதியம்  என்பது முக்கியம் என்று கூறிய அவர்,  உற்பத்தி அதிகரிப்பதும் முக்கிய தேவையாக உள்ளது என்று கூறினார். மேலும் தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களை விளைவிப்பதில் நாடு முக்கிய பணியை செய்துகொண்டிருப்பதாகவும், வேளாண்மையில் விவசாயிகளுக்கு வரும் லாபத்தை அதிகரிப்பது முக்கியமானது என்றும், அறுவடைக்கு பிந்தைய நஷ்டத்தை குறைப்பதற்கான வழிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.  இதற்காக, ம

பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்வதற்கான வரைவு அறிவிக்கைக்கு அமைச்சர் ஒப்புதல்

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்வதற்கான வரைவு அறிவிக்கைக்கு அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, பாரத் என்சிஏபி எனப்படும் புதிய கார் மதிப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான வரைவு ஜிஎஸ்ஆர் அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியாவில் வாகனங்களுக்கு விபத்து சோதனைகளில் செயல்திறன் அடிப்படையில் நட்சத்திர மதிப்பீடுகள் வழங்க இது வகைசெய்யும். பாரத்-என்சிஏபி நுகர்வோரை மையமாகக் கொண்ட தளமாகும். வாடிக்கையாளர்கள் தங்கள் நட்சத்திர மதிப்பீடுகளின் அடிப்படையில் பாதுகாப்பான கார்களைத் தேர்வுசெய்ய இது உதவும். அதே நேரத்தில் பாதுகாப்பான வாகனங்களை தயாரிப்பதில் இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியையும் இது ஊக்குவிக்கும். இந்தியாவை உலகின் முதல்நிலை வாகன தயாரிப்பு மையமாக மாற்றும் நோக்கத்துடன் நமது வாகனத்துறையை  தற்சார்பு கொண்டதாக மாற்ற பாரத் என்சிஏபி ஒரு முக்கிய கருவியாக இருக்கும் என்று திரு கட்கரி கூறியுள்ளார்.